Advertisement

நல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணிப்பில் 34.8 சதவீதம் பேர் ஆதரவு

சென்னை: தமிழகத்திற்கு நல்லாட்சியை அ.தி.மு.,க.,தான் வழங்கியுள்ளது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.


தமிழகத்தின் நாடிக்கணி்ப்பு 2016 என்ற தலைப்பில் புதிய தலைமுறை கருத்துகணிப்பு நடத்தியது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்கள் அடிப்படையில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


நல்லாட்சியை வழங்கிய அரசு எது என்ற கேள்விக்கு 34.8 சதவீதம் பேர் அ.தி.முக.,விற்கு ஆதரவாகவும், 33.33 சதவீதம் பேர் தி.மு.க.,விற்கு ஆதரவாகவும் ஓட்டளித்துள்ளனர்.


சட்டம் ஓழுங்கு பாதுகாப்பு எந்த அரசு சிறந்தது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக 36.65 சதவீதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 29.63 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


விலைவாசி கட்டுப்படுத்துவதில் சிறந்த அரசு எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 27.79 சதவிதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 35.41 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


ஊழலற்ற ஆட்சி எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 29.68 சதவீதம் பேரும் தி.மு.க.விற்கு ஆதரவாக 19.12 சதவீதம் பேரும் இரண்டும் இல்லை என்று 43.63 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


ஏழைகள் நலனு்க்காக பாடுபடும் அரசு எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 35.04 சதவீதம் பேரும், தி.மு.க.விற்கு ஆதரவாக 30.96 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


பொதுவிநியோகம் எந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது என்ற கேள்விக்கு அ.தி.முக.விற்கு ஆதரவாக 37.06 சதவீதம் பேரும் தி.மு.கவிற்கு ஆதரவாக 31.52 சதவீதம் பேரும் ஓட்ளித்துள்ளனர்.


கொடுத்த வாக்குறுதிகளை யார் நிறைவேற்றினர் என்ற கேள்விக்கு அ.தி.முக.,விற்கு ஆதரவாக 31.83 சதவீதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 27.66 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (279)

 • மீசநேசன் - chennai,இந்தியா

  அது என்ன அ.தி.மு.க.வே?? 65.2 % இல்லேங்கறாகளே என்னய்யா சர்வே இது..ஹீடிங்க ஏடா கூடாம போடாதிங்க

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  தெரியாத கடவுளை விடவும் தெரிந்த பூதத்தை நம்புவது நல்லது, Stalin வாக்குறுதி அளித்தது போலவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் மக்களை நேரில் சந்திப்பது, அவர்கள் குறைகளை நேரில் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பது நம்பிக்கை தருகிறது இது உறுதி, ஆனால் தி மு கவிற்கு வாக்களிப்பது நல்லது, அது நடக்காத பட்சத்தில் மக்களை காக்க கடவுள் ஆட்சி தான் வரவேண்டும், வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை, நல்ல ஒரு தலைமை, தேர்ந்த தன்னலமற்ற தலைவர் இல்லாதது தமிழ்நாட்டின் இன்றைய நிலை, குடும்பமே இல்லாதவர் சொத்து குவித்திருப்பது அவர் மக்கள் மேல் கொண்ட அக்கறையை காட்டுகிறது, இவருக்கு கலைஞர் எவ்வளவோ மேல், (கட்டமைப்புக்கு) குறைந்தது பாலங்கள், ரோடுகள் கட்டிடங்களுக்காவது திட்டமிடுவார், அம்மாவின் இலவசங்கள் தரம் இல்லாதவை, தனி முதலாளிகளை முன்னுக்கு கொண்டு வருபவை, இவர் தந்த பொருட்கள் ஏற்கனவே பழுது பார்க்கும் கடைகளில் பழுது பார்க்க முடியாமல் கிடக்கின்றன, ஆந்திர மாநிலத்தில் பழைய இரும்பு கடைகளில் குறைந்த விலையில் விற்க படுகின்றன, இவற்றால் மக்களுக்கு பலன் இல்லை, சிந்திக்கும் நேரமிது.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இரண்டு கட்சிகளுமே திருட்டு கட்சிகள்

 • bairava - madurai,இந்தியா

  நண்பர்களே இது திருத்தப்பட்ட ஆய்வு, இதில் உண்மையென்று ஏதும் இல்லை, இதை நம்பவேண்டாம், நம்பி மீண்டும் ஏமாற வேண்டாம், திராவிடம் எல்லாமே தமிழனுக்கு எதிரான அமைப்பே, சுயநல அரசியலே இங்கு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம், மீண்டும் தி மு க - காங்கிரஸ் கூட்டணியே இவர்களின் பித்தலாட்ட பேச்சுக்கள் எல்லாமே ஏமாற்று வேலையே, மக்கள் இனியும் ஏமாற கூடாது. தமிழனை தமிழன் ஆளும் நிலை வேண்டும் உணர்ந்து வாக்கு செலுத்துவோமாக, நல்லாட்சி செய்தது என்று எப்படி சொன்னார்கள் ? நல்லாட்சி என்றால் கர்ம வீரர் காமராஜ் ஆட்சியே அவரின் செயல்முறை ஆட்சியால் தான் இன்றைய தலைமுறை வாழ்வாதாரத்திற்கு தேவையான நீர் நிலம் காற்று கிடைத்து கொண்டு உள்ளது குறைந்தபட்ச விவசாயிகள் உயிரோடும் நம்பிக்கையோடும் இருக்கிறார்கள் .இவர்களின் அற்ப ஆட்சியால் அடுத்த தலைமுறைக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது. கல்வியின் தரம் குறைந்து வருங்காலம் கேள்விகுறியோடு இளைஞர்கள் பாதைமாறி பயணிக்கும் நிலை உருவாகி உள்ளது. மருத்தவம் பணக்காரர்களின் சொத்தாகி ஏழையின் உயிர் தினம் தினம் செத்து பிழைக்கிறான். மக்களின் பாதுகாப்பு காவலர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது, அரசு உழியர்கள் கடமையாற்ற மனமற்று பணிசெய்கிறார்கள். தினம் தினம் ஏழைகள் சுரண்டபடுகிறார்கள், தமிழினத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டும் பராமரிப்பு இன்றி உள்ளது இதற்க்கு யார் காரணம்? இதைவிட கேடான நிலை என்வென்றால் மக்கள் பிரதிநிதிகள் அடிமைகளாக அலைகிறார்கள் இந்த தரமற்ற திராவிட ஆட்சி தேவையா ?

 • Chinnalagu Tholkapiyan - Madurai,இந்தியா

  கல்வியை அரசியல்வாதிகளின் துணையோடு வியாபாரம் செய்யும் மிக சிறந்த வியாபாரி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இவரது பிழைப்பு தொய்வு ஏற்படும் அதை பிரதிபலிப்பதே இந்த கருத்துக்கணிப்பு

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாம் எழுத்தில், விளம்பரத்தில்தான் நல்லாட்சி உள்ளது... பொய் புளுக எல்லையே இல்லையா...

 • Rajesh - Chennai,இந்தியா

  நோ திமுக அதிமுக இது மக்கள் மனது.........இந்த முறை எல்லாமே தலை கீழ்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  34.8 சதவீதம் பேர் ஆதரவு என்றால் பாக்கி 65 சதவிகிதம் ஆதரவு தரவில்லை. 65 சதத்தினரும் மக்கள் தானே ?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தனித்து நின்றால் திமுக 115 , அதிமுக 119 என்றும் புதிய தலைமுறை+எ பி டி கருத்துக் கணிப்பு சொன்னது. தென் தமிழகத்தில் திமுக அதிமுக வை விட அதிகம் என்றும் கணிப்பில் கூறியிருந்தது அதிசயமாக இருந்தது. .

 • Balaji - Khaithan,குவைத்

  ஒவ்வொரு அமைப்புகளும் ஒவ்வொரு முறையை கையாளுகிறார்கள் இந்த கருத்து கணிப்புக்காக..... அதனால் தான் எந்த ஒருவருடைய கணிப்பும் ஒற்றுமையாக இருப்பதில்லை..... இதை வைத்து நாம் தேர்தலின் முடிவை தெரிவித்துவிட முடியாது..... அதுவும் இவர்கள் மக்களிடம் கருத்து கேட்பதும் மிகவும் சொற்பமான நபர்களிடமிருந்து தான்....... அதுவும் இந்த கணிப்புகளின் பலவீனமே.........

 • g k - chennai

  கருத்துக்கணிப்புகள் டாச்மாக் வாசலில் எடுக்கப்படக்கூடாது

 • Thiyagu - tirupur

  திமுக இம்முறை பாதாளம் பாயும்...கேப்டண் பாஐக கூட போனால் அதிமுக வெற்றி உறுதி.. ..திமுக கூட கேப்டன் போக கூடாது....வெக்கம் மாணம் ரொசம் சூடு சொரணை இல்லாத திமுக காங்கிரசு கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி தருவார்கள் இம்முறை. Wait & watch

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  தலைவரின் சாமர்த்தியத்தைப் பற்றி யாரும் கவலைக்கொள்ள வேண்டாம். திமுக காங்கிரஸ் கூட்டணி மக்கள் முற்போக்கு கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும். தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு செல்வார். முதல்வர் பதவி திமுக கூட்டணிக்கும், துணை முதல்வர் பதவி மக்கள் நலக் கூட்டணிக்கும் கிடைக்கும் என்பார்... தேமுதிக சார்பில் சதீஷ் அந்த பதவிக்கு பொருத்தமானவர் என்பார்... தேமுதிகவிற்கு இதைவிட வேறு இனிப்பான செய்தி தேவை இல்லை. திமுக கூட்டணி 144 இடங்களிலும், மக்கள் முற்போக்கு கூட்டணி 90 இடங்களிலும் போட்டியிடும். திமுக 100 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் போட்டியிடும். பொறுங்கள்.... பாருங்கள்.

 • mohankumar - Trichy,இந்தியா

  JJ ஆட்சியில் நிச்சயம் நல்லவைகள பல நடந்துள்ளது அதை மறுக்க முடியாது . கலைஞர் ஆட்சியில் மின்சார தட்டுப்பாட்டினால் நாம் பட்ட பாடு சொல்லி மாளாது . எல்லோரும் மறந்து இருக்கலாம் . ஜெயலலிதா வந்து இரண்டு ஆண்டுகளில் நிலைமையை சரி செய்து விட்டார் . இதை நாம் மனதில் கொள்ள வேண்டும் . மேலும் நாம் தண்ணீர் குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் வாங்க கடைகளில் 20 ரூபாய் கொடுத்தாலும் தண்ணீரின் சுவை மோசம் ஆனால் அம்மா குடி நீரின் விலை 10ரூபை தான் . இதை பலரும் பஸ் ஏறும் பொது வாங்கி வருவதை பார்க்கலாம் . நீரின் அளவும் அதிகம் இருக்கும். இப்படி அம்மா உணவகம், தாய்மார்களுக்கு பஸ் நிலையங்களில் தாய்பால் கொடுக்க இடம், என்று பல வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறார்கள் . இதையெல்லாம் நாம் நினைத்து பார்த்தால் JJ ஆச்சி மோசமில்லை. சட்டம் ஒழுங்கு எப்போதும் JJ ஆச்சியில் நன்றாக இருக்கும் . மட்டற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு நன்றாக உள்ளது. மக்களுக்கு JJ ஆச்சியின் மேல் எந்த விதமான அதிருப்தி அலை காணப்படவில்லை. ஊடகங்கள் எதோ திட்டமிட்டு போய் பிரச்சாரம் செய்கிறது அவ்வளவுதான்

 • sundeli siththar - Cary, USA

  விலைவாசி உயர்வை தவிர மற்ற அனைத்திலும் அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் ஆதரவு தந்துள்ளது சரியே.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  அதிமுக உத்தம கட்சி நல்ல தலைமை நேர்மையான அரசாங்கம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் திருட்டு முன்னேற்ற கழகத்தை ஒப்பிடுகையில் அவர்கள் பல மடங்கு பரவா இல்லை. காங்கிரஸ் இல்லா பாரதம் வேண்டும், அதே போல் திமுக இல்லாத தமிழகம் வேண்டும்

 • mindum vasantham - madurai,இந்தியா

  congress kootani அமைத்தவுடன் மேலும் சரிந்திருக்கும் , கொள்ளை அளவில் உருவான கூட்டணி இன்னமும் கேட்டு போகவில்லை , புது கொள்கையுடன் திராவிடத்தை விடுத்தது தமிழ் நலம் சார்ந்து ஸ்டாலின் மாறன் வெளியேறி புது கட்சி ஆரம்பித்து , தே மு தி க மற்றும் பா ஜ க வுடன் போட்டி இடலாம் , மாவட்ட செயலாளரில் புது ரத்தம் செலுத்தலாம்

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  இந்த தேர்தலில் இந்த செயல் படாத அரசு நிச்சயம் தோல்வியை சந்திக்கும். திமுக தான் வெற்றி பெறும். இந்த ஆட்சி ஓர் உப்பு சப்பில்லாத நிர்வாக திறனற்ற கையாலாகாத ஆட்சி என ops அவர்களால் ஒத்துக்கொண்ட 2.47 லட்சம் கடன் சுமை ஒன்றே போதும்.

 • raja - Kanchipuram,இந்தியா

  மக்கள் திருந்தினால் ஒழிய நல்ல தலைவர் கிடைப்பது அரிது. என்று ஈவேரா, அண்ணாதுரை போன்றோர் மக்களை அடிமைகளாக மாற்ற முயன்றனரோ அதனை சினிமா துறையினர் அருமையாக செய்து மக்கள் மூளை வளர்ச்சி இல்லாமல் செய்து விட்டனர். எனவே நல்ல தலைவர் இனி தமிழ் மக்களுக்கு கிடைப்பது அரிது.

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  கருத்து கணிப்புக்கள் பெரும்பாலும் பலித்ததாக இதுவரை தெரிய வில்லை ....தி மு கவிற்கும் அண்ணா தி மு கவிற்கும் சிறிதளவே வித்தியாசம் உள்ளது போல் திட்டமிட்டு திணிப்பு நடப்பது போல் தெரிகிறது ...இந்த செயலில் ஈடுபடும் கட்சி எது என்பது பெரும்பாலான தலைவர்களுக்கு நிச்சயம் தெரியும் ......சென்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படிதான் அண்ணா தி மு கவும் தி மு கவும் கடும் போட்டி சிறியளவு மட்டுமே வித்தியாசம் என்றார்கள் ...முடிவு எப்புடி இருந்தது என்பதை நாம் பார்த்தோம் .....விஜயகாந்த் ராமதாஸ் மற்ற தலைவர்களை எல்லாம் இவர்கள் கணக்கில் எடுப்பதே இல்லை ...ஆதரவு பெருகி இருப்பது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி மற்ற சிறிய கட்சிகள் தங்களை நோக்கி வரவேண்டும் என்பதற்காக கருத்து திணிப்பு நடத்தி வருகிறார்கள் ....பார்க்கலாம் யாரெல்லாம் வலையில் விழ போகிறார்கள் என்பதை ......

 • Palaniappan Chidambaram - Madurai

  அதெப்படி, 90 ஆயிரம் கோடிக்கு அவர் கடன் வைத்த போது அவரை ஏளனமாக பேசிய ஜெ. இப்பொழுது அதை போல கிட்டதட்ட இரண்டு பங்கு ஆக்கிய பிறகும்.அதை பற்றி சிந்திக்காமல் இப்படி காது கிழியும் அளவிற்கு சிங் சக் அடிக்கிறீர்கள்.ஆதாயமின்றி யாரும் இப்படி கத்த மாட்டார்கள் .... சரி நெல்லுக்கு பாயும் போது புல்லிற்கும் பாய்கிறது போலும்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  பதிவு செய்யும் கருத்துகளில் ஒன்னு ரெண்ட அப்பப்ப யாரோ தின்னுடுறாங்க பாசு...

 • M.Thiyagarajan - Coimbatore-641401,இந்தியா

  மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க. , தி மு.க விற்கு அடுத்த பெரிய இயக்கம் கொ. ம.தே. க. இது கருத்து கணிப்பில் இல்லை. தினமலர் போல புதிய தலைமுறையும் வியாபார நோக்கிற்கு மட்டும் கொங்கு மக்களை பயன்படுத்துகிறது

 • Lakshman - Tamilnadu,இந்தியா

  அம்மா வெல்வது உறுதி. அரசியல் சாணக்கியன் என்ற பட்டதுடன் சுற்றும் தலைவர்கள் கூட்டணிக்காக அலையும் போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரே தலைமை அம்மா மட்டுமே . எதிர்கட்சிகளின் வயிற்றில் புளி கரைக்க தொடங்கி விட்டது. மீண்டும் அம்மா வெல்வார் இது உறுதி . எத்தனை கருணா , ராமதாஸ் , சூ ..சாமி . வைகோ, முத்தரசன் , ஜி ஆர் ,, இளங்கோவன் , வந்தாலும் அசைக்க முடியாத ஒரே தலைவி எங்கள் அம்மா மட்டுமே. எங்க அம்மா சாதித்து விட்டார், நீங்கள் எல்லாம் நடுங்கும் ஒரே தலைவி. ரேசன் கடையில் புளுத்துப்போன அரிசியும் தமிழ் நாட்டல் நக்சலைட்டுகள் தொல்லையும் சந்தன வீரப்பன் மாதிரி ரௌடிகளும் வேணும்னு ஆசப் படறவங்க எல்லாம் திமுக விற்கு ஓட்டு போடுங்க,உங்களின் பலவீனம் இப்போதே தெரிகிறது, எங்கள் அம்மா ஒரு சரித்திரம். . அழிக்க முடியாத சக்தி.

 • varun - trichy

  2006 to 2010 வரை இருந்த சிறை தண்டனை தமிழகத்துக்கு போதும் மீண்டும் வேண்டாம் மக்களே சிந்திப்பீர் வாக்களிப்பீர்

 • நடராஜன் - Singapore

  இரண்டு திராவிட கட்சிகளும் திருட்டு கட்சி, 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து இன்னமும் மக்கள் வறுமையில் தான் உள்ளார்கள் ..புதிய தலைமுறை தமிழ் நாட்டில் தான் எடுத்தார்களா, மக்கள் திராவிட கட்சியின் மேல் வெறுப்பில் தான் உள்ளார்கள்

 • நாகராஜன் - Thirukalikundram

  கொலை கொள்ளை, திருட்டு. .... இருவரும் சமம்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  This survey totally unprofessional and undependable. The sample size is very minimum and it was not tested in the deep rural areas.It is not the real feeling of the rural tamil people. AIADMK will sweep polls and it has formidable cadre base and backing of rural women and poor people. Further after aligning with congress the dmk has regenerated the srilankan issue. AIADMK may even touch 160 this time.

 • நிலா - மதுரை,இந்தியா

  அதிமுக விசுவாசிகள், தினமலர் இணையதளத்தில் அதிகம் கூடிய விரைவில் சவால் விட்ட நண்பர் நம்முடன் இணைந்து விடுவார் நான் தான் முதலில் அவர் சவாலை ஏற்றுக் கொண்டேன் நண்பரை இப்போது அதிகம் இங்கு காணப் படுவதில்லை ஏன்?? தோல்வி பயமா???

 • muthu Rajendran - chennai,இந்தியா

  சூப்பர் சர்வே. அப்படியே நம்பிக்கை கொண்டிருங்க. அவனவன் வீடு கட்ட அனுமதி, குடிநீர், கழிவுநீர் குழாய் இணைப்பு அனுமதி, மின் இணைப்புக்கும் சாதி , வாரிசு , பட்டதாரியில்லா சான்றதழ் வாங்க படுற பாட்டை சம்பந்த பட்டவங்க கிட்டே கேட்டா தெரியும். புதிய தலைமுறை முதல்ல வட்டாச்சியர் , குடும்ப அட்டை வழங்கு அலுவலகம் , மாநகராட்சி அலுவலகம் முன்னால் அங்கே வந்த போகிற ஜனங்களை கேளுங்க, ரெம்ப நல்ல நல்ல ஆட்சின்னு சொல்லுவாங்க, இந்த சர்வேக்காக ஒரு சீட் கேட்கலாம் . கிடைத்தாலும் கிடைக்கலாம்

 • Palaniappan Chidambaram - Madurai

  தீச்சட்டி தூக்கியவர்கள், நாக்கில் வேல் குத்தியவர்கள் ஸ்டிக்கர் யார் அதிகம் ஒட்டினார்கள் என்ற கேள்வியில் அதிமுக 100% வென்றதை மறைத்து விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 • chinnan - chennai

  ரேசன் கடையில் புளுத்துப்போன அரிசியும் தமிழ் நாட்டல் நக்சலைட்டுகள் தொல்லையும் சந்தன வீரப்பன் மாதிரி ரௌடிகளும் வேணும்னு ஆச படறவங்க எல்லாம் திமுக விற்கு ஓட்டு போடுங்க

 • Murali - Doha,கத்தார்

  இது கருத்து திணிப்பு. பெரும்பான்மை மக்கள் இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சந்தேகம் என்னவென்றால், இரு பெரும் கட்சிகளை தவிர மக்கள் வேறொன்றை சிந்திக்காமல் இருப்பதற்காக கருத்து கணிப்பு நடந்ததோ?

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இப்படிப்பட்ட கருத்து கணிப்பு நல்லவற்றிற்கே... எல்லா கருத்து கணிப்புகளிலும் தேமுதிக மற்றும் பாமகவை UNDER ESTIMATE பண்ணியே வருகின்றன... இதனால் தேமுதிக பேரத்துக்கு படிந்து விடும், என்று சில பெரிய கட்சிகளின் தூண்டுதலால் கூட இப்படி கருத்து கணிப்புகள் வர வாய்ப்புள்ளது ... திமுக தேமுதிகவிற்கு குறைந்த இடங்களே கொடுக்கவேண்டும் என்பதுபோல் ஒரு நிலைமை இந்த கருத்து கணிப்புகளால் உருவாகிறது....இது திமுகவிற்கு லாபம்...அதே போல இந்த கருத்து கணிப்புகள் அதிமுகவிற்கும் மறைமுகமாக லாபம் தான்... ஏனென்றால், அதிமுக 34 %, திமுக 33 % , தேமுதிக 5 %, பாமக 3 % , மதிமுக 4 % பாஜக 3 % , காங்கிரஸ் 2 % - இப்படிப்பட்ட கருத்துகணிப்பை நம்பி, திமுக, தேமுதிகவை கழற்றிவிட்டுவிட்டு, தனியாக நின்று பார்க்கலாம் என்ற நப்பாசையில் காங்கிரசோடு கை கோர்த்து தேர்தல் குளத்தில் இறங்கினால், இரு கட்சிகளும் குளத்தில் மூழ்கியே விடவும் வாய்ப்புள்ளது.. திமுகவை தனியே வா, மோதி பார்க்கலாம் என்று அதிமுக பொடி வைத்து அழைப்பதுபோல உள்ளது... திமுக, தேமுதிகவை கை கழுவி விட்டு வருமா என்று பார்க்கலாம்?..அப்படி வரவில்லைஎன்றால் இந்த கருத்துகணிப்பை திமுகவே நம்பவில்லை என்று நாம் நம்பலாம்... ஏனென்றால் இப்போதுள்ள கருத்துகணிப்பு படி, திமுக காங் கூட்டணி 35 % வாக்குகள் உள்ளது....அதிமுகவிற்கு 34 % தான்... ஆக திமுக விற்கு தேமுதிக தேவையில்லை... காங் மட்டுமே போதும் என்பதே தற்போதைய கருத்துகணிப்புகள் உணர்த்துவது கூட, அதிமுகவிற்கு மறைமுகமாக லாபமாகவே முடியும்... இது அதிமுகவிற்கும் சரி ..திமுகவிற்கும் சரி நன்றாக தெரியும்,.. என்றாலும் திமுக வலிக்காதது போலவே நடிக்கிறது... தேமுதிக கூட்டணி இல்லையேல் திமுக WASH OUT ..அதிமுகவின் இமாலய வெற்றி, தேமுதிகவை திமுகவுடன் நெருங்கவிடாவிட்டால், உறுதி... இல்லையேல் NECK TO NECK போட்டி தான்...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  எப்படிம்மா இப்படி, 2011 ல் திமுக ஒரு லட்சம் கோடி கடனாக வைத்திருக்கிறார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த கடனை தீர்ப்போம் என்று சொன்னீர்களே அம்மா, ஆனால் இதை இப்படி, 2.50 லட்சம் கோடியாக்கி சாதனை புரிந்தீர்களே அம்மா, அதற்கே உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா எடுக்கலாம். ஆனால் அதை சபையிலேயே அண்ணன் தங்க தலைவர், திரு OPS அவர்கள் தலைமையில் செய்வதால், நாங்கள் ஒடுங்கி பணிவோடு நிற்கிறோம் அம்மா. சாதனை தலைவி அம்மா நீங்கள்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  அற்றார் அழி பசி தீர்த்த அன்ன பூரணி அம்மாவுக்கு மக்கள் ஆதரவு அமோகம்...என்றைக்கும் தர்மமே தலை காக்கும்...அம்மாவ அசைக்க கூட முடியாதுடா மண்டூகங்களா.வீணா வயிற்று எரிச்சல் பட்டு சேற்றை வாரி இறைக்கும் எதிர்கட்சிகளின் வாலை ஓட்ட நறுக்கபோகிறது 2016 தேர்தல் முடிவு

 • Mannan - chennai,இந்தியா

  நல ஆட்சி பற்றி கேட்பார்கள்.....ஊழல் அற்ற அரசு பற்றி கேட்பார்கள் ....பொது விநியோகம் பற்றி கேட்பார்கள்....ஏழைகளின் நலன் பற்றி கேட்பார்கள்....விலை வாசி பற்றி கேட்பார்கள்....வாக்குறுதி நிறைவேற்றம் பற்றி கேட்பார்கள்....சட்டம் ஒழுங்கு பற்றி கேட்பார்கள்....ஆனா வெள்ளம் வந்து நாலு மாவட்டம் பாதிக்க பட்டதை பற்றி மட்டும் கேட்க மாட்டார்கள் ....ஆ இது தேவை இல்லாதது என்று எண்ணி விட்டார்கள்....வெள்ளம் வந்து பலர் செத்தால் இவர்கள் அது பற்றி எல்லாம் கவலை பட மாட்டார்கள் ...மதுவால் பலர் மடிந்தால் இவர்கள் மறந்து விடுவார்கள்...காரணம் என்ன ....காரணம் என்ன...காரணம் என்ன ?....இரு பெரிய கழகம் பலம் அப்படி

 • Palaniappan Chidambaram - Madurai

  இந்த பகுதியில் அதிமுக விற்கு ஆதரவாக வெறித்தனமாக கத்திக்கொண்டிருக்கும் ஏமாளிகளே பட்ஜெட்டில் நல்லாட்சி சிகாமனிகள் 2.47 லட்சம் கோடி கடன் சுமை உள்ளதாக கடைசி நேரத்தில் உண்மை சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சி வேண்டுமென்று கேட்கும் நீங்கள் தான் இந்த சுமைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  புதிய தலைமுறையின் நேர்பட பேசு புது புது அர்த்தங்கள் மற்றைய விவாத நிகழ்ச்சிகள் எல்லாமே அண்ணாதிமுக அரசை தாங்கி பிடிக்கும் விதமாகவே இருக்கும். இந்த சேனல் தன் நடுநிலை தன்மையை இழந்து வெகு நாட்கள் ஆகிறது. முன்பு கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் ஆதரவு நிலைப்பாட்டினை கொண்ட சேனல் ஆக செயல்பட்டது.

 • murali - chennai

  அதிமுகவின் வெற்றி உறுதி. நல்ல குடி மக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். கருணாவுக்கும் திமுகவுக்கும் இந்த தேர்தல் தான் கடைசி

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  இதிலிருந்து என்ன தெரிகின்றது மீடியாக்களும் ஆளும் கட்சிக்கு சப்போர்ட் என்று தெரிகின்றது

 • venkatmani - karaikudi ,இந்தியா

  அதிமுகவின் செல்வாக்கு 10%அளவுக்கு சரிந்துள்ளது - மக்களுக்கு பிடித்த தலைவர்களில் முதலில் இருப்பது கருணாநிதி,தனித்து போட்டியிட்டால் திமுக,அதிமுக இரண்டும் கிட்டத்தட்ட சமநிலை - திமுக + காங்கிரஸ் + தேமுதிக கூட்டணி கண்டால் வெற்றி பெரும் அணியாக இருக்கும்-இவையெல்லாம் கூட இதே கருத்துகணிப்பில் தான் சொல்ல பட்டுள்ளது

 • Mannan - chennai,இந்தியா

  இந்த திணிப்புக்கு ஒரு சில நல்லவர்களை இவர்களோடு இருபது போல வீடியோ காட்டுகிறார்கள். அதில் மகாத்மா காந்தியின் personal secretary திரு V kalyanam ஆகியோரும் உண்டு. இப்படி இவர்களை எல்லாம் காட்டி விட்டு மதுவை பற்றி ஒரு கேள்வி கூட கேட்க வில்லை என்ற பொழுது ..........திரு V Kalyanam personal secretary இதை ஆட்சேபித்து அங்கு பேச வேண்டும் இல்லை என்றால் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது ...........காரணம் மது தமிழகத்தில் மிக மிக முக்கியமான பிரச்சினை. அதை பற்றி பேசாமல் அந்த திணிப்புக்கு உங்கள் போன்றவர்கள் ஆதரவு என்ற கருத்து உருவாகும் வகையில் அந்த நிறுவனம் தந்திரமாக செயல் படுகிறது ...............அதனால் இது போன்ற மதுவை எதிர்க்காத விசயங்களில் நீங்கள் கலந்து கொள்ள கூடாது என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் ...........மகாத்மா காந்தி மீது மரியாதை வைத்துள்ள ஒரு இந்தியன் என்ற அடிப்படையில் கேட்டு கொள்கிறேன் ........ஜெய் ஹிந்த்

 • ravi - coimbatore,இந்தியா

  இந்த ஆளும் கட்சி ஏற்கனவே புதியதலைமுறை தொலைகாட்சியின் ஒளிபரப்பை நிறுத்தியவர்கள் தான். மீண்டும் அது நடைபெற கூடாது அல்லவா. அதனால் அறிவிப்பு இப்படி வந்து இருக்கிறது ...

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அதாவது 66% மக்கள் கெட்ட ஆட்சி என்று கூறியுள்ளார்

 • varun - trichy

  மீண்டும் ADMK அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அமோகமா வெற்றி அடைய வாழ்த்துக்கள்,அதிர்ஷ்டம் உள்ள கட்சிக்கு..

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பொது மக்களை பொருத்தவரை எது தங்களை பாதிக்கிறதோ எதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தவகையில் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பங்கு வகிக்கும். அரசில் ஊழல், நல திட்டங்கள் என்பதெல்லாம் அடுத்ததுதான். ஒரேடியாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், பால்விலை, மின் கட்டணம் கூடவே கட்டுக்கு அடங்காமல் எகிறிய பருப்பு விலை எல்லாம் ஆளும் கட்சியின் மீது ஒரு வெறுப்பை ஏற்றி வைத்துள்ளது. தி.மு.க விற்கு ஆட்சி அமைக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது என்பது சரியான கணிப்பு. அதுதான் நல்லதும் கூட...

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  தனியாக நின்றால் கட்சி அடிப்படையில் அதிமுக 37 சதவிகிதம் ஓட்டுக்கள் வைத்துள்ளது. திமுக 24 சதவிகிதம். ஆனால் எந்த விதத்தில் இந்த கருத்து கணிப்பு வெளியிட்டது என்றே தெரியவில்லை. திமுக என்றைக்கும் அதிமுகவிற்கு அருகாமையில் இருந்ததில்லை. பலமான கூட்டணியை வைத்து போட்டியிட்ட போதே 93 இடங்களுடன் மைனாரிட்டி ஆட்சி தான் அமைக்க முடிந்தது, பல இடங்களில் குறைந்த அளவு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது, அப்போது செங்கண்ணன் ஓட்டுக்களை பிரிக்காமல் இருந்திருந்தா அதிமுகவே 2006 ல் ஆட்சி அமைத்திருக்கும். இப்போது கூட பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 47 சதவிகிதம் ஓட்டுக்களை பெற்றது, அதே சதவிகித ஓட்டுக்கள் தான் இப்போதும் பெரும். ஒரு தொகுதியிலும் ஒரு சுற்றிலும் திமுக முன்னணி வகிக்கவில்லை, சட்டமன்றத்திற்கும் செல்லவில்லை, அப்புறம் எப்படி திமுகவின் செல்வாக்கு உயர்ந்து அதிமுகவிற்கு சமமாக இருக்கும்? புதிய தலைமுறை பச்சைமுத்து காங்கிரஸ் திமுக அனுதாபி என்று அனைவருக்கும் தெரியும். அவர்கள் எடுத்த கருத்து கணிப்பு எப்படி இருக்கும்? தேர்தல் முடிந்த பிறகு அணைத்து கருத்து திணிப்பும் எப்போதும் போல பொய்த்து போய் அதிமுக அமோக வெற்றி என்று செய்தி வரும்.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  அதிமுக தான் முதல் இடம். திமுக இரண்டாம் இடம் தான். இதை நன்றாக தெரிந்ததால் தான் கலைஞர் தேமுதிகவுக்கு இலவு காத்த கிளியாக தவம் இருக்கிறார். தேமுதிக இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும். அதிமுகவுக்கு நல்ல ஒரு கூட்டணி தேவை. தேமுதிக - பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவுக்கு வாய்ப்பு அதிகம். குறைந்த பட்சம் திமுகவுடன் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேமுதிக - காங்கிரஸ் - பாமக - மக்கள்நல கூட்டணி எதுவும் அதிமுகவுடன் வரப்போவது இல்லை. அப்படி இருக்க பாஜக அல்லது உதிரி கட்சிகள் தான் அதிமுகவின் வாய்ப்பு. 2006 தேர்தல் போலவே இதுவும் கூட்டணி பலத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற தேர்தலாக இருக்கப்போகிறது. மக்கள் நல கூட்டணி எவளவு வாக்கை பிரிக்கிறதோ அதை பொருத்து அதிமுக-திமுக வெற்றி வாய்ப்பு உள்ளது. தேமுதிக, திமுகவுடன் போனால் அதிமுக நிலை என்ன என்பது சுவாரஸ்சியமான விசயம். தேமுதிக மற்றும் ஒருமுறை எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. காப்டன் இதில் கில்லாடி. பொட்டிக்கு-பொட்டி. சீட்டுக்கு சீட்டு. ஒரே கல்லலில் ரெண்டு மாங்காய்.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  வரும் தமிழக தேர்தலில் இம்முறை நிறைய அதிசயங்கள் நடக்க போகின்றன. வாய் சவடால் விடும் உருப்படாத எதிர்கட்சிகளின் தோல்வி மூலம் அவர்களின் தேர்தல் சின்னங்களை இழக்க நேரிடும். வரும் காலங்களில் அந்த கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி சின்னம் என்று கிடைக்கும். இப்படி நடந்தால் நல்லது. தமிழகத்தில் இருந்து ஒழிய வேண்டியவைகள் தான் புறம்போக்கு உருப்படாத எதிர் கட்சிகள். இனி தமிழகம் முன்னேறும் .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஊழல் இல்லை என்று 19% & 23% மட்டைகள் மட்டுமே சொல்கிறார்கள்... இதில் பெரும்பாலானவர்கள் அடிமைகள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.... இதை போய் எப்படி நல்லாட்சி என்று சொல்லமுடியும்?

 • Mugavai Anandan - Port Blair,இந்தியா

  நாசமாபோன இந்த இரண்டு கட்சியும் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சூப்பர் டஸ்ட் என்பது போல குப்பையில் நல்ல குப்பை... அதை விட்டுவிட்டு நல்லாட்சி என்றெல்லாம் சொல்வது அபத்தம்...

 • baski - Chennai,இந்தியா

  தமிழகத்தின் தலைஎழுத்து திமுக, அதிமுக தான். திமுக இலங்கை பிரச்சனையில் நம்பிக்கை இழந்ததால். திரும்ப அதிமுக தான் தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளது.

 • Kanagaraj Easwaran - Aizawl,இந்தியா

  இது கருத்துக்கணிப்பு அல்ல கருத்து திணிப்புதான். இந்தக்கருத்துக்கணிப்பை நடத்தியவர்கள் கேட்டக்கேள்விகளில் தமிழ் நாடும் மக்களும் முக்கியமான சவால்கள் சிக்கல்கள் பற்றி எதுவும் இல்லை. மக்களுடைய வாழ்வாதாரம், விவசாயம், மதுவிலக்கு, கல்வி, சுகாதாரம் ஆகிய மிக முக்கியமான வளர்ச்சிப்பரிமாணங்களை ஒதுக்கியதன் மூலம் இந்த ஆய்வு நிறுவனத்தின் சமூகப்பொருளாதாரக்கண்ணோட்டம் ஆழமற்றதாகத்தெரிகிறது. இந்தக்கருத்துக்கணிப்பு அதிமுக ஆட்சியின் தொடர்ச்சிக்கும், திமுகவில் ஸ்டாலினுக்கு தலமை மாற்றம் நிகழ்வதற்கும் கருத்தினை உருவாக்க முயல்வதாகத்தெரிகிறது. இந்தக்கருத்துக்கணிப்பு குழுவினரையும் புத தொலைக்காட்சி ஆகியோரின் நம்பகத்தன்மைக்கு இது ஆப்பு வைத்திருக்கிறது. இந்தக்கருத்துக்கணிப்பையும் அதன் முடிவுகளையும் ஒதுக்கிவைத்து ஆளும் ஆண்ட கட்சிகளை சாராதவர்கள் தேர்தல் பணியாற்றுவது நல்லது.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கருத்துகணிப்பில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் கட்சிகாரர்கள், மக்கள் அல்ல. 2 கழகங்களையும் தூக்கி நிறுத்த முயற்சி நடைபெறுகிறது. இப்போதே கருத்துகணிப்பு தேவை இல்லை . கூட்டணிக்கு கட்சிகள் வருவதற்கு நடத்தப்படும் கணிப்பு , மக்கள் இருகட்சிகளின் ஆட்சிகளில் வெறுத்து போய் உள்ளனர். வாக்கு பதவின் முடிவில் இது தெரிய வரும்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இதுவும் மாறலாம். தமிழக மக்கள் தங்களின் மனதில் இருப்பதை அப்படியே வெளியில் கூறமாட்டார்கள். மாற்றி குத்துவதில் மன்னர்கள்.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  ரெண்டும் இல்லைன்னு கட்சி சார்பற்ற ஆட்கள் 30% சொல்லுவாங்க.அதை ஓட்டு போடுபவர்களிடமே கேட்கணும். இவங்க கேட்டது சிட்டியிலே மட்டுமே இருக்கும். பல பேரு சிட்டியிலே ஓட்டே போடுவது இல்லை.

 • Gopinath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த கருது கணிப்பில் ஏற்று கொள்ளமுடியாத ஒரு விசயம் ஆதிமுக நல்லட்சிகொடுதது என்று , எல்லா மக்களுக்கு தெரியும் இது ஒரு செயல்படாத அரசு என்று, எல்லா இடத்திலும் கமிசன் இப்படி இருக்கும் பொது எப்படி இது ஒரு நல்ல அரசு. இந்த செயல்படாத அம்மையார் மறுபடியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழ் நாடு மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பது உண்மை. இந்த 5 ஆண்டுகளில், நாசமா போய் கொண்டிருக்கும் தமிழகம்இந்த 4.5 ஆண்டுகளில், ஒரு மாத பெங்களூர் பறப்பன அக்ரஹார சிறை வாசமும், அங்கே ஊது பத்தி உருட்டி, அதன் மூலம் தமிழ்நாட்டு அரசு கஜானாவுக்கு வருமானமும் வரவைத்ததும், சாதனை தான். ஆந்திராவில், 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதை ஒரு பொருட்டாகவே எடுத்துகொள்ளாமல், தகிடுதத்தம் செய்து, நீதி தேவதையை படுகொலை செய்து, விடுதலை என்ற பெயரில் கபடநாடகம் ஆடியதும், சாதனை தான். ஆறு மாத பெண் குழந்தைகள் முதல், அப்பாவி பள்ளி குழந்தைகள் உட்பட நூறு வயது பாட்டிகள் வரைக்கும் தினம் தினம், கற்பழிப்பு, கொலை என்பது தமிழகத்தின் தினசரி விசேஷ சாதனைகள் தான். குக்கிராமம் முதல், பெரிய நகரம் வரைக்கும், சாலைகள் செத்து செல்லரித்து கொண்டிருப்பதும் சாதனை தான். அரசாங்க பணிகளில் 45% கமிஷன் கொடுத்தால் தான் ஒப்பந்தம் கிடைக்கும், அதுவும் ஆழும்கட்சி அடிமைக்கே மட்டும் தான் என்பதும் சாதனை தான். அன்றாடம் உயிர்வாழ தேவையான பால் முதல் பாழாய் போன டாஸ்மாக் வரைக்கும் அனைத்திலும் கலப்படம் செய்தது , அந்த அக்கிரமக்காரர்களை காப்பாற்றி, நாட்டை நாசமாக்கியதும் சாதனை தான்.. இன்னும் .எத்தனை எத்தனை சாதனைகள்.

 • S.Pandiarajan - tirupur,இந்தியா

  தினமலர் சீட் எத்தனை என்பதை ஏன் போடவில்லை? தி மு க 115, அ தி முக 119 இதில் என்ன அம்மாவுக்கு சால்ரா

 • Gopinath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த கருத்து கணிப்பு மக்களின் இன்றைய மனநிலையை பிரதிபலிக்கிறது, திமுகவின் ஒட்டு வங்கி அதிகரிக்கிறது. ஆதிமுகவின் ஒட்டு சரிகிறது, இன்னும் இரண்டு மாதத்தில் இன்னும் சரியும், இங்கே கருத்து சொல்லும் நபர்கள் சொல்லுவது போல இது கருத்து திணிப்பு இல்லை, அப்படி என்றால் இதுவரை வந்த அனைத்து கணிப்புகளும் எப்படி ஒரே மாதிரி இருக்கும், மக்கள் இந்த செயல்படாத ஆட்சியின் மீது மிகுந்த வெறுப்பில் இருப்பதால் ஆதிமுக சரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. மக்கள்நல கூட்டனி அல்லது பாமக மேல மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்பதை இது காட்டுகிறது. ஈழ வியாபாரி சொம்பு சீமான் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரை நம்பியும் சிலபேர் எங்கே இருகிறார்கள். பெரும்பாலான மக்கள் மற்றதை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சரியான மற்று தலைவர்கள் இல்லாததினால் மீண்டும் திமுக அல்லது ஆதிமுகவை தேர்ந்தெடுக்க தயாரா இருகிறார்கள், இன்னும் சொல்லப்போனால் செயல்படாத ஆதிமுக அரசை விட நல்ல திட்டங்களை செயல்படுத்தும் திமுக ஆட்சி வேண்டும் என்று எதிர்நோக்கி உள்ளார்கள். இந்தகருத்து கணிப்பு சரியே ..

 • ravi kumar - Hamamatsu,ஜப்பான்

  இவ்வளோ மட்டமா ஆட்சி பண்ண இப்பவே இவ்வளவு துதிகள் இருக்கே.... மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால்.... அடுத்த வருடத்திலிருந்து சட்டமன்றத்தில் அம்மா புகழ் பாடுவதற்கே எல்லோருக்கும் நேரம் போதாது..... தூஊ.... உங்களோட குடிகள் கேட்டுகிட்டு இருக்குன்னு கூட தெரிஞ்சிக்காம ஜால்ரா அடிக்கிறீங்களே ..... ஆழ்ந்த வருத்தங்கள்.... தமிழ் நாட்டிலே மொதல்ல சினிமா துறை சார்ந்தவர்கள் வரக்கூடாதுன்னு சட்டம் போடணும்.... சினிமா துறை சார்ந்தவர்கள் ஆட்சி செய்து கொண்டு இருப்பதால் தான் சினிமா துறை நன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறது....

 • Mannan - chennai,இந்தியா

  இந்த கருத்து கணிப்பில் சென்னை மற்றும் நான்கு மாவட்ட வெள்ள பாதிப்பு அதற்கு எந்த அளவு அரசு உடன் சேவை ஆற்றியது அண்ணாநகரில் ஒரு தன்னார்வலர் தாக்கப்பட்டது எல்லா பொருட்கள் மீதும் sticker ஓட்ட பட்டது என்று எந்த கேள்வியும் கேட்க வில்லை ......தண்ணி பற்றி யாரும் கேட்க கூடாது என்று ஆலை ஆட்கள் சொல்லி விட்டார்கள் போல

 • A.P.Ezhumalai - Mysore,இந்தியா

  இப்போ தெளிவா தெரிஞ்சுதா, மறுபடியும் DMK /ADMK தான் , அவுங்க வைக்கிற கூட்டணிய பொருத்து தான் முடிவு. எப்படியோ மறுபடியும் JJ /MK (MKS )

 • Najeemdeen - Al Khobar,சவுதி அரேபியா

  இது வரை வெளியான அனைத்து கருத்து கணிப்புகளுமே கிட்டத்தட்ட இதே கணிப்பைத்தான் வெளியிட்டிருகிறது. கூட்டணியை பொருத்துதான் வெற்றி தோல்வி nirnayikkapadum

 • Mannan - chennai,இந்தியா

  இவர்கள் எல்லா கேள்விகள் அதுவும் கூட்டணி இன்னும் முழுமை பெறாதா பொழுது கேட்பார்களாம். அதுவும் காந்தி அடிகளிடம் பணி புரிந்தவர் video எல்லாம் காட்டுவர்கலாம். ஆனால் மது பிரச்சினை பற்றி கேள்வி கேட்க மாட்டார்கள்........இது எந்த ஊர் நியாயம் என்று தெரிய வில்லை ...............மது மீடியா வரை பாயும் என்று உணர முடிகிறது ........அதுவும் மீடியா சற்று நம்பக தன்மை வளர்த்து அதை வைத்து சம்பாதித்து கொள்கிறார்கள் அல்லது வேறு விசயத்தால் இதற்கு உடன் படுகிறார்கள் என்று தோன்றுகிறது ..........இதே ஊடகம் முன்பு சில மாதங்கள் முன் வந்த திணிப்பை அக்குவேறு ஆணி வேறு என்று அலசும் பொழுது ........ஏன் மது பற்றி கேள்வி கேட்க வில்லை என்று கேட்டார்கள் .........அந்த Father front இல் back போனார் ......ஆனா இன்று இதே ஊடகம் அதே தவறை செய்து ......அதை நியாய படுத்தும் நிகழ்வு மிகவும் வருத்தத்தை கொடுத்தது ..........மீடியா இப்படி ஆகி விட்டதே என்று எண்ணி ............ஒன்று மதுவை பற்றி கேள்வி கேட்டால் வம்பு என்று கேட்காமல் இருந்து இருக்க வேண்டும் இல்லை விலை போகி இருக்க வேண்டும் ........இரண்டில் எதற்கு அதிக வாய்ப்பு என்று பட்டி மன்றம் வைத்து தான் விவாதிக்க வேண்டும்

 • தனசேகர் - சென்னை ,இந்தியா

  எது மோசமான ஆட்சி ன்னு வைக்க வேண்டிய தலைப்பை மாத்தி வச்சுட்டீங்களே .....

 • Saravanan - Michigan,யூ.எஸ்.ஏ

  கருத்து கணிப்பை பார்க்கும் போது தி மு க, அதிமுக , இரண்டும் இல்லை , இந்த மூன்று அயிட்டங்களும் எல்லா criteria விலும் உச்சத்தில் உள்ளன. அதே நேரத்தில் மாநிலம் முழுதும் ஒரு மாற்றம் வேண்டும் என்கிற சலிப்பும் இருக்கிறது. 'இரண்டும் இல்லை' என்று நினைப்பவர்கள் நினைத்தால் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். அனால் பிரச்னை என்னவென்றால் இரண்டும் இல்லை என்று நினைப்பவர்கள் ஒரே முகமாக ஒரு கட்சிக்கு வாகளிப்பதில்லை. ஆளுக்கொரு கட்சிக்கு வாகளிப்பர்கள். இவர்களின் ஓட்டுக்கள் சிதறி சின்னா பின்னமாகி கடைசியில் இந்த இரண்டு கட்சி களில் ஒன்றுதான் ஆட்சிக்கு வரும். தமிழ் நாட்டின் தலை எழுத்து ஒருநாளும் மாற போவது இல்லை. நான்கு கட்சிகள் சேர்ந்து உருவாக்கியுள்ள மக்கள் நல கூட்டணி மூன்றாம் இடத்தில் இருக்கும். மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களெல்லாம் தங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு இந்த கூட்டணிக்கு வாக்களித்தால், திமுக அதிமுக கட்சிகளை வீட்டுக்கு அனுப்பிய ஒரு வரலாற்று சாதனையை படைக்க முடியும். அல்லது எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.

 • Mannan - chennai,இந்தியா

  இது போல இரு பெரிய கட்சிகள் தான் மற்ற கட்சிகள் எல்லாம் waste என்பது போல திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்றால் அது வெகு நிச்சயம் ஆலைகள் இதன் பின்னியில் உள்ளார்கள் என்று சந்தேகம் வளர்கிறது காரணம் இரு பெரிய கட்சிகள் தவிர்த்து யார் வந்தாலும் ...ஆலைகள் இல்லாமல் போக வாய்ப்பு அதனால் இந்த இரு கட்சிகள் மட்டும் சம பலம் என்று போட்டு விட்டால் மக்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக இப்படி Tune செய்து வைத்து விட்டால் .....சரி நம்ம தமிழ் நாட்டிற்கு வேறு வழி இல்லை இந்த வலிகளை தான் மக்கள் தாங்கி ஆகா வேண்டும் என்று நினைக்க வைக்க இது ஒரு வகை சூழ்ச்சி என்று எண்ண தோன்றுகிறது ....இது மக்கள் நன்கு யோசித்து யார் யார் விலைக்கு போனார்கள் போகிகிறார்கள் என்று உணர்ந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது என்று எண்ண தோன்றுகிறது

 • Mannan - chennai,இந்தியா

  சில மாதங்கள் முன் வந்த அதே திணிப்பு பாணி கேள்விகள் PMK நபர் கேட்ட கேள்விக்கு நெறியாளர் சரியான நேரடியான பதில் சொல்லவில்லை என்பதில் இருந்து இது திணிப்பு ஆன முயற்சி தான் என்று கருத வேண்டியது உள்ளது .....மக்களே சிந்திப்பீர் இது போல ஒரு திணிப்பு அதற்கு மற்ற ஊடகங்கள் கொடுக்கும் அதி முக்கியத்துவம் எல்லாவற்றையும் நன்கு கவனித்தால் .....வேண்டும் என்றே இரு கட்சிகள் மட்டும் முன்னிலை படுத்த படுவது தெரியும் பாருங்கள ....

 • Mannan - chennai,இந்தியா

  இதில் சொன்னார்கள் சென்னை மண்டலத்தில் MDMK வைகோ கட்சி நான்காவது இடத்தில் உள்ளது என்று .......வைகோவே விழுந்து விழுந்து சிரித்து ரசித்து இருக்க வாய்ப்பு .............

 • Mannan - chennai,இந்தியா

  இது ஏற்கனவே ஒரு கருத்து கணிப்பு (திணிப்பு ) வந்தது போல உள்ளது அதாவது இரு கட்சிகளும் கிட்ட தட்ட சம பலம் ......மதுவை பற்றி மக்களிடம் மறந்தும் கேள்வி கேட்க மறந்து விடுவார்கள் ........இதில் இருந்தே இந்தன் நோக்கம் என்ன வென்று யூகிக்க முடியும் ..........இரு பெரிய கட்சிகள் தான் Top மீதி எல்லாம் சும்மா என்பது போன்று சித்திரிக்க முயற்சி நடக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது இதே போல இன்னும் இரண்டு தணிப்பு வர வைத்து விட்டால் ........மக்கள் ஆமாம் இந்த பெரிய கட்சிகள் தான் ஆள வாய்ப்பு என்று திடமாக நம்பி விட செய்யும் மன நிலையை ஏற்படுத்த செய்யும் முயற்சி என்று தோன்றுகிறது

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  திமுக மாபெரும் வெற்றி.... திமுக கூட்டணி 222 தொதிகளில் வென்றது .... திமுக மட்டும் 137 தொகுதிகளை வென்றது....தேமுதிக இந்த கூட்டணியில் இடம் பெற்று 47 தொகுதிகளை வென்றதால் மீண்டும் எதிர் கட்சியாகிறது... யாரும் எதிர் பாரா வண்ணம் காங்கிரஸ் தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வென்று 30 இடங்களையும் தனது வசமாக்கி கொண்டது.... அதிமுக படு தோல்வி... அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் 4.. மதிமுக 6, பாமக 2... ஸ்டாலின் முதல்வராகிறார்.... ஸ்டாலினுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து.... ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவுக்கு ஒபாமா வந்துள்ளார் ... ஸ்டாலினை சந்திக்க பெரும் கியூ நிற்கிறது.... வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் , சு .சாமியும் கியூவில் நிற்கிறார்கள்... இதனை பார்த்த துரைமுருகன் அவர்களை அழைத்துக்கொண்டு மேடைக்கு விரைகிறார்... ஸ்டாலின் முதல் கையெழுத்தாக மது விலக்கில் கை எழுத்து இடுகிறார்.... அப்போது வேத மந்திரங்கள் ஒலிக்கின்றன.... சில பெண்கள் ஆர்வ மிகுதியால் குலவை இடுகிறார்கள்... அமைச்சரவையில், இரண்டாம் இடத்தில் இனமான பேராசிரியர் இருக்கிறார்... ஆளுநர் ராசய்யா பதவி பிரமாணம் செய்தது வைக்கிறார்... பேராசிரியரை தவிர்த்து மீதம் உள்ள அனைவரும் அமைச்சரவையில் இளம் வயதினர்... ஆனால் அனைத்து இளம் அமைச்சர்களும் தங்களது அப்பாக்களாகிய மாஜி திமுக அமைச்சர்களின் ஆசிகளை பெற்று கொண்டிருந்தார்கள்....சபரீசன் என்ற புதுமுகத்துக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது , பலருக்கும் வியப்பை கொடுத்தது.... உதயநிதிக்கு தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் பட்டம் மேடையிலேயே உடனேயே வழங்கப்பட்டது... அப்போது வருங்கால முதல்வர் உதயநிதி வாழ்க என்ற ஒரு கோஷம் மண்டபத்தில் ஒரு பகுதியில் இருந்து ஒலித்தது....கனிமொழி அழையா விருந்தாளியாக வந்து, அண்ணன் முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.... அழகிரிக்கு அழைப்பில்லை... என்றாலும் அழகிரி, பதவி பிரமாணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து, தயார் தயாளு அம்மாளை மட்டும் பார்த்து உடல் நலம் விசாரித்து விட்டு, மண்டபத்தில் இருந்து வெளியேறினார்....[ இப்போதாவது எனக்கு அதிகம் 3 ஸ்டார் ஒட்டு விழுகிறதா என்று பார்க்கலாம் ]

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சிங்கி சாங் சிங் ..... நல்ல (?) தலைப்பு

 • SINGA RAJA - MADURAI,இந்தியா

  தமிழகத்தில் தன்னிகரற்று, என்றென்றும் மக்களின் நலன் கருதி, தொலை நோக்கோடு செயல்பட்டு வருவது, அதிமுக மட்டுமே. அம்மாவின் ஆட்சியே தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சி. இனியும், தமிழகத்தில் தொடர்ந்து, தனது மகோன்னதமான மக்கள் பணியை அம்மா, தமிழக மக்களின் ஏகோபித்த பேராதரவோடு வெற்றிபெற்று தொடர்ந்து ஆட்சி செய்வார் என்பதே திண்ணம்.

 • Maddy - bangalore,இந்தியா

  இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு... அ.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் இடைவெளி குறைவுதான். எனவே எப்பாடு பட்டாவது தே.மு.தி.க வை தி.மு.க பக்கம் சேர்த்துக்கொண்டால் ஆட்சி என்பது எட்டும் கனிதான் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். ஆனால் மக்களின் பார்வையில் கையில் இருக்கும் மாங்காய்(அ.தி.மு.க) தேவலை... மரத்தின் மேல் இருக்கும் பலாக்காயை(தி.மு.க) பறிக்கப்போய் அது நம் தலைமீது விழுந்துவிட்டால்... செத்தும் கெடுத்தான் சிவந்தியப்பன் என்றாகி விடப்போகிறது... அ.தி.மு.க வின் இரட்டை இலையே பரவட்டும்... தமிழக அரசு கூனி குறுகி மத்திய அரசிடம் விழக்கூடாது என்றால் அ.தி.மு.க தான் நான் ஆதரிப்பேன்... இல்லையென்றால் குடும்பத்தில் ஒரு பதவிக்கிடைக்கும் என்றால் என்னவேனாலும் செய்துக்கோங்க என்பவர்களை நினைத்தாலே வயிறு கலங்குகிறது...

 • Ram Dev - Madurai,இந்தியா

  மைனாரிட்டி திமுக ஆட்சியில் நடந்த அராஜகங்களை , தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கவில்லை. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தான் அராஜகம் அதிகம், அனைத்து மந்திரிகளும் , நில அபகரிப்பு செய்தனர். ஆனால் தற்போது, தவறு செய்பவர்கள் உடனடியாக தண்டிக்கபடுகிறார்கள்...திமுக ஆட்சியில் குடும்ப பிரச்சனைகாக அப்பாவி நிருபர்கள் எரிக்கப்பட்டதை மறக்க முடியுமா ??

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  புதிய தலைமுறை என்றுமே அதிமுக எதிர்ப்பு தான். திமுக என்றுமே அதிமுகவிற்கு அருகில் இல்லை. உண்மையான மக்களின் கணிப்பு என்னவென்றால் அதிமுக 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குக்களை பெரும். தேர்தலுக்கு பிறகு நாம் தெரிந்து கொள்ளளலாம்.

 • Pandiyan - Chennai,இந்தியா

  43 சதவிகிதம் மக்கள் தி மு க ..ஆ தி மு க கட்சிகள் ஊழல் கட்சிகள் என்று சொல்லுகின்றனர் ..பின்னர் எப்படி அதே மக்கள் தி மு க, ஆ தி மு க விற்கு ஆதரவு அளிப்பார்கள் ..மதுவை பற்றி கருத்து கேட்கவில்லை ..நம்பும்படியாக இல்லையே ..மாற்றத்தை வேண்டி மக்கள் நல கூட்டணியின் வளர்ச்சி தடுப்பத்ற்கான முயற்சி என்றே தோன்றுகிறது ..234 தொகுதில் 5000 பேரிடம் என்றால் சராசரியாக 21 பேரிடம் கேட்டு இந்த முடிவை அறிவித்து இருப்பது சரியாக படவில்லை ..கருத்து கணிப்பு நடைபெறும் இடம் நேரம் கூட அந்த தனியார் தொலைகாட்சி விளம்பரபடுதியதை பார்த்த பொழுது 2 கழக தோழர்கள் வாக்களிக்க எதுவாகவும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது ..மொத்தத்தில் முடிவுகள் கேள்வி குறிதான்

 • Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ

  சட்டப்பேரவை தேர்தல்ல கூட்டணிக்கு அப்ளிகேஷன் போட்டுட்டாண்டா "புதிய தலைமுறை" பச்சமுத்து.

 • Global Citizen - Globe,இந்தியா

  ஜால்ரா சத்தம் ரொம்ப அதிகமா கேக்குதே.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  என்ன தான் கருத்து திணிப்பு நடத்தினாலும் ... 1996,2006,2016 சரித்திரம் படைக்க போகிறது.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  இதை வைத்து கொண்டு ஓட்டை வாயன் இளங்கோவன் முக்கி முக்கி அறிக்கை விடுவான் . கோபண்ணா வீராவேச பேச்சு இருக்கும் . மருத்துவர் ராமதாஸ் அவர்களை இப்படியா அவமதிப்பு செய்வது . வைகோ கோபத்தின் உச்சிக்கே சென்று ஆவேச அறிக்கை விட போகிறார் . திருமாவை இழுத்து கொண்டு செல்ல போகிறார்கள் . மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கேடு கெட்ட கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்து கொண்டு உள்ளனர் .நீங்களும் இங்கே சங்கமம் ஆகலாம் என்று மஞ்ச துண்டு அறிவிப்பார் . இரண்டும் வாலை ஆட்டி கொண்டு மஞ்ச துண்டின் காலடியில் சரணம் கச்சாமி என்று கூட்டணியில் சேர போகிறார்கள் . பாவம் வைகோ . தனி மரமாக இருக்க போகிறார் . இந்த கருத்து கருப்பின் உண்மை நோக்கம் என்ன என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்து இருக்கும். மக்கள் மிக மிக தெளிவாக உள்ளனர் . எக்காரணத்தை கொண்டும் மஞ்ச துண்டின் குடும்ப முடியாட்சியை தமிழகத்தில் கொண்டு வர விட கூடாது என்பதில் எந்த சந்தேகம் இல்லாமல் உள்ளனர் . இம்முறை மஞ்ச துண்டின் கட்சிக்கு சங்கு ஊத எல்லோரும் தயார் ?????

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  சட்டம் ஒழுங்கு இந்த ஆட்சி அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் டாஸ்மாக் மற்றும் கட்சி ரீதியாக நிறையவே அத்துமீறல்கள் நடந்துள்ளன...அது ஆட்சிக்கும் அவப்பெயரை எடுத்து தந்துள்ளது ...இந்த விஷயத்தில் 2001-2006 க்கான ஆட்சிக்கு ஈடாகாது..

 • RGK - Dharapuram,இந்தியா

  அதிமுக வெல்லுதோ இல்லையோ தி மு க அதல பாதாளத்தில் உள்ளது உண்மை. தேச விரோத சக்தியான காங்கிரசை சேர்த்துக்கொண்டது சுத்த முட்டாள் தனம்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ரெண்டு பேத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை என்பதை இந்த முடிவுகள் பறைசாற்றுகின்றன...ஆளும் கட்சியில் திறமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்காமல் விசுவாசத்தின் அடிப்படையில் வாய்ப்பு கொடுப்பது நல்ல விஷயமல்ல......நல்ல திறமையானவர்களை கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவி கொடுத்தால் ஆளும்கட்சி தி.மு.க வை விட பல மடங்கு முன்னிலை வகிக்க வாய்ப்புக்கள் உள்ளன....கட்சியில் கட்டுப்பாடு ,கட்டுகோப்பு எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு தலைமை பண்பு,அறிவுஜீவிகள், வளர்ச்சியின் மேல் அக்கறை கொண்ட நேர்மையான திறமையானவர்களும் இருக்க வேண்டும்... அப்பொழுது தான் கட்சியும் ஆட்சியையும் தொய்வின்றி சீராக இருக்கும்...இதை ஆளும் கட்சி உணரவேண்டியது அவசியம்...

 • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

  வாழ்த்துக்கள் மீண்டும் அதிமுக வெற்றிக்கு. மேலும் முதல்வர் வேட்பாளர் யார் வேண்டும் என்று திமுகவில் ஸ்டாலின் கருணாநிதி ரெண்டு பேரையுமே குறிப்பிடுவது..பிறகு ரெண்டு பேரின் கூட்டு தொகையை ஒன்றாக கூட்டி திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பது போன்று காட்டுவது சரியான முடிவு அல்லவே. இரண்டு விதமாக இரண்டு பேரையும் கேள்வி கேட்டு இரண்டு பேருக்கான கணிப்பு என்பது தனி தனி யாக தான் கருத வேண்டும்,அல்லது ஒட்டு மொத்தமாக திமுக சார்பில் யாரு முதல்வருக்கு வாய்ப்பு என்று கேள்வி இருந்து இருக்க வேண்டும், ஸ்டான்லிக்கா அல்லது கலைஞ்சரா என்று தான் இருந்திருக்க வேண்டும்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  ஸ்டிக்கர் ஓட்டுவதில் யார் என்றும் கலப்படம் செய்வதில் யார் என்றும் அரசு அதிகாரிகள் ஏன் தற்கொலை செய்தார்கள் என்றும் கேள்வி கேட்டால் நல்லா இருக்கும். ஸ்டிக்கர் ரொம்பவே மக்கள் முகம் சுளிக்கவச்சு இருக்கு. அம்மா தயாரிப்பு வந்தும் ஏன் விலைவாசி விண்ணை தொட்டது?

 • Kanna - Chennai,இந்தியா

  இதுல காமடி என்னன்னா.. நேத்தக்கி புதிய தலைமுறை டிவி நேர்பட் பேசுல, எல்லா கட்சிகாரனும் இந்த கருத்து கணிப்பு மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்லுறானுங்க... அப்ப யாருக்குடா கருத்து கணிப்பு? பதில் : "சுடலி"க்காக

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  இந்த தருணத்தில் நிதர்சனம் என்னவென்றால், தமிழ் நாட்டில் இரு பெரிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன....மற்ற எல்லா கட்சியும் ஒன்றாக சேர்ந்தாலும், இவர்களை நெருங்கும் நிலையில் இல்லை...ஆகவேதான், இந்த 2016 தேர்தலில் இரு பெரிய கட்சிகளையும் ஒருசேர தோற்கடிப்பது இயலாத ஒன்று....ஒரு எதிரியை மட்டும் அடையாளம் கண்டு இந்த தேர்தலில் வீழ்த்த முயல்வது அரசியல் தந்திரமாக இருக்க வேண்டும்....

 • CJS - cbe,இந்தியா

  இதை நான் மறுபடியும் பதிவிடுகிறேன். அதிமுக மறுபடியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழ் நாடு மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பது உண்மை. அதிமுக வரும் பட்சத்தில் அடுத்து 5 வருடத்திற்கு ஒரு முன்னேற்றமும் இருக்க போவதில்லை. இப்போது அனைத்து பொதுத்துறையிலும் மிக பெரிய நட்டம். அதிமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நட்டத்தை ஈடு செய்ய, மீண்டும் பால், பேருந்து, மின் கட்டணம் போன்றவை மிக கடுமையாக உயர்த்துவார்கள். நம் ரத்தத்தை உருஞ்சுவதும் இல்லாமல், மது பாணத்தினால் நம் மாநிலத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு போய் விடுவார்கள். அதிமுக அரசுவுக்கு எதிராக நீங்கள் எது பேசினாலும் நசுக்க படுவீர்கள். சென்னை வெள்ளம், செம்பரபாக்கம், மௌவ்லிவாக்கம், மது கொள்கை , IAS முதல் சாமானியன் வரை முதுகு வளைவது, ஸ்டிக்கர், தியேட்டர், 20 வருடமாக நீங்கள் இழுத்து கொண்டிருந்த வழக்கு, அக்ரி தற்கொலை, கொட நாடே அரசு அலுவலகம், மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், பத்திர கட்டணம் போன்றவை அதிகமான உயர்வு... போன்றவற்றை மக்கள் மறந்து போய்விட கூடாது. அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாஇல்லை. ஆனால் தயவு செய்து அதிமுகவை தேர்ந்தெடுக்காதீர்கள்

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  இந்த கருத்து கணிப்பு 85 - 90 சதம் சரி என்றே நினைக்கத் தோன்றுகிறது....அண்ணா திமுக கூட்டணி போட்டே ஆகணும் என்றுதான் இந்த கணிப்பு சொல்லுகிறது....ஒரு வேளை விஜயகாந்த் திமுக கூட்டணி பக்கம் போனால், அண்ணா திமுக பாஜக, பாமக வை கண்டிப்பாக இழுக்கும்....மக்கள் நலக் கூட்டணியும் உடைக்கப்படலாம்.....

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  கருத்துக்கணிப்பை அலசினால் நமது வாக்காளர்கள் பொதுவாக அரசியல்வாதிகளைப் பற்றி ஓரளவு அறிந்து வைத்துள்ளார்கள் என்றுதான் தோன்றுகிறது .... இரண்டு பெரும் கழகங்கள் மற்றும் அதன் தலைவர்கள் மீதான பற்றுதல் குறைந்துள்ளது ஆறுதலைத் தருகிறது ....

 • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

  பொய்.. சுத்த பொய்.. இத 'மையப்படுத்தப்பட்ட ஊழலம்மா' தொண்டர்களாகிய நாங்க ஏத்துக்கவே மாட்டோம். இந்த கருத்து கணிப்பு ஒட்டுமொத்தமா என்ன சொல்லுதுன்னா, ஒன்றரை வருஷம் முன்னால 44%ஆ இருந்த எங்க பாட்டியம்மாவுக்கான மக்கள் ஆதரவு சுமார் 10% குறைந்து 34% ஆயிடுச்சாம். அதே நேரத்துல 23 %ஆ இருந்த திமுகவுக்கான மக்கள் ஆதரவு 33% அதாவது 10% ஏறிடுச்சாம். அதிலயும் இது ஒரு இறுதி கருத்து கணிப்பு இல்லை, இது ஒரு trend analysis - opinion poll தான். அதாவது பாட்டியம்மா சர்ர்ர்ர்ர்ருனு அதல பாதாளத்தை நோக்கி போயிட்டு இருக்காங்களாம். திமுக கும்ம்ம்முனு உச்சத்துக்கு போயிட்டு இருக்காம். அப்போ இந்த வேகத்துல போனா எங்க 'மையப்படுத்தப்பட்ட ஊழலம்மா' எலெக்ஷன் இறுதியில ஆள் அட்ரஸ்ஸே இல்லாம போயிடுவாங்களாம். நல்லா இருக்குதுங்க உங்க கருத்து கணிப்பு.. புதிய தலைமுறைதான் இப்படி அலம்பல் பண்ணுதுன்னா, நம்ம தினமலரும் நைசா சொல்ல வேண்டியதை சொல்லாம பாட்டியம்மா தொண்டர்களாகிய எங்களையே ஏத்துக்க வைக்க பாக்குது. இது அநியாயம். நாங்க இதை ஏத்துக்க மாட்டோம்.

 • oviya.vijay - Madurai,இந்தியா

  ஜிங் ஜக்... நல்லா ஜால்ரா அடிக்குறீங்க... அனுபவிக்க போறீங்க...

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இதிலே என்ன ADMK வுக்கு பெருமை இருக்கிறது. மீதி 66% தமிழ் மக்கள் அம்மா ஆட்சியை அன்கீரிகரிக்கவில்லை என்றுதானே இந்த கருத்து கணிப்பினால் தெரிய வந்துள்ளது. எனவே ADMK தம்மட்டம் அடிக்கதேவையில்லை

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  வடிவேலு தான் ஞாபகம் வருகிறது..இந்த ஊரு இன்னுமா என்னை நம்புது...சாப்பிடும் உப்பிலும் கலப்படம் என்றால் எப்படி சொரணை வரும். சூடு சொரணை வெட்கம் மானம் எல்லாம் இழந்து அம்மனமாய் நிற்கும் இந்த தமிழன் என்ற இளிச்சவாயன் மீண்டும் மீண்டும் இந்த ரெண்டு குடிகார லஞ்ச பேய்களை தான் தேர்ந்து எடுப்பான்...

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  புதிய தலைமுறை , ஜெயலலிதா எதிர்ப்பு ஊடகம் . இவர்கள் இதை தெரிய படுத்த காரணம் தி மு க எப்படியாவது கூட்டணி வைத்து கொண்டு வெற்றி பெற வேண்டும் . மற்றபடி வேறு ஒன்றும் இல்லை . தமிழகத்தில் 55 % - 60 % கிராமப்புற வாக்காளர்கள் . தேர்தல் நடக்க 2 நாள் முன்பு தான் அவர்களின் மனநிலை தெரியும். மேலும் 5 % - 7 % வாக்காளர்கள் கடைசி நேரத்தில் முடிவு செய்பவர்கள் . ஒட்டுமொத்த மாற்றத்தை அவர்களால் கொண்டு வர முடியாது . இன்றளவும் 40 % மக்கள் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை விரும்புகிறார்கள் . தி மு க வை விட்டு கட்சி தொண்டர்களே இடம் மாறி சென்ற பின் இந்த கருத்து கணிப்பின் இடைவெளி 1 % என்று சொல்வது ஏற்று கொள்ள தக்கது இல்லை . இதுவும் மற்றுமொரு கருத்து திணிப்பே . இளைஞர் அணி சின்ன தாத்தா செய்கின்ற தில்லுமுல்லு தான் இது.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  இந்த 2016 தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் தமிழ் மக்களின் நிர்ணயகமான தேர்தல் தமிழ் நாடு மக்கள் தான் ஒரே கட்சி புரட்சி தலைவி செல்வி ஜே. ஜெயலலிதா தான் ஒரே வேட்பாளர்.. இந்த தேர்தல் வாக்களிப்பில் தமிழ் நாடு உலக தமிழ் மக்கள் தேசிய தமிழ் மக்கள் யாரும் செல்வி ஜே ஜே விற்கு எந்த துரோகமும் நினைக்காமல் அமோக ஆதரவு, ஒட்டுமொத்த ஆதரவு வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்யவேண்டும். . இந்த வெற்றி தமிழ் நாட்டின் வெற்றி, தமிழ் மக்களின் வெற்றி, தமிழ் இனத்தின் வெற்றி, தமிழ் உரிமை, பெருமைகளின் வெற்றி.. அகவே ஒரே நோட்டம், ஒரே நோக்கம், ஒரே தலைவி, ஒரே மக்கள் என்று இந்த 2016 தேர்தல் வெற்றி முடிவுகள் இருக்க வேண்டும். வெற்றி தமிழ் மக்களுக்கு செல்வி ஜே ஜே வின் வெற்றியில், மு. கருணாநிதி மற்ற தமிழ் மக்கள் சீரழிக்க திட்டம் போட்டு அரசு, ஆட்சி என்று அலையும் எல்லா எதிரிகட்சிகளுக்கும் முடிவின் தொடக்கம், திருந்தி சரியான அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு.- இது தான் இந்த 2016 தேர்தலின் இரத்தின சுருக்கமான பரப்புரை. தமிழ் மக்கள் சொல்லும் தமிழ் நாடு அரசின் சாசன பதிப்பின் முத்திரை

 • farook - salmiya,குவைத்

  எல்லா மீடியாவும் தி.மு .க.வுக்கு எதிரானது.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இப்போதைய நிலவரப்படி,அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணி மற்றும் திமுக, காங், முஸ்லிம் லீக் மற்றும் புதியதமிழகம் ஒரு அணியாகவும் , மக்கள் நலகூட்டனியில் விஜயகாந்து மற்றும் வாசன் இணைந்தாலும் கூட, அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மட்டுமே கிட்டத்தட்ட 230 தொகுதிகளை கைப்பற்றும் இருவருக்குமே அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட 120 தொகுதிகளை கைபற்றகூடும்,திமுக 110 தொகுதிவரை பெறக்கூடும் ஜெயா மீண்டும் ஆட்சி அமைப்பார். மக்கள் நலகூட்டணி ஓன்று அல்லது இரண்டு தொகுதிவரை வடமாவட்டங்களில் பெறக்கூடும், பாமக ஓன்று அல்லது இரண்டு தொகுதிகள் வரை பெறக்கூடும். ஆனால் தேர்தலுக்கு பின்தான் ஆட்டம் இருக்கும்,மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜெயா முன்னிலும் வேகமாக விஜயாகாந்தை பழிவாங்கவே பார்ப்பார், ஐந்தாண்டுகள் ஆட்சியில் தொடர்வாறேயானால் கிட்டத்தட்ட விஜயகாந்தின் கட்சியை காணாமல் அடிக்கவே பார்ப்பார், அதில் பெரும் வெற்றியையும் அடையக்கூடும். 2011 தேர்தலுக்கு முன்பு வரை கிட்டத்தட்ட 10% வாக்குகளை வைத்திருந்த அவர், இன்று 5 % ஆனதற்கு ஜெயாவே காரணம். திட்டம்போட்டு MLA களை தூக்கியதோடு, கட்சியின் இமேஜ், பொதுமக்களிடம் damage ஆகும் படிபார்த்து கொண்டார். மீண்டும் ஆட்டம் ஆரம்பம் ஆகிடும்.

 • Vignesh Kandasamy - Muscat,ஓமன்

  இருவரின் ஆட்சியும் சரி சமமே,ஊழல் புரிவதிலும், அராஜகத்திலும், விலைவாசி ஏற்றத்திலும் இவ்விரு கட்சிகளுக்கும் சமமான பங்கு வகிக்கிறது.

 • Vignesh Kandasamy - Muscat,ஓமன்

  இருவரின் ஆட்சியும் சரி சமமே ,ஊழல் புரிவதிலும், அராஜகத்திலும், விலைவாசி ஏற்றத்திலும் இவ்விரு கட்சிகளுக்கும் சமமான பங்கு வகிக்கிறது.

 • Hm Join - Chennai,இந்தியா

  சிங்கப்பூர் சேகரா இப்போ குளு குளு இருக்குமே...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இந்த முடிவுகள், துக்கடா கட்சிகளுக்கு நல்லதொரு வாழ்கையை தரும், சீட்டு பெறுகிறார்களோ இல்லையோ , நல்ல பணபெட்டியை பெற்று தரும். மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதி, வேல்முருகனின் கட்சி (நெய்வேலி அல்லது பன்னுரோட்டியோடு சில பெட்டிகள்), வினயரசுக்கு ஒரு தொகுதி, பூவை ஜெகனுக்கு பெட்டிமட்டும், வாழ்நாள் அடிமை செ கு தமிழரசனுக்கு ஒரு தொகுதி. என்று ஆயாவின் பட்டியலிலும். ஐயாவின் பட்டியலில் விஜயகாந்த் வருகையை பொருத்து புதிய தமிழகம் , கிருஷ்ணசாமிக்கு இரண்டு முதல் நான்கு தொகுதிவரை கிடைக்ககூடும் , காதர் மெய்தீனுக்குஇரு தொகுதிகள், தமுமுக அன்சாரி(இணையக்கூடும்) இவர்களுடன் ஓன்று அல்லது இரண்டு தொகுதி என்று களம் மாறும்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆம்லு...., அதுல என்ன சந்தேகங்கேன்.... அம்மா வாழ்க.....

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. பார்ப்பனர்கள் நடத்தியது. எங்கள் எஸ்ரா சற்குணம் தாடி வச்சு நாடி புடிக்குற ராஜநாயகம் மூலமா நடத்தினாத்தான் நாங்கள் ஒப்புக்குவோம். அப்படீன்னு ஒரு பேக்ஸ் சண்முகநாதன் கிட்டேந்து கொஞ்ச முன்னாடி தினமலர் ஆபீசுக்கு வந்திருக்கணுமே.

 • Duri Kuppusami - chennai ,இந்தியா

  அம்மாவே வெற்றிபெறவேண்டும் ,நல்லாட்சியை நல்கவேண்டும் ......தமிழக மக்கள் பெரும் ஆதரவு நல்கவேண்டும் ............ த.குப்புசாமி சென்னை

 • M.Subburaj - Jeddah,சவுதி அரேபியா

  இவ்வளவு கேவலமான ஒரு ஆட்சி, செயலற்று போன துருப்பிடித்த ஆட்சியை நடந்தும் மக்கள் இந்த ஆட்சியை மீண்டும் விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 32 வது மாநிலமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சியிலும் விரும்பிகிறார்கள் என்று தான் பொருள் படும் அதற்கு மேல் மக்கள் மேலும் கஷ்டத்தை தான் அ தி மு க ஆட்சியால் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் போது என்னவென்று சொல்வது

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அதன் குறைகள் மிக நன்றாக கண்ணுக்கு தெரியும்.. 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று கட்சி ஆட்சியினர் காலத்தில் நடந்த குறைகள் மறந்துவிடும்.. எப்போதும் அருகில் இருப்போர் குறைகள் பெரிதாகவும் தொலைவில் இருப்போர் நல்லவராகவும் தெரிவதை போல .. அருகிலிருப்பவர் தொலைவாக சென்றால் அவர் நலவராக தெரிவார்.. தொலைவில் இருப்பவர் அருகில் வந்தால் அவரது குறைகள் பெரிதாக தெரியும்.. இந்த சைக்காலஜி யை இங்கும் பயன் படுத்தி பாருங்கள்.. 5 வருடங்களுக்கு முன் ஆண்ட தி மு க ஆட்சி 5 ஆண்டுகள் தொலைவில் உள்ளது.. அ தி மு க ஆட்சி மிக அருகில் உள்ளது .. ஆனாலும் மக்களுக்கு தொலைவில் உள்ளோர் குறை தெரிகிறது என்றால் ... அவர்களது ஆட்சி மக்களை எவ்வளவ்வு காய படுத்தி இருக்கும்.. ??

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///விலைவாசி கட்டுப்படுத்துவதில் சிறந்த அரசு எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 27.79 சதவிதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 35.41 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.///இது பொதுவான கருத்து, எந்த ஒரு ஆட்சியையும் அது ஐந்தாண்டு முடிவில் நிலவும் விலைவாசியையும், ஆட்சியின் ஆரம்பத்தில் இருக்கும் விலைவாசியையும் ஒப்பிட்டு பார்த்து சொல்லப்படும் கருத்து, போன தேர்தலில் ஜெயா ஒவ்வொரு தேர்தல் பிரசார மேடையிலும் விலைவாசியை பற்றி பார்த்து படித்த பட்டியலும், பாட்டும் இன்னமும் நிலைவில் இருக்கிறது.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///ஊழலற்ற ஆட்சி எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 29.68 சதவீதம் பேரும் தி.மு.க.விற்கு ஆதரவாக 19.12 சதவீதம் பேரும் இரண்டும் இல்லை என்று 43.63 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.///இதுதான் ரெண்டு கட்சிகளின் லட்சணம், ஆனாலும் பாவம் இந்த 29.68 மட்டும் 19.12 , இன்னமும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள், இவர்கள் தான் இந்த கட்சியை இவ்வளவு காலமாக கட்டி காப்பாற்று வருபவர்கள்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///நல்லாட்சியை வழங்கிய அரசு எது என்ற கேள்விக்கு 34.8 சதவீதம் பேர் அ.தி.முக.,விற்கு ஆதரவாகவும்///நடக்காத ஆட்சியில் எங்கிருந்து நல்லாட்சி வந்தது. நடந்திருந்தால் நல்லது என்று கமல் பாணியில் சொல்லி இருப்பார்கள் மக்கள்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  எல்லாம் சரி, இந்த கருத்து கணிப்பில் என்னவெல்லாம் சொன்னார்கள், அதிமுகவிற்கும், திமுகவுக்கும் ஒரு சதவீதம் கூட வாக்கு வித்தியாசம் இல்லை என்பதே பிரதானம், அதிலும் அம்மாதிமுக 119 இடம், என்றும், ஐயா திமுக 115 என்றும் சொல்கிறார்கள். அதாவது கூட்டணி இல்லாமல் தனிதனியா வாக்குவங்கி விகிதம் , அப்போ காங், ஒரு முஸ்லிம் கட்சி, புதிய தமிழகம் என்று பார்த்தால் நிலைமை, அம்மா அதிமுகவிற்கு ததிங்கினதோம் தான் போல. எப்படியோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளை தேடியவர்கள், அவர்களை அருகில் வரும் வரை , முயல் போல தூங்கிவிட்டார்கள், இப்போ இன்னமும் கடினமாக உழைக்கவேண்டும், பிஜேபி யை கூட்டணியில் சேர்க்கவேண்டும், வாசனை தாஜா செய்யவேண்டும், முடிந்தால் வைகோ வை இணைக்க முடியுமா என்றும் பார்க்கவேண்டும்.... இன்னும் என்னன்னவோ வேலைகள் ஆயாவின் ஐவர் படைக்கு, அதோடு தேர்தல் நேரத்தில் 144 ஏற்பாடு செய்தல் வேண்டும், பத்திரமாக பணபெட்டியை கொண்டுபோய் சேர்க்கவேண்டும்... எவ்வ்வ்வ்வலவு.. வேலைகள். அப்பப்பா இப்பவே கண்ணை கட்டுதே.

 • Kanna - Chennai,இந்தியா

  இந்த சர்வேல சுடலி ஏன் சேர்க்கப்பட்டார்? ஒரு உரையில் இரு கத்திகள்? 300 கோடி செலவு பண்ணி தன்ன ஒரு முக்கியமான ஆளா காட்டிக்கிறாரு...

 • Kokkarako ko - Trichy ,இந்தியா

  அப்புறம் என்ன?? எல்லாம் முடிந்தது. அதிமுக தவிர அனைத்து கட்சிகளுக்கும் 5 ஆண்டுகள் விடுமுறைன்னு இப்பவே அறிவிசுடலாமே

 • Kanna - Chennai,இந்தியா

  சபரீசன், APT க்கு பல்க்கா செட்டில் பண்ணிட்டாரு... ஏற்க்கனவே, ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சி கிட்ட கான்டிராக்ட் போட்டாச்சு, அதோட வேலேயே, கருத்து கணிப்பு (பொய்யான) போடுறது, செய்திக்கு கருத்து போடுறது, ஸ்டார் பட்டன்ன அமுத்துறதுதான்... அந்த ஏஜென்சி வேற யாருமே இல்லைங்கோ, நம்ம மோடிக்கு 2014லயும் நிதிஸ் லாலுக்கு 2015ல யும் ஒப்பந்தம் பண்ணுன அதே ஏஜென்சிதானுங்கோ.. இப்ப தெரியுதா நம்ம சுடலி பதவி ஏற்பு விழாவுக்கு ஏன் பாட்னா போனாருன்னு...

 • pspandian - Avinashu

  அம்மா சிறந்த ஆட்சியையே தந்துள்ளார் மின் பிரச்சனையை தீர்த்து வைத்து உள்ள ஒன்று போதும்

 • Marshal - Los Angeles

  சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சார்ந்த ராணுவ வீரர்கள் உடலில் ஜெயலலிதா படத்தை ஓட்டுகிறார்கள் ! என்னதான்டா உங்க பிரச்சனை ???

 • Pannadai Pandian - wuxi,சீனா

  இந்த கருத்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்றாலும் விழுக்காடு மிகவும் கம்மியாக உள்ளது. என்னை பொறுத்த வரையில் 50% க்கு மேல் மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது. திமுகவுக்கு 20% க்கும் குறைவாகவே மக்களின் ஆதரவு உள்ளது அவர்கள் யாவரும் திருட காத்துக்கொண்டிருக்கும் கன்னக்கோல் பார்ட்டிகள். இந்த புதிய தலைமுறை கருத்து கணிப்பை கேப்டன் அறிந்து கொண்டாரா ??? சாமி சின்ன தம்பி.....சீக்கிரம் ஒரு பார்சல் அனிப்பி வையுங்க, அண்ணன் தெளிவாகட்டும்.

 • sha_newyork - new york,யூ.எஸ்.ஏ

  இது ஒரு கருத்து திணிப்பு. அதிமுக சுமார் 60% பெற்று இருக்கும். ஆனால் ஊழல் கட்சியான திமுக காசு கொடுத்து மிகவும் அருகமையில் தங்களை காண்பித்து இருக்கிறார்கள். மேலும் புதிய தலைமுறை பாஜக ஆதரவு வேற. சொல்லவா வேண்டும்.

 • Pandiyan - Chennai,இந்தியா

  இந்த கருத்து கணிப்பு நடத்திய தனியார் தொலைகாட்சி ...நாங்கள் இந்த இந்த ஊரில் ..இந்த இந்த இடத்தில இன்று கருத்து கணிப்பு நடத்துகிறோம் என்றுஅடி்ககடி அந்த தொலைகாட்சி விளம்பரபடுத்தி கணிப்பு நடத்தியுள்ளது ..இது எந்த வகையில் 2 பெரியகட்சிகரர்கள் ஆதிக்கத்தை தடுத்திருக்கும் என்று ஒரு பெரிய கேள்வி ..மதுவால் நிறய குடும்பம் பாழாகி கொண்டிருப்பது அனைவரும் அறிந்தது ..அதைப்பற்றி கருத்து எதுவும் கேட்டதாக தெரியவில்லை ...43 சதவிகிதம் பேர் 2 திராவிட கட்சிகளும் ஊழல் என்று சொல்லுகின்றனர் அப்படி இருக்கையில் மீண்டும் அதே நபர்கள் தி மு க .அ தி மு க வை தேர்ந்தெடுப்பர் என்று சொல்ல முடியும் ..மொத்தத்தில் மாற்றம் வேண்டும் என்று சொல்லும் மக்களின் மனநிலை பாதிக்கும் கருத்து திணிப்பாக தான் உள்ளது ..

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இந்த மீடியாக்கள் கருத்து கணிப்பை எடுப்பதற்கு பதிலாக கருத்து கணிப்பை மக்களிடம் திணிக்கின்றன....கருத்து கணிப்பை எடுக்கும்போது மக்களிடம் நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்பதில்லை....இவர்களாக திமுகவா அல்லது அதிமுகவா அல்லது மூன்றாவது அணியா என்று டிக் பண்ண சொல்கிறார்கள்...அதாவது தமிழகத்தை ஆள திமுக மற்றும் அதிமுகவை தவிர வேறு மாற்று இல்லை என்ற கருத்தை மக்களிடம் திணிக்க முயல்கின்றனர்...இதற்கு காரணம் பெரும்பாலான ஊடகங்களும் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களின் ஆட்களுக்கு சொந்தமானது....ஆளுக்கொரு நிறுவனம் என்ற பெயரில் 2000 பேர் அல்லது அதிக பட்சம் 5000 பேரிடம் கருத்து கணிப்பு என்ற பெயரில் இவர்கள்திமுக அதிமுகவாக வரும் கேள்விகளை வரிசை படுத்தி டிக் அடிக்க சொல்கிறார்கள்...ஏதாவது ஒரு நிறுவனம் எடுத்த கருத்து கணிப்பு ஓரளவுக்கு மேட்ச் ஆகும்...உடனே நாங்கள் சொன்னது தான் நடந்தது என்று விளம்பரம் செய்வார்கள்...ஆனால் ஒரே நிறுவனம் இதுவரை எல்லா தேர்தலுக்கும் கருத்து கணிப்பை நிலையாக சொன்னது கிடையாது....இது ஜெர்மனி ஆக்டோபஸ் கணித்த உலக கோப்பை கதை தான்....மக்கள் யாரை நிஜமாக விரும்புகிறார்கள் என்று இவர்கள் ஒரே கேள்வியாக கேட்பது கிடையாது.....அதிமுகவுக்கு மாற்று திமுக என்று நினைக்கிறீர்களா என்றும் நேரடியாக கேள்வியை கேட்பது இல்லை.........இவர்களின் நோக்கம் என்ன வென்றால் திமுக அல்லது அதிமுக ..மாறாக மூன்றாவதாக ஒரு கட்சியை உள்ளே அனுமதிப்பதில்லை...அதிலும் குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் வேண்டும் என்று திமுகவில் ஸ்டாலின் கருணாநிதி ரெண்டு பேரையுமே குறிப்பிடுவது..பிறகு ரெண்டு பேரின் கூட்டு தொகையை ஒன்றாக கூட்டி திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பது போன்று காட்டுவது..

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  5 வருட ஆட்சிக்கு பின்னரும் அதிமுக பல விஷயங்களில் முன்னணியில் நிற்பது ஆச்சர்யத்துக்கு உரியது.... 2011 இல் இந்த நேரத்தில் திமுக அதல பாதாளத்தில் இருந்தது... மின்வெட்டினால்,... ஆனால் இப்போது இதுவரை மின்வெட்டு இல்லை.... வெள்ளம் பற்றி எதிர்மறை அவதூறுகள் அதிமுக மீது பரப்பபடாமல் இருந்திருந்தால் இன்று அதிமுக அனைத்திலும் 40 % வாங்கியிருக்கும்... அதிமுகவே வெல்லும்... 140 - 150 அதிமுக கூட்டணி வெல்லும்... அதிமுக மட்டும் 120 - 130 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கும்....[ ஆனால் தேமுதிக , பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுக இமாலய வெற்றிபெறும் ]

 • Muniyaraj - Bangalore,இந்தியா

  மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள் அதிமுகவிற்கு.

 • sankaranarayanan - tirunelveli,இந்தியா

  மக்கள் கணிப்பில் திமுக அதல பாதாளத்தில் உள்ளது என்பதே உண்மை - வரும் தேர்தல் அதை உணர்த்தும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement