Advertisement

ஜெபம் செய்வதாக சில்மிஷம்: 50 வயது மதபோதகர் கைது

பெ.நா.பாளையம்: பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே, ஜோதிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண், தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார்.வயிற்று வலியால் அவதிப்பட்ட இவரிடம், 'விடிய விடிய ஜெபம் செய்தால் குணமாகும்' என, 'சர்ச் ஆப் பெதஸ்தா' என்ற ஜெபவீட்டில் உள்ள மதபோதகர் ஐசக், 50, கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண், நேற்று முன்தினம் அங்கு சென்றார்.ஜெபம் செய்வதாக கூறி, இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து தப்பிய பெண், வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். துடியலுார் போலீசார், மதபோதகரை கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement