கொங்கு மண்டலத்தில் 3 தொகுதிகளுக்கு குறி: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தவம்
சேலம்: தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில், தலா, ஒரு தொகுதியை, அ.தி.மு.க., தலைமையிடம் இருந்து பெற்று விட கொங்கு இளைஞர் பேரவையினர், தவம் கிடக்கின்றனர்.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, கடந்த, ஐந்து ஆண்டுகளில், அ.தி.மு.க.,வின் தலைமையை விமர்ச்சிக்க வில்லை. அங்கீகரிக்கப்படாத அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வாக வலம் வந்தார். சட்டசபையிலும் சரி, வெளியிலும் சரி, அ.தி.மு.க., தலைமையை புகழ்வதையே வழக்கமாக கொண்டு இருந்தார். அ.தி.மு.க.,வின் விசுவாசியான தனக்கும், தன் கட்சிக்கும் எப்படியாவது, மூன்று தொகுதிகளை பெற்று விட, அ.தி.மு.க., தலைமையின் கண் அசைவுக்காக தவம் கிடக்கிறார். இவரின் பட்டியலில், கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கரூர், சேலம் மாவட்டம், ஓமலூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளில், இரண்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த வாரம் மூன்று தொகுதிளிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரி உள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!