Advertisement

மதுரையின் மருமகன் - இசைப்புயலின் இனிய நிமிடங்கள்

தமிழனின் மூச்சுக்காற்றை உலகிற்கு அறிமுகம் செய்த இசைப்புயல், இந்திய சினிமாவின் இன்னுமொரு இதிகாசம், எட்டி நின்று பார்த்த ஆஸ்காரை, அருகில் அழைத்து வந்த நவீன இசையின் முன்னோடி. இதற்கு மேல் பீடிகை வேண்டாம், ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசை நாயகனை, இந்தியா மட்டுமல்ல உலகமே கொண்டாடுகிறது என்றால், அது தான்அவரால் நமக்கு கிடைத்த பெருமை. இந்தியனாக, தமிழனாக நம் அனைவரையும் பெருமை படுத்திய ஏ.ஆர்.ஆர்.... நம்மை சந்திக்க இசை நிகழ்ச்சி வழியாக இன்று மதுரை வருகிறார். அதற்கு முன்பாக அவரை சந்தித்தோம்.... தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறது இசைப்புயல்.* 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சி; எப்படி தோன்றியது எண்ணம்?நான் இசையமைப்பாளராகி, 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் அது எது மாதிரியான இசை நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என சிந்தித்து கொண்டிருந்தேன். அமெரிக்கா, பிரிட்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சியைப் போல், தமிழக மக்களையும் ரசிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அந்த ஆசை, இப்போது அமைந்தது.* சென்னை, கோவை, மதுரை மூன்று நிகழ்ச்சிகளுக்கும் ஒரே தலைப்பு; பாடல்களும் அதே மாதிரி தானா?பாடல்கள் கிட்டத்தட்ட ஒத்திருக்கும். ஆனால் பாடகர்களில் நிறைய மாற்றம் இருக்கும். 15 பாடகர்கள் மதுரை வருகின்றனர். சென்னை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., பங்கேற்க முடியாத சூழல் உருவானது. ஆனால் மதுரை நிகழ்ச்சிக்கு அவர் வருகிறார்.* மதுரை நிகழ்ச்சிக்கு இங்குள்ள மக்களை மனதில் வைத்து பாடல் தேர்வுகள் இருந்ததா?என்னை பொறுத்தவரையில் தமிழர்கள் அனைவருக்கும் ஒரே ரசனை தான். அது எந்த பகுதியாக இருந்தாலும், ரசனை மாறாது. என்னுடைய இத்தனை ஆண்டுகால இசை வாழ்வில், எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களை சந்திக்க இறைவன் காட்டிய வழி இது.* இதற்கு முன் மதுரை வந்தது உண்டா? வருவதை எப்படி உணர்கிறீர்கள்?(சிரிப்போடு துவங்குகிறார்...) மதுரை.... தான் என் மனைவி பிறந்த ஊர். திருமணம் ஆன புதிதில், மதுரை வந்துள்ளேன். அதன் பிறகு 'ரிதம்' படத்திற்கான கம்போசிங் செய்வதற்காக மதுரை வந்தேன். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மதுரை வருகிறேன். மதுரை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த மதுரை ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக 3 மாதங்கள் உழைத்து, பாடல்களை தேர்வு செய்துள்ளோம். நிகழ்ச்சியில் அதை முழுமையாக ரசிக்கலாம், என்று கூறிய இசைப்புயல், மீண்டும் அதற்கான பணிகளில் மூழ்கினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • sudhapriyan - riyadh,சவுதி அரேபியா

    இதையே ராஜா சொன்னார் கேவலம் ... ரஹ்மான் சொன்னார் செய்தி ... இந்த மனப்பான்மை முதலில் மாற வேண்டும் .

  • S. Rajan - Auckland,நியூ சிலாந்து

    பாராட்டுக்கள் நல்லது. அளவில்லாத புகழ்ச்சி அடிமைதனத்தை காட்டுகிறது.

  • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

    காதலுக்கு இசைதான் உணவு என்றால், அதனை வாசியுங்களேன் என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டாலும், இசை உடல்நலத்தை பாதுகாக்கும். பயிர்களும் மற்றும் இறைவன் படைப்பில் உருவான ஒவ்வொரு உயிரும் இசைக்கு அடிமைதானே. பக்தி மார்கத்தை நாடுவோர் இறைவனை இசையால் கவருவதில்லையா. இசையின் வாயிலாக மக்களின் மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்ட இசை மேதைகளை இறைவனோடு நாம் ஒப்பிடுவது கண்கூடு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement