Advertisement

திமுக கூட்டணிக்கு ஆதரவு ; மக்கள் ஆய்வகம் கருத்துக் கணிப்பு

சென்னை: வருகிற தமிழக சட்டசபை தேர்தல் குறித்து, சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

இந்த அமைப்பினர் சில மாதங்களாக 120 தொகுதிகளில் பல்வேறு மக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஆய்வு நடத்தினர். இது குறித்து அமைப்பின் தலைவர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:


வருகிற சட்டசபை தேர்தலில், கூட்டணி குறித்து இன்னமும் முடிவாகாத நிலையில் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பீர்கள் என்ற கேள்வியை கேட்டோம். அதிமுகவுக்கு ஆதரவாக 33 .3 சதவீதத்தினரும் , திமுக வினருக்கு 33.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு 37.7 சதவீதத்தினரும், அதிமுக கூட்டணிக்கு 35. 7 சதவீதத்தினரும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர் .


தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. மேலும் மது விலக்கு முக்கிய பிரசாரமாக எடுத்து வைக்கப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.


* முக்கிய அம்சங்கள்: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க தலைமையில் ஆட்சி அமையும் என கூறப்ப்பட்டு உள்ளது.


* சட்டசபை தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்க 37.7 சதவீதம் பேர் ஆதரவு


* அதிமுக ஆட்சி அமைக்க 35.7 சதவீதம் பேர் ஆதரவு-


* தமிழக பிரச்சினைகளை எந்த கட்சியும் தீர்க்காது என 56.4 சதவீதம் மக்கள் கருத்து:


* தேமுதிக வுக்கு 6 சதவீதத்தனர் ஆதரவு


* மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி- அமைய 5.4 சதவீதம் ஆதரவு


* பாமக தலைமையில் ஆட்சி- அமைய 2.2 சதவீதம் பேர் ஆதரவு


தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்தக் கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது மக்கள் கூறியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (189)

 • Cheenu Meenu - cheenai,இந்தியா

  தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்தக் கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. அப்படி இருக்கையில் வெறும் 2.2 சதவீதம் பேர் ஆதரவு கொண்ட பா ம க ஆட்சி அமைத்து எப்படி மாற்றம் முன்னேற்றம் காணும்.

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு என்றென்றும் திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்... 2014 பாராளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று கூறினார்கள்... திமுக அமோகத் தோல்வியடைந்தது என்பதே வரலாற்று உண்மை...

 • sureshbabu - ahmadi,குவைத்

  வேண்டும் ஒரு புதிய புரட்சி

 • sureshbabu - ahmadi,குவைத்

  எது என்ன கருத்து கணிப்பா அல்லது கருத்து திணிப்பா ?. உஷார் உஷார் உஷார் .ஏமாறாதே ஏமாற்ற்றதே .

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  மாற்றம் தேவைதான். அதற்காக மறுபடியும் தி.மு.க வா என்ன கொடுமை தமிழகமே..

 • KANNAN - CBE,இந்தியா

  இரு புனிதர்கள்:- நிகழ்காலத்தில் நீ செய்கிற ஒவ்வொரு தவறும் என் கடந்தகால கறைகளை கழுவுகிறது. அடுத்தடுத்து நீ செய்கிற கொடுமைகள் என் அயோக்கியத்தனத்தை படிப் படியாக குறைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் நீ செய்கிற அட்டுழியங்கள் என்ன புனிதனாகவே மாற்றுகின்றன. இப்படித்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நீ என்னையும் நான் உன்னையும் புனிதப்படுத்திகொல்கிறோம்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  விஜயகாந்த் தி மு க சேர்ந்தால் , நான் vijaykanthirkku வேண்டுமானால் வாக்களிப்பேன் ............. தி மு க விற்கு வாக்களிக்க முடியாது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அம்மா சமீப காலங்களில் செயல்களில் சுணக்கம் காட்டியது.... மு க காட்டில் மழை பொழிய துவங்கி விட்டது...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கேப்டனை காங்கலியாமே....எங்கேன்னு ஒரு கருத்து கணிப்பு நடத்துங்கப்பா...நம்ப சாமி தலைமைல..

 • Tamilnesan - Muscat,ஓமன்

  என் கருத்து இதோ : திமுக பழையபடி ஆட்சிக்கு வரும்......சில வருடங்கள் கழிந்து அதன் தலைவர் போன பிறகு கட்சி மூன்றாக உடையும்.....ஆட்சி கவிழும்.......பிறகு இன்னொரு தேர்தல் வரும்.....அதில் அதிமுக ஆட்சி அமைக்கும்......இது தான் நடக்கபோகிறது .......பொறுத்திருந்து பாருங்கள். ஜெய் ஹிந்த்

 • jagan - Chennai,இந்தியா

  விஜி தனியா சொல்றார், பா ம க தனியா சொல்றார் , மக்கள் நல கூட்டணி தனியா சொல்றார் அப்போ தி மு க கூட்டணியில் இருக்கும் மற்றவர்கள் யார்? எனவே இது டுபாக்கூர் .......இருந்தாலும், இது தெரிஞ்சுது தானே..... விஜியின் 6 இன்னும் அப்பிடியே இருக்கு...அதே போல் தான் மற்ற சில்லறை கட்சிகளுக்கும்.....எனவே மூன்றாவது அணி அமைந்தால் அ தி மு க வெற்றி நிச்சயம் ... ஆனால் சுப்ரீம் கோர்ட் அம்மாவை தள்ளி வைக்க முடியும்...

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  இன்னும் இந்த லயோலா கல்லூரி நடு நிலையான கருத்து கணிப்பை நடத்தும் என்று நம்புவது கருணாநிதி நாத்திக கொள்கையை முஸ்லிம்களிடமும் பரப்புகிறார் என்று சொல்வதை போல நகைச்சுவையானது

 • Santhosh Kumar - Chennai,இந்தியா

  லயோலா காலேஜ் என்பது கருணாநிதியின் பினாமி என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் பணம் கொடுத்து கிருத்துவர்களை கருணாநிதி வாங்கி இப்படி சொல்ல சொல்லியுள்ளது அப்பட்டமாக தமிழக மக்களுக்கு தெரிந்ததே. இதன் கருத்து கணிப்பு என்பது மக்களை மூளை சலவை செய்யவே. லயோல காலேஜ் கருத்து கணிப்பை பார்த்து தமிழக மக்கள் முட்டாள்கள் ஆகாமல் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும். இது பணம் உள்ளவன் எதற்கும் சொடைபோகும் ஒரு கும்பலிடம் கொடுத்துள்ள ஒரு வேலை. அதற்க்கு பணம் வாங்கிய கயவர்கள் நடத்தும் ஒரு கண்துடைப்பு நாடகம். எனவே மக்களே உஷார். திரு சோ ராமசாமி சொன்னது போல மீண்டும் குடும்ப ஆட்சியினை வரவிட்டு கொள்ளையடிக்க விடாதீர்கள்.

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்தக் கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது மக்கள் கூறியுள்ளனர்....சரியாகதான் சொல்லி இருக்கிறார்கள்.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பெரும்பாலான தேர்தல் கணிப்புகள் சொல்லும் முடிவுகளைத்தான் சொல்கின்றன, எதற்கும் கொடநாடு பங்களாவை தயார் செய்வது நல்லது.

 • இளங்கோ - chennai,இந்தியா

  இரு கழகங்களுமே 3,4 வது இடத்துக்கு தள்ளப்பட்டன என்று வரும் நாளே நல்ல நாள்.

 • krishnamoorthy - chennai,இந்தியா

  இந்த ராஜ நாயகம் இத்தகைய கருத்து கணிப்புகளை குறைந்தது 0.1% வாக்காளர்களிடமாவது நடத்துவது அவசியம். அதாவது குறைந்தது 50000 வாக்காளர்கள் (130 தொகுதிகள் x 4000 = 52000) நடத்துவதும், அப்படியான 130 தொகுதிகள் ஒரு தொகுதி விட்டு ஒரு தொகுதி என்பதாக இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதாவது சென்னையில் திருவல்லிகேணி, அடுத்து ஹார்பர் , அடுத்து எக்மோர், தி.நகர், அண்ணாநகர் ,பெரம்பூர், திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்க நல்லூர், இப்படி கருத்து கேட்பதுடன், அதில் அணைத்து சாதியினர், மதத்தினர், பெண்கள் என இருத்தல் அவசியம். அப்படி ஒரு கருத்து கணிப்பு நடத்தினால் பிழை வெறும் 1 % தான் இருக்கும்.

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  மறுபடியும் மொதல்லேந்தா...? முடியலடா சாமி...

 • Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா

  யார் ஜெயித்தாலும் தோற்றாலும், நாம் உழைத்தால்தான் சோறு. எப்படியும் யார் வந்தாலும் நம் நிலை மாறபோவதில்லை. இவர்கள்இருவரும் மக்களை மடையர்களாக வைதுகொள்வதிலேயே கவனம் கொள்வர். ஓரளவு நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். மேலும் இனிமேல்தான் பாலில் சத்தியம் வாங்குவது, வெற்றிலையில் சூடம் ஏற்றி சத்தியம் செய்வது எல்லாம் உள்ளது. நாம் அவரசபடகூடாது.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  3 சதவீத வித்தியாசம் கருத்துக்கணிப்பின் பிழை அளவை விட குறைவு.. அதாவது கணிப்பு முறைப்படி இரு கட்சிகளும் சமமான நிலையில் இருப்பதைத் தான் இது காட்டுகிறது.

 • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

  120 தொகுதிகளில் மட்டும் ஒரு தொகுதிக்கு பத்து ஐம்பது பேரிடம் கேட்பதை வைத்து கொண்டு கருத்து கணிப்பு என்பது ஏற்புடியது அல்லவே. வாக்கின் ரகசியத்தை முன் வெளிஇடுவது என்பது ஜனநாயக மரபுக்கு மீறிய செயல். கருத்து கணிப்பு தேவை இல்லை என்பது வேண்டும். அதில் நிறைய அசௌகரிங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஒவ்வெரு மீடியாக்கள் ஒவ்வெரு விதமாக கருத்து கணிப்பு வெளி இட்டால் அதை என்ன வேண்டும் என்று சொல்லுவது ஆக கருத்து கணிப்பு தேவை இல்லை என்பதே, ஜனநாயக மரபு கருதி நீதி மன்றங்கள் இதை தடை செய்யவேண்டுமாறு கேட்டு கொள்கின்றேன்

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  கருத்துகணிப்பு என்று இந்த ராஜநாயகம் சொல்லிய எதுமே இதுவரை சரியான படி அமைந்தது இல்லை என்பது பலமுறை நிரூபிக்க பட்ட ஒன்று என்றாலும் கூட இந்த சமயத்தில் இந்த திணிப்பு வெளியானதில் சிலரின் கை வேலை நடந்துள்ளது என்பதை யாரும் மறுக்கவே முடியாத ஒன்று .இது சில கட்சி தலைமைக்கு வலை விரிக்க நடத்தும் நாடகத்தில் ஒரு பகுதி.அந்த தலைவரை நம்ப வைக்கவும் சீட்டு கேட்டு அதிக நெருக்கடியோ பதவியில் பங்கோ கேட்க்க கூடாது என்ற எச்சரிக்கையையும் விடுக்கவே .தி மு க செல்வாக்கு கூடி உள்ளது போல் ஒரு மாய தோற்றத்தை காட்ட இந்த லயோலா கல்லுரி என்ற போர்வையை போர்த்தி கொண்டு நாடகம் அரங்கேறி உள்ளது.பார்க்கலாம் தமிழக தலைவர்களின் புத்திசாலி தனத்தை.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  எல்லாம் போகட்டும்.. பாமக விரக்தியடைந்து என்னய்யா இது ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இப்படியா..? கொஞ்சநாளைக்கு தமிழக முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்று 1 வருடமாக ஊதியும் நமக்கு சங்கு ஊதி விட்டார்களே ஐயோ .. ஐயோ இது அநியாயமையா. அநியாயம்.. அன்புமணி முதல்வர் வேட்பாளர் என்று கூட சொல்லவிடாமல் இப்படி செய்தது நியாயமா? இதற்க்கககவே நாங்களும் கருத்துக்கணிப்பு திண்டிவனம் தோட்டத்தில் நடத்தி அதில் 120 - 130 வரை கிடைக்கும் அது என்ன்ன என்பதை ஆராய்ந்து பார்த்ததில் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று என்பதை தெளிவாக்கக் கடமை பட்டுள்ளேன் என்று ஜி.கே மணி சொன்னதாக ஒற்றனின் செய்தியாக வெளிவந்துள்ளதாம்.. ஆக கனவுகண்டேன்...கண்ணா நீ அன்புமணி முதல்வர் வேட்பாலலேரே கானா ?

 • sureshbabu - ahmadi,குவைத்

  கருத்துகணிப்பு உங்களை முதல்வர் ஆகாது . மமக்கள் குத்தனும் . இந்தமுறை குத்துவாங்க கும்மம்க்குத்த்து .

 • ragu - thombe,இலங்கை

  கருத்து திணிப்பு அரங்கேற்றி உள்ளார்கள் கட்டு மர குடும்பத்தினர் கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. ஒருவகையில் கட்டுமர கட்சிக்கு சமாதி கட்ட எண்ணுபவர்கள் மேலும் துடிப்புடன் செயல் பட இந்த செய்தி துணையாக இருக்கும்.

 • Tamil - Trichy,இந்தியா

  தி மு க வின் ராஜ தந்திரத்தை இங்கே கருத்து கூறுபவர்கள் பெரும்பாலோனோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இதோ தெரிந்து கொள்ளுங்கள். தி மு க & வி. காந்த் பேரம் முடிந்து விட்டது. காங்கிரசும், வி சி போன்ற சிறு கட்சிகளும் பேரம் நடந்து கொண்டு இருக்கிறது. ப ம கா கூட வந்தாலும் ஆட்சிரியபடுவடற்கு வொன்றும் இல்லை. சீட் விபரம் வேண்டுமா? தி மு கா - 150, வி.காந்த் -50, காங்கிரஸ்- 20 , இதர கட்சிகள் -14. ரிசல்ட்(வெற்றி) - தி மு க கூட்டணி - 190. அ தி மு க கூட்டணி - 43, ப ம க -01 , ப ஜ க -0, ம தி மு க - 0 ( தி மு கவை பலவீனப்படுத்த வாங்கிய 200c லாபம்). இந்த முறை தி மு க வெற்றி பெற்று கடந்த கால ஆட்சியல் நடந்த தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக இளைஜர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்க வேண்டும். நல்ல ஆட்சி நடை பெற வாழ்துக்கள்.

 • kumar - mysore,இந்தியா

  It is secret that Amy party comes to power can not fully successfully solve peoples problem.

 • Bala - Chennai,இந்தியா

  திருட்டில் முக்கிய கட்சி பொதுச்செயலாளர் கன்பலகன் அவர்கள் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தீவிர கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இனி பரம்பரை ஏழை கட்சியான? திருட்டில் முக்கிய கட்சிக்கு தற்காலிக பொதுச்செயலாளர் பதவிக்கு ராஜநாயகம் நீடிப்பார் என அறிவிக்கப்படுகிறது.

 • kailawsh - Pollachi,இந்தியா

  அம்மையார் மக்களிடமிருந்து விலகிச்சென்று கொண்டுள்ளார் என்று கருத்துக்கணிப்பு சொல்வது தவறா?

 • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

  இது ஒரு திட்டமிட்ட திணிப்பு திமுக கூட்டணிக்கு தேமுதிகாவை கொண்டுவர சுடாலின் மருமகன் சபரீசன் இப்படி பணத்தை கொடுத்து கருத்து திணிப்புகளை வெளியிட்டு வருகிறார். மக்களுக்கு அதிமுகமேல் வெறுப்பு என்றால் திமுகா என்றால் அருவருப்பு திமுக ஆடிய ஆட்டம் அதில் சொத்து பத்து, நிலம், மனை, காசு, பணம், கடை, கன்னி என்று அனைத்தையும் இழந்த சாமன்யமக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயாராய் இல்லை. ஒருவரும் கூட்டணிக்கு வரவில்லையே இன்னும் தேர்தலுக்கு நான்கு மாதங்கள் கூட இல்லையே என்று திமுக வெதும்பி கிடக்கிறது. இதுபோன்ற கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய் பரப்பி விஜயகாந்தை மாட்ட வைக்க பார்க்கிறார்கள். திமுக ஒருகாலும் இனி ஆட்சிக்கு வராது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இரண்டு சதவிகிதம் ஆதரவு ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை... இரண்டு சதவிகிதம் கூடுதலாக பணம் செலவு செய்தால் ஜெய லலிதா ஜெயித்து விட போகிறார்..

 • Bala - Chennai,இந்தியா

  இது தனக்கு தானே நாமம் சாரி சாரி நமக்கு நாமமே டீமை கொண்டு சாரி சாரி நமக்கு நாமே டீமை கொண்டு எடுக்கப்பட்ட அப்பட்டமான கருத்து திணிப்பு.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Election season arrives in Tamil Nadu. Very good entertainment for the people. Actors Karuna, Jaya, Stalin, Vaiko, Vijayakanth, Ramdass, Anbumani, Vasan, EVKS, Thiruma, Krishnasamy and other minor actors are ready on the stage. Artists from north india will come soon for guest roll. Let us enjoy for another four months without spending money. Let us enjoy the drama. It is fitty not to have leaders willing to sacrifice their life for Tamil Nadu. We remember Kamraj ji, Kakkan ji, Ponnammal ji, Muthuiramalingam ji, Rajaji and several other leaders from different parties in this occasion. Voters have the responsibility to the best among the worst candidates. Don't see the party affiliation, judge them by their characters.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  லயோல வின் இந்த கருத்து கணிப்பு லாயலாக நடத்தப்படாத ஓன்று. DMK விற்கு சாதகமாக ஏற்படுத்த பட்ட கருத்து கணிப்பு. கடந்த பார்லி தேர்தலில் இதே போன்று ஒரு கப்சா கருத்து கணிப்பு இந்த கல்லுரி வெளியிட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.இந்த தேர்தல் முடிவு விசித்திரமாக இர்ருக்கும். PMK சப்போர்ட் இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  தலைவரே எவ்வளவு செலவாச்சு ? உமக்கென்னையா ? பணத்துக்கு என்ன பஞ்சமா ? ஆனால் ஒன்று நீ செய்வதெல்லாம் பாவம் கட்டாயம் உன் குடும்பம் அனுபவிக்கும் அரசன் அன்றே கொல்வான்... தெய்வம் நின்று கொல்லும் இலங்கை மக்கள் சாவுக்கு துணை போன நீ கட்டாயம் அனுபவிப்பாய் இது பெரும்பாலான தமிழர்களின் சாபம் திருப்தியில் இருந்து எத்தனை வித்யாதிரிகள் வந்து உன் வீட்டில் வேண்டாம் ஓதினாலும் நீ செய்த பாவம் கட்டாயம் போகாது . பாவகனக்கு வேறு புண்ணிய கணக்கு வேறு 2 G திருடா நீ அனுபவிப்பாய் பாவம்... நீ செய்த பாவம் உன் குழந்தைகளை துரத்துமடா ... இதை அறியாத மடமையே

 • aravind - chennai,இந்தியா

  இந்த கருத்துகணிப்பு எல்லாம் சும்மா, ஒரு ஊரில் 1000 பேர் இருக்கின்றார்கள், அதில் 100 பேர் கிட்ட மட்டும் கேட்டுவிட்டு கருத்து கணிப்பு சொல்கிறார்கள்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  Jeyaanand, Kanyakumari - nagercoil. உனது கருத்துக்கு நீ கேட்டுக்கொண்டபடி பதில் எழுதி விட்டேன். பிரசுரம் ஆகவேண்டும் என்று நீயும் வேண்டிக்கொள் .

 • C Suresh - Charlotte,இந்தியா

  அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா தாய்மார்கள் திட்டம் என்று நிறைய கீழ் தர மக்களுக்கு நல்லது செய்து இருக்கிறார். இதை நடத்துபவர்கள் எல்லோரும் சாதாரண மக்கள் - நிறைய வேலை வாய்ப்பு கிடைத்திருகிறது. குப்பனும், சுப்பனும் எம்.எல்.எ, மந்திரி ஆகி இருகின்றனர். திமுகவில் குடும்ப சண்டை நடக்கிறது. ஸ்டாலின் திறமையாக இருந்தாலும், கனிமொழி மற்றும் 2ஜி ஊழல் சம்பந்தபடவர்களை கருணாநிதியால் ஒதிக்கி வைக்க முடியவில்லை. திமுகாவினரை இந்த கருத்து கணிப்பு குஷி படுத்துமே தவிர அவர்கள் ஒரு நாளும் பெரிய பதவியை அதிமுக போல் பெறமுடியாது.

 • Gopal Raju - vancouver,கனடா

  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழக பிரச்சனை தீராது என்று சொல்லுகிற மக்கள், ஏன் வாக்களிக்க வேண்டும். டைம் வேஸ்ட் .....

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  இரண்டு கூட்டணிகளுக்கிடையே வித்தியாசம் வெறும் 2 சதவீதமே. மீதி 30 சதவீதம் பேர் தான் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க போகிறவர்கள். 4 வருடம் பொறுத்தவர்கள் இன்னும் ஒரு 4 மாதம் பொறுமையாக இருக்க கூடாதா?

 • naan manithan - madurai,இந்தியா

  ஒருவேளை இந்த கருத்துகணிப்பு படி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? ஒரு கற்பனை: 1. வேலை வாங்க மந்திரி சிபாரிசு தேவைபடாது... ஒரு சாதாரண லோக்கல் கவுன்சிலரே வேலையை முடித்து தந்து விடுவார்... 2. எவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்கினாலும் அமைச்சர்கள் 5 ஆண்டுகளும் முழுமையாக மக்கள் பணியாற்றுவார்கள்.. 3. அமைச்சர்கள் கட்சி தலைவரின் கால்களில் விழுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக மக்களின் கால்களில் விழுந்து வணங்கி அன்றைய வேலையை தொடங்குவார்கள்... 4. சென்னை மீண்டும் சிங்கார சென்னையாகி, மேலும் விழுப்புரம் வரை விரிவாக்கம் செய்யப்படும்... மேலும் ஏரி, நீர்திரப்பு, நீதி விசாரனை என்ற வார்த்தைகளுக்கு இடமே இருக்காது... ஏன், ஏரியே இருக்காது... ரியல் எஸ்டேட் தொழில், நிலஅபகரிப்பு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும்... 5. ஒரே உண்ணாவிரத்தில் இலங்கையில் நடந்த போரை நிறுத்தியது போல் முல்லைபெரியாறு, காவேரி நதிநீர் பங்கீடு போன்றவற்றில் இப்போது உள்ள பிரச்சனைகள் அறவழியில் "சுமுகமாக" தீர்க்கப்படும்.. 6. உட்கட்சி ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டான கட்சி என்பதால் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி,... இப்படி கட்சிக்காக அரும்பாடு பட்ட அடிமட்ட தொண்டர்கள் மட்டுமே தலைமை பொறுப்பு வகித்து ஜனநாயகம் / மக்களாட்சியை தழைத்தோங்க செய்வர்... இதனால் ஓ.பி.எஸ். போன்ற அரசியல் தெரியாத, அனுபவம் இல்லாதவர்கள் முதல்வர் ஆவது தடுக்கப்பட்டு உட்கட்சி ஜனநாயகம் காப்பாற்றப்படும்... 7. அம்மா குடிநீர் நிறுத்தப்பட்டு சாமானிய மக்களும் அக்குவா பீனா, கின்லே, பிஸ்லேரி போன்ற தரமான குடிநீரையே விலையை பொருட்படுத்தாமல் வாங்கி அருந்த வழிவகை செய்யப்படும்.. 8. அம்மா உணவகம் மூடப்பட்டு அனைவரும் உயர்தர உணவகங்களில் மட்டுமே உணவருந்த அனுமதிக்கபடுவர், பணத்தைவிட ஆரோக்கியம் தானே முக்கியம்... 9. கடந்த 4 வருடங்களாக அதிகப்படியான படங்கள் வருடந்தோறும் வெளியாவதால், கண்ட கண்ட படங்களை பார்த்து மக்கள் சீரழிவதை தடுப்பதற்காக, வெளியாகும் படங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், க்லௌட் நைன் மூவீஸ் போன்ற தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான படங்களை மட்டும் மக்கள் கண்டு உய்வு பெற முன்னுரிமை அளிக்கப்படும்... 10. அரசு கேபிள் என்ற நிறுவனம் மூடப்பட்டு தேவை இல்லாமல் மக்கள் பணம் அரசுக்கு செல்வது தடுக்கப்பட்டு, சன் கேபிள் விசன் கீழ் கொண்டுவந்து மக்களுக்கும், கேபிள் ஆபரேட்டர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கப்படும்.. 11. அரசை விமர்சிக்கும் செய்தி சேனல்களை பார்த்து மக்கள் தடம்புரண்டுவிட கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு அப்படிப்பட்ட சேனல்கள் எஸ்.சி.வி வழியே ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்... மேலும் நிறைய செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளினால், எந்த நிகழ்ச்சியை பார்ப்பது, எந்த நிகழ்ச்சியை தவற விடுவது என்ற மக்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் மத்தியில் பேசி, புது செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் உரிமம் பெறுவது தடுக்கப்பட்டு சன், கலைஞர், கே டிவி, சன் மியூசிக், ஆதித்யா, சன் நியூஸ், சன் லைப், இசையருவி, செய்திகள், சிரிப்பொலி, முரசு போன்ற எந்த வணிக நோக்கமும் அறவே இல்லாத, மக்கள் சேவையை மட்டுமே குறிகோளாக கொண்ட தொலைகாட்சிகள் மட்டுமே பார்க்க அறிவுறுத்தப்படும்.. 12. காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் உள்ள காளைகளை மட்டுமின்றி சிங்கம், புலி, கரடி போன்றவைகளும் நீக்கப்பட்டு வரும் வருடம் முதல் நம் இளைஞர்கள் சிங்கம், புலி, கரடி மற்றும் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம். 13. அரசின் மீது உண்மைக்கு புறம்பான விஷயங்களை யாரேனும் பரப்பிவிட்டால், தேவை இல்லாமல் அவதூறு வழக்குகள் போட்டு அலைக்கழிக்காமல், பிரத்யேக ரௌடிகள் கொண்டு அரசு தரப்பு விளக்கங்களை அள்ளி, அள்ளி வழங்க ஏற்ப்பாடு செய்யப்படும்.. 14. மேலும் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட்டு, முரசொலியில் பாராட்டப்படும்.. பத்திரிக்கைகளுக்கு கூட ஆரியம், திராவிடம் என்று வண்ணம் poosi மக்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க வழிவகை செய்யப்படும்.. இது போல், இன்னும் பல ஜனநாயாக கடமைகள் நிறைய இருக்கிறது,, இது சின்ன ப்ரோமோ மட்டுமே...

 • unmai nanban - Chennai,இந்தியா

  நான் கருத்து கணிப்பு நடத்தினேன் அதில் காங்கிரஸ் 175 தொகுதியில் ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக உள்ளது என்ன நண்பர்களே எப்படி இருக்கு பாருங்கோ கூட்டணி இல்லாமல் ரெண்டு கட்சிக்கும் வித்யாசம் வெறும் .2% தானாம் ஆனால் கூட்டணி வச்சால் 2 சதவீதமாம் யாரோட கூட்டணி யாரு வைத்துல்லார்கலாம்? சுத்த டுபாக்கூர். ஒன்னு ரெண்டு கட்சியில் ஒருத்தரை கூட்டணி வைக்க நிர்பந்திக்க போட்ட பிளான் இன்னொன்றை உசுப்பேத்தி கூட்டணி இல்லாமலே போட்டியிட செய்த பிளான் என்ன தலிவா குஷியா? இப்போ சொல்ல மாட்டர்களா எடுக்க பட்ட கணிப்பா இல்லை வாங்கப்பட்ட கணிப்பா? சந்தோஷபடுங்கள் இந்த திணிப்புகளை பார்த்து ஆனால் உண்மை ஓட்டு பெட்டியில் தெரியும் அதுக்கு தான் இன்றே கதரியாச்சு

 • skandh - chennai,இந்தியா

  இதுவரை இந்த லையோலா கல்லுரியின் கருத்துகணிப்பு கடேசியில் உண்மையாக இருந்ததில்லை. மக்கள் தீர்ப்பு இவர்களின் கருத்துகணிப்புக்கு மாறாகத்தான் இருந்திருக்கு. இவர்கள் இந்த வேலையை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும் இல்லை என்பதால் இவர்கள் பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலேயே கருத்துகணிப்பு செய்வதாக எல்லோரும் எண்ணுவர். இதற்கு புகழ் பெற்ற லயோலா கல்லூரியின் பேரை ஏன் செதிக்க வேண்டும்? ராஜ நாயகம் தான் இதை யோசித்து இனிமேலும் கருத்து கணிப்பு செவதை நிறுத்த வேண்டும் . இந்தமுறையும் ஆ தீ மூ காவே ஜெயித்து அம்மாவே முதல் வராவது திண்ணம்.

 • Yesveeorr - chennai ,இந்தியா

  பெரிய கட்சி ஆனாலும் சிறிய கட்சி ஆனாலும் அவைகளுடைய உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி சார்ந்த ஏதாவது ஒரு பொறுப்பில் இருப்பார்கள். அவர்களது முழு நேர வேலையே அரசியல்தான். மக்களின் நாடித்துடிப்பை அன்றாடம் பிடித்துப் பார்ப்பவர்கள். அவர்களுக்கு மக்களின் மனநிலை நன்றாகவே தெரியும். அவர்களுக்கு எந்த கட்சிக்கு மக்களிடம் ஆதாவு பெருகி வருகிறது என்பதும் தெரியும். அதனை தங்கள் கட்சி தலைமைக்கு உடனுக்குடன் தெரிய படுத்துவார்கள். அவர்களை விட எந்த கருத்து கணிப்பு ஏஜென்ஸியும் துல்லியமாக மக்கள் நினைப்பை கணித்திட முடியாது. திமுகவின் வாக்கு வங்கி உண்மையிலேயே உயர்ந்திருந்தால் இந்நேரம் அந்தந்த கட்சி தலைமைக்கு விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். திமுக கூட்டணிக்கு அழைக்கும் முன்னரே அவர்கள் கூட்டணியில் சேர வரிசையில் காத்திருந்திருப்பார்கள். ஆனால் நிலைமையே வேறாக இருக்கிறது. திமுக கூட்டணிக்காக அழைத்தும் ஓரளவு வாக்கு வங்கி உள்ள எந்த கட்சியுமே கண்டுகொள்ளாமல் இருக்கின்றன, இதிலிருந்து திமுக வாக்கு வங்கி பெரிய அளவில் வளர்ந்து விடவில்லை என்பதையும் கருத்து கணிப்பு முடிவுகள் தவறானவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Media is trying to influence the people

 • Rajunadar Rangaraj - Erode,இந்தியா

  நால்வர் அணி தான் ஆட்சியை பிடிக்கும். திருமாவுக்கும் நல்லகண்ணுவுக்கும் உதவி முதல்வர் பதவி உண்டு. வைகோ தான் முதல்வர். ராமகிரிஷ்ணனுக்கு பொது பணித்துறை உண்டு. ராமதாஸ் கடைசியில் சரணடைந்து அன்புமணிக்கு சுகாதார துறை வாங்கி விடுவார். குருவுக்கு போலீஸ் அமைச்சர் வாங்குவார்கள். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, கருனானாவால் தோற்றேன் தாழ்த்தப்பட்டோர் எங்களை ஏமாற்றுவதற்கு ஸ்டாலினே காரணம் அழகிரியை அப்போதே திமுகவில் சேர்க்க சொன்னேன் இன்று எல்லாம் கோவிந்தா ஆகிவிட்டது நான் குற்றாலம் சென்று ஊய்வுஎடுப்பதை யாராலும் தடுக்க முடியாது யார் மன்றாடினாலும் வர மாட்டேன் என்று புலம்பல் நாயகம் ஆகிவிடுவார்,,,ஆக தமிழக தேர்தல் களை கட்ட போகிறது

 • A Shanmugam A Shanmugam - Gandhi Nagar,இந்தியா

  ஏதோ ஒரு சில ஏரியாக்களில் 10,000 பேர் கொண்ட ஒரு கருத்துப்கணிப்பு எடுத்து விட்டால் அது தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் ஒட்டு மொத்த தீர்ப்பாகாது.

 • kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சென்ற பொது தேர்தலில் லயலோ கல்லூரி அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று சொன்னபோது அது நடுநிலையான கருத்துக்கணிப்பு, இன்று திமுக வெற்றிபெறும் என்றால் இது பணம் வாங்கிக்கொண்டு நடத்திய கருத்துக்கணிப்பு.....

 • அசோகா - Dindigul

  பேய்க்கு பயந்து பிசாசு கிட்ட மாட்ற மாதிரி இருக்கு.

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  எப்படியும் 2016 தேர்தல் அம்மாவிற்கும் கருணாநிதிக்கும் வாழ்வா சாவா இருவரையும் 100 மற்றும் 40 குறைவாக வைத்திருந்தால் மக்களுக்கு பலன் கிடைக்கும்.100 மற்றும் 40 சீட் கூடுதலாக பெறும் பட்சத்தில் இவர்களுக்கு சாதகமாகவும் மக்களுக்கு பாதகமாகவும் முடிவுறும்.

 • karunchilai - vallam,இந்தியா

  தமிழக மக்களை "மாக்கள்" என எண்ணிவிட்டார்.

 • uttamon - MUSCAT,ஓமன்

  இதுவரை லயோலா கல்லூரி நடத்திய கருத்து கணிப்புகளில் தேர்தல் முடிவுகள் அனைத்தும் எதிர்மறையாகத்தான் வந்துள்ளன. இதுவும் அது போலத்தான். இவர்கள் நினைத்து இருந்தால் ஈழத்தில் போரை தடுத்து இருந்து இருக்கலாம். ஒன்றரை லட்சம் தமிழர்கள் இறந்திருக்கமாட்டார்கள். இவர்கள் அப்படி செய்து இருந்தால் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பார்கள். இனி வரும் காலத்தில் தி.மு.க ஆட்சிக்கு வருவது கடினமே.

 • மறத்தமிழன் - Madurai,இந்தியா

  இந்த டகால்டி வேலையெல்லாம் இப்போ எடுபடாது மக்கா.

 • Tamilan - Tamil Nadu

  திமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக 1996 ஐ போன்று கேவலமாக தோற்க வேண்டும். தேமுதிக வை உடைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் திமுக வில் சேர்த்து கௌரவமான பதவி தர வேண்டும். DMDK, Communist, CONGRESS, MDMK, PMK,TMC AND ALL SMALL PARTIES என சில்லறை கட்சிகளை ஒடுக்கி விலாசம் இன்றி செய்ய வேண்டும். தமிழகத்தில் DMK & BJP மட்டும் இருக்க வேண்டும். Stalin ஐ திமுக முதல்வராக்க வேண்டும். அவர்கள் இரும்புகரம் கொண்டு முதல் வருடத்தில் எதிரிகளான எதிர்கட்சிகளை நாசமாக்க வேண்டும். பின்பு நேர்மையாக லஞ்சம் ஊழல் இன்றி இலவசம் இன்றி மத்திய அரசிடம் நல்லுறவு கொண்டு தமிழகத்தை சிறந்த மாநிலமாக்க முயற்சிக்கலாம். திமுக வில் உள்ள ஊழல்வாதிகள், குடும்ப உறுப்பினர்களை கட்சியை விட்டு துரத்தி அடிக்க வேண்டும். Mr.சகாயம், Mr.சைலேந்திரபாபு மற்றும் ஐஐடி, ஐஐஎம் மில் படித்தவர்களை உயர் பதவியில் அமர்த்தி நேர்மையான ஆட்சி ஐ தர MR.STALIN முயற்சி செய்தால் நிச்சயம் மிகச்சிறந்த ஆட்சியை தர முடியும்

 • CJS - cbe,இந்தியா

  எது எப்படியோ. அதிமுக ஆட்சிக்கு வராமல் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 • elangovan - TN,இந்தியா

  Any one can give the opinion poll, the dmk is very critical in this coming election live or dead, so they will make this fake polls, the reality should comes under the result only and it will happens to the people, not making this poll,one or two peoples can believe and change the mind due to this poll but not all. they should know what is happening in the last 41/2 years done a good jobs by aiadmk, this will comes to reality in the 2016 and will vote 85% of people will be in favour to AIADMK, that is true. no one can change.

 • karunchilai - vallam,இந்தியா

  புளுகு மூட்டை அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

 • நிலா - மதுரை,இந்தியா

  பணநாயகத்தின் திணிப்பு, ராஜநாயகத்தின் கருத்து கணிப்பு

 • elanchezhian - arathangi

  அம்மான்னா சும்மா இல்ல டா

 • Rajthangam - Karur,இந்தியா

  மொத்ததில தமிழ்நாட்ட யாருமே காப்பாத்த முடியாது. இது தான் தலையெழுத்து

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ராஜநாகத்துக்கு, மன்னிக்கவும், ராஜநாயகத்துக்கு செக் யாரு கொடுத்தது ? கலைஞரேவா ? இல்லை, தொளபதி சார்பில் மாரீசனா ? மன்னிக்கவும், சபரீசனா ?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  BREAKING NEWS: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 200 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழும் திமுக வின் சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வர இருக்கிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அஞ்சா நெஞ்சர் ஆங்கிலப்பேராசிரியர் அழகிரியாரும் பட்டாக் ஆண்டியும் முன்னின்று மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

 • k.mohanraj - trichy,இந்தியா

  திமுக இன்னும் தன் கூட்டணியை இன்னும் முடிவு பண்ணவில்லை . எந்த கட்சி திமுகவிடம் சேரும் என்று மக்களுக்கு எப்படி தெரியும் ? திமுக கூட்டணிக்கு ஆதரவு பெருகிவிட்டது என்பது நகைப்புக்குரியதாக உள்ளது . இது திட்டமிட்டு செய்த கருத்து திணிப்பு .

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  இப்படி தன்னைத் தானே ஏமாற்றி கொள்வதில் தி.மு.க.விற்கு என்ன ஆனந்தம் என்று புரியவில்லை. காசு கொடுத்து இந்த மாதிரி கணிப்புகளை வெளியிடுவதால் கூட்டணிக்கு கட்சிகள் வரும் என்ற நினைப்பா? தி,மு.க என்பது தமிழர்களிடமிருந்து விலகி வெகு நாளாகி விட்டது. வரும் சட்டசபை தேர்தலில் தி,மு.க.விற்கு 25 இடங்கள் கிடைத்தாலே பெரிய விஷயம். தமிழக மக்களை அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது. தி.மு.க.வின் இமாலய ஊழல், குடும்ப ஆட்சி, அடாவடி இவற்றையெல்லாம் மக்கள் இன்னும் யாரும் மறக்கவில்லை.

 • Subbu - chennai,இந்தியா

  இது வாங்கப்பட்ட கருத்து திணிப்பு, இதில் சற்றேனும் உண்மை இருக்க வாய்ப்பில்லை.

 • Pandiyan - Chennai,இந்தியா

  அராஜக கட்சி ..ஊழல் கட்சி ...மணல் கொள்ளை கட்சி ...கிரானைட் கொள்ளை கட்சி ...மீதேன் திடத்திற்கு ஒப்புதல் கொடுத்த கட்சி ...கட்டபஞ்சய்த்து கட்சி ..உலகமகா ஊழல்கட்சி ..ஊழலால் குடும்பமே கோர்டுக்கு அலைந்து கொண்டிருக்கும் கட்சி இவைகளில் முன்னோடியானது என்று கருத்து கணிப்பு நடந்தால் தி மு க முன்னிலையில் உள்ளது என்று வந்திருக்கும் ...இதை யார் நம்புவர்கள் இதற்க்கு முன்பும் லயோல கருத்து கணிப்பு வெளீட்டு தாங்கள் தி மு க விசுவாசிகள் என்பதனை மீண்டும் மீண்டும் நிருபிக்றது ..

 • Rajaram Ramkumar - CHENNAI,இந்தியா

  திமுகவின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. இதை படித்து சிரித்து சிரித்து சிரித்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. அ தி மு க மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது உண்மை. ஆனால் தி மு க வை மக்கள் மன்னிக்க தயார் இல்லை

 • m.subramanian - coimbatore,இந்தியா

  இந்த கருத்து திணிப்பின் மூலம் திமுக அதிமுகவை கூட்டணிக்கு தூண்டுகிறது. ஏனென்றால் அப்போதுதானே இருமுனை போட்டி ஏற்படும். எதிர்ப்பு வாக்குகளை அப்படியே அள்ளலாம்.

 • karunchilai - vallam,இந்தியா

  நமகத்தன்மை = 000000...

 • sathis - trichy,இந்தியா

  தனிபெருங்கட்சியாக அதிமுக தானே உள்ளது. பிறகு தினமலர் ஏன் இவளோ ஆர்வமாக திமிகவிற்கு சப்பை கட்டுகிறது. தினத்தந்தியில் அதிமுகவிற்கு அதரவு என்றே போட்டு இருக்கிறார்கள். பிறகு தினமலர் எப்படி இப்படி...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அதிமுக ஆதரவாளர்கள் இதை பொய், போலி, காசு வாங்கிக் கொண்டு போடுகிறார்கள் என்பார்கள். நாளை வேறு ஆய்வகம் அதிமுக முன்னேற்றம், 38% ஆதரவு என்று கணிப்பு சொன்னால் அப்போது திமுக ஆதரவாளர்கள் அதை பொய், போலி, காசு வாங்கிக் கொண்டு போடுகிறார்கள் என்பார்கள். நாங்கள் கருத்துக் கணிப்பு சர்வேயை, அதுவும் தமிழக அரசியல் நிலை குறித்த சர்வேக்களை எடுப்பதை வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டோம். காரணங்கள் : 1. தமிழகத்தில் யாருமே சீரியசாக கருத்து சொல்வதில்லை. 2. ஒரு முறை, நல்ல கல்வித்தரம் என்று சொல்லப்படுகிற கல்லூரி மாணவர்கள் 17 பேர் அடுத்த முதல்வராக கலைஞர்/ ஜே ஜே / ஸ்டாலின்/ஒ பன்னீர் - என்ற கேள்விக்கு பதிலாக,அனைத்தையும் வெட்டிவிட்டு "நயன்தாரா" என்று எழுதியிருந்தார்கள். மேலும் ஒரு பிரபல ஐ டி கம்பெனியில் பணிபுரியும் இளைஞர்களில் 22 பேர் கத்ரீனா கைப் என்று எழுதியிருந்தார்கள். 3. அதிகம் படிக்காதவர்கள் நடமாற்றம் இருக்கிற ஒரு இடத்தில் ( பல்லாவரம் ஆட்டோ ஸ்டாண்ட் ) மக்களிடம் கருத்துக் கணிப்புக்குப் போன போது, ஒரு 50 ரூபாயாவது தருவீங்கன்னா கருத்து சொல்றோம் என்கிறார்கள். எனவே தான் இதெல்லாம் வேலைக்காவாது என்று நிறுத்தியே விட்டோம். இப்போதைய கருத்துக் கணிப்பு "வரும் மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு நன்மைகள் தரும் விதத்தில் அல்லது பணக்காரர்களுக்கு நன்மைகள் தரும் விதத்தில் இருக்குமா?" என்று கல்லூரி, மார்க்கெட், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், அதிகம் படிக்காதவர்கள் புழங்கும் இடங்களில் ஆரம்பித்திருக்கிறோம்.

 • SINGA RAJA - MADURAI,இந்தியா

  அதீதமான பொய்யுரைகளை, புளுகு மூட்டைகளை, வதந்திகளை பரப்புவதால் மக்கள் திசை திரும்பும் காலமெல்லாம் மலையேறிவிட்டது நண்பர்களே. சாய்ந்தால் சாய்கின்ற பக்கமே சாய்கிற செம்மறி ஆட்டுக் கூட்டம் என்றா இன்றைய மக்களை நினைத்துவிட்டீர்கள். கண்ணில் விரலைவிட்டு ஆட்டி , நோண்டி, நொங்கெடுக்கும் தலைமுறை இன்று விழித்தெழுந்து வந்துகொண்டிருக்கிறது. ஆகவே, தேர்தலில் உச்சபட்ச கணக்குகளை சரிவரப் போட, இன்று எவராலும் முடியாது தோழரே? திமுக கூட்டணி ஆட்சிக்குவர இப்போது, அங்கே என்ன பெரிதாக வாழுகிறது நண்பா? வீணாக உடம்பை வருத்தி, சீழ் பிடித்த பழைய அரசியல் அணுகுமுறைக் கருத்துக்கணிப்புக் கணக்குகளை எல்லாம் எடுப்பதை விட்டுவிட்டு, இனியாவது புதிய பரிமாண அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழியைப் பாருங்கள். அதுவாவது உங்களைப் போன்றவர்களுக்கு புண்ணியத்தை தேடித்தரும்.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  மு. கருணாநிதியின் மோசடி பேச்சின் உச்ச கட்டம். அதே சமயம் மு. கருணாநிதியின் தோல்வி பயத்தின் தெளிவான பேச்சு இது. மு. கருணாநிதியோடு யாருமே கூட்டு சேர முன்வராத நிலையில் செத்த பிணத்தின் மீது செண்டு அடித்து ஐயா,அய்யா வாங்கோ கிட்டே வந்து பாருங்கோ என்னம்மா செண்டு மனம், ஆள் என்ன அழகு, மாப்பிள்ளை ஜோர் என்று கூப்பிடுவதை போலே உள்ளது. இந்த மு. கருணாநிதி அரசியல் அனாதையான பின்பும் அலறும், கத்தும் கருத்தது கணிப்பு கூவல் இது

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  இதுக்கு பேசாம லயோலா கல்லூரி தினமலர் வாசகர்கள் இடையே ஒரு கருத்து கணிப்பை நடத்தலாம்.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  1 ) தி மு க தன் தலையில் மண்ணை போட்டு கொண்டு உள்ளது . 2 ) இது விஜயகாந்த்க்கு விடப்பட்ட கடைசி அழைப்பு . 3 ) காங்கிரஸ் கட்சி இனிமேல் பேரம் பேச கூடாது . கொடுப்பதை வாங்கி செல் என்று உள்ளது 4 ) மருத்துவர் , அன்புமணி யை இப்படியா அவமதிப்பு செய்வது . அளவே இல்லையா 5 ) வைகோ முகத்தில் கரி பூசி விட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறி விட்டது . 6 ) வெகு விரைவில் திருமா வெளியேறும் நிகழ்வு விரைவில் வரும் . கூட்டணிக்காக ஒரு சில கட்சிகளுக்கு விடப்பட்ட கெஞ்சல் . அவ்வளவு தான் . இந்த கருத்தை அறிவாலய குப்பை தொட்டியில் போட வேண்டியது .

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  பொதுவாக கூட்டணி அரசு, கட்சி கூட்டணி என்பது ஒரு மோசடி நிலைப்பாடு. இந்தியாவிலும் உலக அளவிலும் கூட்டணி அரசுகள் அதிகாரத்தை தங்கள் சுயநலனுக்கு, அரசியல் நிலையாளுதலுக்கும் தான் பயன்படுத்தி கொண்டன. கட்சி கூட்டணி, கூட்டணி அரசுகள் பலம் அற்றவை, ஒரே நோக்கம் அற்றவை, லஞ்சம், அதிகார வன்கொடுமைக்கு தான் எளிதாக வழி காட்டும். ஆட்சி களைந்து போகாமல் பார்த்து கொள்வதே அதன் முதல், முழு, முடிவான நோக்கமாக, பணியாக இருக்கும். தமிழ் மக்கள் முதிர்ச்சி பெற்று, தெளிவாக, உறுதியாக இருப்பது கண்டு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  வெற்றி பெற போகும் திமுகவிற்கு வாழ்த்துக்கள்... திமுகவிற்கும், அதிமுகவிற்கு மயிரிழை வித்தியாசம் தான் என்று இந்த கருத்து கணிப்பு கூறுகிறது.... ஆக திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது..... ஆகையால் திமுக தனித்து போட்டியிடவேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆவல்... அதிமுக தனித்து போட்டியிட தயாராம்... ஆனால் இப்போது திமுக மயிரிழை வித்தியாசத்தில் அதிமுக ஒட்டு வங்கியுடன் போட்டியிடுவதால், திமுக தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பு விரைவில் வருமாம்... கேப்டனுக்கு வெறும் 5 % க்கும் குறைவான வாக்கு இருப்பதால், கேப்டனுக்கு 20 தொகுதிகள் தான் ஒதுக்குவதே அதிகம் என்று திமுக நினைத்து, தனித்து போட்டியிட்டு தனது திறமையை காட்ட வேண்டும்... அதிமுக தனித்து போட்டியிட தயார்... களத்தில் திமுக, அதிமுக தனித்து மோதட்டும்...

 • pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்

  இது போன்ற டுபாக்கூர் செய்திகளை போட்டு தினமலர் பக்கங்களை வீணடிக்க வேண்டாமே

 • murumaha - madurai,இந்தியா

  அங்கும் இங்குமாக மக்களுக்கு உள்ள அதிருப்திகள் கூடிய விரைவில் அதிமுகவால் களையப்படும். வெள்ளத்தை வைத்து திமுக ஆட்சியே பிடித்து விடலாம் என்றால் அது கனவாக போகும். திமுக முழு majority பெற்று ஆட்சி பிடித்து 15 வருடங்கள் ஆகிறது. அதுமட்டுமல்ல 2001, 2006, 2011 நடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது, பல கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 2006ல் திமுக முழு majority பெறவில்லை. 40 லட்சம் மக்களுக்கு வெள்ள நிவாரன பணம் இன்னும் 3 மாதங்களில் அவர்கள் வங்கி கணக்கில் சேர்ந்து விடும். 2ஜி வழக்கு, நில அபகரிப்பு, விவசாய நிலத்தில் கெயில் பைப் போட்டது, ஆடம்பரமான பிறந்த நாள் கொண்டாட்டம், மக்கள் மனதில் மறையவில்லை. திமுக ஆட்சியே பிடிக்கும் என்று வருகிற கருத்து கணிப்புகள் வருமானால், நிச்சயம் மக்கள் வருகின்ற தேர்தலில் அதிமுகவை அமோகமாக ஜெயிக்க வைப்பார்கள். ஏன் என்றால் மக்களிடம் இருந்து திமுக பிரிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தான் உண்மை.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  " இந்த கருத்து கணிப்பு என்னுடையது தான்....மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததையா வந்து படிக்கிறேன்... என்னுடையது தான்... என்னுடையது தான்..... என்னுடையது தான் என்று சொன்னால் நம்புங்களேன் அய்யா .."

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  சில வருடங்களுக்கு முன் "கருத்து கணிப்பு ஓர் அபத்தம்" என்று தினமலர் நாளிதழில் ,இது உங்கள் இடம் பகுதியில் எழுதியிருந்தேன். 3-வகையான வாக்காளர்கள் இருக்கிறார்கள்.1.கட்சிக்காரர்கள்.2.கட்சி பாகுபாடின்றி நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிப்பவர்கள்.3.மதில் மேல் பூனைகள்.மூன்றாமவர்கள் எடுக்கும் முடிவுகள் மாநில சட்ட சபை தேர்தல் முடிவுகளை நிச்சயம் பாதிக்கும்.வெற்றி பெறும் என்று கருத்துகணிப்பில் எந்த கட்சிக்கு சாதகமாக உள்ளதோ அந்த கட்சிக்கே ஒட்டு போடுவார்கள்.ஆகவே கருத்துக் கணிப்பு மூளையை சலவை செய்யும் ஒரு எந்திரம்.அதே சமயம் கருத்து கணிப்பில் பின் தங்கி இருக்கும் கட்சி வேறு வகையான யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவதற்கும் இது கருத்து கணிப்புகளை தடை செய்தால் தான் மக்களின் உண்மை நிலையை தேர்தல் முடிவுகள் காட்டும்

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும். CNN IBN , timesnow , timesofindia , newsXC voters , headlines today போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்துகணிப்பு வெளியிடாத போது ஒரே மாதத்தில் பல முறை அடுத்தடுத்து லயோலா கல்லூரி கருத்து கணிப்பு வெளியிட என்ன நிர்பந்தம் ஏற்பட்டது? யார் நிர்பந்தித்தார்கள்? மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் ஒரு சுற்றில் கூட திமுக முன்னணி வகிக்கவில்லை. அப்படி இருக்கையில் இந்த இரண்டு வருடத்தில் தி முக செல்வாக்கு எப்படி உயரும்? ஆட்சியிலும் இல்லை, அப்படி மக்களை கவருகின்ற மாதிரி கட்டுமரம் என்ன செய்துவிட்டார்? சட்டமன்றத்திற்கு சென்று மக்களுக்காக குரல் கொடுத்தாரா? மதுவிலக்கிர்க்காக சிறை சென்றாரா? என்ன தான் செஞ்சாரு செல்வாக்கு உயர? அப்புறம் இதே கருத்து கணிப்பில் தனி ஆட்சி செல்வாக்கு அதிமு கவிற்கே அதிகம். இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை அப்படி இருக்கையில் தி மு க வுடன் எந்த கூட்டணியை வைத்து மக்களிடம் கருத்து கேட்டிருப்பார்கள்? தி மு க தேமு தி க வை வைத்தா ? அல்லது தி மு க காங்கிரஸ் பாமக கூட்டணியை வைத்தா ? அல்லது தி மு க காங்கிரஸ் மற்றும் இதர உதிரி கட்சிகளை வைத்தா ? இது மிக பெரிய மோசடி கருத்து திணிப்பு. சரி அதிமு க அமோகமாக வெற்றி பெற்றுவிட்டால் ராஜநாயகம் பதவி விலக தயாரா?

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இது ராஜநாயகத்தின் கருத்து கணிப்பா?..அல்லது சபரீசனின் கருத்து கணிப்பா?... பொது நீதி விசாரணை தேவை....

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இது லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு அல்ல... ராஜநாயகம் அந்த கல்லூரியில் இருந்து ஒய்வு பெற்று வருடம் பல ஆகிவிட்டது..பாதிரியார் என்பதால், அந்த கல்லூரியில் தங்கியிருக்கலாம்....இவரது மக்கள் ஆய்வகம் என்பது இவரது தனிப்பட்ட நிறுவனம்.... இவர் எப்போதுமே, திமுக ஆதரவளார் தான்...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  BREAKING NEWS - திமுக வெற்றி பெரும் என்ற செய்திகேட்டு, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகள் கெக்கேபிக்கே என்று சிரித்தனவாம்... சென்னையில் பரபரப்பு....

 • சபரீசன் - Chennai,இந்தியா

  லயோலாவா அப்போ சரி.. அது என்னைக்குமே காசு வாங்கிட்டு ரிசல்ட் காட்டுற அமைப்பே ..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஆளும் கட்சி மேல் சற்று அதிருப்தி இருக்கறது உண்மை தான்...அதுக்காக அந்த அதிருப்தி ஓட்டு எல்லாம் தி.மு.க விற்கு சாதகமாயிடும்ன்னு நெனைக்கறது கற்பனைக்கு கூட எட்டாத கனவு....தி.மு.க விற்கு இந்த கனவு புடிச்சி இருந்தால் திரும்ப திரும்ப அதே கனவை காணலாம் ....அவிங்க தொலைக்காட்சி இந்த கனவை திரும்ப திரும்ப ஓட்டலாம் ...

 • SENTHILKUMAR - VELLORE,இந்தியா

  இதெல்லாம் தொலபதியின் மருமகன் சபரீசனின் நாடகம். இந்த கருத்து திணிப்பை வெளியிட ராஜநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட விலை என்னவோ ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நீதிமன்ற தீர்ப்பு சீக்கிரம் வரும் என்று நான் நம்பவில்லை... ஆகவே அடிமைகள் இருக்கும் வரை அம்மாவை ஒருவனாலும் அசைக்க முடியாது...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இவனுக இருந்தாலும் 45 % தான் அவனுக இருந்தாலும் 45 % தான் .. நம்ம நெலமை எத்தன ஜென்மம் ஆனாலும் மாறாது மாற விட மாட்டானுக இந்த கழிசடைகள்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  மக்களிடம் கருத்துக்கேட்டு புள்ளி விபரம் போடுறீங்களா இல்ல வாங்குவதை வாங்கிட்டு கணிப்புல போடுரீங்கலான்னு குழப்பமா இருக்கு.,., கூட்டணி முடிவாக இப்படி அறிக்கைன்னு மக்கள் நினைக்கிறாங்க.

 • venka venky - RIFFA,பஹ்ரைன்

  கூட்டணி முடிவு ஆனால் யாரும் போய் கருத்தை கணிக்க தேவையில்லை, எல்லோருக்கும் தெரிந்து விடும். கடந்த தேர்தலை போலவே விஜயகாந்த் தான் கிங் மேக்கர், அவர் DMK பக்கம் போனால் அது ஜெயிக்கும், வேற தனி கூட்டணி அமைத்தால் ஜெயலலிதா ஜெயிக்கும்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அய்யய்யோ நாளை முதல் இனி கட்சி கொடிகள் எங்கும் பறக்க ஆரம்பிக்கும், வாகங்கள் அதி வேகத்தில் பறக்கும், அதிகாரிகள் அனைவரும் ஆட்டோ ஓட்டுனர்கள், ரிக்ஷா ஓட்டுனர்கள் பின்னால் ஓட ஆரம்பிப்பார்கள், பழைய அமைச்சர்கள் அனைவருமே அதே துறையியில் பணியாற்ற பதவி பிரமாணத்திற்கு ரெடியாகிவிடுவார்கள், வந்தே மாதரம்

 • பிரபு - மதுரை,இந்தியா

  தினமலரே செய்தி வெளியிடும் போது போட்டோவும் கன கட்சிதமாக வெளியிடுகிறீர். போட்டோவை பார்க்கும்போது கருத்து கணிப்பை பார்த்த கலைஞர் ஏதோ பூஸ்ட் குடித்தமாதிரியும், அம்மாவுக்கு ஏதோ வயிறு கலங்குவது போலவும் இருகிறதே.

 • vimarsakar - coimbatore,இந்தியா

  திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை ? 1. ஸ்டாலின் -அழகிரி (பதவி ஆசை ), 2.கனிமொழி -ராஜா (2 g ) ., 3.தயாநிதி மாறன் -கலாநிதி மாறன் (aircel -மேக்சிஸ் தொலைதொடர்பு ), 4.உதயநிதி- தயாநிதி அழகிரி (சினிமா)., இப்படி மொத்த குடும்பம்மே தமிழ் நாட்டை சீரழிக்கும்., இது போக மின்வெட்டு , செந்தமிழ் மாநாடு-2 ., கருணாநிதிக்கு பாராட்டுவிழா , வாழ்நாள் சாதனையாளர் விருது என்று குடும்பத்தையும் , தன்னையும் வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்வார்கள் .,

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்தக் கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்பது அல்ல. தீர்க்க மாட்டார்கள்

 • Anandedn Anand - chennai,இந்தியா

  loyolla ன்னு பார்த்தவுடனே முடிவு பண்ணிடலாம் அது மொக்க ரிப்போர்ட்தான்னு. தாத்தாவும் மகனும் சேர்ந்து அப்பப்ப இப்படி ஆதரவா கருத்து கணிப்பு வெளியிட வச்சு மக்கள் தலையில மொளகா அறைசிடலாம்னு பாக்குறாங்கே...அது நடக்காதுடி....

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  ஒரு வேளை ஜெயா தோற்று, பெங்களூர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால், அப்போது தெரிந்து கொள்வார், எந்த நாயும் வெளியே அவருக்காக காத்து இருக்கவில்லை என்று. அதுமட்டுமல்ல, அடுத்த தேர்தலின் போது கருணாநிதி மாதிரி வீல் சேரில் அமர்ந்து தான் நடக்க முடியும். மன்னார்குடி கும்பல் அவரின் சொத்துக்காக எப்படி அடித்துக்கொள்ள போகின்றது என்று நாடே பார்க்க போகின்றது. ( சிங்கப்பூரில் உள்ளவர்களும் தான் ).

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ஆமாம் நம்ம தலைவர் மோடி.. அமிட்ஷா மற்றும் தமிழிசை கூட்டணி எத்தனை வாக்குகள் பெருமுன்னு சொல்லவே இல்லை... நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம். மக்கள் ஆரத்தி தட்டோடு காத்திருக்கிறார்கள். அவர்களை வழியனுப்ப.

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  அடிமைகளின் ஆட்டம் ....ஆட்டம் காணும் நாள் நெருங்கி வருகிறது...தேர்தல் கணிப்பை வைத்து அல்ல...அம்மையார் மீது மக்கள் கொண்ட வெறுப்பை வைத்து.....ஸ்டிக்கர் பாய்ஸ் GET READY ...LETS START UR புலம்பல்ஸ்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்தக் கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது மக்கள் கூறியுள்ளனர். ///கடைசியில் இதுதான் உண்மை, யார் வந்தாலும் நம் தலையில் தான் துண்டு வழக்கம் போல.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இதோடு மட்டுமல்லாது, அடுத்து தினமணி கருத்துகணிப்பில் அம்மா திமுக 233 தொகுதியில் வெற்றி என்றும், மொத்தம் 65% வாக்குகள் பெறுவார்கள் என்று கணிப்பும். நக்கீரனில் ஐயாதிமுக 160 தொகுதியில் வெற்றி என்றும்.. குமுதம் அம்மாதிமுக 234 தொகிதியிலும் பெரும் வெற்றிபெற்று மொத்தம் 100% வாக்குகளும் அம்மாதிமுகவுக்கே என்றும் அவர்களுக்கு கூட்டணியே தேவை இல்லை என்றும் செய்தியை வெளிட்டு மகிழ்வார்கள். தந்தி டிவி மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளார்கள், வெள்ள பாதிப்பு இன்னமும் மக்கள் மனதில் அடியில் அப்படியே உள்ளது. மதுவை வெறுக்கிறார்கள், ஊழல் நிரம்பிவழிகிறது, ஆட்சி நிர்வாகம் கெட்டுகிடக்கிரது, சோ சொன்னது போல சட்டம் ஒழுங்கு சரியில்லை, உள்கட்டமைப்பு சரியில்லை. ஆனால் அதிமுகவே 175 இடங்களில் ஜெயிக்கும் என்று சொல்வார்கள்.

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  ஊடகங்கள் தான் பணம் வாங்கிகொண்டு அதற்கு ஏற்றார் போன்று செய்திகள் வெளியிடுகின்றன என்று கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது திமுக ஒவ்வொருத்தரையும் தனித்தனியே பணத்தை கொண்டு இப்படிப்பட்ட புளுகு செய்திகளை வெளியிடுகின்றன என்பதை நாடே அறியும்...நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் ங்கே பார்ட்டிகள் அல்ல..சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்..அதனால் இதுபோன்ற கணிப்புகள் கோபால புரத்தை மட்டுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.. இப்படியெல்லாம் சொன்னாலாவது இந்த வி காந்தூ கேட்கும் தொகையை குறைத்து கொள்வார் என்று எதிர்பார்கின்றனர்..சுத்த ஹம்பக்..திமுக மூன்றாம் இடம் பிடித்தாலே அதிகம்..இந்த லட்சணத்திலே..ஆட்சியை பிடிக்க...புர்ர்ர்ர்ர்ர்..

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கருத்து திணிப்புகளை தடை செய்ய வேண்டும். ஒரு சில நூறு பேரிடம் கருத்து கேட்டு போடுவது மிக தவறு . கூட்டணிக்காக கட்சிகளை வளைக்க இது ஒரு நாடகம்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வேற வழி ? 5 வருஷத்தில தொலைநோக்குப் பார்வையில் இந்தம்மா எதையும் பெரிசா கிழிக்கலியே .. பெட்டிக்கடைகளை திறந்து வச்சதுதான் மிச்சம்.

 • karthikeyan - singapore,சிங்கப்பூர்

  லயாலோ கருத்து கணிப்பு எப்போதும் சரியாக இருந்தது இல்லை. ரெண்டு குட்டையில் ஊறிய ஒரே மட்டைகளுக்கும் மக்கள் ஆப்பு நிச்சயம். ஏன்டா சொந்த கருத்தை எல்லாம் பத்திரிக்கை என்ற பேரில் வெளியிடுகின்றீர் .

 • மாதவன் க - திருவாரூர்

  இந்த பாழாய்போன அரசியல் கட்சிகள் இல்லாது போனால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  மக்கள் நல கூட்டணிக்கு 4.5% வாக்கு சூப்பரப்பு....அதுவும் நாலுகட்சியும் சேர்ந்து நான் ஏற்கனவே சொன்னது போல, திருமா இந்த கூட்டணியில் நிச்சயம் இருக்க மாட்டார். முதல் choice திமுக சீட் அதிகம் தருவதாக சொன்னால் அம்மா திமுக என்று முடிவெடுப்பார். வலது நிச்சயம் அம்மாவோடு சேர்வதற்கே வாய்ப்பு. மார்க்சிஸ்ட் மட்டும் வைகோவோடு இருந்து மானம் காக்க விருப்புவார்கள். ஆனால் கடைசி நேரத்தில் 10 சீட்டு என்று அம்மா கூப்பிட்டால் ஓடிபோயவிடுவார் வைகோ... இது தான் இப்போதைக்கு நாட்டுநிலவரம். இந்த கூட்டணி என்பது இருக்காது.

 • SENTHILKUMAR - VELLORE,இந்தியா

  கூட்டணியே இன்னும் முடிவாகாத நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்பது , குழந்தை பிறக்காத நிலையில் ஆணா, பெண்ணா என்று தெரியாமல் பெயர் வைப்பதை போலுள்ளது.

 • Mohan D - Boston,யூ.எஸ்.ஏ

  இந்த சர்வே எடுக்க பணம் கொடுத்தது யாரு ? நமக்கு நாமே யோட மருமகனா??

 • SELVARAJ - Bangalore,இந்தியா

  கூட்டணி முடிவாகாமல் எப்படி இந்த சர்வே உண்மையாக இருக்கும். தனிக்கட்சி செல்வாக்கு இருவருக்கும் சமம்தானே

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இந்த கருத்து கணிப்பில் கூட்டணி என்றால் யார் யார் இருக்கிறார்கள்.. திமுக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ இதுவரை எந்தஒரு பெரிய கட்சிகளுமே இல்லை என்ற நிலையில் எப்படி இது கூட்டணிக்கு ஆதரவு என்பது சரியாக இருக்கும்....

 • RAMKY - chennai,இந்தியா

  இந்த கருத்து கணிப்பை தினமலர் வெளி இடுவது பயமாக உள்ளது. மீண்டும் புயல் ஏதாவது வந்துவிடுமோ என ஆனால் தினமலரும் போகுற ஆட்சி தானே என எண்ணி தைரியமாக வெளி இட்டது.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  என்ன தினமலர் ஐயா இந்த கருத்து கணிப்பை பார்த்தவுடன் தாங்கள் அகம் மகிழ்ந்தீர்கள் போல இருக்கே. செய்தியின் தலைப்பு படமே உற்சாகத்திலும், கவலை ரேகை முகத்திலுமாக ஜொலிக்குதே.. ரொம்ப மகிழாதீர்கள்.. இதற்கே உங்கள் மீது இன்னும் நாலு மானமில்லாத நட்டவழக்கு தாக்கல் செய்யபடும்.. ம்ம்க்கும்...

 • RAMKY - chennai,இந்தியா

  இந்த ADMK தாழ்வுநிலை. மேலும் வலுவாகி வரும் நாட்களில் எதிர்ப்பு அதிகமாகி dmk வெற்றி வாகை சூட வழி வகுக்கும் என ரமணன் தெரிவிக்கிறார்

 • SENTHILKUMAR - VELLORE,இந்தியா

  இந்த கருத்துக்கணிப்பு திமுகவால் நடத்தப்பட்ட ஒரு கருத்து திணிப்பு , ராஜநாயகம் ஒரு திமுக சொம்பு.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ச்சே...ச்சே அப்படியெல்லாம் இருக்காது. அம்மாதான் ஜெயிப்பார், அவருக்கு என்று யார் இருக்கிறார்கள், இந்த அடிமைகளை தவிர. அவருக்கே அவருக்கு வைத்த பெயர் மறந்து போய்.. அடிமைகள் உறக்கத்தில்கூட புலம்பும் .ம்மே தான் ஞாபகம் வருகிறதாம். ஆகையால் அம்மாவே ஜெயிக்க வேண்டும். தான் ஆளும் ஊரே பற்றி எரிந்தாலும். தான் திட்டமிடாமல், துயிலிலிருந்து எழாமல், தாமதபடுத்தி திறந்துவிட்ட நீரினால் பல நூறுபேர் செத்துபோனாலும், பல குடும்பங்கள் தண்ணீரில் தன் சொந்தபந்தங்களோடு, தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்ததோடு மட்டுமில்லாமல், கடனில் வாங்கிய வீடு மற்றும் வீட்டு உபயொக பொருட்களுக்கான EMI கட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் கவலைபடாமல் இன்னமும் வெளியேவந்து அவர்களுக்கு ஆறுதல்கூட சொல்லாமல் கூண்டிலேயே இருந்தாலும், கண்ணைமூடி ஆதரிக்கும் கூட்டம் இருக்கும் வரை, அம்மாவே ஜெயிப்பார், இது இறுதி.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  இரு கட்சிகளையும் வருபவர்கள் தான் அதிகம் .உண்மை நிலை இதுவே

 • Tamilan - Tamil Nadu

  தி மு க உறுதியாக ஆட்சி அமைக்கும். அமைக்கிறது. அமைக்க வேண்டும். கலைஞர் முதல்வராக வாழ்த்துக்கள். DMK -154 Seats, DMDK-40, TMC-20, CONGRESS -20. DMK-போட்டியிடும் 154 சீட்டில் சில உதிரி கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட வைக்களாம். இவ்வாறு போட்டியிட்டால் உறுதியாக திமுக தனிப் பெரும்பான்மை பெரும். ஆனால் கண்டிப்பாக கூட்டனி ஆட்சி அமைக்க வேண்டும். மற்றவர்களாள் எந்த தொந்தரவும் இருக்காது. தேமுதிக குடைச்சல் கொடுத்தால் கட்சியை உடைத்து அதிர்ப்தி உருப்பினர்களை அமைச்சர், வாரிய தலைவராக்கி நிம்மதியாக ஆட்சியை நடத்தலாம்.

 • madhu - salem

  வேற வேலையே இல்லையா?

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  தமிழக பிரச்சினைகளை எந்த கட்சியும் தீர்க்காது என 56.4 சதவீதம் மக்கள் கருத்து. அப்புறம் எப்படி திமுக ஆட்சிக்கு வரும்

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  அதிமுகவுக்கு ஆதரவாக 33 .3 சதவீதத்தினரும் , திமுக வினருக்கு 33.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் . கூட்டணி கட்சி காரர்களை இழுக்க எவளவு கேவலமான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  திமுக தலைமை இல் கூட்டணியாம். அதுக்கு ஆதரவாம். கூட்டணி அமையாத போது எங்கிருந்து திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். மிக பெரிய ஏமாற்று வேலை. ஒரு ஆள் மருமகன் செய்யும் வேலை.

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  அக்கா தமிழிசை , பாஜக வை தமிழகத்தில் வீறு கொண்டு எழ செய்திருக்கிறார், அவர் தலைமையில் சீர் போட்டு நடக்கிறது கட்சி. தமிழகத்தின் பிரச்சனைகளை மக்களின் மனதிலிருந்து ஒலிக்க செய்த பெருமை அக்கா தமிழிசையே சேரும். அக்கா முதல்வராகி , மோடி ஆட்சியில் இந்தியா வல்லரசானது போல் தமிழகமும் வல்லரசாகும். மக்களுக்கு தி.மு.க , அ.தி.மு.க சலித்து விட்டது, அதனால் எப்போது தேர்தல் வரும் , வந்தவுடன் ப.ஜ.க வை அரியணையில் ஏற்றலாம் என தேர்தலுக்காக மக்கள் காத்து கிடக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து லண்டன் போல மாற்றி காட்டி இருக்கிறது, அதே போல் தமிழகத்திலும் நடக்கும்.....வாழ்க அக்கா ஜி ,

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  எத்தனை கருத்து கணிப்பு வந்தாலும் திமுக வருவதற்கு துளியும் வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

 • Kulandaivelu Venkatachalam - Tuticorin(Thoothukudi),இந்தியா

  அதிமுகவை விட திமுக வாக்கு சதவீதம் அதிகம் என்பதை நிச்சயமாக ஏற்றுகொள்ள முடியவில்லை. இது போன்ற கணிப்புகள் தி.மு.க.வுக்கு கை வந்த கலை.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பாமக தலைமையில் ஆட்சி அமைய 2.2 சதவீதம் பேர் ஆதரவு. ராமதாஸ், அன்புமணி தவிர அந்த 0.2% யாருங்க??

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  இப்போதுள்ள நிலையில் சரியாகதான் இருக்கிறது. இது ஒரு மாதிரி வினாத்தாள் போன்றது, இதை வைத்தும் வரப்போவதை கணக்கிடலாம். இந்த செய்திக்கு போட்டோ தேர்வு பிரமாதம். அகத்தின் அழகு போட்டோ முகத்தில்

 • karunchilai - vallam,இந்தியா

  ஆ ... ஊ...ன்னா லயோலா கல்லூரி இவர்களுக்கு கருத்துத் திணிப்பு நடத்த கிடைத்து விடுகிறது. சில நாட்களுக்கு முன்னரும் இதையே கூறினார்கள். தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமே தமிழக மக்களின் ஆதரவு என்றார்கள். அண்ட புளுகு.

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  கட்டுமரமாவது கரை சேர்வதாவது, நல்ல காமெடி.. முதலில் 3.5 % ஒட்டு வாங்கினால் நான் பாதி மீசை எடுத்து கொள்கிறேன். அழகிரி பிரிந்து சென்றவுடன் தி.மு.கவின் 20 % ஓட்டுகளை எடுத்து சென்று விட்டார். ஸ்டாலின் டம்மி பீசு.

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  கடந்த ஆட்சியில் ( 2011 இல் ) அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் என ராஜநாயகம் சொன்ன கருத்து கணிப்பு பலித்தது. ஏனெனில் அதில் உண்மை இருந்தது. இப்பொது ராஜநாயகம் விலைக்கு வாங்கப்பட்டு விட்டார். எங்கள் கட்சியில் உள்ள ஒரே விவாதம் 234 தொகுதிகளில் எப்படி ஜெயிப்பது எனபது தான். கண்டிப்பாக புரட்சி தலைவி, மக்கள் தெய்வம்,மாண்புமிகு அம்மா அவர்கள் 64 % ஓட்டுகளை பெறுவது திண்ணம். அதற்காக நாங்கள் எதையும் இழப்போம், உயிரையும் கொடுப்போம்...

 • sathishkumar - chennai,இந்தியா

  தி மு க ஆட்சிக்கு வந்தால் நல்லது தான். குற்ற தொழில் செய்பவர்கள் நல்ல வாழ முடியும். ஏனென்றால் அவர்களும் குற்றம் செய்பவர்கள் தான்

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  இது நகைப்புக்குரிய செய்தியாகும்.. ஏனெனில் பா.ஜ.க 90 லட்சம் உறுபினர்களை missed call மூலம் கட்சியல் சேர்த்துள்ளது. அதனால் ஏறக்குறைய 20 % ஓட்டுவங்கி வைத்துள்ளது, மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் , கூட்டணி கட்சிகள் என சேர்த்தால் தாராளமாக 40 % ஓட்டுகளை பெரும். உலகமே வியக்கும் உன்னத ஆட்சியை தரும் மக்கள் நாயகன், வெற்றித்திருமகன், எளிமையின் இலக்கணம் மோடிஜி, அவர்கள் வழியே தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைக்கும்...

 • unmai nanban - Chennai,இந்தியா

  சும்மா கப்சா கூட்டணிக்காக சர்வே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement