Advertisement

முறிந்து போன முதுகெலும்பின் முனகல்!

காளைக்கும், பசு மாட்டுக்குமான வித்தியாசத்தை அறிந்திராதவர்கள் கூட, ஜல்லிக்கட்டை வேண்டாம் என, வாதிடுவது வேடிக்கை தான். நெல், கம்பு, ராகி, சோளம், பருத்தி, எண்ணெய் வித்துகள் என்று, பயிர் செய்த காலத்தில், கால்நடைகள் பெருகியிருந்தன. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்ற வேளாண்மை நம்முடையது.

நிலத்தில் சிதறிய தானியங்களைக் கொத்தித் தின்ற கோழிகள், வீதி முழுக்கப் பெருகி மேய்ந்தன. பயிர் செய்தலோடு ஆடு, மாடு, கோழி, வாத்து என்று, வீட்டு விலங்குகளோடு இயைந்து வாழ்ந்து வந்ததொரு காலமிருந்தது. கடும் பஞ்சங்களாலும், ஜப்தி நடவடிக்கைகளாலும், வேளாண்மையில் புகுத்தப்பட்ட நவீனங்களினாலும், கூடவே வானும் பொய்து, பருவ நிலைகள் மாற, நீர்ப்பாசனமின்றி விவசாயம் குறைந்ததால், இன்று கால்நடைகளின் வாழ்வாதாரம் சிக்கலுக்குள்ளானது. சத்தான பால் உற்பத்தி, நம் கை விட்டுப் போனது.நோய்களைக் குன்றாமல் அள்ளித் தரும் பிராய்லர் கோழிகள், நம் வாராந்திர உணவுப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்கே சோறு போட்ட விவசாயம் செத்துப் போனதினால், விவசாயிகளும் பிழைப்புத் தேடி கிராமங்களை விட்டு வெளியேறி விட்டனர். நெற்களஞ்சியங்கள் எல்லாம் இன்றைக்குக் கஞ்சித் தொட்டிகள் திறக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

வெங்காயம், தக்காளி விலையேறினால் குதிரை விலை, யானை விலை என்று குதிக்கிறோம். ஆனாலும் என்ன விலை கொடுத்தாலும் வாங்கியே தீரவேண்டிய கட்டாயம். பருப்புக்கு, பத்து மடங்கு விலை கொடுத்து வாங்கும் அரசாங்கம், அதில் நியாயமான விலையையும், விவசாயிகளுக்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், உள்ளூர் உற்பத்தியிலே தன்னிறைவை அடைந்திட முடியுமே! அடிப்படையில் விவசாய பூமியான நம் நாட்டில், மொபைல் போன் உற்பத்தி ஆலைகள், வானகத் தொழிற்சாலைகள் என்று, லட்சம் கோடிகளில் முதலீடுகள் செய்யும் பெருந்தொழில் முதலாளிகளுக்கு வரிச்சலுகையும், மின் கட்டணத்தில் மானியமும் வழங்குகிற அரசுகள் தான், விவசாயிக்கு சொல்லி மாளாத மின்வெட்டை அளித்து, அவனது பியூசைப் பிடுங்குகிறது.

ஆண்டு முழுக்க நிலத்தில் உழைத்துக் களைத்த விவசாயி, அறுவடை முடிந்த தை முதல் நாளில் இயற்கைக்கும், அடுத்தநாள் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லிக் கொண்டாடப்படும் கலாசாரப் பண்டிகையின் ஓர் அங்கம்தான் ஜல்லிக்கட்டு. அது ஒரு விவசாயியின் அடையாளம்; தமிழனின் கலாசாரம். விவாசாயத்தை அழித்து தீர்த்தது போதாதென்று, இன்றைக்கு இவ்விளையாட்டுகளுக்கும் தடை கேட்டு, கொந்தளிக்க வைப்பதன் பின்னணியில், நம்மோடு இயைந்து வாழும் காளையினங்களையே அழிக்க பெரும் முயற்சி நடக்கிறது. இதற்கு பன்னாட்டு அமைப்புகளும் கைக்கூலியாக உதவுகின்றன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், மீந்துபோன நைட்ரஜன் வெடி உப்புகளை உரமாக, நம் நிலங்களில் கொட்டினர்; நிலம் கெட்டிப் பட்டது. கடினப்பட்ட நிலத்தை உழவோட்ட டிராக்டர்கள் வந்திறங்கின. பணப் பயிர்கள் விளைச்சல் நிலத்தை ஆக்கிரமித்தன. மிச்ச விவசாய நிலங்களிலும் வீரியமிக்க உரத்தினால், நாட்டு நெற்பயிர்கள் சரிந்து விழுந்தன.

இதன் காரணமாகக் குட்டை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மாடுகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. கால்நடைகளின் தேவையும் குன்றி, உணவும் பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது. பால்பொருட்களுக்காக மட்டுமே எஞ்சியிருந்த பசுக்களை வளர்ப்பு மையங்கள் என்ற பெயரில் இனக்கலப்பு செய்து, பல்வேறு நாட்டு இனங்களை அழித்தொழித்தனர். காளைக் கன்றுகளைக் கொத்திக் கொண்டு போயினர். பராமரிக்க வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் மாடுகளை, இறைச்சிக்காக வாங்கத் துடித்தனர். இந்த மண் சார்ந்த குணாதிசயங்களோடு வளர்ந்த காளை இனங்கள் மெல்ல மெல்ல அழிவைச் சந்தித்தன.

ஆனாலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றுக்காக வளர்த்தவர்களின் விடாப்பிடித்தன்மையால், நாட்டு இனங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இன்று, இயற்கை விவசாயம் நோக்கித் திரும்புகிறவர்களின் முக்கியத் தேவையாக இருப்பது இயற்கை உரம். அவற்றை அள்ளித் தரும் மாடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் காளை இனங்களை, மீட்டெடுக்கும் பணியை தக்கவைத்திருக்கும் இனமாகத் தமிழினம் திகழ்வது, சந்தை முதலாளிகளின் கண்களை உறுத்துகிறது. தங்களின் பால்பொருட்கள், மாட்டுத்தீவனங்கள் விற்கப்பட வேண்டும். மாட்டு இறைச்சி ஏற்றுமதிச் சந்தையைத் தக்க வைக்க வேண்டும்.

இதெல்லாம் காளைகளையும், பசுக்களையும் தம் பிள்ளைகள் போல் பராமரிக்கிறவர்களிடம் எப்படித் திணிக்க முடியும்? ரேக்ளா பந்தயத்தைத் தடை செய்து ஆலம்பாடி காளையினத்தையே கண்காணாமல் செய்து விட்டனர். இன்று ஜல்லிக்கட்டுக்கு மணியடித்திருக்கின்றனர். இந்தத் தடையைத் தடுத்து நிறுத்தாவிட்டால், காளை இனங்கள் அழிந்து போவதை, நம்மால் தடுக்கவே முடியாது. பயிர்களில் மரபின மாற்றம் போல், பீடா போன்ற அன்னிய சக்திகள், காளைகளிலும் கலப்பினங்களை வலிந்து திணிக்கும் முயற்சியே இது என்ற, உள் அரசியல் புரியாமல் இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் மாடுகளை, வதை செய்கின்றனர், கொல்கின்றனர், க்ரூயலிட்டி என்று, தலையைச் சிலுப்பிக் கொதித்துப் போய் பேட்டி கொடுக்கின்றனர்.

விலங்கு நல ஆர்வலர்களோ, கோடிகளைக் கொட்டிக் குவித்து நீதியையே அசைத்துப் பார்த்துவிட்டனர். சரி, விலங்குகளை வதைக்கின்றனர் என்று கொந்தளிக்கும் இவர்கள், எத்தனைப் பிராணிகளை தங்கள் வீட்டில் பராமரிக்கின்றனர்? ஒரு கிராம் பட்டு நூலிழை தயாரிப்பதற்காகக் கொல்லப்படும் பட்டுப்பூச்சிகளின் எண்ணிக்கைப் பற்றி, இவர்களது அக்கறை என்ன நிலையில் இருக்கிறது? மலை வாசஸ்தலங்களுக்கு யாத்திரை போகிறவர்களைச் சுமந்து செல்லும் கழுதையினங்களுக்காக, எப்போது குரல் கொடுக்கப் போகின்றனர். கண்கட்டப்பட்ட குதிரைகளை காட்டுத்தனமாய் ஓடவிட்டு, பெட்டிங் கட்டி விளையாடும் பணம் படைத்தவர்களுக்கெதிராக உங்கள் கோஷம் என்ன? காட்சி ஊடகங்களும் ஜல்லிக்கட்டுக்கான விவாதங்களை வெறும் டி.ஆர்.பி., ரேட்டிங்கை கணக்கில் வைத்தே அணுகுகின்றன.

நெறியாளுனர்கள் ஒரு விவசாயின் இடத்திலிருந்து கேள்விகளை முன் வைத்திருந்தால், விவாதங்களின் போக்கே வேறு வடிவம் கண்டிருக்கும். விவசாயத்தை அழித்து, விவசாயின் முதுகெலும்பை முறித்து, அவனது அத்தனை உரிமைகளையும், உடைமைகளையும் பறித்து, இன்று அவனது பண்பாட்டிலும், கலாசாரத்திலும் கை வைப்பதால் நடக்கப் போகும் விபரீதம் அறியாமல், தட்டையான கருத்தாக்கத்தை விதைக்கும் மூடர்களை என்ன செய்வது? தேர்தல், கூட்டணி, காசு, பணம், பேரம் என அரசியல் கட்சிகளின் கவனம் வேறெதிலோ இருக்க, 'சும்மா பேசி வைப்போமே...' என, 'ஜல்லிக்கட்டை தடை செய்யாதே' என ஈனக் குரலில் முனகுவது, அவர்கள் காதுகளையே கூட எட்டப்போவதில்லை.

'விவசாயத்துல கை நிறையக் காசு வந்தா, நாங்க ஏண்டா கழனிய விட்டு வெளியேறி, கால் காசு பெறாத இந்தக் கான்கிரீட் காட்டுல உட்கார்ந்துட்டு, உங்க அறிவு கெட்ட பேச்சுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு இருக்கப் போறோம்?' என்ற விவசாயியின் குரல் கேட்கிறதா யாருக்கேனும். இந்த நாட்டின் முறிந்து போன முதுகெலும்பின் முனகலும் கூட இது தான்!
கோவை ஜீவா
பத்திரிகையாளர்.

இ மெயில்: kovaijheevagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • NAVEEN - ariyalur,இந்தியா

  Your article published in Dinamalar was very good. Please continue to support Jallikattu for saving native breeds. - NAVEEN

 • BABU - perambalur,இந்தியா

  Really very good article. I am proud to say '' I am farmer''. Great article……..please continue the same………..your service is valid.- Babu

 • annaidhesam - karur,இந்தியா

  கோவை ஜீவாவின் கட்டுரை..தமிழக விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்டுரை..

 • Madhu - Trichy,இந்தியா

  ஜல்லிக்கட்டுத் தடையினால் இன்று பல்வேறு ரகசியங்கள் அம்பலமாகி வெளிவந்து விட்டன. அதாவது, நீங்களும் நானும் குடிக்கும் பால் கலப்பினப் பசுவின் மூலம் கிடைக்கும் பால். இதில் ஏ1, ஏ2 ரகங்கள் உள்ளன. இத்தனை நாள் இதையெல்லாம் தெரிவிக்காமல் நமக்கு 'பால் ஊற்றி' வந்திருக்கிறார்கள். ஏனெனில், அப்போது 'ஜல்லிக்கட்டு' இருந்தது. பசு மாடுகளும்,பசுங் கன்றுகளும்தான் தேவையெனப் பொதுவாகக் கால்நடை வளர்ப்பவர்கள் எப்போதோ தீர்மானித்து விட்டார்கள். ஊசி போடுவதன்மூலம் பசுக்களை சினைப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான வளர்ச்சியை எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டார்கள். வயலில் இறங்கி வேலை செய்வதற்குப் பதிலாக நவீன இயந்திரங்கள் மூலம் விதை தெளிப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்ய முடியும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்து காளை மாடுகளை எப்போதோ ஓரம் கட்டி விட்டார்கள். மாட்டு வண்டி, வில் வண்டிகளை விட்டுவிட்டு, 2வீலரும், 'டெம்போ'வும் தான் விஞ்ஞான உலகின் வரபபிரசாதம் என்பதை எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டார்கள். காளைகள் மூலைக்குப் போய் விட்டன. பின்னர் இறைச்சிக்குப் போக ஆரம்பித்தன. 'மாட்டிறைச்சியை சாப்பிடாதே' என எந்த அரசாங்கம் சொல்ல முடியும்? அது தனி மனிதனின் உணவுமுறை சார்ந்த பழக்கம் அல்லவா? ஆத்திகர்கள், ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் 'ஆரிய மாயை'யில் மயங்கியவர்கள். அப்படித்தான் பேசுவார்கள்.'சோமரச பானம்' குறித்து இதிகாச புராணக் கதைகளில் கூட உண்டு என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறுகிறார்கள். பிறகு ஏன் 'மது விலக்கு' கட்டாயமாக்கப் பட வேண்டும் என்கிறார்கள் ? 'ஜல்லிக்கட்டு' மட்டும் வந்து விடட்டும். இவையெல்லாம் அப்படியே மாறிவிடும் பாருங்கள்

 • Mr y - thamizhnadu,இந்தியா

  தனது கருத்தை அழகாக மொழிய இந்த தமிழை போல வேறு மொழி உதவுமா? தங்களின் மொழி நடை மிக அரிதாக இருந்தது... தங்களை போல் மொழி நடை பெற்றவர் மிக அரிது... காங்கேயம் போல ஒரு நாள் நமது மொழியும் அழியாமல் காக்கப்பட இது போல மனிதர்களும் அவர்களின் விவாதங்களும் தற்கால பத்திரிக்கைகள் அதிக அளவில் பதிப்பிக்க வேண்டும்... நன்றி

 • sundar - Hong Kong,சீனா

  தங்களின் கட்டுரை ஒவ்வொரு உண்மை தமிழனின் பிரதிபலிப்பு. நம்மால் இப்படி வேதனை மட்டுமே பட முடியுமா? என்ன செய்வது? IPL, CPL போன்று ஏதாவது பன்னாட்டு நிறுவனம் நம் ஜல்லிகட்டை நடத்தினால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் அந்நியனிடம், துரோகியிடமும் வீழும் நாம் எழுவது எப்போது?

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  ஜீவா அவர்களே உங்களின் ஜீவனுள்ள பேச்சு தமிழர்கள் எல்லோரும் யோசிக்க வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை???... ஆனால் என்ன செய்ய முடியும் ஆண்கள் பெரும்பாலும் குடியே குடித்தனமாய் இருக்கிறார்கள், சிறந்த குடிமகன்கள் என்று???.... தாய்குலங்கள் SERIAL-லே SERIOUS-ஆக ADMIT-ஆகி விட்டார்கள். அந்த SERIAL- என்ற ICU-வில் இருக்கும் அவர்களை குணப்படுத்துவது யார்???.... அதுவரைக்கும் பக்கத்துக்கு வீட்டுக்கு சுனாமியே வந்தாலும், அட அது பக்கத்துக்கு வீட்டுக்குத்தானே சுனாமி அழையா விருந்தாளியா வந்திருக்கு???... பார்க்கலாம் சுனாமி நம்ம வீட்டுக்கு அழையா விருந்தாளியா வந்த பார்க்கலாம், அது வரைக்கும் SERIOUS-ஆ பார்க்க வேண்டாம் சுனாமியை??? அது வரைக்கும் SERIOUS-ஆ பார்க்கலாம் SERIAL-லை என்று???... இப்படிதான் இருக்குது தந்தைக்குலமும் தாய்க்குலமும் இன்று???... இந்த இரண்டுமே ஒரு விதமான போதைதான்???... அதன் வடிவம்தான் வேறு???... இதெல்லாம் ஒரு வேலை மாறினால் நீங்க சொல்லுறதும் நடக்கும்???. அது ச(சா)த்தியம், அது ச(சா)த்தியம், அது ச(சா)த்தியம்...

 • shankar - perambalur,இந்தியா

  I red your article at Dinamalar on January 17th 2016 edition. Really great... congratulations for your great thoughts and I like this to be spread across all youth. Keep the sprit- Shankar

 • sripaartha - karur,இந்தியா

  Your detailed deion on the subject is perfect & highly appreciable. Our hats off to you. Keep it up- Shreema_partha

 • christofer - chennai,இந்தியா

  I have read your article in Dinamalar today which is very informative & interesting as well, congratz for the same.- Christopher, Chennai.

 • dev pandey - chenglepet,இந்தியா

  விவசாயிகளின் நிலையை தெரிந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் விவசாயியும், விவசாயமும் மேம்பாடு அடையமுடியும். மிக அருமையான கருத்துக்கள். விவசாய பெருங்குடி மக்களுக்கு குரல் கொடுக்க அரசியல் தலைவர்கள் குறைந்து போன இந்த நாட்டில், எங்களுக்காக குரல் கொடுக்க உங்களை போன்ற உள்ளங்கள் இருப்பதாலேயே இன்றும் சில விவசாயிகள் உயிரோடு இருக்கின்றனர். இனி வரும் தலைமுறை இளைஞர்கள், விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசுகளுக்கே வாக்களிப்போம் என்று சூளுரைக்க வேண்டும். இளைய தலைமுறை விவசாயத்தை கையில் எடுத்தால் மட்டுமே விவசாயம் தழைக்கும். தேவ்.பாண்டே, சமூக ஆர்வலர், செங்கல்பட்டு. கைபேசி எண் 94454 29369.

 • Batmanabane Mounissamy - erode,இந்தியா

  Your views on Jallikattu are written very beautifully. Your style and sequences are fantastic which made the reading absolutely interesting and involving. Sadly your article will only remain a literary masterpiece. Nothing can be corrected because all involved, including the Supreme Court, are aware of the wrong being committed and they are not doing it unknowingly. If possible, post your writeup in some national english daily so that some good Samaritan may act for a good cause. My felicitations to your writing s. Keep writing. Prof.Dr. M. Batmanabane MD

 • veeramani - thiruppur,இந்தியா

  I have read your article on Jallikattu in Dinamalar, really touching article with facts from the field Good Article- Veeramani

 • prabhu - ootty,இந்தியா

  உரத்த சிந்தனை பகுதியில் உள்ள உங்களுடைய கருத்துக்கள் மிகவும அருமை இந்த கருத்துகள் நல்ல அரசியல் மற்றும நீதிபதியாக உள்ளவர்களையும் சிந்திக்க வைக்கட்டும்- prabu

 • v. sivakumar - coimbatore,இந்தியா

  Dear Madam, First of all, Greetings from me for you and your kind family members. HAPPY 2016 & HAPPY PONGAL Celebrations 2016...Happy Holidays... நான் தங்கள் கைவண்ணணத்தில் 17/01/2016 ஞாயிறு அன்று வெளியான கட்டுரையைப் படிக்க நேரம் கிடைத்தது. "முறிந்து போன முதுகெலும்பின் முனகல்" என்ற தங்களின் கட்டுரை நம் விவசாயிகளின் சோக நிலையை எடுத்துக்காட்டியது. நல் விவசாயி மறைந்த நம்மாழ்வாா் போல் அனைவரும் ஒன்றுகூடி சிந்தித்து இயற்கைவழி விவசாயத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். பத்திரிக்கையாளர் கோவை ஜூவா அவர்களுக்கு என் மனமாா்ந்த நன்றிகள் பற்பல... தொடா்ந்து எழுதுங்கள்...கோவை வாசகன் எதிா்பாா்க்குறேன்... Write more, I would like to enhance my Knowledge... Thanking you, With Warm & Sweet Regards, Sivakumar V 153 Police Kandasamy Street, Olympus, Ramanathapuram(PO), Coimbatore - 641045. Cell : 9500401928.

 • shanmugam marappan - salem,இந்தியா

  பாரம்பரியமிக்க இந்த விவசாய பூமியிலே யாரும் மதிக்காத, நாதியற்று கிடக்கும் நாட்டின் முதுகெலும்பின் முனகலை உணர்வுகளோடு வெளிப்படுத்திய சகோதரிக்கு நன்றிகூறிப் பாராட்டு கிறேன் மா.சண்முகம், இயக்குநர்,AVB பள்ளி

 • s.shanmugasundaram - krishnagiri,இந்தியா

  கட்டுரை ஆசிரியர் கோவை ஜீவா அவரகளுக்கு வணக்கம் தினமலரில் உங்கள் கட்டுரை படித்தேன் இந்த நாட்டில் முறிந்து போன முதுகெ லும்பும் கூட இது தான் உண்மையை உரைத்து எழுதிய உங்களை பாராட்டலாம் அன்புடன் சோ சண்முகசுந்தரம்

 • padma kumar - dharmapuri,இந்தியா

  கட்டுரை ஆசிரியர் கோவை ஜீவா அவரகளுக்கு வணக்கம் தினமலரில் உங்கள் கட்டுரை படித்தேன் இந்த நாட்டில் முறிந்து போன முதுகெ லும்பும் கூட இது தான் உண்மையை உரைத்து எழுதிய உங்களை பாராட்டலாம் அன்புடன் சோ சண்முகசுந்தரம்

 • padma kumar - dharmapuri,இந்தியா

  Read the article written by you in DInamalar daily.Well explained the relationship between agriculture,agriculturist,Bull, Cow and our tradition also.Congratulations.-Padmakumar:Social worker

 • r veeramani - thiruvannamalai,இந்தியா

  மிக நல்ல விஷயம். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள எதை படிக்கலாம் என்று ஒரு ஆலோசனை கூறுங்கள். நன்றி- Veeramani R

 • madan kumar - madurai,இந்தியா

  வணக்கம். நான் மதன குமார், மதுரையிலிருந்து. தங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. விலங்குகள் மீது உண்மை அனுதாபம் உள்ளதாக கூவும் போலி ஆர்வலர்கள் ஏன் அதன் இளங்கன்றுகளுக்குரிய பாலை அதன் தாய் முன்னிலையில் தவிக்க விட்டு கொள்ளை அடிக்கின்றனர். காளை மட்டும் வனவிலங்கு என்றால் அதன் பெண்ணிணம் மட்டும் வீட்டு விலங்கு? எவ்வளவு அற்(பத்)புதனமான நடைமுறை தமிழகம் முழுவதம் எழுச்சி கொள்ளாத வரை இதை மாற்ற முடியாது மேலும் இதற்கான எழுச்சி பாதித்த பகுதிளில் மட்டும் உள்ளது. காலப்போக்கில் மறந்தும் விடுவார்கள். இறுதியாக பெட்டிங் மூலம் நம் உணர்வுகளை ஏமாற்றும்,கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தை ஆடம்பரமாக கபளீகரம் செய்யும் கிரிக்கெட்டிற்கு தடை விதித்தால் என்ன??? நன்றி- மதன் குமார்

 • prabakaran ambalavavan - vellore,இந்தியா

  Madam,thinamalar article superb, vilangu nala arvalarkalukku sattaiyadi,oru pathilum sollamudiyadhu avarkalal,- பிரபாகரன் ambalavanan

 • john chandrasekar - rajastan,இந்தியா

  The article written in today’s Dinamalar is really a truth about the war against Tamilian culture. Thanks for the article .- John சந்திரசேகர், Manager – இன்ஜினியரிங், CAIRN India- Rajasthan

 • krishnamai srimai - chennai,இந்தியா

  I fully agree with your views. I am 73 year old. I hail from a village. Thoughvnow i am in chennai and my children are not aware of village life, my remembarances of village life is very sweet. Your point in GOVT's part in helping Agri. sector is absolutely essential if we want to really grow economically. Spending money on agriculture should go directly to farmers in stead of thro' intermediatary.- Krishnamachari Sriramachari

 • rajakavi - thiruvallar,இந்தியா

  தங்களின் க(ருத்து)ட்டுரை தின மலர் நாளிதழில் படித்தேன். சிந்திக்க வைக்கும் கருத்து.இக் கருத்து விலங்கு நல ஆர்வலர் என கூறுபவருக்கு தக்க பதிலடியாக இருக்கும். நன்றி தங்களன் சாகோதரன் ராஜா kavi

 • arun servayour annachi - kanchipuram,இந்தியா

  yellam namma thappu annachi..... malai penjappo nangalum thana udhavi pannunom..... ippo engaluku oru pirachinai..... adhuku nanga poraduna aatharavu thara mattanuga..... ipdi irundha supreme court yenna oru sundikai paiyan kooda thadai keka than seivan...Arun Surveyor Annachi.

 • sansun - madurai,இந்தியா

  வாழ்வாதரத்தை ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம் என்பதுதான் நிதர்சமான உண்மை...இந்த தகவலும் அதைதானே சொல்கிறது...உண்மைதான்... எல்லாவற்றிற்குமே அடுத்த நாடுகளை எதிர்பார்த்து வாழவேண்டிய நிலை வரத்தான் போகிறது....தன்னிரைவு சமுதாயம் அழிந்துவிட போகிறது.... உ.ம்: சென்னையில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டபோது...அருகில் இருந்தவர்களைவிட தொலைவில் இருந்தவர்களின் உதவிகள்தானே கிடைத்தது...லேன்லைன் போண்கள் தானே வேலை செய்தன.... செல் செத்து போனதே....எண்ணெய்யில் எரியும் விளக்குகள்தானே உதவின...மழைநீரைதானே குடித்தோம்....இன்று செல்...கேஸ்...விதையில்லா (ஹைபிரட் )காய்கறிகள்...சினை யில்லா மாடு...முட்டையில்லா கோழி ...ரசாயனம் கலந்த பதப்படுத்தபட்ட உணவு மற்றும் சமையல் பொருட்கள்...இப்படி பலபல நமது வாழ்வில்(இவையில்லாத வாழ்க்கை இல்லை) இழந்துகொண்டுதானே உள்ளோம்..... நம்மை அறியாமலே நம்மை அடிமைபடுத்த ஏற்படுத்திய வலையினுள் நாமே (வளர்ச்சி என்ற பெயரில்)நுழைந்து சென்று கொண்டே இருக்கிறோமே.....Sansun

 • pillairamraj - coimbatore,இந்தியா

  Pillai Ram Raja சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் எந்த இந்துவும் - BEEF-EATING and THALIARUPPU தி.மு.க வுக்கு ஓட்டு போடக்கூடாது. முஸ்லீம் மநாட்டில் கருணாநிதி கூறியது, "இந்தியன் என்றால் ஒரளவு ஏற்றுக் கொள்ளளாம்", "அது என்ன இந்து?" "இந்து என்றால் அரபு மொழியில் திருடன் என்று அர்த்தம்" என நீங்கள் கூறியதை மறக்க முடியுமா??? "இந்துக்களை திருடன்" என்றதையும் மறக்க முடியுமா????? எத்தனை காலம் தான் இந்துக்கள் சொரனை இல்லாமல் திமுக வுக்கு ஓட்டு போடுவார்கள்?????? "ஸ்ரீரங்கம் நாதரையும் சிதம்பரம் நடராஜரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் தான் எனக்கு திருநாள்" என்றது, மதுரை மீனாட்சி உள்பட இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியது, பிள்ளையாரை "யார் அந்த பிள்ளை" என்று ஏளனப்படுத்தி பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பை ஆதரித்தது, ரம்ஜான் நோன்பில் கலந்து கொண்டு, "ராம்ஜான் நோன்பு உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது" என்று கூறிவிட்டு, ஏகாதேசி, கிருத்திகை விரதங்களை கேலி பேசி இழிவுபடுத்தியது, இந்துக்கள் நெற்றியில் திலகமிடுவதை, "நெற்றியில் வடியும் ரத்தம்" என்றது, புகழ்மிக்க "பண்ணாரி அம்மன் கோவில் தீ மிதிக்கும் விழா"வில், 'செல்வராஜ்' என்ற அமைச்சர் கலந்து கொண்டார் என்பதற்காகவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது, தீ மிதித்தல் போன்ற காட்டுமிராண்டித் தனத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி தீ மிதித்தலை கொச்சைப் படுத்தியது, ராமரை குடிகாரன் என்றது, ராமருக்கு செருப்பு மாலை போட்டது, கருணாநிதியே ஒன்றா இரண்டா, நீங்கள் இந்துக்களுக்கு செய்த அநீதியை எடுத்து சொல்லதொடர்ந்து இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்துவாய், நாங்களும் நீ துப்பிய எச்சிலை துடைத்துக் கொண்டு உனக்கு ஓட்டு போடணும். இனிமேலும் உங்களுக்கு ஓட்டுபோட இந்துக்கள் சொரனை அற்றவர்கள் அல்ல, இளிச்சவாயர்களும் அல்ல.இந்து தர்மத்திற்காக எதையும் விட்டு கொடுக்கலாம், ஆனால் எதற்காகவும் இந்து தர்மத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது இந்துக்களே. My dear dear Brothers and Sisters of Tamil Nadu - It is the duty of everyone in Tamil Nadu to ensure Tamil Nadu is free of the cancer DMK, we want DMK-free Tamil Nadu. Karunanidhi and his family looted Tamil Nadu in the name of Tamil language. Karunanidhi said he made his daughter Kanimozhi an MP because she can speak HINDI but he does not want others to learn Hindi. Common people from Tamil nadu go to other states looking for jobs and for doing small businesses. They suffer because they cant speak Hindi, DMK has cheated the people of Tamil nadu in the name of Tamil language. we have to free Tamil Nadu from the poisonous clutches of the dangerous DMK which has destroyed Tamil Nadu. My dear brothers and sisters it is the duty of everyone in Tamil Nadu to throw out THALIARUPPU and BEEF-EATING and ANTI-HINDU Karunandhi and his family. DMK is a cancer. we want the cancer - DMK-free Tamil Nadu. Every anti-DMK vote is a SAVE-TAMILNADU vote. Save Tamil Nadu. Save HINDU Culture in Tamil Nadu. DMK should be destroyed completely. we want DMK-free Tamil Nadu. I call upon all HINDUS in DMK to resign from anti-Hindu DMK and come to BJP. Anti-Hindu DMK should be disintegrated and destroyed completely. Butchering animals during Muslim festivals should be banned if Jallikattu which is part Tamil Hindu festival Pongal is banned considering it is animal cruelty..Jai Hind- Pillai Ram Raja

 • alagarsamyperiyasamy - chennai,இந்தியா

  We can conduct Jallicuttu in Tamilnadu. Supreme Court can't do anythink/ When it orders Karnataka to release water, but karnataka did not release the water and shouted it it release water 1000 and 1000s of its farmers will die. What action supreme court was taken against Karnataka. Like that we have to conduct Jallicuttu and allow supreme court to just வாட்ச்- Alagarsamy Periyasamy

 • senthilkumar - kanyakumari,இந்தியா

  I read your article published by dinamalar on today.really good.if you have soft copy pl share.we will share with many by mail. In the Service of மொதேர்லாந்து- Senthil Kumar. ச, கூர்டினடோர், Vivekananda Kendra Kanyakumari

 • a.s.kannan - truchi,இந்தியா

  அருமை மேடம்.. மிக நன்றி... தமிழ் மக்கள் தங்களுக்கு கடமைப் பட்டுள்ளனர்.... இதோ எனதுப் பதிவு.. நம் தமிழ் இனத்தின் அடையாளங்களான விவசாயத்திற்கும் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விழாக்களுக்கும் எவ்வகையான அவலங்கள் எவ்வாறெல்லாம் யாரால் என்று எளிய வகையில் நேர்த்தியான தனது விளக்கத்தை இன்றைய தினமலர் நாளிதழில் பிரபல பத்திரிகையாளர் "கோவை ஜீவா" அவர்கள் "உரக்க சிந்தனைப்" பகுதியில் பல உண்மைகளைப் பதிவிட்டுள்ளதை அனைவரும் தவறாமல் பொறுமையாகப் படித்து உணருங்கள்... மனம் கனக்கிறது.....எனது முக நூல் I'd: A.s.kannan...

 • jayaraman - madurai,இந்தியா

  Congratulations for such a Great article. Please translate it and spread it through social websites and english media. Thanks & Regards,- Jeyaraman.R

 • himaha - coimbatore,இந்தியா

  I read your article in Dinamalar online on OUR TRADINAL JALLIKATTU and about our present farmers who are still backbone of our society. Very well said & each line of your article is excellent. I was getting tears when I read the last para of your article hence I am sending this mail to you for your outstanding article. God Bless you. With best wishes.....Mahadevan

 • raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  I happened to read your article in Dinamalar dated 17th Jan on Jallikattu and shocked with the revealing details and how big the implication is beyond the scratch on surface. As an NRI I was merely following the status and honestly the status didn't disturb me much until I read your article and the correlation. come from a farming family and due to cycle of times I am sitting and gaping on all the multi - national strategy on emerging markets- which essentially means uproot the base of the culture. Keep writing and your perspectives a wide spectrum of believes and hope nature is a zero sum game and it's only time when things come full circle.- Raja

 • kandasamy - jaffna,இலங்கை

  I have gone through your அர்டிச்லே "Murindhupona Mudukelumbin Munagal " under the above mentioned topic in Tamil Daily - Dinamalar(Chennai Edition) dt.17th Jan., 2016. Your article is very, very smart and pin pointing the 'தமிழ் culture, particularly on the Farmer and Cattle Development in their day to day life'. You have pictured the bad situation d by தி politicians, Industrlalists in the name of Global economy and the Govt. poilicies on Farmers and the cattle for the last a few years. It is for the persons in power to take in to consideration in a positive manner. We can wait and see. Thank you for bringing அவுட் this article in the correct time- Eazthu Chirpi & Kavignar T.N. Kanthaswamy.

 • vasu - chennai,இந்தியா

  just read your article in Uratha sindhanai..its a wonderful article..Clearly pictured the situation of Jallikatu.Eagerly waiting for many more articles from u Mam..- Vasu

 • adithya - chennai,இந்தியா

  After reading your splendid article regarding Jallikattu in Uratha Sindhanai...its really my pleasure to send u a message that thi article was outstanding.Perfect article in a perfect time..Waiting to see many more articles regarding many other issues too..- Adithya

 • premkumar - chennai,இந்தியா

  ஜல்லிக்கட்டு நடக்க என்ன செய்ய வேண்டும் எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன். 1) மாடுகளை வளர்பவர்களை 1 மாததிறகு முன்பே அணுகி அவர்களின் மாடு வளர்ப்பு மற்றும் பயிற்சி குறும்படம் போல் எடுக்க வேண்டும் 2)எந்த எந்த ஊர்களில் நடக்குமோ அங்கே உள் விளையாட்டு அரங்கம் போல் அமைக்க வேண்டும் 3)மாட்டின் உரிமையாளர் மற்றும் மாடு புடிப்பவர் பதிவு செய்தாக வேண்டும் 4) மாடு புடிப்பவர் அதிகபட்சம் 3-5 மாடுகளை புடிக்க அனுமதிக்கபடுவார்கள். ஒரு மாட்டை 25-50 நபர் மட்டுமே களத்தில் அனுமதிக்கபடுவார்கள். முதல் நாள் : 1)ஜல்லிகட்டு போட்டியே ஆரம்பிக்க விருப்ப படுபவர்கள் ரூபாய் 50,000 முதல் ஏலத்தில் விடப்படும். யார் அதிகம் எடுகிரர்களோ அவர்களே போட்டி ஆரம்பிக்க மற்றும் அவர்கள் குடும்பத்தினர் போட்டி முடியும் பொது பரிசு வழங்க முடியும். 2)மாடு மற்றும் உரிமையாளர் மைதானத்தை 5 நிமிடம் வளம் வரலாம் அல்லது மாட்டின் வேகத்தை அனைவரும் பார்க்கும் படி செய்யலாம் 3) பார்வையாளர் கையில் மாடு மற்றும் அதன் எண் இருக்கும் விருப்பம் உள்ளவர்கள் மாட்டின் மேல பந்தையம் கட்டலாம் மாடு புடி வீரர் மேலும் பந்தையம் கட்டலாம் இரண்டாம் நாள் : 1)அந்த ஊர் மக்களை தவிர அனைவரும் நுழைவு சீட்டு வாங்க வேண்டும் 1000-50000 வரை இருக்க வேண்டும் (அந்த ஊர் மக்கள் வாக்காளர் ஓட்டு போட எப்படி வாக்காளர் அட்டை தருவார்களோ அதே மாதிரி நுழைவு சீட்டு வழங்ககபடும் விருந்தினற்கும் ) 2)இதர சங்ககளில் இருந்துவற்பவர்கள் 5 நபர் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் 5 லட்சம்(நுழைவு சீட்டு) மட்டுமே மின்சாதன பொருள் மற்றும் கேமரா வீடியோ அனுமதி இல்லை 3) பத்திரிகையாளர்களுக்கு 2 லட்சம் (நுழைவு சீட்டு) கேமரா வீடியோ விலக்கு அளிக்கப்படும் ஆனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் இடத்தில் தான் இருக்க வேண்டும் 4) மாடு கூட நின்று புகைப்படம் எடுக்க 500-1000 ரூபாய் 5) சாப்பாடு மற்றும் தண்ணீர் இலவசம் (அளவு சாப்பாடு ) அதிகம் தேவை படுவோர் பணம் கட்டி வங்கி கொள்ளலாம். உணவுகள் அனைத்தும் அந்த ஊர் மக்களால் தயாரிக்கபட்டது . அந்த ஊர் மக்களுக்கு உணவு கட்டணம் இல்லை 6)மாட்டிற்கு நிதி உதவி அளித்தால் ஏற்று கொள்ளப்படும் 7) போட்டியில் பந்தயம் கட்டியவர்கள் ரசிது கொடுத்து பணத்தை வங்கி செல்லாம்

 • Srinivasan Kannapiran - Coimbatore,இந்தியா

  Well said.....As I read this article, I understand what is happening around us...Can Tamilnadu government do something? I think Yes...

 • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

  மிக்க இன்மை நிலவரத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது .எல்லாவற்றுக்கும் மாற்று உண்டு உணவுக்கு மட்டும் உணவுதான். அயல்நாட்டு மரபணு மாற்றம் மூலம் இந்தியாவின் மொத்த இனம், விலங்குகள் பயிர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு அந்நிய ஆதிக்கத்திற்குள் கொண்டுவர சில கைக்கூலிகள் ஒன்றிணைந்து செய்திடும் முயற்சியின் ஒரு சிறு வெளிப்பாடுதான் இந்த தடைச்செயல் .முன்னாள் நிகழ்வுகள் ஒரிசாவில் நடந்ததையும் ஒற்றுநோக்கினால் உண்மை நன்கு விலங்கும் அங்குள்ள மாடுகளை ஒழித்து பஞ்ச பூமியாக்கி பல்லாயிரகோடிகள் கலாக்கட்டியவர்கள் பற்றி முதலில் அறிந்து கொள்வது முக்கியம் .இதுபோன்ற அந்நிய கைக்கூலிகள் நம்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வாரியங்களின் செயல்பாடுகள் அந்நிய உடுருவல் நபர்களின் விருப்பத்திற்கு உட்பட்ட மர்மகும்பல் என்பதும் இவர்கள் இந்திய எதிரிகள் என்பதும் இனம் காணும் நாள் வந்துவிட்டது .

 • செல்வக்குமார் - namakkal

  மக்களிடம் விவசாயத்தி்ற்கு மதி்ப்பு இல்லை.இதனால் இளைஞர்கள் மத்தி்யில் பெரும பாதி்ப்பை ஏற்படுத்தி்யுள்ளது..விவசாயம் செய்தால் அவனுக்கு சமுதாயத்தி்ல் மதி்ப்பு இல்லை என உணர்கிறான் :'(, :'(

 • Arivazhagan Nambi - Doha,கத்தார்

  தேர்தல், கூட்டணி, காசு, பணம், பேரம் என அரசியல் கட்சிகளின் கவனம் வேறெதிலோ இருக்க, 'சும்மா பேசி வைப்போமே...' என, 'ஜல்லிக்கட்டை தடை செய்யாதே' என ஈனக் குரலில் முனகுவது.......நாடகமே, தமிழா விழித்தெழு...இன உணர்வு கொள்.

 • KRK - Kumbakonam,இந்தியா

  எவ்வளவு தெளிவா இருட்டு உலகம் நம்மை இரட்டடிப்பு செய்றத இந்த அம்மா வெளிச்சம் போட்டு காட்டிருக்காங்க. இந்த விளையாட்ட நிறுதுரதுல இவ்வளவு முதலாளித்துவம் இருக்கா, அடக்கடவுளே பூலோகம் படத்துல சொல்ற மாதிரி அவனுங்க ஒரு உலகத்தையே எப்படி இருக்கணும்னு தீர்மானிகிறாங்க, இது எவ்வளவு பெரிய சுயநலம். நாமெல்லாம் சேந்து நசுக்கனும் இவனுங்கல. நம்மால முடியும் ஒன்று கூடுவோம் மக்களே

 • muthu Rajendran - chennai,இந்தியா

  ஏற்கனவே டிராக்டர் மற்றும் இதர நவீன சாதனங்கள் வந்தபிறகு தென் மாவட்டங்களில் காளைகளே இல்லை என்ற நிலை தான். கழுத்தில் மாட்டியிருக்கும் மணி சத்தம் சதா காதில் விழ காளைகள் உண்பதோ உழைப்பதோ நடந்து கொண்டிருக்கும். . கிணற்று தண்ணீரை இறைக்க கமலை ஒலிக்க விவசாயி சர்ரென்று கிழே வரும் அழகு எல்லாம் மோட்டார் வந்ததும் போய்விட்டது. காளை இல்லாமல் பசு கருத்தரிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டபிறகு காளை பிறந்தால் கசாப்புக்கு என்றாகிவிட்டது. ஒருபக்கம் ஒரு விளையாட்டின்போது காளைகள் துன்புறுத்த படகூடாது என்ற ஒரு அம்சத்தின் அடிப்படையிலேயே அதை சரியான முறையில் கண்காணித்து நடத்தப்பட எத்தனிக்காமல் அந்த விளையாட்டையே தடை செய்யும் அளவிற்கு செயல்பட்ட பிராணிகள் நல வாரியம் தினம்தோறும் ஆயிரக்கணக்கில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் கோழிகள்,ஆடுகள் , மாடுகள் எப்படியெல்லாம் வதைபடுகின்றன என்பதைப்பற்றி கவலைப்படுகிறதா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசுகள் சரியான முறையில் உச்ச நீதிமன்றத்தில் தகுந்த வாதங்களை வைக்க தவறி விட்டன என்றே கருத வேண்டியுள்ளது.வன்முறை என்பதற்கும் இருவர் முறைப்படி மல்யுத்தம் , வார்போர் , கராத்தே செய்வதற்கும் உள்ள வித்தியாசம் போலத்தான் வதைப்பதற்கும் மஞ்சு விரட்டுக்கும் என்பது அவர்களுக்கு புரியவில்லையா ?

 • Thanjaithamilar - QATAR,இந்தியா

  மிக அருமையான கருத்துக்கள். எங்களை போன்ற விவசாய பெருங்குடி மக்களுக்கு குரல் கொடுக்க அரசியல் தலைவர்கள் குறைந்து போன இந்திய விவசாய பெருநாட்டில், எங்களுக்காக குரல் கொடுக்க உங்களை போன்ற சில நல் உள்ளங்கள் இருப்பதாலேயே இன்றும் சில விவசாயிகள் உயிரோடு இருக்கின்றனர். இனி வரும் தலைமுறை இளைஞர்கள், விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசுகளுக்கே வாக்களிப்போம் என்று சூளுரைக்க வேண்டும். இல்லையேல் சோற்றுக்கும் அந்நிய தேசத்தை பார்த்து பிச்சை எடுக்க வேண்டும். இளைய தலைமுறை இன்டர்நெட்டில் முகநூளிலும், இண்டர்நெட்டிலும் குடி இருப்பதை விட்டு விட்டு, விவசாயத்தை கையில் எடுத்தால் மட்டுமே விவசாயம் தழைக்கும்.

 • k.sivaraman - chennai,இந்தியா

  அருமையான பதிப்பு, என் நெஞ்சம் நினைத்த கருத்துக்கள் கோவை ஜீவாவால் பதியப்பட்டுள்ளது.

 • spr - chennai,இந்தியா

  இது ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் முந்தைய ஆட்சியின் முட்டாள்தனத்தால் உண்டாக்கப்பட்ட சட்டம் மூலம், நீதித்துறை மோடியினை அந்த சட்ட மூலமாகவே பழிவாங்குவதற்கு செய்யும் முயற்சி. அதற்கு துணை போகும் சந்தர்ப்பவாத, மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டம் இதனை ஒரு பிரச்சினையாகக்கூட அரசு உட்பட எவரும் இதுவரை நினைக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற வழியறியாத எதிர்கட்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு இதனை ஒரு பிரச்சினையாக ஆக்கி, மத்திய அரசும் மாநில அரசும் ஒருவருக்கொருவர் உருட்டி விளையாடும் பந்தாகப் போயிற்று ஊடகங்களுக்கு இதனை ஒட்டி நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் இவர் போன்றவரின் பேச்சுக்களை வைத்து பணம் பண்ன ஒரு வாய்ப்பு. இது உண்மையில்லை என்றால் எந்த கட்சி சார்ந்த ஊடகங்களாவது இந்தப் பொங்கலை "கறுப்புப் பொங்கலாக" அறிவித்துத் தங்கள் கொண்டாட்டங்களை விலக்கிக் கொண்டனவா? இல்லை யாராவது அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்காமல், பங்கேற்காமல் இருந்தனரா? காலத்திற்கேற்ப தங்கள் விவசாய உத்திகளை மாற்றி ஆதாயம் காண பயிர்பாதுகாப்பு செய்ய உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பாதுகாத்து விற்க அவர்கள் அறிந்தார்களா? இல்லை இவரனையார் அவர்களுக்கு கற்பித்தார்களா? அண்மையில் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தூக்கியெறியப்பட்ட காய்கள், பழங்கள், பூக்களைப் பார்த்தால் வயிறு எரிகிறது விளைந்த இடத்து விலை அதிகம் விற்குமிடத்தும் சற்றே விலையைக் குறைத்து விற்றால் நஷ்டம் குறைய வாய்ப்பு என்று இருந்தும், தங்களுக்குள் ஒற்றுமையின்றி தாங்களே விற்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், இடைத்தரகர்களை நம்பி அடிமாட்டு விலைக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் விற்க அனுப்பிவிட்டு அவை விற்காவிட்டால், வீணே வேண்டாமென்று அழித்துச் செல்லும் மக்களை என்ன சொல்ல? இந்த நாட்டின் விவசாயி இயற்கை மாற்றத்தினால் துன்பம் அடைவது உண்மை ஆனால் அதனையும் ஒரு சிலர் வென்று பலன் பெற்றிருக்கிறார்கள் "விவசாயத்துல கை நிறையக் காசு வந்தா, நாங்க ஏண்டா கழனிய விட்டு வெளியேறி, .................' என்பது விவசாயிகளின் குரலல்ல காசு வரும் வழிக்கு முயற்சி எடுக்காத, இது போல எழுத மட்டுமே தெரிந்த ஒரு சிலரின் வாசாலகப் பேச்சு இது போல உசுப்பேத்திவிடாமல், விவசாய பலன் பெற என்ன வழிகள் இருக்கிறது? என்ன செய்யலாம் என்று ஆக்கபூர்வமாக எழுதும் நாள் என்னாளோ விவசாயிகளுக்கு மக்கள் தொலைகாட்சி, பொதிகை இந்த வகையில் சிறப்பான செயலாற்றி வருகிறது

 • Raj Pu - mumbai,இந்தியா

  கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், நமக்கு கோவில்கள் போதும், அயயப்பன் சாமியும் சாய்பாபா கோவிலும் விநாயகர் சதூர்தியும் ராமர் கோவிலும் உள்ளவரை நமக்கு கவலை வேண்டாம்,

 • k balakumaran - London,யுனைடெட் கிங்டம்

  கலப்பின பசு ஆகட்டும்,ஜெர்சி இனப் பசு ஆகட்டும் இந்தியாவின் தட்ப வெப்ப நிலைக்கு அவை வாழ முடியாதவை. எவ்வளவு காலம் தான் காற்றாடி பொருத்தி குளிர்மைப் படுத்தி அவற்றை பாதுகாக்க முடியும்??அவை கடும் வெய்யிலுக்கு மூச்சு திணறுவது தெரிகிறது. இது கூட ஒரு மிருக வதை தான்.திடீர் என்று தொற்று நோய் வந்தால் அது காற்றில் பரவி முழு மாடுகளையும் அழித்து விடும். அப்புறம் பாலை கூட இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும். பிரேசில் எதற்காக இந்திய இனம்களை மட்டும் இறைச்சி, பால் என்று ரெண்டுக்கும் சேர்த்து வளர்க்கிறது?? அந்த சூழலுக்கு உகந்தது நாட்டு மாடுகள் தான். வெளி நாட்டு மாடுகளுக்கு வாங்கும் தீனியில் இருந்து பிரித்தானியாவில் உள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் பரவி அவை ஆயிரக் கணக்கில் கொன்று எரிக்கப்பட்டன அண்மையில். அந்த மாட்டுக்கறியை உண்டவருக்கும் கோமாரி நோய் வந்து இறந்தனர்.ஆகவே நாட்டு மாடுகளின் தரத்துக்கு சீமைப் பசுக்கள் வர முடியாது.இந்த விடயத்தில் மேற்குலகு சதி தோல்வியை தான் தழுவும். ரெண்டாம் சந்ததி மாடுகள் இன விருத்தி செய்ய முடியாதது. அப்படி என்றால் எப்படி மாடுகளை வளர்க்க முடியும்?? இந்த இன கன்றுகள் கூட சோம்பேறி போல வீரியம் அற்றவை ஆக உள்ளன. இவற்றின் இறைச்சி சாப்பிடுபவரும் விரைவில் நோயாளி ஆவது உறுதி.நாட்டு மாட்டுப் பால் A2 ரகம். மிக சக்தி வாய்ந்தது என்று ஆய்வு சொல்கிறது.இந்த மாட்டுப் பால் A1 ரகம்.மனித உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதுடன் மனித மரபணுவில் பிறழ்ச்சி ஏற்படுத்துவதால் ஆண் பெண் ஆவதும் ஓரின சேர்க்கை போன்ற பிறழ்வுகள் நிகழ்வதும், இதய நோய், நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் குறைவது என்று பல துன்பம்களை மனிதன் சுமக்கிறான் அவன் அறியாமையினால், பணத்தாசையால். நமது சொந்த வாழ்வில் கூட நாம் உண்ணும் உணவே நமக்கு எமன் ஆகிக் கொண்டு வருவதை அவதானிக்கலாம். ஆகவே எது நடந்தாலும் இப்படியான அநீதிகளை தமிழர்கள் ஒட்டு மொத்தம் ஆக இணைந்து எதிர்க்கணும்.முந்தைய காங்கிரஸ் பிரதமர்,அதில் பதவி வகித்தவர்கள் முழு மூச்சுடன் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதில் இருந்து பெரிய வெளி நாட்டு சக்திகள், இந்தியாவை தமது பொம்மை தலைவர்கள் மூலம் பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்த முனைவது வெளிப்படை ஆக தெரிகிறது. இறை நம்பிக்கை அற்றவர்கள், பணத்தால், படை பலத்தால் உலகை அடிமை கொள்ளலாம் என்று நினைப்பவர்கள், உலகை வென்ற மகா அலெக்ஷாண்டர் நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் தனத்கு இரு கரம்களையும் சவப்பெட்டியில் இரு துவாரம் வைத்து அதன் ஊடாக வெளி தெரிய வைக்கும் படி வேண்டுகோள் விடுத்தான் அதிகாரிகளிடம். ஏன்?? உலகை வென்றவன் இன்று வெறும் கையுடன் அவன் உடல் செல்கிறது என்பதை உலகுக்கு காட்ட.இன்று அவன் பிறந்த மண் எப்படி உள்ளது என்பதை நாம் நினைவு கூர வேண்டும்.அது அது அந்த அந்த தட்ப வெப்பத்துக்கு மட்டும் ஏற்றது என்பது உலக நியதி. இறைவன் படைப்பு. அதை நாம் மாற்ற நினைத்தாலும் முடியாது.எவ்வாறு ஒரு எல் நினோ வை தடுக்க எந்த உலக அரசாலும் முடியாதோ அது போல.இறை நம்பிக்கை என்பது என்றைக்கும் ஒருவனை கட்டாயப்படுத்தி தழுவ வைக்க, கை விட வைக்க முடியாத ஒன்று. இதை பிரித்தானிய ஆட்ச்சியாளர் அன்றே உணர்ந்து இருந்தனர். ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் போகக் கூடாது என்பது அந்த நம்பிக்கை. அதை நீதி மன்று மூலம் மாற்றவோ, வேறு வெளி சக்திகள் துணையில் அதில் தலையிடுவதோ கண்டிக்க தக்கது. மொபைல் போன் செய்கிறாய் அதை எங்கும் விற்கலாம்.ஆனால், இயற்கையுடன் ஒன்றிய விவசாயத்தை, அதில் சார்ந்து உள்ள உயிரிகளை அழித்து அடிமை கொள்ள நினைப்பது போல மடமை வேறு எதுவும் இருக்காது. நான் நீ ஆக முடியாது. நீ நான் ஆக முடியாது.புரிந்து கொள் ஒரு உலக ஒழுங்கு பற்றி பிதற்றும் மூடனே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement