Advertisement

ஜல்லிக்கட்டுக்கு தடை; சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மக்கள் ஏமாற்றம்

புதுடில்லி: தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, சேலம், நெல்லை பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர் .

பல்வேறு தரப்பினர் கோரிக்கையை கருத்தில் கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கடந்த வாரத்தில் அனுமதி அளித்தது. இது ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விலங்குகள் நல (பீட்டா ) அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர் .
நீதிபதி பானுமதி விசாரிக்க மறுப்பு : இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக பானுமதி தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது. ஆனால் பானுமதி, மீண்டும் இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை, விசாரித்தால் உள்நோக்கம் கற்பிக்க வாய்ப்பு ஏற்படும்; எனவே வேறு அமர்வுக்கு மாற்றுமாறு கேட்டு கொண்டார். இதற்கிணங்க இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோரை கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது .
வழக்கில் மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தி , தமிழக அரசு தரப்பில் ராஜேஸ்வரராவ் சேகர் நாப்டே, விலங்குகள் நல அமைப்பு தரப்பில் அரிமா சுந்தரம், வேணுகோபால் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் . காளை வதை தொடர்பாக புதிய அறிவிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். புதிய அறிவிக்கையில் ஸ்பெயினில் நடப்பது போல் வதை செய்யும் சண்டை அல்ல, கோர்ட் கருதினால் நிபந்தனைகள் விதிக்கட்டும் ஏற்று கொள்கிறோம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது .
தடை விதித்த அறிவிக்கையை மீற முடியாது. காளைகள் வதை செய்யப்படுவதை ஏற்க முடியாது என்றும் பீட்டா அமைப்பினர் தரப்பில் வாதிட்டனர் . இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர் . ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை ஆணைக்கும் இடைக்கால தடை விதித்தனர்.


சோகத்தில் மக்கள் : தடையால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுர பகுதி மக்கள் ஜல்லிக்கட்டுக்கான காளைகள் கொண்டு வந்து கொண்டிருந்தனர், பல வீரர்கள் பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் கோர்ட் உத்தரவால் இப்பகுதி மக்கள் சோகத்துடன் உள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கவிருந்த இடம் களை இழந்தது.

தலைவர்கள் கடும் எதிர்ப்பு:

தடையை ஏற்கமுடியாது : ஹெச்.ராஜா

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். மத்திய அரசு இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொங்கலுக்குள், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு விளையாட்டை இந்தாண்டு பொங்கலுக்கே நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பாமகவை சேர்ந்த அன்புமணி இது குறித்து ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் , மத்திய மாநில அரசுகள் இணைந்து நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (205)

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  விளையாட்டில் "வீரம்" என்ற வார்த்தையை தமிழேடுகள் பயன் படுத்துவது தவறானது."BOXER ",WRESTLER ","FOOT BALL PLAYER ",CHESS PLAYER " இவற்றிற்கு முறையான தமிழாக்கம் குத்துச்சண்டைகாரர்,மல்யுத்தம் புரிபவர் ,கால் பந்தாட்டக்காரர்,சதுரங்க ஆட்டக்காரர் ..ஜல்லிக்கட்டு வீரர் என்கிறார்கள்.நடிகர் சத்தியராஜ் பாணியில் சொன்னால் 6-அறிவு மனிதன் ,தனக்கு கீழ் உள்ள ஜீவராசிகளுடன் போட்டி போடுவதற்கு பெயர் வீரமா?இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோதும்,இலங்கை தமிழ் பெண்களின் மானம் சூறையாடப் பட்டபோதும் ,பிரபாகரன் சுற்றி வளைக்கப் பட்டு கொலை செய்யப் பட்டபோதும்,13-வயது பாலகன் பாலச்சந்திரன் சாகடிக்கப் பட்ட போதும் இந்த தமிழர்களின் வீரம் எங்கே போனது?குறைந்த பட்சம் 40-எம்பிகள் ராஜினாமா கூட செய்ய வில்லையேஇன்று வோட்டுக்காக அத்தனை கட்சிகளும் ஒருமித்த குரலில் ஜல்லிக்கட்டுக்காக வீராவேசம் பேசுகிறார்களே இதற்கு பெயர் வீரமா-சுய நலமா?

 • Tamilselvan - coimbatore,இந்தியா

  ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும்.

 • yaaro - chennai,இந்தியா

  சில குழுக்கள் சட்டத்தை எப்படியெல்லாம் மாற்றி அமைக்க முடிகிறது ...கொள்ளீஜியம் முறையை முதலில் ஒழிக்க வேண்டும் ...தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நீதிபதிகளை நியமிக்கும் உரிமை பெற்றவர்கள் தான் உலகம் முழுக்க , வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் ..எல்லாவற்றிலும் ...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இங்குள்ள பெரும்பாலான கருத்துக்கள் சல்லிகட்டுக்கு ஆதரவாகவே இருப்பதால், அம்மாவின் ஆணைக்கு இணங்க பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற சல்லிகட்டு , இந்த ஆண்டு நடந்தே தீரும்.... கலங்காதே தமிழ் இனமே.... தமிழண்டா... ..

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  காவேரி பிரச்சினையில், முல்லை பெரியாறு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எவ்வாறு கர்நாடகாவும் கேரளாவும் மதித்து நடப்பதில்லையோ அதைபோல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு விளையாட்டிலும் தமிழர்களாகிய நாம் சுப்ரீம் கார்டின் தீர்ப்பை மதிக்காமல் ஜல்லிகட்டை நடத்தியே தீர வேண்டும். தமிழக அரசு ஒத்துழைப்பு இருக்குமேயானால் திட்டமிட்டபடி நடத்திவிடலாம். இதற்கு மற்ற அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவும் உள்ளது.

 • Vedanayagam Kalyanakumar - Chennai,இந்தியா

  மத்திய அரசு ஜல்லிகட்டு நடத்தலாம் என்று அனுமதி வழங்கியது காலம்கடந்து எடுக்கப்பட்டது.உடனே பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றம் செல்வதற்கு காலமும்.நேரமும் இருந்தது . நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டார்கள்.பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கொடுத்து இருந்தால் பீட்டா அமைப்பினர் நீதிமன்றம் சென்று தடை வாங்கியிருக்க முடியாது. தமிழ்நாட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடத்துவதில் வழக்கை விசாரித் நீதிபதி வடநாட்டை சேர்ந்தவர்.நமக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞரும் தமிழர் அல்ல.ஜெயலலிதாவும் பொருப்பற்ற முறையில் வடநாட்டை சேர்ந்த வழக்கறிஞரை நமக்காக நியமித்து இருக்கிறார்.பிறகு எப்படி நமக்கு ஆதரவான தீர்ப்பு வரும்??? ஜல்லிக்கட்டு நடதுவதர்க்கான தடையும் அ.தி.மு.க அரசின் அலட்சியம் தான் காரணம்.

 • K.Palanivelu - Toronto,கனடா

  தமிழரின் கலாசாரம், வீரவிளையாட்டு என கூறி ஜல்லிவிளையாட்டு நடைபெற மக்களை உசுப்பிவிட்டு குளிர்காயநினைக்கும் தமிழக அரசியல்வாதிகள், மற்றும் தமிழ் ஊடகங்கள் உச்சநீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மதிக்காது அதை விமர்சனம் செய்துவருவதால், அவர்களின் மீது நீதிமன்ற கண்டனத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். அப்படிப்பட்ட அரசியல்வாதிகள்தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டால் உடனே அமைதி திரும்பிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  நார்த் இந்தியன் 4 பேர் சேர்ந்து அடிச்சான் பாரு நெத்தியடி. வட இந்தியருக்குக் காவடி தூக்கும் வாசகர்களை நினைத்து நீக்கு ஒரு பக்கம் பரிதாபம் இன்னொருபக்கம் சிரிப்பாக இருக்கிறது. இதுக்கும் சில தமிழ்த் தலைவர்களை திட்டி எழுதிக் கொள்ளுங்கள். வேற வழி?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  போன வருடம் இதே பி ஜே பி - அதிமுக ஆட்சி தான்.அப்பாவும் ஜல்லிக்கட்டுக்கு தடை தான். அப்போது இல்லாத ஆவேசம் இப்போது அரசுகள், ஊடகங்கள் மற்றும் வாசகர்களிடம் ஏன்? இன்னும் 5 மாதத்தில் தேர்தல் அதனால் தான். வட இந்தியருக்கு தம்ழனைப் பார்த்தால் கேலி கிண்டல் துச்சம் தான் என்று எத்தனை முறை நான் பதிவு செய்தாலும், ஏற்காதவர்கள் இப்போதுஎன்ன விளக்கம் தருகிறீர்கள்?

 • அடிமை - chennai

  முதல்வர் அவர்களே பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள்.. Stamp ஒட்ட மறவாதீர்,..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஜல்லிகட்டு மாடு பிடித்து நசுங்கும் இளசுகள் இனி , நீர் குடம் சுமந்து நெடுந்தூரம் பயணம் செய்திடும் பெண்களுக்கு உதவிடலாம் . வீடு பெருக்கலாம் .மாட்டுக்கு புல் புடுங்கலாம் . முற்றம் சுத்தம் செய்திடலாம் . செங்கல் மண் சுமந்து வீடு இல்லாதோருக்கு வீடு கட்டி கொடுக்கலாம் . நாட்டு மாடு இன பெருக்கம் அடைந்திட வகை செய்திடலாம் . குளம் காத்து நீர் பெருக்கி ஊரில் பசுமை காத்து மாடுகள் செழித்திட வழி வகை செய்திடலாம் . எவ்வளவோ இருக்கு .ஒருநாள் மாடு பிடியா முக்கியம் . படாத இடத்தில பட்டு மனித இனம் அழியாமல் , மனிதனும் மாடுகள் செழிக்கட்டும் . ஓங்கி மாடு பிடிக்க குரல் கொடுப்போர் முதலில் தாங்கள் வீடுகழில் மாடுகளை அவிழ்த்து விட்டு பிடிக்கட்டும் . ஊர் மெச்ச மாடுகளும் மனிதனும் ஏன் நசுங்க வேண்டும் . பல தேச நலம் காக்கும் சோலி இருக்கு இளசுகளுக்கு அதை விட்டுபுட்டு மாடு பின்னான் போவது ஏனுங்கோ . அப்துல் கலாம் , அமெர்த்திய சென் , ஐய்ஸ்டீன் கணித மேதை ராமனுஜன் எல்லாம் மாடு பிடித்து தேசம் வளர்க வில்லை . இப்போது கூக்குரலிடும் ஆரசியல்வாதிகள் மாடு பிடித்தா ஆட்சி கட்டில் அமர்ந்தார்கள் . பாவம் இளசுகளை ஏவி விட்டு குதிரம் சிந்துவதை ரசிக்கும் கூட்டம் . தடை நல்லது . மாடுகளும் வேறு வேலை பார்க்கும் மனிதனும் வேறு வேலை பார்பான் .

 • K.Palanivelu - Toronto,கனடா

  உச்சமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் தமிழக அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வீரவிளையாட்டுக்கு தடையா என தவறாக மக்களின் உணர்ச்சியை கிளப்பி விபரீதமான போக்கை கடைப்பிடிகின்றனர். இது மக்களை கோபமடையசெய்து தவறான செயல்களுக்கு வழிநடத்தும்.

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  மாடுகளை இறைச்சிக்காக கேரளா போன்ற நாடுகள் கொடுர முறையில் கொல்லும் போது எங்கே போனார்கள் இந்த மாதிரி கூட்டம்

 • vel - ambur

  இது எங்களின் தமிழன் பண்பாடு

 • Venkataraman - chennai

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு, தமிழரின் கலாச்சாரம் என்பதை விட இது பொங்கல் கோவில் திருவிழா என்று வாதிட்டால் வெற்றி நிச்சயம் எந்த ஒர் மத விசயங்களில் உச்ச நீதி மன்றம் தலையிடாது என்பது ஊரறிந்த விசயம் உதாரணம் காளை வெளியேரும் வாசலின் வர்ணம் இந்து கோவிலில் உள்ளவை இதே போன்று கோவில் காளைதான் முதலில் வெளியேரும் என்பது உண்மை

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  ஒண்டிக்கு ஒண்டியா காளை மாட்டை அடக்குவதை தான் ஏறு தழுவுதல் என பண்டைய தமிழகத்தின் வீர விளையாட்டாக கொண்டாடினார்கள் இப்போது கூட்டமாக மாட்டை தொரத்துவதும் மாட்டை மிரளவைப்பதுவும் தான் நடைபெறுகிறது. அந்த மிரண்ட அரண்ட மாடு சட்டென்று திரும்பி கூட்டத்தில் ஒருவனை குத்தி கிழிப்பது தான் கொடுமையிலும் கொடுமை. ஒவ்வொரு ஆண்டும் சில பேரின் மரணத்திற்கு காரணமாகும் இந்த ஜல்லிக்கட்டு அவசியமா.

 • கீரன் கோவை - Coimbatore,இந்தியா

  மாட்டை அடித்துக் கொன்று மாட்டுக்கறி சாப்பிடலாம் அது மனிதனை மாட்டின் மீதான உரிமை. அதனால் மாட்டுக்கு ஒரு துன்பமும் கிடையாது...........ஆனால் ஜல்லிக்கட்டு என்று மாட்டை அடக்கி விளையாடினால் மாட்டுக்கு எத்தனை கொடுமை. அருமையான நீதி. அற்புதம்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கனடாவில்கூட கன்றுமாடுகளை ஓடவிட்டு , குதிரையில் ஓடியவண்ணம் கன்றுகளுக்கு கயிறு எறிந்து அவற்றை வீழ்த்தி கால்களை கட்டி வெற்றியை நிலைநாட்டுகிறார்களே.இதை பார்ப்பவர்கள் ஏராளம்.

 • செந்தில்வேல் - நாகப்பட்டினம்

  சட்டத்தை மீறுவோம்.தடையை உடைத்தெறிந்தால் தான் நீதிமன்றம் ஜல்லிகட்டின் உணர்வை புரிந்து கொள்ளும்.

 • Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ

  இந்த நாட்டில் இந்திய குடிமகனுக்கு உரிமை பறிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் இடை கால தடை கோர்ட். இது இந்திய குடிமகனுக்கு எதிரான தீர்ப்பு.

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  இந்த அரிமா சுந்தரம் , வேணுகோபால் நமது பாரம்பரியம் , தமிழர்கள் கலாச்சாரம் புரிந்து கொள்ளாத ஆள்கள் இவர்கள் கதைகளை மத்திய அரசு விலக்கி விட்டு அவசர சட்டம் இயற்ற பட வேண்டும் 2016 ஆம் ஆண்டு ஜல்லிகெட்டு விமர்சியாக கொண்டாட வேண்டும்

 • R.ARIVAZHAGAN - CERGY,பிரான்ஸ்

  ஜல்லிக் கட்டு விளையாட்டு வாய் உள்ள ஜீவர்களை அடக்கத் தெரியாமல் வாயில்லாத ஜீவனை அடக்குவதில் என்ன லாபம். தமிழர்களின் வீர விளையாட்டுகள் என்று காளை மாட்டை அடக்குவதும் ,அதை துன்புறுத்துவதும் பாவத்தின் சம்பளமாகும். அதனால் பல உயிர்கள் துன்ப்படுகின்றது ,உயிர்களை துன்பப் படுத்துவது வீர விளையாட்டா ? சிந்தித்துப் பாருங்கள் . ஜல்லிக் கட்டை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றார்கள் . ஒரு காலத்தில் மனிதனுக்கு அறிவு விளக்கம் இல்லாத போது,வீர விளையாட்டுகள் என்று உயிர்களை வதைப்பது பாவம் என்று தெரியாமல் செயல்பட்டதாகும். இப்போது மனிதனின் அறிவு அண்டங்கள் அண்டங்களை கடந்தும் செல்கின்றது .இக்காலக் கட்டத்தில் மனிதன் அறிவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஆட்டையும் மாட்டையும் அடக்குவதனால் எந்த பயனும் இல்லை. மனதை அடக்கத் தெரியாதவன் மாட்டை அடக்கி என்ன பயன் ? பாவச்செயலை செய்யாதீர்கள் ... காட்டிலே வாழும் சிங்கத்தை கொண்டு வந்து ஓட விட்டு அடக்குங்கள் பார்க்கலாம் /...சிங்கத்திடம் உங்களின் வீர தீர விளையாட்டுகளை காட்டுங்கள் அதுதான் வீர தீர விளையாட்டுகள் . மனிதனை மனிதன் அடக்குங்கள் அதில் உங்கள் வீர தீர விளையாட்டுகளைக் காட்டுங்கள். வாய் இல்லாத அப்பாவி உயிர்களைத் துன்புறுத்துவதும் துன்பப்டுத்துவதும் .அவற்றைக் கொன்று அதன் புலால் உண்பதும் .பாவங்களிலே கொடிய பாவங்களாகும். அந்தப் பாவங்களை எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உங்கள் ஆன்மாவில் இருந்து நீக்க முடியாது.துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் .. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .ஓர் அறிவு உள்ள பயிரைக் கண்டு வாடியவர் ,ஐந்து அறிவு உள்ள மிருகங்களை வதைப்பதால் எப்படி வாடுவார்,வருத்தப் பட்டு இருப்பார் என்பதை சிந்திக்க வேண்டும். மாபெரும் அருளாளர் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்ற வள்ளலார் வாழ்ந்த இந்த தமிழ் நாட்டில் .மிருகங்களை துன்புறுத்துவது மன்னிக்க முடியாத குற்றங்களாகும். படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவரும் இந்த வீர விளையாட்டுகளை விரும்புகிறார்கள் .அதுதான் என்னவென்றே தெரியவில்லை ..உயிர்களை துன்புறுத்துவது வீர விளையாட்டா ? நல்லதை சிந்தியுங்கள் நல்லதை நினைத்து செயல்படுங்கள் ... மண்ணு உலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின் அருள் வல்த்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை காண் எந்தாய் ...''திருஅருட்பா '' எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக உங்கள் வாழ்க்கை வளம் பெருகும் ...

 • christ - chennai,இந்தியா

  வாயில்லா ஜீவன்களிடம் காட்டுவதுதான் வீர விளையட்டா ?

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  விலங்குகள் நல (பீட்டா ) அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். It rightly in right time filed the petition and Apex Court's order is justified.

 • SINGA RAJA - MADURAI,இந்தியா

  அநீதி. தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு. தமிழர்களின் உணர்வுகளை, தமிழர் வாழ்வின் பாரம்பரியமான விளையாட்டை, முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், உச்ச நீதிமன்றம் இதுபோன்று தடை விதித்திருக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு விளையாட்டில், விதிமுறைகளை மீறி, தவறுகளோ, குறைபாடுகளோ நேர்ந்திருப்பின், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, கட்டுப்பாடுகளை விதித்து, விளையாட்டை அனுமதிப்பதில் நீதித்துறைக்கு என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது? மாடுகள் விவசாயிகளின் தோழன் அல்லவா? அதற்கு துன்பம் நேர்வதற்கு விவசாயியே விரும்புவானா? விவசாயத்தை அப்புறப்படுத்தும் நோக்கில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாத கடந்த கால காங்கிரஸ் அரசின் பிற்போக்குத் தனமான செயல்களினாலேயே, ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டு, இதுபோன்ற தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின், இதுபோன்ற தமிழர் விரோதப் போக்கிற்கு ஒரு அளவில்லைஎன்றால், இங்கே, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழினமே கொந்தளிக்கும். காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும். மேலும், இதில் மறைமுகமாக விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எதிராக ஏதோ ஒரு சதி அடங்கி இருப்பதாகவே தமிழக மக்கள் கருத வேண்டியிருக்கிறது. நீதிமன்றங்கள், நீதியரசர்கள் ஒரு மாநில மக்களின் உணர்வுகளை, அவர்களின் பாரம்பரியமான விசயங்களை முழுவதுமாக சரிவர புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, மீண்டும் உச்சநீதிமன்றம் அமர்வு, இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்து தடைகளை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும். காலம் காலமாக, கொண்டாடிக்கொண்டிருந்த தமிழர்வாழ்வில், மீண்டும் மகிழ்ச்சியை உருவாக்கி, இந்தத் தைத்திருநாளில், பொங்கல் பண்டிகையை, தமிழர்கள் உவப்புடன் கொண்டாட வழி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதிலுமுள்ள,தமிழக விவசாயிகளின் உத்வேகமான இந்த பொங்கல் திருநாளை அனைவரும் உவப்புடன் கொண்டாடி மகிழ்வதும், வேதனையுடன் கழிப்பதும், இனி மத்திய மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது. இதற்கு மேலும் தமிழர்களின் பொறுமையை, எல்லோரும் சேர்ந்து சோதித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இது பசு வதையே அல்ல , ஏன் என்றால் இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் வீரர்களே, இது மனித வதைதான் . உயிர் பலி ஆவது மனிதன் தான் , மாடு அல்ல அதனால் அதை காரணமாக காட்டி தடை போட்டால் எப்படி தவறு என்று சொல்ல முடியும் . ஓட்டுக்காக இங்கே அரசியல் வாதிகள் ஜல்லிகட்டை ஆதரிக்கிறார்கள் , ஏற்கனவே பல உயிர் போனாதுக்கு இவர்களின் பதில் என்ன ? இதை மீடியாக்கள் குறிப்பாக (டிவி சேனல் ) பெரிய பில்ட் அப் கொடுத்து உசுபேத்தி விடுகிறார்கள்

 • இளங்கோ - chennai,இந்தியா

  இதற்கு எதிரானவர்கள் ஒருவரும் இதை பார்த்திருக்க மாட்டார்கள். கோர்ட் முதலில் அந்த கேள்வியை வைக்க வேண்டும். நீதி மன்றமே ஒரு குழு அமைத்து பார்வையிட செய்ய வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும். இதில் காளைகளுக்கு எந்த பாதிப்புமில்லை.மனிதர்களுக்கு தான் காயம் படவும் உயிருக்கு கூட ஆபத்து உள்ளது. எத்தனை பேர் காளையை துரத்தினாலும் ஒன்றிரண்டு பேருக்கு மேல் நெருங்க முடியாது.மேலும் காளையை அடக்குவதற்கு விதிகளும் உள்ளன. விதி விலக்காக நடக்கும் சில தவறுகளை பெரிது படுத்தி நீதிமன்ற உத்திரவு பெற்று விட்டார்கள். தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வதில் தான் சூரர்களே தவிர தமிழகத்தை தாண்டி தமிழக பிரச்னைகளை எடுத்து சொல்வது மிக குறைவு.தமிழகம் ஒன்று பட்டால் தான் இப்படி பட்ட அநீதிகளை தடுக்க முடியும்.

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  ஜல்லிக்கட்டுல மனுஷன் செத்த வரலாறுதான் இருக்கு....மாடு செத்த வரலாறு இல்லை...அப்புறம் என்ன 'பீப்'க்கு தடை?...

 • Ganesan - Madurai,இந்தியா

  திரு. பஞ்ச் மணி அவர்களே , நேரில் சென்று ஜல்லிகட்டை பாருங்கள். முன்னதாக அரசு மருத்துவர்கள் சென்று சோதனை இட்டு பின் அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே மாடு பங்கேற்க முடியும். மாட்டுக்கு சாராயம் எல்லாம் கொடுக்க முடியாது. மிளகாய் போடி கிடையாது. சினிமா ஜல்லிகட்டை பார்த்து குறை கூறாதீர்கள். நேரில் சென்று பார்த்தால் மட்டுமே உண்மை விளங்கும். உண்மையில் இது வீர விளையாட்டே. நிச்சயம் நடத்தப்பட வேண்டும். வரலாறு இல்லாத ஆரிய வர்கத்தினர் தமிழர் வரலாறை மறைக்க செய்யும் சதி.

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  மாட்டை வெட்டி சாப்பிடலாம், ஆனா ஜல்லிக்கட்டு கூடாதாம்....நாட்டாமை தீர்ப்பை மாத்து....இல்லை நாங்களே மாத்துவோம்.....

 • Ramachandra Prabu - Bangalore,இந்தியா

  நீங்க யார்டா எங்க வீட்ல நாங்க என்ன பண்ணனும்னு சொல்றதுக்கு??? மானங்கெட்ட பசங்கள.. ஒங்க அப்பனுங்கலையே பாத்தா இனமடா எங்க தமிழினம்.. அப்டித்தான் நடத்துவோம் ஒங்களால என்ன கழட்ட முடியுமோ கழட்டிக்கங்க..

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  அன்றே கலைஞர் முதலில் திட்டமிட்டபடி ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்திருந்தால் இன்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மாற்றி எழுதி இருக்கும்.

 • Soul - Chennai,இந்தியா

  எல்லாம் அரசியல் ...

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  1988-1989 (என்றுஇ ஞாபகம்) ல், ராஜீவ் காந்தி பிரதமாரக இருந்தபோது ராமர் கோவில் பிரச்சினை தீவிரமாக இருந்தது. செங்கல் வைத்து பூமி பூஜைக்கு இந்து மத தீவிர ஆதரவாளர்கள் ஒருபுறமும், அதற்கு தடை விதிக்க கோரி முஸ்லீம் ஆதரவாளர்கள் ஒரு புறமுமாக வரிந்து கட்டிக்கொண்டு நின்றார்கள். அப்போது ராஜீவ் செங்கல் பூஜைக்கு அனுமதி அளித்தால் இிந்து ஆதரவாளர்கள் ஆதரவு கிடைக்கும்.கோவில் கட்ட தடை கொடுத்தால் முஸ்லீம் ஆதரவாளர்கள் ஆதரவு கிடைக்கும் என்று எண்ணி பூமி பூஜைக்கு அனுமதியும் கோவில் கட்ட தடையும் ராஜீவ் ஏற்படுத்தினார். பூஜைக்கு அனுமதி கொடுத்ததால் முஸ்லீம் மக்கள் ராஜீவை எதிர்த்தனர். கோவில் கட்ட தடை விதித்ததால் இந்து மக்கள் ராஜீவை எதிர்த்தனர். இது இன்றைய சம்பவத்துக்கும் பொருந்தும் போல இருக்கிறது.

 • vedhaalam - rak,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழர்களின் பெருமையை அழிக்க தொடர்ந்து நடக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று...விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நம் பாரம்பரியத்தை தொடர்ந்து.....இழந்து வருகிறோம்.பெருமை வாய்ந்த தமிழனின் வரலாறு வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதில் வட இந்தியர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.நமக்கு உழைத்து கொடுக்கும் மாடுகளுக்கென்று விழா நடத்தும் நன்றி மறவாத, உலகத்துக்கே பாடம் நடத்திய தமிழனுக்கு பீட்டா வந்து தான் சொல்லி தெரிந்துக்கொள்ளும் நிலையில் தமிழர்கள் இல்லை என புரியவைக்க வேண்டும்....

 • mindum vasantham - madurai,இந்தியா

  வாடி மஞ்சுவிரட்டில் 25 பேர் தான் ரிங்கில் இருக்க வேண்டும் என்று சொல்லி அனுமதிக்கலாம் ........ மஞ்சு விரட்டில் காளைகளை விட மனிதர்களுக்கே ஆபத்து , இதை நான் நேரில் பார்த்து , காளை வளர்ப்போரிடம் பழகி உள்ள வாய் சொல்கிறேன் ... நமது இன காளைகள் காப்பாற்ற இது கண்டிப்பாக தேவை , இந்த வன விலங்கு ஆர்வலர்கள் என்ற்வதே எஸ்டேட் காரர்களை எதிர்த்தோ டிம்பர் மாபியோவை எதிர்த்தோ இருக்கிறதா

 • bairava - madurai,இந்தியா

  யாருடா இந்த தீபக் மிஸ்ரா ஒரு பெங்காலி பயலுக்கு என்னடா தெரியும் தமிழனின் வீரவிளையட்டும் அடையாளம் ஜல்லிக்கட்டு என்று .இவனுக்கு காளை மிருகம்தான் தெரியும் ஆகவே இவன் தீர்ப்பு செல்லாது சுப்ரீம் கோர்ட் தேவையில்லாமல் தமிழர்களின் சாபத்திற்கு ஆளாகி இதன் மரியாதையை குறைதுகொள்ளபோகிறது. பீட்டா வின் கைக்கூலி தான் இந்த மிஸ்ரா டாக் இவன் விரைவில் ......................?

 • N. Balaguru - Karaikudi,இந்தியா

  ஜல்லிக்கட்டு பார்க்க முடியாத சிறுவனின் தவிப்பு........... பொங்கல் முடிந்தது.....சிறுவர்கள் கூட்டம், நாளை ஜல்லிக்கட்டு பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்தனர்...... தமிழன் என்ற சிறுவன், தன் தாயிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அவள், வேண்டாம் என்று சொன்னால் தன்னிடம் கோபம் கொல்வான் என்று நினைத்து, "போயிட்டு வா" என்றாள்...... தமிழன், துள்ளிகுதித்து தயாரானான்....... அதற்குள், தாய் அவள் கணவனிடம் அலைபேசி மூலம் தகவலை தெரிவித்து, நான் சொன்னால் கேட்க மாட்டான் என் மீது கோபம் கொள்வான். எனவே நீங்களே அவனை தடுத்து நிறுத்துங்கள் என்றாள்..... தமிழன், வாடி வாசலை நோக்கி செல்வதற்காக, தன் வீட்டு வாசலுக்கு வந்தான்.... தந்தை வாசல் முன்..... தெரியும் நீ எங்கே கிளம்புகிறாய் என்று........உள்ளே போ....என்று அதட்டினார்..... தமிழன், அழுது கொண்டே வீட்டிற்குள் வந்து தன் அம்மாவிடம்....அப்பா எப்பவும் எனக்கு எதிராகவே இருக்கிறார் என்று அழுதான்.... "நான் என்ன செய்வேன் தமிழா" என்றாள் அவன் தாய்..... இந்த நாடகத்தில் நடித்தவர்கள்,,,,,,,,,தாயாக மத்திய அரசும்தந்தையாக உச்ச நீதி மன்றமும்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  அம்மா ஆணைப்படி ஜல்லிக்கட்டு நடக்கும்.... இது உறுதி.....கவலை வேண்டாம்,.....

 • KUNDRATTHU BAALAA - TPK., MARUTHA,இந்தியா

  மக்களின் வாழ்வாதார மதுவிலக்கு பிரச்னையை சிலபலர் அரசியலாக்கி பொழுது போக்கினார்கள்.. இப்போ இந்த பிரச்சனை இந்த ஓரிரு வாரம் அரசியல் வியாதிகளுக்கு பொழுது போக்க உதவும்.. (நம் உண்மையான தமிழ் பண்பாடு கலாச்சாரம் பெரும்பாலானவற்றை முழுக்கு போட்டு விட்டு , இதை இப்போதைக்கு மட்டும் கையில் எடுப்பது நியாயமா ?) தொடர்ந்து போராடி இருக்க வேண்டாமா..

 • mindum vasantham - madurai,இந்தியா

  ஜல்லிக்கட்டு என்பது இன்று அரசியல் விளையாட்டிற்கு தான் பயன் படுகிறது , காங்கிரஸ் மற்றும் அதன் ஆங்கில மீடியா பி ஜே பி காளை மாடுகளை பற்றி கவலை படவில்லை என்று பிரசாரம் செய்கிறது , ஜல்லிக்கட்டில் மாடுகளை கட்டிவைத்து நாம் கொடுமை செய்கிறோம் , சில சமயம் , நாய்களை ஏவி விட்டு கடிக்க விடுகிறோம் என்று கூட பரப்ப படுகிறது , ஜளிகட்டு என்று என்ன வென்றே தெரியமால் பெசிகின்றனர் , இல்லை பி ஜே பி மாடு மீது அக்கறை இல்லை என்பது காங்கிரஸ் சாதகமாக சொல்லப்படும் செய்தி ..... வீண் வதந்திகளை வைத்தே காங்கிரஸ் தேர்தல் ஜெய்க்கிறது , மோடி மீது கலவரம் குற்றம் சட்டிநீரே உங்கள் ஆட்சியில் தானே வழக்கை எதிர் கொண்டார் புதிதாய் முதல்வர் ஆகி மூன்று மதத்திலே கலவரம் நடக்கிறது எல்லாவற்றிற்கும் அவரே பொறுப்பா , மோடி வழக்கை எதிர் கொண்ட மாதிரி நேஷனல் ஹெரல்ட் வழக்கை எதிர் கொள்ளலாமே ... ஆம் அட்மி சுற்று சூழலுக்கு நன்மை செய்துள்ளது ,காங்கிரஸ் வீண் வதந்தியே பரப்புகிறது பீகாரில் அதுவே செய்தது , இம்மாதம் கூட தலித்கள் யாதவால் தாக்க பட்டனர் என்ன செய்தனர் , படேல் பிரெச்சனை தேர்தல் அடுத்து என்ன ஆயிற்று ........ பி ஜே பி , ஆம் அட்மி இருவர் மற்றும் நம் தேசிய அரசியலில் ஓங்கி வளர வேண்டும் காங்கிரஸ் சாக வேண்டும், ஜாதியும் சாக வேண்டும் ........

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  நான் அடிப்பது போலே நடிப்பேன் .. நீ அழுவது போல் நடி...அனுமதி தந்தது போல் தந்து விட்டு கொல்லைப்புறம் வழியாக தடை உத்தரவு வாங்கப்பட்டு உள்ளது. அன்றே அவசர சட்டம் இயற்றி அனுமதி தராதது ஏனோ?

 • senthilkumar - bangalore

  தர்ம சங்கடம்

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  பா ஜ க வின் மற்றுமொரு மாட்டு (மாடு) அரசியல்.

 • senthil - surat,இந்தியா

  குஜராத்தில் கொண்டாடப்படும் பட்டம் விடும் உத்தரன் பண்டிகையால் எத்தனை மனித உயிர்கள் மற்றும் பறவைகள் பலியாகின்ற அதை ஏன் அரசு தடை செய்யவில்லை

 • Raj - Chennai,இந்தியா

  மாட்டின் வாழ்வைவிட மனித வாழ்வு கேவலமானதா? மதுவிலக்கிற்கு எதிராக அரசுடன் சேர்ந்து ஜால்ரா

 • K.Palanivelu - Toronto,கனடா

  ஜல்லிக்கட்டு நடைபெறாவிடில் தமிழகத்தில் ஒரு பிரளயம் ஏற்பட்டுவிடுமா என்ன? அந்த அளவுக்கு ஒரு மாயத்தோற்றத்தை தமிழக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உருவாக்கினது துர்ப்பாக்கியவசமானது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்புகொடுத்து அதை விமர்சனம் செய்யாமலிருப்பதுதான் உகந்தது.மக்கள் சட்டத்தை மதிப்பதற்கு அரசியல்வாதிகள்தான் வழிகாட்ட வேண்டும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பீப் ... பீப் ... பீப் ...

 • Maddy - bangalore,இந்தியா

  தமிழ் மக்களின் வீர விளையாட்டுக்கு அதுவும் அவர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக நடத்தப்படும் வழக்கிற்கு எப்படி ஒரு வட இந்தியன் அதும் கலாச்சாரம் பாரம்பரியம் பற்றி அறியாதவர் தீர்ப்பு கொடுக்க முடியும்... இது இந்திய அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் தெளிவு செய்யவேண்டிய கேள்வி... பொங்கல் பண்டிகையில் மக்களின் பசிக்காக வருடம் முழுவது உழைக்கும் கால்நடைகளுக்கு இளைப்பாற ஒரு விளையாட்டு அதும் தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு அதை எப்படி தடை செய்யமுடியும்... அவர்கள் தடை என்று சொன்னால் மக்கள் அமைதியாக செல்வார்கள் என்று நினைத்தார்களா... peta சங்கம் கோழிக்கறி கடைகளிடமும் மாட்டுக்கறி கடைகளிடமும் எவ்வளவு இனாம் வாங்குகிறார்கள் அதை பற்றி மட்டும் பேசாமல் இருக்க...

 • Annamalai - Chennai

  சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம்

 • karthikeyan - singapore,சிங்கப்பூர்

  தடை ஏற்க முடியாது . பீட்டா வை தடை செய் தமிழக அரசே .

 • Anban valli - Tirunelveli,இந்தியா

  வாதங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் எழுதப்படுகின்றன . ஆயிரம் கோடி ஊழல்களையும் ,கொலைகுற்ற்ங்களையும் வாதத்திறமையால் தடை தாண்டிய மத்திய ,மாநில வெற்று வாய்ச்சவடால் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்த நாமே இதற்கு காரணம்

 • Maddy - bangalore,இந்தியா

  ஆரியர்களை ஏனடா வசைபாடுகிரீர்கள் மடப்பயலுகளா... உங்களாலும் உங்களின் இட ஒதுக்கீடு கொள்கையாலும் வந்தவர்கள் தான் இப்பொழுது நீதிபதிகள்... இதிலே ஆரியர்களுக்கு என்ன சம்பந்தம்... இங்கே இருக்கும் 10 % ஆரியர்களையும் நாட்டை விட்டு துரத்தி விட்டு மீண்டும் கற்காலத்தை நோக்கியா செல்வீர்கள்... முதலில் காளைகளை எதிர்க்கும் PETA INDIA என்ற அமைப்பு ஏன் கோழிகளை கொன்று கடைகளில் விற்க அனுமதி வழங்கியது... உங்களை தூண்டிவிடும் விஷ பூச்சிகளை நம்பாமல் சுயமாக யோசித்து சண்டை போடுங்கள்... இதுவரை ஜல்லிக்கட்டை ஆதரித்தவன் தான் நான், ஆனால் நீங்கள் பாடும் ஆரிய துவேசம் என்னை சிந்திக்க வைக்கிறது... புலி கூண்டிலோ காட்டிலோ தான் இருக்கவேண்டும் அது கடை தெருவில் வந்தால் மனிதர்களாகிய நாம் அதன் வையிற்றுள் என்பது.... தூஊஊ....

 • kmish - trichy,இந்தியா

  நாய் கழுத்துல சங்கிலிய மாட்டி, வீட்டுல வளர்க்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவரையும் காளை மாடா நினைத்து அவர்கள் கழுத்தில் ஏர் கலப்பை பூட்டி விவசாயிகள் விவசாயம் செய்யவும் , யாருக்கும் மதம் , மொழி, கலாச்சாரம் ஆகியவைகளில் குறுக்கிட எந்த உரிமையும் இல்லை, விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற பெயிரில் உலா வரும் அடிமைகளுக்கு புரிய வேண்டும்

 • KNR - Torronto,கனடா

  பாரம்பரியம் பாரம்பரியம் சொல்றீங்களே காட்டு பயல்களே... மனிதனாக மாற பாருங்கள். எந்த ஒரு மிருகத்தையும் தன் சுயநலத்திற்காக, காட்சிப்பொருள் ஆக்கி காசு பார்பதற்காக மாற்றம் செய்யப்பட்டதுதான் இன்றைய ஜல்லிக்கட்டு.. பண்டைய தமிழன் அறிவாளி, அன்பால் பசு காளைகளை பழக்கி வைத்தான். வண்டியில் பூட்டும் போதும், ஏரினில் பூட்டும் போதும் நுகத்தடி எனும் அரிய அமைப்பால் அதன் கழுத்து வலிமைக்கு ஏற்ப காளைகளுக்கும் மாடுகளுக்கும் கொடுமை புரியாமல் பயன்படுத்தினான்.. கழகங்களின் ஆட்சி காலத்தில் இருந்து, கள்ளச்சாராயத்திற்கும் டாஸ்மாக் மதுவிற்கும் மானம் இழந்த தமிழர்கள், அன்றைய வீர விளையாட்டை காசு பார்க்கும் கேளிக்கை ஆக்கி விட்டதற்கான பலன் தான் இன்றைய தடை. பாரம்பரியம் கலாசாரம் என்று கூறுபவர்களே, ஜல்லிக்கட்டை விட பாரம்பரியம் மிக்க மேலாடை இல்லாத பண்டைய உடை கலாசாரம், சதி எனும் உடன் கட்டை ஏறும் கலாசாரம், பலதார மணம் புரிந்த கலாசாரம், பெண்ணை தூக்கி சென்று மணம்புரிந்த வீர தமிழ் கலாசாரம், பால்ய விவாகம், தேவதாசி கலாசாரம் என்றெல்லாம் கேட்பீர்களா... அதுவும் சீமான் எனும் ஒரு தமிழ் அறிவாளி கூறும்போது, கேரளாவின் யானை ஓட்டத்தை தடை செய்யுங்கள், பட்டாசு வெடித்து நாய்களுக்கு துன்பம் தருவதை நிறுத்துங்கள், ஏன் எங்கள் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்கிறீர்கள் என்று சிறுப்பிள்ளைதனமாக கேட்கிறார்... மிஸ் அவன் கூட காபி அடிச்சான் மிஸ்ன்னு ஸ்கூல் பசங்க பேசற மாதிரியே பேசுகிறார் அந்த தமிழ் புலி சீமான். இதுக்குதான் சொல்வாங்க தென்னை மரத்தில தேள் கொட்டினா, பனை மரத்துல நெறி கட்டுமான்னு... அதை போல் இருக்கிறது... இவளோ பேசுற ஜல்லிக்கட்டு மாடுபிடி கூட்டமே, பழைய பாரம்பரிய படியே ஏனடா நீங்கள் கோவணமோ, கீல் பாய்ச்சு காட்டிய வேட்டியோட வராம, வெளிநாட்டுக்கார பாரம்பரிய அரை டவுசரோட பனியனோட வரீங்க... வெட்டி பேச்சு குடிக்கார பயலுகளா... எல்லா ஜீவ ராசியோட வழியை புரிஞ்சு நடந்துக்கோங்க... போதை அடிச்சமா, உளறிக்கொட்டினமான்னு இருக்காதீங்க... அரசு எவ்வழியோ அவ்வழியே குடி ன்னு திருவள்ளுவர் சரியாதான் சொல்லி வெச்சார் 4000 வருஷங்களுக்கு முன்னாடியே...

 • sundar - Chennai,இந்தியா

  Why these people not taking care of street dogs. Just for ego they are doing it. I want to ask them whether they are really taking care of animals

 • nalavirumbi - SGP,சிங்கப்பூர்

  1990 la 11 லட்சம் 74 ஆயிரம் காங்கேயம் மாடுகள் இருந்தன2000 -4 லட்சம் இப்போ ஒரு லட்சம் மாடுகள் கூட இல்லை ..இதில் இருந்தே தெரிய வில்லை .. நமது நாட்டு மாடுகளை அழிக்கவும் .பூச்சி கொல்லி .உரம் ,மரபணு விதை ,விந்து போன்ற மார்க்கெட் ஊக்கு விக்க தான் இந்த PETA மற்றும் "exploitary tem " வேலை . இதனை ஒரு விளையாட்டு என பாக்காமல் எதுக்கு pETA வுக்கு 40 கோடி வரைக்கும் செலவு செய்ய பணம் எப்படி வந்தது ? யாரு பணம் குடுகிறார்கள் ...ஏன் மாட்டு கறி வெளி நாடு ஏற்று மதி செய்ய வேண்டும் .சிந்தியுங்கள் மக்களே ...இது இலை மறை காயாக செய்யும் மறைமுக வேலை ... ஆண் இருந்தால் தான் பெண் .. காளை இருந்தால் தான் நாட்டு பசு ...இயற்கை விவசாயத்தை அடியோடு ஒழிக்க தான் இந்த தடை ... ஏதோ அலங்காநல்லூர் மதுரை நடக்கும் என்று நினைக்க வேண்டாம் ...நாம் அயல் நாட்டு ஜெர்சி மாடுகளை கொண்டு பொங்கல் கொண்டாடும் சூழ்நிலை விரைவில் வரும் ...இப்படியே சென்றால்....முக்கியமான சாராயம் பெருகி வருது .. நோய்கள் பெருகி வருது ... மாடுகள் கொல்ல படுகின்றன ..இதை கண்டு கொல்லாத PETA மற்றும் ஆர்வலர்கள் என்று வெளி நாடுகளின் கூலிகளுக்கு தகுந்த பதில் இயற்கை மூலம் கிடைக்க வேண்டும்..இந்திய பாரம்பரியத்தை அழிக்க துடிக்கும் exploitary சிஸ்டம் ஒழியவும் ...

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  தடையை மீறி நடத்துவோம்... என்னதான் நடக்குதுன்னு பார்த்துடுவோமே......

 • Navaneetha krishnan - Vedasandur,இந்தியா

  நம் பாரம்பரியம் ஒவ்வொன்றாக NGO மூலம் அழிக்கப்பட்டு வருகின்றன, இங்குள்ள ஜல்லிகட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள் தயவுசெய்து என்ன விளக்கம் வேண்டுமோ அதை எங்களிடம் கேளுங்கள், நம் பாரம்பரியத்தை பற்றி நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம், இப்படி வெளிநாட்டு NGO சதியில் சிக்கி நம் பாரம்பரியத்தை கொசைப்படுத்தாதீர் , காளைகள் துன்புறுத்த படுகின்றன என்ற வாதம் உங்களிடம் இருக்கும் எவ்வளவு ஈர மனது உங்களுக்கு , இந்த ஈர மனதை பயன்படுத்தி அந்த NGO எவ்வளவு பெரிய வியாபாரத்தை நம் இந்தியாவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது தெரியுமா, ஜல்லிக்கட்டு தடை கொண்டுவர அந்த வெளிநாட்டு NGO க்கு என்ன வேலை என்று யோசித்தது உண்டா ? இன்ற நாம் குடிக்கும் 99% பாலானது வெளிநாட்டு கலப்பின ஜெஸ்ஸி மாட்டினால் கறக்க பட்டது, இந்த பாலானது நம் நாட்டு மாட்டு பாலின் கால்பங்கு சத்தை கூட பெற்றிருக்காது , இந்த வெளிநாட்டு ஜெஸ்ஸி மாட்டின் பின்புறம் மிகபெரிய வியாபாரம் உள்ளது, இன்றும் நம் இந்த ஜெஸ்ஸி பசுக்களுக்காக வாங்கும் மாட்டு தீவனம் அந்த வெளிநாட்டு கம்பனியில் இருந்து வருகிறது இந்த தீவனத்தை தந்தால்தான் பால் அதிகமாக கரக்கும்படி மரபணு மாற்றம் செய்துள்ளான் , இதன் மொத்த இறக்குமதியின் மதிப்பு பல லட்சம் கோடிகளை தாண்டும், இதோடு முடியவில்லை , நம் நாட்டு மாட்டின் ஒரு நாள் கோமியமும், சாணமும் இரண்டு மூட்டை யூரியா விற்கு சமம், நம் நாடு மாட்டை அழித்தால் தான் அவர்கள் யூரியா, பூச்சிகொல்லி மருந்து விற்பனை அதிகமாகும், இதன் வியாபாரம்/ உபயோகம் மேற்படி மாட்டு தீவனத்தை விட பல மடங்கு அதிகம், சரி இதோடு நின்று விட்டது என்று நினைக்கிறீர்களா இந்த கலப்பின மாட்டின் பாலையும், யூரியா ,பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தி பெறும் காய்கறி, அரிசி சாப்பிடுவதால் நமக்கு வரும் நோய்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை, நோய் எதிர்ப்பு சக்தி பாதியாக குறைந்துள்ளது, இன்று கிராமங்களில் கூட மருந்தகம் உள்ளது, ஒரு சின்ன நோய் என்று மருத்துவமனை போனால் எவ்வளவு பில் வரும் என்று உங்களுக்கே தெரியும், இதன் பின்னால் இருப்பது நாம் மேற்படி பார்த்த யூரியா, மாட்டு தீவனம் விட பல மடங்கு மருந்து வியாபாரம், இங்குள்ள அதனை மருந்துகளும் வெளிநாட்டில் இருந்து தான் வருகிறது, ஜல்லிக்கட்டு மட்டும் அல்ல இதே போல் நம் கலாச்சாரத்தை அவர்கள் அழித்து உள்ளனர், நாம் இன்று பின்பற்றுவது நம் பாரம்பரியத்தின் 1 % மட்டுமே ஆகும், இதையும் NGO சதியில் சிக்கி அழித்து விடாதீர்கள் தமிழர்களே, நாகரீகம் என்ற பெயரில் நீங்கள் நம் பாரம்பரியத்தை தொலைத்து நிற்கிறீர்கள் அப்படி நின்று இருந்தாலும் பரவாயில்லை மீதி இருக்கும் எங்களையும் அழிக்க பார்க்கிறீர்களே என்ன நியாயம் ?

 • சூர்யா - திண்டுக்கல்

  பீட்டாவே பதில் சொல் ? ! 1. ஏதேனும் ஒரு மாட்டை ஒரு நாள் முழுவதும் மேய்த்தது உண்டா ? 2.உங்களால் காளையை (பசுவையும் சேர்த்து ) இந்தியாவில் உண்பதை தடை செய்ய முடியுமா ? 3.ஜல்லிகட்டு தடைக்கு பின் நாட்டு மாடு இனம் அழியவில்லை என நிரூபிக்க இயலுமா ? 4.நாய் கண்காட்சி என்கிற பெயரில் அதன் முடியை வெட்டுவது , நெருப்பு வளையத்தில் தாவ விடுவது தடுக்க முடியுமா ? ஏனெனில் நாயோடு பணக்காரன் விளையாடுகிறன் ! பீட்டா வே பதில் சொல் ! இல்லை ஜெர்மனியில் போய் வீண் வாதம் செய் !

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இதன் மூலம் எல்லா இந்தியர்களும் தங்களது பாரம்பரிய விளையாட்டை விட்டு விட்டு கிரிக்கெட் போன்ற மேற்கத்திய விளையாட்டை தெரிந்துகொள்ளும் படி அறிவுறுத்த படுகிறார்கள். ஜல்லிக்கட்டு தேவை இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி கொடுத்து விட்டு இப்போது தடை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நல்ல பலமுள்ள தமிழக ஜல்லிக்கட்டு இளைஞர்கள் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு மதம் பிடித்த யானையை அடக்கும்படிப் பணிக்க வேண்டும் .... அடக்கினால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக அனுமதி தரலாம் .... எப்பூடி ????

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  ஆடு மாடு இறைச்சிக்காக கொல்லபடும் போது எங்கே போனது அந்த பீடா மற்றும் உச்ச நீதி மன்றம்? வர வர உச்ச நீதி மன்றத்தின் போக்கே சரியில்லை. நீங்களே தூக்கு தண்டனை என்று தீர்ப்பு எழுதுகிறீர்கள். மீண்டும் நீங்களே சில வருடங்கள் கழித்து மறு விசாரணை என்கிற பெயரில் ஜனாதிபதி காலம் தாழ்த்தி முடிவெடுத்தார் என்று ஆயுள் தண்டனை என தீர்ப்பை மாற்றுகிறீர்கள். ஜனாதிபதி இத்தனை நாள்களுக்குள் ஏன் முடிவெடுக்கவில்லை என்று அவரை கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கா? அவர் நிராகரித்த கருணை மனு மீது மறு விசாரணைக்கு ஏன் ஒப்பு கொண்டீர்கள்?

 • SIVASUBRAMANIAN.K.K. - madathukulam,இந்தியா

  மாட்டு பால் ஏன் தடை செய்ய மாட்டீர்கள்

 • சூர்யா - திண்டுக்கல்

  ஒரு போதும் தமிழன் உணர்வை புரிந்து கொண்டது இல்லை . . . அவனுடைய உரிமையை அவனுக்கு கொடுத்ததும் இல்லை !

 • ராஜேஷ் - singapore

  நம்ம கோர்ட் இதை எல்லாம் நல்லா செய்யும் . நம்ம இனத்தை அழிக்காமல் விடமாட்டாங்க, கொலை செய்த நடிகன் விடுதலை. ஊழல் செய்தவர்கள் விடுதலை. மானபங்கம் செய்தவன் விடுதலை. தீவரவாதி விடுதலை இது தான் நம் அரசியல் சாசனம் .

 • Shake-sphere - India,இந்தியா

  பேடிகளின் அராஜகம் இந்த ஜல்லிக்கட்டு. தக்க சமயத்தில் கோர்ட்டின் சரியான தடை. ஒத்தைக்கு ஒத்தை நின்று பார். அப்போது தெரியும். இது வீர விளையாட்டு அல்ல. வெறிபிடித்த கும்பலின் கொடூர அட்டகாசம்.

 • gowthamsubramani6@gmail.com - madurai

  நாங்கள் என்ன மாட்டை அடிமாடாக்கி ,கேராளாவுக்கா அனுப்பினோம்,நாங்கள் ஆட்டை ,மாட்டை வதையா செய்தோம்,நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க மக்கள் தயார், நீங்கள் நிபந்தனையுடன் அனுமதி தர தயாரா????

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  பீப் கறி இயற்கை தந்த உணவா ?? தமிழனுக்கு எதிராக செயல்படுவதில் அனைவரும் உன்னிப்பாக இருக்கின்றனர்

 • Aravan - chennai,இந்தியா

  இவர்களின் நோக்கம் ஜல்லிக்கட்டுக்கு தடை மட்டுமல்ல ஒட்டு மொத்த காளை மாடுகளை அழித்து ஹைப்ரிட் மாடுகளை இறக்குமதி செய்வதுதான் இந்த கார்பரேட்டோட நோக்கம். அனைவரும் வழித்து கொள்ள வேண்டிய நேரம் இது.

 • Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ

  நீதித்துறையிலும், மத்திய அரசாங்கத்தில் இன & மொழி வெறியர்கள் நிரம்பியிருக்கும் வரை இதுபோன்ற தீர்ப்புகளைத் தவிர்க்கவே முடியாது. ஜல்லிக்கட்டு விலங்குகளுக்கு எதிரானது என்றால் இந்தியா முழுவதும் அசைவ உணவுகளை உண்பதற்கும் தடை விதித்துவிடலாமே உச்ச நீதிமன்றம். மத்திய அரசும் 'நான் அடிப்பது போல அடிக்கிறேன். நீ அழுவது போல அழு' என்ற ரீதியிலேயே செயல்படுவது மட்டும் நன்கு விளங்குகிறது. எனக்கென்னவோ, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரண்டு திமுக, அதிமுக & பாஜக ஆகிய கட்சிகளை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புறக்கணித்து மக்கள் சக்தியின் தீவிரத்தை இவர்களுக்குக் காட்டுவது நல்லது.

 • Gowthamprabhu S - Coimbatore,இந்தியா

  வெக்கம் கெட்ட பீட்டா

 • SPB - Chennai,இந்தியா

  இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டை பிரித்தால் மட்டுமே மாடு தழுவுதல் இனி சாத்தியம்.

 • Eswaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Is Jalligattu is worse than eating Beef? Why don't they ban that before banning Jallikattu?

 • HSR - Chennai,இந்தியா

  OMG ... பொக்குன்னு போய்டுச்சே? ச்சே

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  உச்ச நீதி மன்றம் ஜல்லிகட்டை ஏற்கனவே தடை விதித்திருக்கும்போது ,மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்ததது உச்ச நீதி மன்றத்தை அவமதித்த செயலாகும். உச்ச நீதி மன்ற உத்தரவுகள் தொடர்ந்து மீறப்படுவது மன்னிக்க முடியாத குற்றம். இதை தினமலர் வாசகர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். "பாரம்பரிய வீர விளையாட்டு" போன்ற உலுத்துப்போன வாதங்களும் ,ஆரிய -திராவிடம் பற்றிய வீண் பேச்சும் விவேகமாகாது. வீரத்தை மல்யுத்தம் போன்ற உலகம் அங்கீகரித்த விளையாட்டில் காட்டாமல் ,நான் மாட்டிடம் மட்டுமே காட்டுவேன் என்று கூறி ஸ்பெயின் போன்ற ஓரிரு நாடுகளை உதாரணம் காட்டுபவர்கள் அந்த சிறு நாடுகள் தங்க மெடல்களை உலக அளவில் வாங்கும்போது ..நம்மால் உதவாக்கரை விளையாட்டை தவிர வேறு எதிலும் ஈடுபட முடியாது என்பதையும் ஏற்றுகொள்வார்களா?

 • Gowthamprabhu S - Coimbatore,இந்தியா

  வெக்கம் கெட்ட பீட்டா

 • Karthikeyan - Karur,இந்தியா

  ஜல்லிக்கட்டு தடை விதிச்சதால இனிமே எந்த காளையும் துன்புறாது சரி. அப்புறம் கோயில்களில் வேண்டுதல் என்ற பெயரில் ஆட்டை கழுத்து அறுத்து கொல்லுறது, கோழியின் கழுத்தை அறுத்தும், திருகியும் கொல்வது, வயதான மாடுகளை லாரிகள் திணித்து ஏற்றி கேரளாவுக்கு கொண்டு போய் உயிரோடு சித்திரவதை செய்து கொல்வது இதுக்கெல்லாம் தடை வாங்க எவனுக்காவது துணிச்சல் இருக்கா? இருந்தா செஞ்சு பாருங்க... எந்த நீதிமானுக்காவது தில் இருந்தா தடை செஞ்சு காட்டட்டும்... அதுக்கப்புறம் ஜல்லிக்கட்டு காளைய காப்பாத்த வாங்க...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வீட்டுப்பாடத்தை சரியாக செய்யாத மத்திய அரசு..

 • selvakumar - Tirunelveli,இந்தியா

  மாட்டு காவலர்களுக்கு ஒரு கேள்வி... நீங்கள் ஏன்...இந்தியாவில் யாரும் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை கொன்று சாப்பிடக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்டில் வழக்கு போடவேண்டியதுதானே.....?

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  இது தாண்டா அரசியல் ஜல்லிக்கட்டு

 • selvakumar - Tirunelveli,இந்தியா

  கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கிடைக்க விட மாட்டார் போல ........

 • mahadevi - Chennai

  எல்லாம் சர்ரீ தமிழக மக்கள் உணர்வை மதிக்காத உச்சநீதிமன்றத்திறகு தன் நிலையை விளக்க யார்யார் பதவி விலக போகின்றனர், யார்யார் சாகும்வரை உண்ணா விரதம் இருக்க போகின்றனர், தமிழக மக்களின் வீர விளையாட்டை மீட்க அரசியல் வியாதிகள் எதை இழக்க தயாராக உள்ளனர்

 • ilangovandba - Chennai,இந்தியா

  தடை போடும் அரசாங்கத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழைகள் என்பதை நிருபித்து விட்டனர். மனிதர்களை அடக்க நினைக்கும் அதிகார வர்கத்தின் சூழ்ச்சி இது. நம்மால் அடங்கி போக மட்டுமே முடியும் எதிர்க்க முடியாது.

 • Aravan - chennai,இந்தியா

  இவர்களின் நோக்கம் ஜல்லிக்கட்டுக்கு தடை மட்டுமல்ல ஒட்டு மொத்த காளை மாடுகளை அளித்து ஹைப்ரிட் மாடுகளை இறக்குமதி செய்வதுதான் இந்த கார்பரேட்டோட நோக்கம். அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

 • vijay - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  1st beep meat sale ku ban pannuinga, aparam jallikattu ku ban pannalam....

 • Sadasivan Kulaikather - chennai,இந்தியா

  No one respect supreme court judgement

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  அப்ப இனி கோர்ட் உத்தரவிட்டால் கர்நாடகாவில் இருந்து காவேரி தண்ணீரை உடனே கர்நாடக அரசு திறந்து விட்டுவிடும்????.... ஆந்திரா அரசு தண்ணீரை உடனே திறந்து விட்டுவிடும்????.... கேரளா அரசு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை உடனே திறந்து விட்டுவிடும்????.... மேலும் இந்த மூன்று அரசும் இனி அவர்களின் ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட மாட்டார்கள்???.... ஏன் என்றால் இவர்கள் எல்லோரும் SUPREME COURT-இன் தீர்ப்பை, மதித்து நடப்பவர்கள் தானே????...

 • usilai suriya - madurai

  பீட்டா நீ மதுரை பக்கம் வந்தன்னு தெருஞ்சது உனக்கு சங்கு தான்

 • வெ.ரமேஷ் - விராலிபட்டி

  இது அரசியல் விளையாட்டு

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  பசு வதை , ஆடு , மாடு ஆகியவற்றை கொத்து கொத்தாக கொன்று அந்த இறைச்சியை சாப்பிடலாம் . தமிழகத்திற்கு ஒரு சட்டம் , கேரளா , கர்நாடக , ஆந்திரா அரசுக்கு ஒரு சட்டமாம். ஆந்த்ராவில் சேவல் சண்டையில் கோடி கோடியாக சூதாட்டம் நடக்கிறது , அதுவும் காலில் கத்தியை கட்டி சேவல் சண்டை போடுவதை பார்க்க கூட்டம் கூடுகிறது . அதற்க்கு இந்த ஜெயராம் ரமேஷ் , அபிஷேக் மானு சிங்வி , இளங்கோவன் என்ன பதில் சொல்ல போகிறார்கள் . இதெல்லாம் மிருக வதை இல்லையா >>>>> தமிழகத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு காங்கிரஸ் கட்சி சதி செய்து இதை தடை செய்து உள்ளது . மிகவும் ஈன தனமான செயல் .வன்மையாக கண்டிக்கிறேன்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சியினரும் ஆதரிக்கும் ஒரே போட்டி ஜல்லி கட்டு தான் , இந்தியன் குமார்

 • keeran - chennai,இந்தியா

  2 ஜி, 3 ஜி, நிலக்கரிக்கொள்ளை ,இப்படி பல கொள்ளைகளை அடித்தபோது எந்த பயலும் ஆம்பளையாக வழக்கு தொடுக்கல, ஆனால் தான் ஆம்பள தான் என நிருபிக்கும் தைரியசாலிகளுக்கு தடை வாங்க பல பேரு கிளம்பி வந்து கெடுத்துட்டாணுக.

 • Madhavan Parthasarathy - Chennai,இந்தியா

  தும்பை விட்டு வாலை பிடிப்பது என்பார்களே அது இதற்கு பொருந்தும். காங்கிரஸ் தி மு க கட்சிகள் கெடுத்ததை பிஜேபி சரி செய்ய நேர்ந்துள்ளது காரசார மக்கள் காங்கிரஸ் திமுக அலுவலகங்கள் முன் போராட்டம் செய்ய வேண்டும். இங்கே நல்லவர் போல் பேசுவதும் ஜெய்ராம் ரமேஷ் எதிர் குரல் கொடுப்பதும் ஓட்டு எதிராக திரும்பும் என்று புரிய வைக்க வேண்டும்.

 • nan - Chennai

  விலங்கு நல வாரியம் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா?...... இவா்களின் செயல் கண்டிக்க தக்கது...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தமிழர்களை அவமானப்படுத்துவதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது , மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து தமிழர்களின் நெஞ்சில் பால் வார்க்க வேண்டும் . இந்தியன் குமார்

 • samy - singapore,சிங்கப்பூர்

  அட பீட்டா நீங்கள் என்ன குருடா? தினந்தோறும் பல மாடுகள் கேரளாவுக்கு லாரி, லாரியா போகுதே அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? கேரளாவில் பல மாடுகள் கொல்லப்படுகிறது அதெல்லாம் குற்றமில்லை, ஜல்லிக்கட்டு வைத்தால் தான் குற்றம். அட கேனப்பயளுகளா...

 • nan - Chennai

  இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்கும்..மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். விலங்கு நல வாரியம் முதலில் ஆடு,மாடு,கோழி, மீன் உண்பதை தடை செய்ய நடவடிக்கை எடுங்கள்...ஜல்லிக்கட்டு பசு வதை அல்ல..ஆடு,மாடு,கோழி,மீன் கொன்று தின்பது தான் விலங்கு வதை ....அதை தடை செய்யுங்கள்..விலங்கு நல வாரியத்தின் உறுப்பினர்கள்...முடியுமா???????

 • Tamilselvan - coimbatore,இந்தியா

  chankaya , chennai ... கொஞ்சமாவது தமிழர்களின் வீர விளையாட்டை பற்றி தெரித்தால் பேசு... இல்லன வாய மூடிட்டு சும்மா இரு..மாடுகள கழுத்தை அறுத்தும் , அடித்தும் கொல்றாங்களே அங்க போய் பேசு.. இணையத்தில் சென்று பார் ,peta அமைப்பு எத்தணை மிருகங்களை கொலை செய்கிறதென்று ... நீ எல்லாம் ஜல்லிகட்ட பாக்க சொல்லி யார் அழுதா..உனக்கெல்லாம் தமிழர்களின் வீரம் ,பாசம், கொடை, விருந்தோம்பல் ,கனிவு பற்றி என்ன தெரியும்.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  தமிழகத்தை ஆள முடியவில்லை . அதற்கு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்து அதன் மூலம் ஜல்லிகட்டை பகடை காயாக வைத்து காங்கிரஸ் விளையாடி விட்டது. அதற்கு இங்குள்ள இளங்கோவன் , ஜெயராம் ரமேஷ் இருவரும் முட்டு கட்டை போடுகின்றனர். இதில் இருந்தே தெரியவில்லையா காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எப்படி பழி தீர்க்கிறது . தமிழகத்தை கெடுத்து அழிவு பாதைக்கு எடுத்து சென்றது காங்கிரஸ் அதற்க்கு உடந்தை மஞ்ச துண்டு . இனிமேல் ஒவ்வொரு தமிழனும் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும் .தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் கட்சிகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது .

 • Arjunan Pandian - Bangalore,இந்தியா

  இது இண்டியா நன்றி .தமிழன் இங்கு குடி மகனே அல்ல .என்று உணர்த்தியமைக்கு நன்றி.தமிழனை அழிப்பதை தவிர வேறு வேலை கிடையாத ஆரிய வர்க்கத்தின் மற்றுமொரு வெற்றி.பிரிட்டிஷ் இண்டியா வில் கூட ஜல்லிக்கட்டு நடந்தது ஆனால் சுதந்திரம் இந்தியாவுக்கு-ஆரியர்க்கு -கிடைத்தது.தமிழனுக்கு கிடைக்காது என்று உணர்த்தியமைக்கு நன்றி.அடிமை தமிழன் மொழியை அழித்தார்.உடையை அழித்தார்.சிவா கோவில் அழித்தார்.இந்து என்று புதுமை பெயர் சூட்டினர்.சைவம்???தமிழன்????மொழி??/கலாச்சாரம் ????இன்னும் நான் தமிழன??இன்டியான??எனக்கு என்ன பெயர்??என் நாடு எது???அம்மாவும் ,ஐயாவும் சொல்வார்கள் கேட்டுக் கொள்வோம்???

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  அன்று சிங்கத்தோடு மாட்டையும் காட்சி பட்டியலில் இணைந்த காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்-க்கும், அதற்கு அன்று துணை போன திமுக-வுக்கும் கோடான கோடி நன்றி.......

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  செல்லப் பிராணிகள் எங்கிற பெயரில் அவைகளின் சுதந்திரத்தை பறித்து ஒரு தனிநபர் தான் விரும்பும் உணவை தான் அது திங்கவைப்பதுவும், வீட்டில் ஒரு கூண்டுக்குள் அடைப்பதுதான் மிருகவதையேதவிர அதன் சுதந்திரத்தை விளையாடி மகிழ்வது ஒரு பெற்றொரோ உறவினர்களோ ஒரு குழந்தையுட விளையாடும் போது அடிப்பதும் கட்டித்தழுவுவதும் இருவருக்குமே மகிழ்சியான் பாச வெளிப்பாடே- தயவு செய்து இதனை இந்துக்கள் சம்பந்தப்பட்டதாக பாவித்து நீதிமன்ற நீதியரசர்களூம் அரசியல் பண்ண நினைப்பது மக்களின் வெறுப்பைமட்டுமே அதிகரிக்கச்செயும். இந்துக்கள் மனதை புண்படுத்த மட்டுமே முடியும்- விளைவு புரட்ச்சியாக கூட வெடிக்கும்- இந்துக் கோவில்களில் கட்டுட்ப்பாட்டில் நீதிமன்றம் தலை யிடத்தேவை இல்லை. மதுவிலக்கினை அமைதியாக வேடிக்கை பார்க்கும் நீதியரசர்களூம் இந்துக்கள் விஷயத்தில் அதிக அக்கறை காண்பிப்பதன் ரகசிய அரசியல் பின்னணி என்ன என்று அராய்ந்தால் உண்மையும் பினணியும் வெளிவரும்

 • RP Iyer - Bengaluru,இந்தியா

  அவர் அரிமா சுந்தரம் இல்லை. ஆர்யமான் சுந்தரம் என்று கருதுகிறேன்

 • கருவை கண்ணன் - Singapore

  மனிதனை கொல்லும் தீவிரவாதிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகாத பீட்டா விலங்குக்கு ஆதரவு தெரிவிக்கிறது.. முட்டள்களின் கூட்டமே பீட்டா,

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  முதுகெலும்பு இல்லாதவர்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்????......

 • Raman Krishnan - Chennai,இந்தியா

  பாரம்பரியத்துக்கு முரணாகத்தான் இபோது வீர விளையாட்டு நடைபெறுகிறது. நடத்துவோரும் இதனை கண்டுகொள்வதில்லை. க்ரூயல்ட்டிதான் அதிகமாக உள்ளது. எனவே supreme கோர்ட் தீர்ப்பு அப்போதும் இப்போதும் சரியே.

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  சுப்ரீம் கோர்ட் தவறான தீர்ப்பை சொல்லி இருக்கு - பிராணிகள் வதம் என்றால் அந்த ஆர்வலர்களுக்கு தெரியுமா எத்தனை வீடுகளில் மாமியார் மருமகளையும் மருமகள் மாமியாரையும் பள்ளியில் வாத்யார் பசங்களையும் அரசியல் வாதிகள் மக்களையும்- விலங்கு ஆர்வலர்கள் விளங்காமல் விலங்கு போல் நடப்பதையும் - புருஷனால் மனைவி படும் வதையையும் மனைவியால் புருஷன் படும் வதையையும் - அதிகாரியால் அடிமட்டம் படும் வதையையும் என்ன என்று சொல்வீர்கள் - வேலை வெட்டி இல்லாமால் இவர்கள் தான் புத்தர் போலவும் இராமலிங்க அடிகளார் போலவும் வேஷம் போடும் ஆர்வலகள் ஒழியவேண்டும் - கலாச்சாரம் காக்கப்படவேண்டும் - மக்களின் உணர்வுகளை மதிக்காத சட்டம் அகற்றப்படவேண்டும் - மக்களுக்காக தான் சட்டம் - சட்டம் நம்மை அடிமை படுத்தக்கூடாது - கர்நாடககாரன் தண்ணி கொடுக்கவில்லை - சுப்ரீம் கோர்ட் என்ன கிழித்தது - வேடிக்கை தானே பார்த்தது - அதுபோல் ஜல்லிக்கட்டு நடத்துங்கள் - என்ன செய்வார்கள் என்று பார்ப்போம் உணர்வுகளை புரியாமல் ஏட்டு சுரைக்காய் போல் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் உணரட்டும் - தீர்ப்பை மாற்றி எழுதட்டும் - ஜெய் ஹிந்த்

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  அந்த காலத்தில் பொழுது போக்கு அம்சங்கள் குறைவாக இருந்தன.அதனால் மனிதன் விலங்குகளை உபயோகித்து சேவல் சண்டை ஜல்லிகட்டு போன்றவற்றை விளையாடினான்.தற்காலத்தில் அவை தேவை இல்லை

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஒரு வேலை தடையை மீறி இந்த விளையாட்டை நடத்தினால் என்ன ஆகும்? மக்களுக்காக சட்டமா இல்லை சட்டத்திற்காக மக்களா? இந்த விளங்கிகள் அமைப்பு மற்றும் நீதி மன்றங்கள் ஏன் பீப் கரி விற்பனை பற்றி எந்த ஒரு கவலையும் கொள்வதில்லை? பசுவை கொன்று கரியாக்கி உண்ணலாம் ஆனால் அதனுடன் ஆசா பாசத்துடன் விளையாட கூடாது அப்படி தானே?

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா இருக்கையில் கவலை எதற்கு ?, அம்மா பார்த்து கொள்வார்.. சட்டபேரவை கூட உள்ளது ...அதில் பொற்கால ஆட்சிதரும் , இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றி 6 கோடி மக்களின் இதய துடிப்பான, உயிர்மூச்சான , வாழ்கையான , ஜல்லிகட்டை நடத்தி காட்டுவார் மாண்புமிகு அம்மா அவர்கள் .. வாழ்க அம்மா , வளர்க ஜல்லிக்கட்டு...

 • krishna kumar - kovai,இந்தியா

  ரூல்ஸ் படி நடத்த ஒத்துகிட்ட பிறகும் என்னதான்ய பிரச்னை உங்களுக்கு?

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  டாட்

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  தலைவர் அமித்ஷாஜி முதல் கடைசி பி.ஜே.பி தொண்டன் வரை , ஜல்லிக்கட்டு நடத்துவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர் , விரைவில் நடக்கும் ... பி.ஜே.பி உங்கள் ஆசையை நிறைவேற்றும்...பி.ஜே.பி மக்களின் கட்சி

 • Pravin - Chennai,இந்தியா

  ஜல்லிக்கட்டு காளைகள் வைத்திருப்போர் 500 க்கும் குறைவானவர்கள்...அதை பார்க்க வருபவர்கள் 1 லட்சத்திற்கும் உள்ளே... இதற்கு இவ்வளவு பெரிய அரசியல் மற்றும் ஈர்ப்பு தேவை தானா ?... 7 கோடி மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் ஏராளம் தாராளம், அதிலும் சிறிது கவனம் செலுத்தலாமே ?... ஜளிகட்டு காளைகளை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... ஜல்லிக்கட்டு அன்று குடிக்காத ஆட்கள் இல்லை, குடிக்காத மாடுகள் இல்லை..கடைசி நேரத்தில் , காளைகள் சினம் கொள்ள அவர்கள் செய்யும் செயல்கள் அநாகரிகமானவை, மனித தன்மையற்றவை..பல என் உறவினர்களின் வீடுகளில் இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்..

 • nalavirumbi - SGP,சிங்கப்பூர்

  இது இயற்கை விவசாயத்திற்கு ... பூச்சி கொல்லி ,உரம் ,விந்து,பால் மார்க்கெட் ஊக்குவிக்க செய்த சதி ....யாரவது முதலில் மாடுகளை கொல்லுவதற்கு கேஸ் போடுங்களே ... ஸ்பெயினில் நடப்பது போல் வதை செய்யும் சண்டை அல்ல, கோர்ட் கருதினால் நிபந்தனைகள் விதிக்கட்டும் ஏற்று கொள்கிறோம் " வாதம் தப்பு தப்பு .... அரசங்காம் ஏன் சரியான பதில் குடுக்க தவறி விட்டது .. மாடுகள் என்ன ஆகும் ... அபோது எத்துனை காளை மாடுகள் இருந்தது இப்போ எத்துனை குறைந்து இருக்கிறது என ஏன் குடுக்கவில்லை ... ஜல்லிகட்டால் ஒனும் பிரயஜோனம் இல்லைனு நினைக்கும் மக்களை ..இது இயற்கை விவசாயத்தை அடியோடு ஒழிக்க திட்டம் .. விந்து ,டைரி மார்க்கெட் ,உரம் ,பூச்சி கொல்லி பெருக்க ,,,காளை மாடுகள் வேறு ஏதும் மாநிலத்தில் பரவலாக இல்லை .. இன்னும் சில வருடத்தில் காளை எல்லாம் வெளிநாட்டு காரன் குடலில் பஸ்பம் ஆகி இருக்கும் ...

 • Chanakya - Chennai,இந்தியா

  இவர்கள் யாரும் காளையின் எதிரில் நின்று ஜெயிப்பதில்லை......அதன் கண்களில் மிளகாய் பொடியை தூவி மிரளவிட்டு 50,60 பேர் மேல் பாய்கிறார்கள். இதற்கு பெயர் வீர விளையாட்டாம்.......அவர்கள் வீரத்தை காண்பிக்க வேண்டும் என்றால் காட்டுக்கு சென்று சிங்கத்தையோ, புலியையோ பிடித்து வர வேண்டியது தானே........அப்பாவி மாடு தான் கிடைத்ததா இவர்களுக்கு

 • Lt Col M Sundaram ( Retd ) - Thoothukudi,இந்தியா

  Without waiting for the final outcome, all the political parties takes credit for the release of the GOI gazette notification. The Central govt proposes the sanction to conduct the Jallikattau but the Supreme court disposed the proposal .

 • vinod - chennai,இந்தியா

  தெனமும் லாரி லாரியா மாடு போயிகிட்டே இருக்கே? அதுக்கு பீட்டா அமைப்பினர் என்ன சொல்றாங்களாம்.?

 • KMP - SIVAKASI ,இந்தியா

  விலங்கு அமைப்புகள் ஏன் மாட்டுக்கறியை எதிர்க்கவில்லை (அடி மாடுகள், கேரளா)...

 • Sekar - MM Nagar

  அந்தக்காலத்தில் வீரவிளையாட்டாக இருந்தது. ஒவ்வொருவராகத்தான் காளையை அடக்க வருவர். ஆனால் இப்போது ஒரு கும்பலாக ஏதோ மிட்டாய் வாங்க வருவதுபோல் வருகின்றனர். ஒட்டுமொத்தமாக காளைமீது விழுந்து அடக்கப் பார்க்கின்றனர். ஒவ்வொருவராக வந்தால் தெரியும் சேதி. டப்பா டான்சாடிடும். அப்படி ஒரு சட்டத்தைப் போடுங்கள். பாதி மாடுபிடி வீரர்கள் escape ஆகிவிடுவார்கள். கும்பலாக போய் விழுவதால்தான் இத்தனைபேர் வருகின்றனர்.

 • Sakthivel Arumugam - Cuddalore,இந்தியா

  யாருடா இந்த PETA ? இவனுங்களுக்கு வேற வேலையே இல்லியா? சும்மா AC ரூம்ல உட்கார்ந்துகிட்டு பிட்சா சாபிட்டுக்கிட்டு பெடிஷன் போடுறதே வேலையா? மாடு மேல உண்மையான அக்கறை இருந்தா வந்து அது போன்ற சாணிய அள்ளி அந்த இடத்த சுத்த படுத்தற வேலை பாருங்க.

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  தமிழகத்தில் ஏறக்குறைய 2 கோடி பேர் ஜல்லிக்கட்டை தொழிலாக கொண்டுள்ளனர், இதனால் 6 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் பதிக்கப்படும் என அயல்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது ...அதனால் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்..இல்லையெனில் ஆதார் கார்டு , ரேஷன் கார்டை திருப்பி கொடுத்து அரசை நடுங்க வைத்து , பத பதைக்க வைத்து , குடியரசு தலைவரை எங்கள் ஊர் வரை வர வைப்போம்... தேர்தல் அட்டை , ஆதார் அட்டையை திருப்பி கொடுத்து அரசியல் சாசனத்தையே திரனடிப்போம் ...

 • SENTHILKUMAR - VELLORE,இந்தியா

  பொன்னரை ஆகா ஓகோ என்று தூக்கி கொண்டாடியவர்களை நினைக்கும்போது பரிதாபமாக உள்ளது.

 • nalavirumbi - SGP,சிங்கப்பூர்

  Peta விற்கு எதிராக தான் ஆர்பாட்டம் மட்டும் கேஸ் போட வேண்டும் . முதல்ல அவங்கள போய் நெருடினால் தான் இதற்கு தீர்வு ..மக்கள் பெரிய அளவில் ..கையெழுத்து போராட்டம் செய்யணும் ...முதல்ல PETA மீது கேஸ் போட வேண்டும் இவர்களுக்கு பணம் எப்டி வருகிறது ??... திருட்டு பசங்க ....இடைகால தடை யாம் ... ஆர்பாட்டம் பண்றதால ஒன்னும் பிரயோஜனம் இல்லை ... 4 வாரம் எல்லாம் முடிஞ்சு விடும் .." ஸ்பெயினில் நடப்பது போல் வதை செய்யும் சண்டை அல்ல, கோர்ட் கருதினால் நிபந்தனைகள் விதிக்கட்டும் ஏற்று கொள்கிறோம் " வாதம் தப்பு தோன்றுகிறது . என்ன வாதம் இது ? முதல வதை ? மாடை பிடித்தால் தானே வதை எதனால் வதை ?? ... கொல்வது எந்த ஊரில் வதை இல்லை ??

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  நீதி மன்றம் சமீபகாலமாக தமிழக மக்களை சீண்டி பார்க்கிறது... புரட்சி தலைவி அம்மா போன்ற தெய்வங்களையும் தவறான தீர்ப்பினால் கொச்சை படுத்தியது. தமிழக மற்றும் இந்திய மக்கள், அம்மா அமைதி விரும்பி என்ற காரணத்திற்காக பொருத்து கொண்டிருக்கிறார்கள்..அம்மாவை மீறிய நீதிமன்றம் உலகத்தில் எதுமில்லை, அம்மா ஜல்லிகட்டு நடத்த அனுமதி தரவேண்டும்...

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  இதற்கு முதல் காரணமே காங்கிரஸ்தான். அவர்களின் ஊக்கத்தால் இந்த பீட்டா அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார்கள். தமிழ் இனத்தையே அழிக்க உறுதி பூண்டுவிட்ட காங்கிரசை இங்கே உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த தேர்தலோடு அவர்களுக்கு இனி தமிழகத்தில் வேறு வேலையே இருக்க கூடாது என்கிற வகையில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்து வந்தாலும் விடவே கூடாது..அந்த இரண்டு கூட்டு கலவாணிகளையும் ஓட ஓட விரட்டனும்..அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வழியுண்டு என்று தெரிந்தால் உறுதியாக தமிழர்களின் நலனுக்காக செய்திடுவார்..சுப்ரீம் அப்போதும் கூட கண்டனம் தெரிவிக்கும்..பார்ப்போம்..தமிழனா இந்தியா யார் ஜெயிக்க போகிறார்கள் என்று..பசுவதையை அனுமதிக்கும் நீதிமன்றம் பாசத்தோடு வளர்த்த காளை மாடுகள் மீது கரிசனம் காட்டுவது போல திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றது..நீதிமான்கள் அனைவரும் புனிதர்கள் அல்ல என்கிற எங்கேயோ கேட்ட வசனம் ஓங்கி ஒலிக்கின்றதே..

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  ஜல்லிக்கட்டு நடத்த தொடர்ந்து போராடுவோம் என அக்கா தமிழிசை ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். யாருக்கும் கவலை வேண்டாம்... மத்தியில் இருப்பது மக்களின் ஆட்சி, மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொற்கால ஆட்சி, உலகம் போற்றும் உன்னத தலைவரான , இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மோடி ஜி அவர்கள் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தி காட்டுவார்... வாழ்க மோடி ஜி

 • Chinnalagu Tholkapiyan - Madurai,இந்தியா

  இது மரபுக்கு (CUSTOM) எதிரானது தமிழ் கலாசாரம் பற்றிய புரிந்துணர்வு பெரும்பான்மை வட மாநில மக்களுக்கு இல்லை என்ற எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது

 • Appu - Madurai,இந்தியா

  ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு,,,,இப்போது அரசியல் விளையாட்டாக மாறி விட்டதோ

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement