Advertisement

அனைவர் முதுகிலும்'அம்மா ஸ்டிக்கர்'

சென்னை:தப்பித் தவறி, 2016ல்,அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள் முதுகில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு, 94 ஆயிரத்து, 400 கோடி ரூபாயை எட்டி விட்டது.வருடந்தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே வாரியம், தமிழக மின் வாரியம் மட்டும் தான்.

ஆனால், அ.தி.மு.க., பொதுக்குழுவில்,'முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி விட்டார்' என, கூறி, அவருக்கு பாராட்டு தெரிவித்து, தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். பொய்களுக்கு, போலி புகழாரம் என்பது இது தானோ.தப்பித் தவறி, 2016ல்,அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள்
முதுகில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவர்.மேலும், தமிழ்நாடு என்று இப்போதுள்ள பெயரை மாற்றி, 'அம்மா நாடு' என, வைத்து விடுவர்; ஜெயலலிதா ஸ்டிக்கர், 'மேட் இன் அம்மா நாடு' என, உலகப் புகழும் பெற்று விடும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (139)

 • vidhya - mumbai,இந்தியா

  போன 5 வருஷமா நீங்க குஷ்பூ ஸ்டிக்கர் ஒட்டியதை நாங்களும் பார்த்தோம் தான..

 • g.s,rajan - chennai ,இந்தியா

  புகழ் அவர்களே, கருணா செய்யும் அட்டூழியத்திற்கு கருணாவைத் திட்டாமல் என்ன கொஞ்சுவார்களா ???.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  ஏன் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுக உடன்பிறப்புகளின் கைவரிசையாக் கூட இருக்கலாம் .

 • Cheenu Meenu - cheenai,இந்தியா

  2016ல்,அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, முதுகில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவர். நாங்கள் வந்தால் எங்கள் ஸ்டிக்கரை ஓட்டுவோம். மொத்தத்தில் ஆட்சி மாற்றத்தால் தமிழக மக்களுக்கு பலன் ஒன்றும் இருக்க போவதில்லை

 • Sivagiri - chennai,இந்தியா

  படி அரிசி ஒரு ரூபாய்க்குப் போடுவோம்னு சொன்னத நம்பி மோசம் போனது . . . ரேசன் கடையிலே மஞ்சப் பையை வரிசையிலே போட்டு வச்சு ரெண்டு கிலோ அரிசிக்கு வாரக் கணக்கா காத்துக் கிடந்தது இன்னும் மறக்கலியே தாத்தா . . .

 • Sivagiri - chennai,இந்தியா

  எது எப்பிடி இருந்தாலும் இந்த ஆட்சியை ஏன் விடாமப் பிடிச்சிருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க . . . பழைய தீயசக்தியோ அல்லது வேற எந்த புதிய தீயசக்தியோ புகுந்துரக் கூடாதுன்னுதான் . . .

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  தலிவா முதுகுல ஸ்டிக்கர் ஒட்டுனா பரவாயில்ல.. நீங்க முதுகுல குத்திருவீகளே.. ஒங்ககிட்ட கடி வாங்குரதவிட ஸ்டிக்கர் எம்புட்டோ தேவலாம்.. உங்க வயித்தெரிச்சல் நன்னா புரியுது.. அதென்ன தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்தால்.... அதுகதான் வரும்.. ஒம்மோட கம்பேர் செய்யும்போது அதுக கூத்து தேவலாம்னு தோணுது தலிவா..

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  இவனுக குடும்பம் மட்டும்தான் தி மு க வில் பிறந்த நாள் கொண்டாடனும். இதற்காக அல்லக்கைகளை கொள்ளை அடித்த காசுகளை கொடுத்து நம் ஸ்டேட் முழுவதும் போஸ்டர் பிளாக்ஸ் போர்டு அடிக்க கத்து கொடுத்தே இந்த 94 வயது இளைஞன் தான் என்பதை மறுக்க முடியாது

 • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  வெல்ல நிவாரண பொருள்கள் மீது ஸ்டிக்கர் ஓட்டும் வேலையை ஆரம்பித்தது பங்கஜ் குமாரும் ( பீகார் தேர்தலில் பாஜக தோற்க அடிகோலியவர் - சகிப்புத்தன்மை பற்றி பேச தூடிவிட்டவர், அரசு வழங்கிய பட்டமளிப்பட்டதை திருப்பி கொடுக்க சொன்னவர் ), ஸ்டாலினின் மருமகன் சபரீசனும். இந்த விஷயம் வெளியே வந்தவுடன் அப்படியே அமுக்கிவிட்டார்கள். வெள்ள நிவாரணம் முக்கியம் என்பதால் அரசு இவர்கள் செயலை பெரிதுப்படுத்தவில்லை. ஒருவேளை இவர்கள் அச்சடித்த ஸ்டிக்கர்கள் அதிகம் உள்ளதோ என்னவோ, இவர்கள் ஓட்டப்போவதை முன்பே பெரிசு கூற ஆரம்பித்துவிட்டது. அப்படி நடந்தவுடன் தான் பெரிய தீர்கதரிசி போல் ஒரு அறிக்கை விடலாம். கேவலமான மனிதனின் கேவலமான அரசியல். ஏற்கனவே இவர் ஹிந்துக்களின் எதிரி என்பதை ஊடகங்கள் மூலமாக பலரும் பரப்பி வருகிறார்கள். பெரிசோட பயம்தான் இந்த செய்தி.

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  ஏன் உன் ஆட்சியில் மதுரையில் எங்கு பார்த்தாலும் எந்த பக்கம் பார்த்தாலும் ஆட்டோவில் மு.க.அழகிரி,அஞ்சாநெச்சன், அஞ்சுகதாய் என்று ஸ்டிக்கரை ஒடும் அந்த ஆட்டோ எல்லாம் இப்போ எங்கே தாத்தா ? 10 ஆட்டோவுக்கு 8 ஆட்டோ இப்படி தான் மதுரையில் ஓடியது. இதை யாரிடமும் எப்போ எங்கு கேட்டாலும் சொல்லுவர்கள் ? இதற்கு கையால் ஆகாத...யாரை குறை சொல்ல எல்லா கவர்மென்ட் அதிகரிக்களும், நீதிபதிக்கும் தெரியும் ? போதும் உம் கபட நாடகம் .

 • Madhumitha - Wenzhou,சீனா

  பிணத்தை கூட வைத்து அரசியல் செய்தவருக்கு தற்போது கையில் கிடைத்திருப்பது ஸ்டிக்கர்... ஹாஹாஹா. நீங்களும் எவ்வளவு முயன்று பார்க்கிறீர்கள். மக்கள் நம்ப வேண்டுமே...உங்கள் ஆட்சி வருவதற்கு முயன்று பாருங்கள் முயற்சி திருவினையாக்கும்....

 • sankaranarayanan - tirunelveli,இந்தியா

  அதுசரி இத்னைகூட செய்யாமல் நீங்கள் சாப்பிட்டீர்களே - தமிழகம் இருண்டு கிடந்ததே- மறக்கமுடியுமா - செத்தாலும் கிடையாது சூரியனுக்கு ஓட்டு

 • skandh - chennai,இந்தியா

  இந்தாலால் இந்த ஜென்மத்துக்கு ஆட்சிக்கு வர முடியாதுன்னு புரிஞ்சு போச்சு. அதனால் தான் இந்த அளப்பு. ஆட்சி அம்முது அவங்களோட ஸ்டிக்கர் ஓட்டினால் என்ன தப்பு.

 • SENTHILKUMAR - VELLORE,இந்தியா

  ஐயா பெரியவரே அதிமுக வாவது முதுகில் ஸ்டிக்கர் ஓட்டுறாங்க , உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நெத்தியிலேயே ஸ்டிக்கர் ஒட்டிடுவீங்க.

 • Kumaresan - Chennai,இந்தியா

  ஆம் முதலில் உமது வாயில் ஒட்டப்படும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அவங்க ச்டிக்கர்ணா இவரு ஸ்டாம்ப்பு..

 • manu putthiran - chennai ,இந்தியா

  வந்தது..வந்தது..108..கலைஞர் தந்தது 108..,கலைஞர் காப்பீட்டு திட்டம்,அரசு பஸ்களில் கலைஞர் "பொன்மொழி"????இந்த தமிழ்நாட்டில் எந்த தீமை நடந்தாலும் அதற்கு பிதாமகர் நீங்கள் மட்டுமே..

 • Kariyappa - Mumbai,இந்தியா

  ஸ்டிக்கர் கலாச்சாரத்தை கொண்டுவந்தே நீங்கள் தான் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  தார் சாலையில பெயிண்ட்ட வச்சி உதய சூரியன் சின்னம் வரஞ்ச ஆளுங்க தானே நீங்க...இப்போ என்ன திடீருன்னு யோக்கிய வேஷம்? intha வேஷம் உங்களுக்கு நல்லா இல்லை... எப்போதும் போல பச்சோந்தி வேஷம் தான் உங்களுக்கு பர்பெக்டா இருக்கும்...

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நல்ல நகைச்சுவை. மெகா கூட்டணி வைத்தால் முதலிடம்.தனித்து நின்றால் இரண்டாமிடம் என்பது திமுகவிற்கு உறுதி.

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  இந்த தேர்தலுக்காக யாரும் போஸ்டர் ஓட்டக்கூடாது ஊரான் செவத்தில் எழுதக்கூடாது - ஸ்டிக்கர் போடக்கூடாது - ப்ளெக்ஸ் வைக்கக்கூடாது - ஒத்து கொள்றீரா - எல்லா கட்சிகளும் கொள்ளை அடித்த பணத்தை வீணாக்கத்தான் துடிக்கிறார்களே தவிர - ஒருத்தன் வாயிலே கூட ஊழலற்ற ஆட்சி தருவோம் என்று வரவில்லை - அந்த வகையில் ராமதாஸ் உயர்ந்தவர் தான் - அவர் சொல்கிறார் - பார்த்து கத்துக்கொள்ளுங்கள் - ஊழல் பைசாவில் வாழும் நீரெல்லாம் எப்படி அதை ஒழிப்பதாக பேசுவீர்கள் - ஜெய் ஹிந்த்

 • Thirumalairajan Kasthurirengan - Chennai,இந்தியா

  மக்களும் 'வாக்கு சீட்டு'எனும் 'ஸ்டிக்கர்' - டன் காத்திருக்கிறார்கள் எந்தக் கட்சி முதுகில் ஒட்டி, veettukku அனுப்புவார்களோ.... -

 • SUNA PAANA - Chennai,இந்தியா

  நீங்க ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவிங்க உங்க குடும்பத்தோட மொத்த படத்தையும் போஸ்டர் அடிச்சு தமிழனுக்கு நாமத்துக்கு பதிலா ஓட்டுவிங்க. 1967 இருந்து இன்னும் விடியவே இல்லை. எப்போ பிறக்குமோ நல்ல காலம்.

 • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

  அனைவர் முதுகிலும் 'அம்மா ஸ்டிக்கர்' வெள்ளம் வந்த பொது ஒட்டப்பட்டது தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு மக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்பதை மிக பணிவுடன் தெரியபடுத்தி கொள்கிறோம்

 • thamilan - perambalur,இந்தியா

  முதன் முதலில் அரசியலில் விளம்பர கலாச்சாரத்தை கொண்டு வந்ததே நீங்கள்தானே. ஏதோ இப்பொழுதுதான் புத்தி வந்தமாதிரி தனக்கு விளம்பரமே பிடிக்காதது போல கூறிகொல்கிறார் இந்த வாரத்திற்கு ஆறு நாட்கள் கலைநிகழ்ச்சிற்கு தலைமை தாங்கிய தானைத்தலைவர் .தமிழகத்தை தனது 92 வயதிலும் தலையில் தாங்கி நிற்கும் தங்கத்தலைவர் ..

 • ப்ரௌன் பேரட்.... - Chennai,இந்தியா

  சரி தலைவரே அவர்களாவது ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவார்கள், டிசைனா இருக்குன்னு போகலாம், தப்பி தவறி நீங்க வந்துட்டீங்கன்ன சட்டய உருவிகிட்டுள்ள அனுப்புவீங்க.

 • பாரதி - Chennai ,இந்தியா

  இவரின் அறிக்கை படிக்க நன்றாக இருக்கிறது. அதற்காக இவருக்கு ஒட்டு போடமுடியாது. நில அபகரிப்பு சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்று கொஞ்சம் அறிக்கை விடுங்களேன்.

 • Prasannaa - Coimbatore,இந்தியா

  தாத்தா வந்தா சினிமா துறையினருக்கு ஒரு ஸ்டிக்கர், பொது மக்களோட சொத்த அபகருச்சு அவங்களுக்கு ஒரு ஸ்டிக்கர், ஹிந்து களுக்கு ஒரு ஸ்டிக்கர் ,மானவர்கள தமிழ் மட்டும் படிக்கச் வெச்சு அவங்களுக்கு ஒரு ஸ்டிக்கர்,மாசத்துக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி மக்களுக்கு ஒரு ஸ்டிக்கர் குடுப்பாரு

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  ஆமா நீங்க மட்டும் ரொம்ப ஒழுங்கா? எல்லா டிவி யிலும் உங்க போட்டோ என்ன த்துக்கு போட்டீங்க? ரெண்டு பேருமே எங்களுக்கு ஒண்ணுதான்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வழக்கம் போல கலைஞரை திட்டி கருத்துக்கள். அதாவது அதிமுக ஆட்சிக்கு அங்கீகாரம், ஆதரவுக் கருத்துக்கள் தான் அதிகம். அதாவது தினமலரின் பெரும்பான்மை வாசகர்கள் இப்பவும் அதிமுக தான்.

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  அம்மா ஸ்டிக்கர் விஷயம் ஊரே நாறித்தான் கிடக்கு. இவர் மட்டும் அரசாங்க கஜானாவில் இருந்து எடுத்து மக்களுக்கு டி வி கொடுத்தாரே அப்போது அதற்கு என்ன பெயர் வைத்தார்கள்? அட்டை பெட்டியில் இவர் படத்தைப் போட்டு 'கலைஞர் டி வி' என்றுதானே சொன்னார்கள்? அதற்கு என்ன பதில்...

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  நெல்லுக்கு கருணா என பெயரிட்டது யார் ? பச்சை பயறுக்கு அஞ்சுகம் பச்சை பயறு என்று தன் தாயாரின் பெயரை வைத்தது யார் ? அரசாங்க பணத்தில் வரும் காப்பீட்டு திட்டத்திற்கு கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று பெயரிட்டது யார் ? .. தஞ்சாவூர் சூப்பர் மார்க்கெட்டிற்கு "கலைஞர் கருணாநிதி அங்காடி "" என பெயரிட்டது யார் ...திருச்சி தியாகராஜா பாகவதர் திரை அரங்கத்துக்கு முன்னாள் பெயர் என்ன தெரியுமா ? கலைஞர் கருணாநிதி திரை அரங்கம் ..இந்த பெயரிட்டது யார் ? .. கட்சி தொண்டர்களின் பணத்தில் கல்யாண மண்டபம் கட்டி அதற்கு ""கலைஞர் கருணாநிதி திருமண மண்டபம் "என பெயரிட்டது யார் ? ( ஏன் அண்ணா பெயரோ , பெரியார் பெயரோ வைத்தால் என்ன ?) ... அரசாங்க பணத்தில் வழங்கிய மாணவர்களின் பஸ் பாசில் கருணாநிதி படம் அச்சிட்டது யார் ? .. இலவச அரிசி பைகளில் கருணாநிதியின் கொடூர முகத்தை அச்சிட்டு விநியோகித்தது யார் ? .. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அப்புறம் ஸ்டிக்கர் பற்றி பேசலாம் மிஸ்டர் கட்டுமரம் நீங்கள் ஆரம்பித்து வைத்தீர்கள் ..அவர்கள் பின்னி பெடல் எடுக்கிறார்கள் அவ்வளவுதான் ..

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  தி மு க வுக்கு உள்ள ஓட்டு வங்கியையும் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  இதை சொல்ல விட்டு விட்டாரே - மத்திய அரசு நஷ்டத்தில் இருக்கும் எச் எம் டி ஐ மூடுவது போல் நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியத்தையும் மூடி விடுவார் என்று கூட சொல்லூவார்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  ///// 2016ல்,அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்,//// இந்த அறிவிப்பு மூலம் தி மு க ஆட்சிக்கு வராது... அ தி மு க தான் 2016இல் ஆட்சிக்கு வரும் என்று பூடகமாக சொன்ன முன்னாள் முதல்வருக்கு நன்றி.. ..

 • Pannadai Pandian - wuxi,சீனா

  முதுகுல ஸ்டிக்கர் ஒட்டி ரோட்ல விடுறது இருக்கட்டும், அட்லீஸ்ட் உயிரு இருக்கும்.இந்த கிழம் ஆட்சிக்கு வந்தால் இந்த முறை ஆள கடத்தி லிவர் 5 லட்சம், ஹார்ட் 10 லட்சம், கிட்னி 7 லட்சம், தோலு 1 லட்சம், எலும்பு 2 லட்சம், ரத்தம் 50,000, முடி 25000, நகம் 10,000 ன்னு உடல் உறுப்புகள் ஒன்னு விடாம தரம் வாரியா பிரிச்சி வித்துருவாறு. இதுக்கெல்லாம் ஒவ்வொரு நாட்டிலும் இவருக்கு எஜன்டுங்க இருக்கானுங்க....இம்ம்முன்னு சொன்னா, காலி கூட்டம் பின்னால சுத்தும்....மக்களே ஜாக்கிரதை....இவரு உயிரோடு இருக்கும் வரை அவரு கண்ணுமுன்னே வராதீங்க.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நீங்களே கூட நாற்காலியை விட்டு எந்திரிச்சு காலைக்கடனெல்லாம் கழிச்ச பொறவு உங்க முதுகை ஆளை வெச்சுப் பார்க்கச் சொல்லுறது நல்லது ....

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  கலைஞர் அவர்களே, கவலை வேண்டாம் .... 2016 லும் ஜெ ஆட்சி தான்....அப்போது முதுகில் அம்மா ஸ்டிக்கர் குத்தினாலும் பரவாயில்லை... இருக்கவே இருக்கிறது, செம்பரம்பாக்கம், அதனை திறந்து விட்டால் போச்சு... உங்களுக்கும், உங்க கட்சி காரர்களுக்கும் ஸ்டிக்கர் தேவை இல்லை என்றால், செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் ஆர்பரித்து வரும் இடங்களில் மல்லாக்க படுத்து, ஸ்டிக்கரை அழித்துகொள்ளுங்கள்.. யார் வேண்டாம் என்றது....

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  தாத்தா எதாவது சொன்னா செம ஜாலியா வகைமுறை இல்லாம கலாய்க்கிறது... நீ யோக்கியமான்னு கேள்வி கேட்டு கடமையை முடிக்கறதும் இங்கே வழக்கம். ஆனால் அவரோட அறிக்கையில கேட்ட சில முக்கியமான விஷயங்கள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டதுன்னு புரியல...உதாரணமா பெரும் விளம்பரத்தோட துவக்கி வைக்கப்பட்ட அம்மே சிமெண்ட் அப்பிடியே முடங்கி கிடக்குது...அது பத்தி கேட்டிருந்தார்...என்ன காரணமோ தெரியல...எதாவது நியுச போட்டு கட்டுமரத்த திட்ட விட்டா போதும்னு மலர் முடிவு பண்ணியாச்சு போல...ஆனா பாருங்க, இங்கே இருக்கிற எல்லா வாசகர்களும் வெறும் மலர் மட்டுமே படிக்கறதில்லை...ம்ம்ம்ம்...யாரை திருப்தி படுத்த இந்த வேலை...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  ஜெ முதுகில் அம்மா ஸ்டிக்கர் குத்துவார் என்றால், உங்க கட்சி ஆளுங்க, அடுத்தவன் நிலத்தில் அல்லவா உங்கள் கட்சி அல்லகைகளின் ஸ்டிக்கர் களை குத்துகிறார்கள்....

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  முதல்வர்களின் படங்கள் மாநில அரசு திட்டங்களிலும், , நேரு குடும்ப பெயர்கள் மத்திய அரசு திட்டங்களிலும் நெடுங்காலாமாகவே உள்ளது....ஆனால் இலவசங்களில், முதல்வர் படங்களை போடுவதை தொடங்கி வைத்தது கருணாநிதி தான் என்பதனை மறந்து விட்டு கூச்சமே இல்லாமல் அறிக்கை விடுகிறார்... 91 இல் ஜெ முதல்வராக இருக்கும்போது, ஜெ ஜெ பேருந்து விடப்பட்டது....அதனை கருணா கடுமையாக எதிர்த்து , 96 இல் ஆட்சியை பிடித்தார்,.. ஜெ ஜெ பேருந்துவை, சோனியாவை திருப்திபடுத்த ராஜிவ்காந்தி பேருந்தாக மாற்றினார்.. 96 - 2001 இல் ஓரளவுக்கு சுமாரான ஆட்சியை தான் கருணா கொடுத்தார் ...ஆனால் அதைவிட மிக சிறப்பான ஆட்சியை , சொல்லபோனால் பொற்கால ஆட்சியை, ஊழல் இல்லா ஆட்சியை 2001 - 06 இல் ஜெ கொடுத்தார்....அப்போது ஜெ ஸ்டிக்கர் எல்ல்லாம் இல்லை .., ஆனால் 2006 இல் கருணா ஆட்சிக்கு வந்தவுடன், இலவச TV அட்டையில் கலைஞர் TV என்ற படம் , கலைஞர் காப்பீட்டு திட்டம், பொங்கல் பையில் கலைஞர் இன் சிரித்த [ இளித்த ] போட்டோ... இப்படி எல்லாம் கலைஞர் மயமானது....பாசதலைவனுக்கு நடிகர்கள் வலுக்கட்டாயமாக பாராட்டுவிழா நடத்தாத மாதமே இல்லை எனலாம்.. முத்தாய்ப்பாய் கலைஞர் TV ... அதனை பார்க்க இலவச TV ... முந்தய காமராசர், MGR , ஜெ காலங்களில் இலவசங்களில் முதல்வர்கள் படம் இருக்காது... ஆனால் 2006 இல் கருணா தான் இலவசத்தில் தனது படத்தை பொரிக்க ஆரம்பித்தார்.... அது இன்றளவும் தொடர்வது எரிச்சல் மூட்டுகிறது, என்றாலும், கருணா இதனை பற்றி பேச தகுதியற்றவர் .. அதனால் கருணா என்ன சொன்னாலும் மக்களிடம் எடுபடாது... அதுமட்டும் , அல்ல, அம்மா என்பது பொதுப்பெயர் ஆவதால், அனைத்திற்கும் அம்மா பெயர் சூட்டபடுவதை மக்கள் சீரியஸாக எடுக்கவில்லை... மாறாக பலர் அதனை வரவேற்கின்றனர்.... அதனால் கருணா அவர்கள், இதில் ஆர்பாட்டம் செய்து பிரயோசனம் இல்லை...

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  தமிழகத்தின் கலி கால திருதராஷ்டிரன் எப்படி குசும்பு தனமாக, நக்கல்தனம், பொறாமையின் வெளிப்பாடு வெளி வந்து விட்டது. மஞ்ச துண்டின் குடும்பம் தான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஈன தனமான எண்ணத்துடன் இந்த வயதிலும் பதவி வெறி கொண்டு அலையும் ஒரு மனிதன் உலகத்திலே இவர் ஒருவராக தான் இருப்பார். பொறாமையின் இருப்பிடம் .

 • Divaharan - Tirunelveli,இந்தியா

  (அய்யா) திருடர் முன்னேற்ற கழகம், அம்மா திருடர் முன்னேற்ற கழகம் இரண்டும் மக்களுக்கு நாமம் மட்டும் ஒரே மாதிரி போட்டு விடுவார்கள்.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  மீண்டும் AIADMK தமிழ் நாட்டில் ஆட்சி அமைத்தால், என்றும் "அம்மா" எதிலும் "அம்மா" என்று தமிழ் நாடு முழுவதும் "அம்மா" மயம் மாறிவிடும். இதற்க்கு தமிழக மக்கள் தயாராக வேண்டும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாரை விடவும் தாங்களே ஜெயலலிதாவை அதிகமாக நினைப்பதால், மறந்துபோய் உங்களது முதுகில்,முகத்தில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டிகொள்ளபோகிரீர்கள்... ஜாக்கிரதை

 • kailawsh - Pollachi,இந்தியா

  இப்பொழுதே பாவம் அம்மையார், தமிழக மக்களுக்காக தன்னை வருத்திக்கொண்டு அவர்களின் துன்பங்களை எல்லாம் சுமந்து கொண்டிருப்பதால் அவரது முகத்தில் புன்னகையில்லா விரக்தியே மேலோங்கி நிலவுகிறது. தனக்கென யாருமேயில்லாத தனிமையில் வாடி வாழ்வது எதற்காக என்று தெரியாமல் கடப்பாரையை விழுங்கிவிட்டது போல விழிப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 24 மணிநேர பணிச்சுமை அவரை இப்பொழுதே சொல்லிலும், செயலிலும் , தோற்றத்திலும் 94 வயதாகிவிட்டவர் போல் ஆக்கிவிட்டது. இந்த தியாகச்செவியை இன்னும் 5 ஆண்டுகள் நமக்காக நரகவேதனையை அனுபவிக்க சொல்வது நன்றன்று.

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  அவிங்கலாவது முதுகுல ஸ்டிக்கர் மட்டும்தேன் ஒட்டுவாங்ய. நீங்க முதுகுல குத்தீருவீங்க

 • Devaraj - moolekaodu ,சுரிநாம்

  எனவே 2016 இல் மஞ்ச துண்டு, ஸ்டிக்கர் க்கு பயந்து வெளியில் வரமாட்டார் என்று அறிவிக்கபடுகிறது. நமக்கு நாமம் நாயகன் சுடாலின் உடம்பில் கவசம் போட்டு வருவார், அந்த கவசத்தில் எதுவும் ஓட்ட முடியாத படி ஷாக் அடிக்கும் வகையில் வெளி நாட்டில் இருந்து 1000000 கவசம் வாங்க ஆர்டர் கொடுக்க பட்டுள்ளது என செய்தி தினமலருக்கு மட்டும் வந்துள்ளது.

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  அவர்களாவது உயிருள்ள முதுகிற்கு ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள்.நீங்கள் வந்தால் பிணத்தை கூட விடமாட்டீர்கள்.

 • kailawsh - Pollachi,இந்தியா

  ஸ்டிக்கர் ஓட்டுவதெல்லாம் நடக்காது. அரசு திவாலாகி ஸ்டிக்கர் அடிக்க பணம் இருக்காது.

 • R.Srinivasan - Theni,இந்தியா

  புறமுதுகு காட்டும் பழக்கம் அ.தி.மு.க. தொண்டனுக்கு இல்லை.....நேருக்கு நேர் அனைவரின் நெத்தியிலும் ஒட்டுவார்கள்.....இவர் வேண்டுமானால் ராமானுஜரின் நாமத்தை நெத்தியில் ஒட்டிக்கொள்ளட்டும்....

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  ஒரு ஹீரோ காமெடியன் ஆகி, இப்போ டம்மி பீசாகி டர் ஆகி தொங்குது......பாவம்....

 • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

  இடம் தாராளமாக இருந்தால் ஒட்டுவதில் தப்பு இல்லே ...

 • வைகை செல்வன் - சென்னை,இந்தியா

  நீங்கன்னா கோமணத்தையும் இல்ல உருவிடுவீங்க .. நெனச்சு பாருங்க எப்படி இருக்கும்னு

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பிளாக்ஸ் போர்டு வைப்பவர் ஸ்டிக்கர் ஒட்டுறதை நக்கலடிக்கிறாரு..கட்டுமர ஸ்டிக்கர் ஒட்டுங்கப்பா..அப்போவாவது மகிழட்டும்..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஆமா இவிங்க யோக்கியவான்கள்...

 • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

  அமா, மறந்து போச்சா? ரேசன் விநியோகத்தில் உன் படங்கள், பஸ் தொழிலாளிகளுக்கு கொடுத்த கடிகாரங்களில் உன் படங்கள், இன்னும் பல அரசாங்க விநியோகங்களில் உன் படங்கள் போட்டு திரிந்தீர்களே

 • visva - Chennai

  நாங்க மீணடும் வந்தால் முனனிருந்த பண்ணிரண்டு மணி நேர மின்வெட்டை பதினெட்டு மணி நேரமாக உயர்த்துவோம்

 • Rajab - NAAA,இந்தியா

  அப்பு. இந்த விஷயத்துல ஆதியும் அந்தமும் நீங்க தான்.

 • visva - Chennai

  முதல் முதலில் மாணவருக்கான பேருந்து டிக்கட் பின் புறம் யார் படம் இருந்துதுங்க

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  ஐயா உங்க ஆட்சில பாசதலைவனுக்கு பாராட்டு விழா நடத்தியது எந்த கணக்கில் வரும் ?? நீங்க ஆட்சிக்கு வந்தா இந்த பாராட்டு விழா நடக்காதா??

 • தமாஷ் சிங்கம் - mumbai,இந்தியா

  தலைவரே இங்கு 200 கோடி கடன் கொடுத்த டுபாகூர் கம்பனிகளை பற்றி செய்தி வந்துள்ளது , அதை பற்றியும் அறிக்கை வெளி இடுங்களேன்.

 • Prabhu - Coimbatore

  இது ஒரு தரப்பு வாதம் மட்டுமே. அதாவது, குற்றம் சாட்டும் அமலாக்க பிரிவின் வாதம் மட்டுமே. இங்கே கருத்து கூறிய நபர்கள் பலரும் ஏதோ இறுதி தீர்ப்பு போல் கருத்துகளை கூறியுள்ளார்கள். குற்றம் சாட்ப்பட்ட நபர்கள் அவர்களுடைய நியாயத்தை வாதிடுவார்கள். நம்ம நாட்டுல குற்றவாளிகள் தப்பிசெல்ல சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கும். ஊழல் குற்றசாட்டில் சிறை தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ் தற்போது வெளியே சுதந்திரமாக இருக்கிறார். அவர் தலைமையில் அவருடைய கட்சி பீகார் சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை நாம் பா்த்தோம். அது போல சொத்து குவிப்பு வழக்கு. அப்புறம் 2g வழக்குல மட்டும் எப்படி குற்றவளிகள் தண்டிக்கபடுவார்கள்?

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  தலைவரின் இந்த பதட்டமான அறிக்கையை பார்க்கும் போது அதிமுக வென்றுவிடும் போல தெரிகிறது

 • தமாஷ் சிங்கம் - mumbai,இந்தியா

  தலைவர் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மொட்டை போட்டு பட்டை நாமம் சார்த்த படும், இங்கு கூலிக்கு மாரடிக்கும் கூமுட்டைகளுக்கு உட்பட.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஹஹஹஹஹ்ஹஹஹஹஹஹ்ஹாஹ்ஹஹஹாஹ் சிரிச்சு வயரே புண்ணாச்சு. எப்படி இருக்கும்னு நெனைச்சு பார்த்தேன் அடக்கவே முடிலே தாத்தாவின் குசும்புக்கு அளவே இல்லீங்களா ,ச்டிக்கர் பயித்தியம் பேயா பிடிச்சு ஆட்டுதே சாமி நமக்கு ரெண்டுமே வேண்டாம் காங்கிரெஸ் வேண்டவே வேண்டாம் சோனியா தமிழ்னாட்டையே கொண்டுபோய் இத்தாலிக்கு தானம் செய்துடுவா

 • Nakkeeran - Ipoh,மலேஷியா

  இன்று காலி மனை உள்ளவன் , சந்தோசமாக உள்ளான் , உங்கள் ஆட்சி போல் தினமும் செத்து பிழைக்கும் நிலை இல்லை ,இரவில் படுத்து காலையில் போய் பார்த்தால் உங்கள் ஆட்சியில் இடம் வேறு ஒருவர் பெயருக்கு மாறி இருக்கும் அந்த நிலை ஒன்று போதும் , நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க.

 • SENTHIL - Coimbatore,இந்தியா

  அதிமுக கட்சிகாரர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள்... ஆட்சியில் இல்லாமலே நீங்கள் ( உங்கள் கட்சிகாரர்கள் உள்பட ) உங்கள் திருமுகத்தையும், ஸ்டாலின் திருமுகத்தையும் ஒட்டுகிறீர்கள்... என்ன வித்தியாசம் இரண்டுக்கும்... அதிமுக திமுக இரண்டு கட்சிகளினால் தன்னார்வலர்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா... மழையினால் துளிர்த்த ( மீண்டும் தழைத்த ) மனிதநேயத்தை கருகிபோக வைத்தது யார் குற்றம்... உங்கள் குற்றம் அல்ல (அதிமுக, திமுக, பிற கட்சிகளும்)... எங்களின் குற்றம் தான்.. உங்களை தேர்ந்தெடுத்தது மக்களாகிய நாங்கள் தானே...

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  நேத்து யாரோ இவருக்கு அழுவுன பாவாக்காயில சூப்பு போட்டு கொடுத்துட்டாங்க போல... அதான்...

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அவிங்களாவது ஸ்டிக்கரோட விட்ருவாங்க...ஆனால் நீங்க வந்தீங்கன்னா ஒடம்புல உசுரு இருக்கும் ...ஆனால் உறுப்புக்கள் இருக்காது...

 • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

  அவர்களாவது ஸ்டிக்கர் ஓட்டுவார்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவரது முதுகையும் பிளாட் போட்டு விற்றுவிடுவார்கள்

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  அப்ப நாங்க எல்லோரும் நமக்கு நாமே "நாமம்" என்று நாமம் STICKER-ஐ நெற்றியில் ஒட்டிக் கொண்டு சுத்தட்டுமா???.... அப்ப ஒரு CONDITION????... உடனே நாமத்தை ஆரியர்களின் சூழ்ச்சி என்றோ, இல்லை பார்பனர்களின் சதி என்று இதனை சொல்லி நீங்கள் மீண்டும் புலம்பக் கூடாது????..... சம்மதமா????......

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  தாத்தா தினமலர் படிப்பாருன்னு தெரியும் ஆனா வாசகர்கள் கமெண்ட்ஸ் எல்லாம் படிப்பாருன்னு இவரோட அறிக்கையை பாத்தா தான் தெரியுது...நாம சொன்னதை எல்லாம் பாயிண்டா எடுத்து உடராறு....இவரை கழுவி ஊதறதை கூட தினசரி படிக்கிராருன்னு தான் நினைகிறேன்..

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  பரவாயில்ல.. நீங்க வந்தா வீடு நிலங்களை எல்லாம் அபகரித்து அனாதையாய் மக்கள் தெருவில் இருக்கும் அவலநிலை வந்துவிடும்.

 • Alagappan Arumugam - Singapore,சிங்கப்பூர்

  ஆட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியாரால் தோற்றுவிக்கபட்ட 'திராவிடர் கழகம்' ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஆட்சி அரசியலில் பங்கேற்கும் வகையில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் உருவானது என்பது யாவாரும் அறிந்ததே. இன்று, திமுக, திக என்ற இந்த எழுத்துக்கள் இல்லாமல் தமிழகத்தில் கட்சி இல்லை. தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சி உருவாக்க மனதிடம், கொள்கை இல்லாத தலைவர்கள் அஇஅதிமுக தேமுதிக, மதிமுக என பெயரிட்டனர். இந்த அஇஅதிமுக ,தேமுதிக, மதிமுக மக்கள் விரோத அமைப்புகள். இந்த அஇஅதிமுக ,தேமுதிக, மதிமுக கட்சிகளால், தலைவர்களால் திராவிட இயக்கத்தற்கு அவப் பெயர். மக்கள் திராவிட இயக்கத்தின் சாதனைகளை மறந்தனர். இன்றைய தமிழக அலங்கோலங்களுக்கு, மாநிலப் பற்றை மாசற்று பறை சாற்றி நடிக்கும் ஊடகங்களும், ஜெயலலிதாவும், வைகோவுமே காரணம். திருட்டுத்தனம்மாக இரகசிய கூட்டணி அமைத்து வருகிறது. அஇஅதிமுகவும், மதிமுகவும் .தமிழ்நாட்டில் அறுத்து எறிய வேண்டிய செடிகள் தான் அஇஅதிமுகவும், மதிமுகவும் . எனவே, 2016 தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும். ஏற்கனவே தேவையில்லாமல் அன்புமணி ராமதாசை மத்திய அமைச்சராக்கி, இன்று, முதல்வர் பதவி எனக்குத் தான் என ஓரே கூச்சல் வேறு. ஆவன்னருணா

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அம்மா ஸ்டிக்கர், அய்யா ஸ்டிக்கர் என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம்....

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  உமது நெத்தியில் 2 G ஸ்டிக்கர், வலது பொட்டில் வீராணம் ஸ்டிக்கர், இடது பொட்டில் இலங்கை ஸ்டிக்கர் சுடலின் நெத்தியில் அழகிரி ஸ்டிக்கர் , பழமொழி நெத்தியில் ராஜா ஸ்டிக்கர் ராஜா நெத்தியில் பழமொழி ஸ்டிக்கர் மாறன் நெத்தியில் போன் ஸ்டிக்கர் பேராசை பிடித்த பேராசை பெருந்தொகை நெத்தியில் பணமுட்டை ஸ்டிக்கர் என்று அடுக்கி கொண்டே போகாலாம் ... இனித நல்ல காலை பொழுதில் சனியன் உன் முகத்தில் உன் செய்தியில் முழிக்க என்ன பாவம் செய்தேனோ

 • suresh - chennai,இந்தியா

  நாம போடுவோம் 'அம்மா' நெத்தியில நாமம் ஸ்டிக்கர்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அதுக்கு முதல் உதய சூரியன் ஸ்டிக்கரை நீங்க ஓட்டிடுங்க.

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  அரசால் கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்களில், நமது ஆட்சி காலத்தில் மு. கருணாநிதியின் படத்தினை போட்டே விநியோகம் செய்தது ஞாபகம் வருது. அது ஒன்றும் நமது வீட்டு பணத்தில் இருந்து கொள்முதல் செய்த பொருட்கள் இல்லையே. அப்போதும் அரசு பணத்தில் நமது படத்தை போட்டு விளம்பரம் தேடாமல் இருந்திருந்தால், இப்போது பிறரை குறை கூறுவது பொருத்தமாக இருக்கும். கழிவறையில் கூட நமது படத்தை போட்டு விளம்பரம் தேடியவரல்லவா நாம்

 • Yesveeorr - chennai ,இந்தியா

  கருத்து கணிப்பு படி திமுகதான் ஆட்சியை அமைக்கப் போகிறது.அப்படி இருக்கையில் 2016ல் அதிமுக ஆட்சிக்கு வரும் என்று ஏன் நினைக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் தானே முதுகில் ஸ்டிக்கரை ஒட்டுவார்கள். கவலையை விட்டு நிம்மதியாக இருங்கள்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  அவர்களாவது ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.நீங்கள் 5 தடவை முதல்வராக இருந்து மக்கள் தலையில் மிளகாய் அரைத்திர்களே அதை என்னவென்று சொல்வது.நீங்களும் உங்கள் மகனும் வாயை திறந்தாலே பொய் பொய் தான் வருகிறது.உங்கள் குடும்ப தொலைகாட்சியிலும் வெறும் பொய் செய்திகள் தான் அதிகம்.இப்படியே போனால் உங்களுக்கு மக்கள் ஓட்டும் ஸ்டிக்கர் நன்றாகவே இருக்கும் தேர்தலில்.

 • kuttizen - Erode,இந்தியா

  அவங்க sticker ஒட்டுனா என்ன? நாம 'அதுக்கும் மேல' போயி பச்சையே குத்திபுடுவோம். நம்ம இலவச TV பாத்து அவங்க மிக்சி கிரைண்டர் குடுக்கலையா?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இது சுற்றுச் சூழலை பாதிக்கும் ... பழையபடி பச்சை குத்திவிடலாம்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கட்டுமரம் வந்தால் ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது இரண்டு கிட்னிகள் அரசாங்க பொதுவுடைமை ஆக்க படும். உங்களோட கிட்னி உங்களோடது இல்லை என்ற அரசு ஆணை பிறப்பிக்கப்படும். ஒவ்வொரு வீட்டு முன்பும் இந்த வீட்டு கிட்னிகள் அரசாங்க உடமை என்று தட்டி வைக்கப்படும். எப்போ வேணாலும் கட்டுமரம் ஆள் அனுப்பி ஆப்பரேசன் பண்ணி எடுத்துட்டு பூடும். இன்னும் ஒரு கிட்னி கட்சி நிதிக்காகவும் கட்சி வளர்ச்சிக்காகவும் குடும்ப நலனுக்காகவும் அறுத்து எடுக்கப்படும். கிட்னிய எதுத்துட்டு கொஞ்சம் சட்னி தரப்படும். அப்புறம் அதுங்க மேல கேசு போட்டு எதாச்சும் நட்ட ஈடு கெடச்சு நீங்க பிளைக்கிரதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போய்டும். கிட்டினி வேணுமா இல்ல சட்டினி வேணுமா, நீங்களே முடிவு பண்ணிகோங்க.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இழவு வீட்ல பிணமாய் இருக்கணும், கல்யாண வீட்ல மாப்பிள்ளையாய் இருக்கணும் என்ற வெறி கொண்ட கட்டுமரம். இழவு வீட்டில் பிணத்து மேல் கூட தன்னுடைய ஸ்டிக்கர் ஓட்டும் குணம் கொண்டது. அவ்வளவு தூரம் சுய பாராட்டு வெறி கொண்ட கட்டுமரத்துக்கு அடுத்தவர்கள் புகழப்படும் பொது பக பக வென்று பத்திகிட்டு எறிவதில் ஆச்சரியமேதுமில்லை.

 • Panchu Mani - chennai,இந்தியா

  2016-இல் தாத்தா ஆட்சி வந்தா போறவங்க வர்றவங்களை நிப்பாட்டி மஞ்ச பை கொடுக்கலாம். அத்தனை பேரையும் அர்ச்சகர்களாக்க போற வர்றவங்களை நிப்பாட்டி தார்பாச்சி கட்ட வச்சி குடுமி வச்சு விடலாம். ஒவ்வொரு மாசமும் முதல் தேதியை தமிழ் புத்தாண்டுன்னு அறிவிக்கலாம். ஒவ்வொரு பட்ஜெட் ல யும் நாம கட்டிக்கு வரி குறைப்பு செய்யலாம். நமக்குதான் கொடுத்து வைக்கணும்.

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  தலீவர் இந்த முறைதான் சரியாக சொல்லி இருக்காரு. மீண்டும் அம்மா அவர்கள் பதவிக்கு 2016இல் வரத்தான் போகின்றார். அப்போது சரித்திரம் சொல்லும்..ஊழல் பேர்வழியை, நிலங்களை அபகரிக்கும் கூட்டத்தை, கொள்ளை குடும்பத்தை வேரோடு சாய்த்த வீரமங்கை அம்மா என்று நாடே புகழும். மேட் இன் தமிழ்நாடு..என்று சொல்லலாம். ஆனால் உங்கள் ஆட்சி அமைந்துவிட்டால்..தமிழ்நாட்டையே விற்றுவிடுவீர்கள்..மேட் இன் தமிழ்நாடு என்று முத்திரை குத்தாமலேயே மொத்த மாநிலத்தையே விற்றுவிடுவீர்கள். ரோடு ரோடா உம்மோட பிள்ளையாண்டானும்..நீர் அறிக்கையாலும் அப்படியே தமிழ்நாட்டையே விழுங்க பார்கின்ற செயலுக்கு இப்படி ஸ்டிக்கர் ஓட்டுவது ஒன்றும் குறைந்துபோயவிடாது. காய்கறி பழம் விற்பவநிடமிருந்து 200 கோடியை பெற்றதாக கூறி நீர் அடித்த கொள்ளை இப்போது நாடே சிரிக்கின்றது. அதனை மறைக்க உமது டுவிஸ்ட் அறிக்கை எடுபடாது. கனிமொழியின் ஜாமீன் விரைவில் ரத்தாகி திகார் போகப்போகிறதையும், அல்சைமர் வியாதிக்கு சிறந்த ஆஸ்பத்திரி திகார் ஜெயில் என்றும் நேற்றே சி பி ஐ விசாரணையில் சொல்லிவிட்டார்கள்..2016 தேர்தலில் உங்களுக்கு பட்டை நாமம்தான்..நமக்கு நாமம்தான் என்று உன்னோட பிள்ளையாண்டான் சரியாகத்தான் சொல்லி இருக்கார்..முதலில் இதனை சரிபாருங்கள்..அப்புறமா ஊருக்கு சேதி சொல்லலாம்..இவருக்கோ உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் சகல வியாதிகலாம்..இவரு ஊருக்கு மருந்து சொல்ல வந்துட்டாரு..

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  கருணாநிதியார் முதுகிலுமா ஸ்டிக்கர் .?. அந்த பதட்டம் ஐயாவிடம் தெரிகிறதே... தப்பித் தவறி, 2016ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கோபாலபுரம் கோடம்பாக்கம் ஆகும் .. நிறைய பாராட்டு விழாக்கள் காணலாம்.

 • Rajasekaran - chennai,இந்தியா

  மின்சாரம் வாரியம் இழப்பில் உங்க பங்கு (திமுக) அதிகம் உள்ளது. உங்க ஆட்சியில் கூடுதல் விலையில் நிலக்கரி வாங்கியது, கூடுதல் விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டது தான் காரணம். கலைஞர், 'டிவி'க்கு வந்த 200 கோடி ஊழல் பணம் கடன் வாங்கியது சொன்ன பொய்யை விட ஸ்டிக்கர் பெரிய விஷயம் இல்லை. நீங்கள் விடும் பொய்க்கு ஸ்டிக்கர் ஒன்றும் இல்லை. திமுக வால் ஏற்பட்ட மக்கள் கஷ்டத்தை விட எது ஒன்றும் முக்கிய பிரச்சினை இல்லை.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சும்மாவே கழுவுவாணுக, இதுல இது வேறயா?

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  கலைஞரே உங்கள் முதுகினை சற்று நன்றாக உற்று பாருங்கள் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது , ஏற்கெனவே உங்களின் முதுகிலும் ஸ்டாலின் 2-ஜி முதுகிலும் ஸ்டிகர் ஓட்டபட்டுவிட்டுள்ளது , வரும் தேர்தல்களுக்கு அப்புறம் உங்களது மூஞ்சுகளிலும் கருப்பு கரி பூசப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டபடவுள்ளது

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  கலைஞரே உங்கள் மூஞ்சியில் 2016ல் கரியை பூசிவிடுவார்கள் மக்கள் , ஏற்கனேவே பாதி கரி பூசபட்டுவிட்டது தி.மு.கவிற்கு , ஒரு 8வது பாட கணித புத்தகத்தை படித்து புரிந்துகொள்ள முடியாத உமக்கு கேலி கிண்டல் செய்யமட்டும் தெரியுது .

 • suresh - devakottai

  நீங்க வந்தா கிட்னியெல்ல எடுப்பீங்க

 • Ootai Vaayan - Kovai,இந்தியா

  ஒய் .. உமக்கு எதற்கு வயத்தெரிச்சல்?.. ஸ்டாலினை நமக்கு நாமேன்னு ரோட்லே போகாதேன்னு சொல்லுங்க. அவர் முதுகிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிவிடுவார்கள்..

 • Manickam - Chennai,இந்தியா

  அம்மா ஸ்டிகர் ஒட்டுனாலும் நிவாரண பொருள்கள் நேரா முகாம்களுக்குதான் போச்சு. அதிமுக அலுவலகம் செல்லவில்லை. ஆனால் நீங்க சேகரித்த நிவாரண பொருள்கள் அறிவாலயம் வந்து ப்ரின்ட்டு போட்டு சி ஐ டி காலனிக்கும், கோபாலபுரதுக்கும் போச்சுன்னு செய்தி படிச்சேன். ஸ்டிக்கர் ஒட்டுனாதான கிழிச்சி போடுவீங்க. பிரிண்ட் போட்ருக்கோம். முடிஞ்சவன் மோதி பாரு. முடியாதவன் ஊரை விட்டு ஓடுன்னு நக்கலா சொல்லிட்டு திரிஞ்சாங்க உங்க ஆளுங்க சேகரித்த தக்காளில பிரிண்ட் போட்றன்னு சொல்லி பல தக்காளிய நசுக்கி புட்டாங்கலாம். பேசாம அதுல அம்மா ஸ்டிக்கர ஓட்டியிருக்கலாம். தக்காளி தப்பிசிருக்கும்.

 • Manickam - Chennai,இந்தியா

  அம்மா ஸ்டிக்கர சுலபமா கிழிச்சி போடலாம். நீங்க எல்லார் முதுகிலும் ப்ரின்ட்டு போட்ட குடும்பம் ஆச்சே ப்ளேடு போட்டு சுரண்டியும் போக மாட்டேங்குது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement