Advertisement

திரைமறைவு திறமைசாலி

நாற்பது பிளஸ் வயது கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாய் வருவார்கள். ஒரே படத்தில் பள்ளி மாணவனாகவும், 20 ஆண்டு கழித்து பத்து பேரை அடித்து துவைக்கும் பேட்டை ரவுடியாகவும், 30 ஆண்டு கழித்து தாதாவாகவும் வருவார் கதாநாயகன். இந்த முகமாற்றங்களை தன் கையால் படைப்பவர் ஒப்பனைக்கலைஞர் என்ற மேக்கப்மேன். திரைப்படங்களின் வெற்றிகளின் போது, அதிகம் கவனிக்கப்படாத திரைமறைவு திறமைசாலிகள் இவர்கள்.ஆனால் இவர்களின் கைவண்ணத்தை, கதாபாத்திரம் காலமெல்லாம் பேசும்! அந்த வரிசையில் 'மதராசபட்டினத்தில்' நம்மூர் ஆட்களை ஆங்கிலேயர் காலத்து ஆட்களாய் மாற்றியவர். 'காவியத்தலைவனில்' சாக்லேட் ஹீரோக்கள் சித்தார்த், பிருதிவிராஜை மன்னர்களாய்மாற்றிக்காட்டியவர்...ஒப்பனைக்கலைஞர் பட்டணம் ரஷீத் தமிழில் தேசியவிருது பெற்ற 'காஞ்சிவரம்' இவரது இன்னொரு அடையாளம். மற்றபடி மலையாளத்தில் இவர் நம்பர் ஒன். 'பரதேசி'யில் மோகன்லாலை 80 வயது முதியவர் ஆக்கி தேசிய விருது பெற்றவர். இவரோடு ஒரு நேர்காணல்...* 300 படங்களுக்கு மேல் ஒப்பனை செய்துள்ளீர்கள். என்றாலும் திரைத்துறையில் கேமராமேன் கவனிக்கப்படும் அளவிற்கு, ஒப்பனைக் கலைஞர்கள் கொண்டாடப்படுவது இல்லையே...உண்மை தான். ஒரு கேரக்டரை இயக்குனர் தீர்மானித்து உருவாக்குகிறார். ஆனால் அந்த 'கேரக்டர் ஆள்' எப்படி இருப்பார், அவரது உடல்மொழி எப்படி என தீர்மானிப்பவர் மேக்கப்மேன். ஒப்பனைக்காக முதன்முதலாக தேசிய விருது 2007 ல் உருவாக்கப்பட்டது. அந்த முதல் மரியாதை எனக்கு கிடைத்தது பெருமை.* புராண, சரித்திர கதாபாத்திரங்களுக்கு ஒப்பனை தரும் போது, அவர்கள் முகம் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி தீர்மானிப்பீர்கள்?சில இயக்குனர்கள் கேரக்டரை வரைந்து காட்டுவார்கள். மற்றபடி அதற்காக ஆராய்ச்சி செய்து, பல புத்தகங்கள் படித்து, மனதில் ஒப்பனையை உருவாக்குவேன்.* மலையாள படங்கள் யதார்த்தமாக இருக்கும்; தமிழில் ஒப்பனை அதிகம் என்ற கருத்து நிலவுகிறதே?மலையாள படம் மாதிரி, யதார்த்தமான ஒப்பனையுடன் தமிழிலும் படங்கள் வருகின்றன. தமிழில் நான் மிகவும் நேசித்து செய்த படம் 'காவியத்தலைவன்'. அதில் ஒப்பனைக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும்.* இந்த டிஜிட்டல் யுகத்தில், 4 கே ரெசலுயுஷன் டிஜிட்டல் ஸ்கிரின் நுட்பத்தில், ஒப்பனையின் சிறு குறையும் திரையில் காட்டிக்கொடுத்து விடுமே! இந்த சவால்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?வெறும் பவுடர் பூசுவதல்ல மேக்கப். டிஜிட்டல் மேக்கப் சிஸ்டம் வந்து விட்டது. மேக்கப் 'மெட்டீரியல்களும்' மாறி விட்டன. இதற்காக வெளிநாட்டில் சென்று பயிற்சி பெற்றுள்ளேன். ஆர்ட், எடிட்டிங், காஸ்டியூம் கற்பிக்க பள்ளிகள் உள்ளன. ஆனால் திரை ஒப்பனைக்கு பயிற்சி பள்ளி இல்லை என்ற குறை தீர்க்க, கொச்சியில் 'பட்டணம் மேக்கப் அகாடமி' துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.* நீங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்த ஒப்பனை?மோகன்லால் நடித்த 'உடையோன்' படம். அவரை தாத்தாவாக மாற்ற வேண்டும். தினமும் 5 மணி நேரம் இதற்காக ஒதுக்கினோம்.* ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடத்தும் போது, புதிதாக மேக்கப் செய்ய வேண்டும். முதல்நாள் அமைத்த ஒப்பனை மாறாமல், அந்த கேரக்டரை எப்படி தொடர்வீர்கள்?இன்று செய்யும் பணி நாளை மறக்காது. மனதிற்குள் அந்த கேரக்டர் அப்படியே இருக்கும். எனவே நேற்று மாதிரி ஒப்பனை செய்ய முடியும்.* எந்த ஹீரோவாவது 'நல்லா மேக்கப் போட்டீங்க' என்று பாராட்டி இருக்கிறார்களா?மீராஜாஸ்மின், மம்முட்டிக்கு தேசிய விருது கிடைத்த போது என்னை அழைத்து பாராட்டினார்கள். காவியா மாதவன், மோகன்லால் உடனடியாக பாராட்டுவார்கள்.* இனி, நீங்கள் ஒப்பனை செய்ய ஆசைப்படும் கதாபாத்திரம்?ஒரு படம் வெளியானதும், எனது ஒப்பனையின் குறையை ரசிகர்கள் கண்டுபிடிக்காவிட்டாலும் நான் கண்டுபிடித்துவிடுவேன். அப்படி சிறு குறை கூட இல்லாமல் ஒப்பனை செய்ய வேண்டும்.தொடர்புக்கு: pattanamrasheedgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (1)

  • tadj.C - Paris,பிரான்ஸ்

    வாழ்த்துக்கள் மேலும் மேலும் மேன்மை பெறுவீர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement