Advertisement

பசி... தூக்கம்...இரட்டை குழந்தைகள் : விழிப்பணர்வு ஏற்படுத்தும் உமர் பாருக்

கர்நாடக பல்கலையில் முதுநிலை அக்குபஞ்சர் முடித்து, தற்போது தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் அக்குபஞ்சர் பாடத்திட்டக் குழு உறுப்பினராக உள்ளார், உமர் பாருக். 20 மருத்துவ நூல்கள், இலக்கியம், சிறுகதையில் ஏழு நூல்கள் எழுதியுள்ளார். 'சவுண்ட் சிட்டி' என்ற நாவலில் அரசியல் சூழலை நையாண்டி தொனியில் கூறியுள்ளார்.* மருத்துவமும், இலக்கியமும் கைவசமானது எப்படி?டாக்டர் சகோதரர்கள் பஸ்லு ரகுமான், சித்திக் ஜமால் தான் அக்குபஞ்சர் துறையின் முன்னோடிகள். 1996ல் அலோபதி மருத்துவ துறையில் இருந்து மரபுவழி மருத்துவத்திற்கு மாறினேன். உலகம் முழுவதும் 104 மருத்துவ முறைகள் மரபுவழியாக பின்பற்றப்படுகின்றன. அலோபதியை தவிர அனைத்து மருத்துவ முறைகளும் ஒரேமாதிரி உள்ளன. அக்குபஞ்சரில் இயற்கை தத்துவத்தை படிக்கிறோம். அதையே புத்தகமாகவும் எழுதுகிறேன்.* உங்கள் முதல் நூலான 'உடலின் மொழி'யில் சொல்லப்பட்டது என்ன?பழைய மருத்துவமுறைகள் ஆரோக்கியம் குறித்து பேசுகின்றன; உடலை பற்றி பேசுவதில்லை. நவீன மருத்துவம் வெறும் நோய்களை குறித்தே உள்ளன. ஆரோக்கியமாக இருப்பதற்காக 'உடலின் மொழி' புத்தகம் எழுதினேன். உடல் எவ்வாறு இயங்குகிறது, எந்தமுறையான பழக்கங்கள் மூலம் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்; நோய் வரும் காரணங்களை விளக்கியுள்ளேன்.2009ல் வெளியான இப்புத்தகம், 24 பதிப்புகளை தாண்டி ஒன்றரை லட்சம் புத்தகங்கள் விற்பனையானது. மலையாளம், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது. கன்னடம், தெலுங்கில் மொழி பெயர்ப்பாகி வருகிறது.* நோயற்று வாழ என்ன செய்ய வேண்டும்?பள்ளிகளில் மாணவர்கள் பசித்து சாப்பிடுவதில்லை. மணியடித்தால் பசிக்கிறதோ, இல்லையோ சாப்பிட அமர்கின்றனர். பசிக்கும் போது சாப்பிட்டால் தான் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். சாதாரண உணவிலிருந்தே எல்லா சத்துக்களையும் பெற முடியும். கிராம ஏழை குழந்தைகள் அதிக கவனிப்பின்றி ஆரோக்கியமாக இருப்பதையும், நகர்ப்புற வசதி படைத்த குழந்தைகள் நன்கு கவனிக்கப்பட்டாலும் ஆரோக்கியமின்றி இருப்பதும் இதற்கு உதாரணம்.குறிப்பாக உணவுமுறை, தூக்க நேரம் இரண்டையும் திருத்திக் கொண்டால், ஏராளமான நோய்களில் இருந்து தப்பிக்கலாம். உடலுக்கு பசி, ருசி இரண்டும் தேவை தான். ருசி மட்டும் இருக்கிறது, பசி இல்லை எனில் கொஞ்சம் சாப்பிட்டால் போதும். பசித்து சாப்பிடும் போது தேவைக்கு சாப்பிடமுடியும்.* பசியும், தூக்கமும் இரட்டைக் குழந்தைகளா?உடலுக்கு அடிப்படை பசியும், தூக்கமும் தான். 1952ல் அறிவியல் பூர்வமாக கிரிகோரியன் உடல் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, இரவு 11 மணிக்கு ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தால், நம் மூளையில் பீனியல் சுரப்பியில் இருந்து மெலட்டோனின் ஹார்மோன்கள் சுரக்கும். அந்தநேரத்தில் முழித்திருப்பவர்களுக்கு ஹார்மோன் சுரப்பதில்லை. தோல் பராமரிப்பு தான் ஹார்மோன் சுரப்பின் முக்கிய காரணம். ஆய்வுகள் துவக்க நிலையில் உள்ளதால், அதன் வேலையை மட்டும் வைத்து எடைபோட முடியாது. தைராய்டு நோய்க்கு காரணம், பிட்யூட்டரி சுரப்பி சுரக்காததால் தைராய்டு சுரப்பதில்லை. ஒரு ஹார்மோனை தனிப்பட்டு பார்க்கமுடியாது. உடல் சங்கிலி, இன்னொரு ஹார்மோன் தூண்டுதலுக்கு பயன்படும். ஹார்மோன் சுழற்சியை பாதிக்கும் ஒரு விஷயமாக பார்க்க வேண்டும்.* பீட்சா, பர்கர்... மேலை நாட்டு உணவுகள் சாப்பிடுவது தவறா?உணவுக்கு ஏற்ப, உடலுக்கு தன்னை தகவமைக்கும் திறன் உண்டு. நூடுல்ஸ் சீனர்களின் உணவு. சீன பாரம்பரியத்தில் சமைக்கப்பட்டால் உடலுக்கு பாதிப்பில்லை. பீட்சா, பர்கரும் அதைப் போன்றது தான். ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட எந்த உணவும், உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவில் 95 சதவீதம் ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன. உணவை ஒழுங்குபடுத்தினாலே நோய் சரியாகி விடும்.* உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதா?மருந்துகளில் கலப்படம் இருந்ததை கண்டுபிடித்து, முதன்முதலில் உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் கேரளா ஆலப்புழா மோகன் வைத்தியர். தனி இணையதளம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நம் ஊரிலும் உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, என்றார். இமெயில்: healerumargmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement