Advertisement

என்றும் தோற்காத தோட்டா தரணி

புகைப்பட கருவிகள் புக முடியாத இடங்களிலும் தன் பார்வையை தடம் பதித்து அவற்றை உருவமாக்கி திரையுலகம் மூலம் கண்களுக்கு விருந்தளிக்கும் கலை உலகின் சிற்பி, கலை இயக்குனர் 'பத்மஸ்ரீ' தோட்டா தரணி.தேசம் கடந்து பாராட்டப்படும் இந்திய கலை இயக்குனர்களின் முன்னணிக் கலைஞன். இயற்கை ஒவ்வொன்றிலும் ஒரு அழகை ஒளித்து வைத்திருக்கிறது அதை தேடுவதும், கண்டடைவதும் தான் மனிதனின் பயன். அந்த பயனை நித்தமும் தேடி வெற்றி பெறுகிறார்.1987ல் நாயகன், 1996 இந்தியன் படங்களுக்கான தேசிய விருது, 1991ல் தளபதி, 1994ல் காதலன், 2005ல் சந்திரமுகி, 2007ல் சிவாஜி படங்களில் பணியாற்றியதற்காக தமிழக அரசு விருது பெற்றவர்.கலை என்பது கூலி வாங்கி கொண்டு செய்கிற வேலை அல்ல. கற்பனை செய்து அதை வரைந்து காட்சியாக்கி 'செட்' அமைப்பதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை, என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து பணியாற்றும் இவர் காரைக்குடி கோவிலூர் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றார். அவரிடம் ஒரு நேர்காணல்...* கலை நயம் எப்படி அமைய வேண்டும்?'கோலம்' என்பது புள்ளி வைத்து தொடங்குவது. அதே போல் தான் கலை என்பது தொடர்ச்சியாக அனுபவங்களினால் வருவது. மண்ணில் செய்த உருவங்கள் தான் இன்றைய சினிமாவின் ஆர்ட்.* கலை நயத்திற்கு வரவேற்பு எப்படி?எப்போது, கம்ப்யூட்டர் வந்ததோ அப்போதே கலை நயம் போச்சு.* ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம்?ஷங்கருக்கு என்ன தேவையோ, அதை உருவாக்கி கொடுப்பது தான் என் பணி. ஷங்கர் படங்களில் பணியாற்றியதற்கு முன்பு மணிரத்தினம் உட்பட பல்வேறு இயக்குனர் படங்களில் பணியாற்றியுள்ளேன். ஷங்கர் படத்தில் பணியாற்றும்போது 25 ஆண்டு அனுபவம் இருந்தது. அவரை பொறுத்தவரை சுதந்திரம் கொடுப்பார்.* உங்களால் முடியாதது? அரங்க அமைப்பை பொறுத்தவரை இதுவரை முடியாது என்றுசொன்னது கிடையாது.* கால தாமதம் கலை நயத்தை பாதிக்குமா?முன்பு படங்களை திட்டமிட்டு எடுத்தார்கள். தற்போது அவ்வாறு எடுப்பதில்லை. யாரையும் குறை சொல்ல முடியாது. மழை வந்து விடும், வெயில் வந்து விடும். பணம் பிரச்னையாக இருக்கும். அந்த நேரத்தில் வேறு படத்தில் பணியாற்ற சென்று விடுவோம். அதன்பிறகு இந்த டைரக்டர் கூப்பிடுவார். இதனால் கலை நயம் பாதித்து வீண் பிரச்னையும் ஏற்படும்.* கலை இயக்குனர் (அரங்க அமைப்பாளர்) ஆக எது தேவை?நேர்மை, அர்ப்பணிப்பு, கவனிப்பு* 'கிராபிக்ஸ்' கலை இயக்குனரை பாதிக்கிறதா?தொழில் நுட்பம் வரவேற்கப்பட வேண்டும். 'கிராபிக்ஸ்' என்பது வெளியே தெரியக்கூடாது. கலை இயக்குனர் என்பவர் டைரக்டரை சார்ந்திருக்கிறார். பாதிக்கிறது என்று சொல்ல முடியாது.* 'செட்டிங்' எப்படி இருக்க வேண்டும்?'செட்டிங்' என்பது வெளியே தெரியக் கூடாது. இயற்கைக்கு மாறாக இருக்க கூடாது.மன்னர்கள் காலத்து படம் என்றால் அன்றைய சூழல், அன்றைய பயன்பாடு பொருட்கள் இடம்பெற வேண்டும். சினிமாவை மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில் செட்டிங் இருக்கக் கூடாது.* தற்போதைய பணி?ராணி ருத்ரம்மா தேவி படத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. ஓவிய கண்காட்சிகளும் நடத்திவருகிறேன், என்றார்.இவரை பாராட்ட thotatharranigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement