Advertisement

'கிளாமர் நிலா' மிருதுளா

மெல்லினங்கள் மெலிந்து போன புரட்சியில் பூத்த தேகம், வளைவுகளில் ஏற்பட்ட வறட்சியில் வளைந்த இடை, நிலவை உடைத்துச் செதுக்கி வடித்த கன்னங்கள், தேனில் ஊறிய பலாத் துண்டுகளில் செய்த இதழ்கள், இளசுகளின் கனவில் இறங்கி கிறங்கடிக்கும் கிளாமர் கண்கள், தெலுங்கில் 'ஐஸ்கிரீம் 2', தமிழில் 'மறுமுனை', 'வல்லினம்', திலகர் படங்களில் ஜில்லென ரசிகர்களின் இதயத்தை தீண்டிச் சென்ற தமிழ் பேசும் தென்றல் நடிகை மிருதுளா பாஸ்கர் பேசிய இனிக்கும் நிமிடங்கள் இதோ....
* உங்களை பற்றி...பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான். இப்போ பெங்களூரு வந்தாச்சு. 3 வயசிலயே பரத நாட்டியம் கத்துகிட்டேன். தொடர்ந்து பல மேடைகளில் பரதம் ஆடிய அனுபவத்தை வைச்சு இப்போ ஒரு பரத நாட்டிய ஸ்கூல் ஆரம்பிச்சுருக்கேன். யோகா பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கேன்.
* தமிழில் முதல் பட அனுபவம்தமிழில் நான் நடிச்ச முதல் படம் வல்லினம். இந்த படத்துல நான் ஹீரோயினா நடிப்பேன்னு நினைச்சுக் கூட பார்க்கல. என் நண்பர் லேப்டாப்ல என்னோட போட்டோவை பார்த்து, இயக்குனர் நேரில் வரச் சொல்லி போட்டோ ஷூட் வைச்சு செலக்ட் செய்தார்.
* நடனத்தை விட்டுவீட்டீர்களா ?என்ன இப்படி கேட்டுடீங்க! என்ன தான் நடிக்க வந்தாலும் நாட்டியத்தை எப்படி விட முடியும். இப்போக் கூட நான் பி.எல்., படிச்சுட்டு தான் இருக்கேன். நடிப்பும், படிப்பும் ஒரு பக்கம் இருந்தாலும். பல மேடைகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு தான் இருக்கிறேன்.
* திலகர் படத்தில் கிராமத்து பெண்ணாக...'திலகர்' படத்துக்கு முன் மாடர்ன், கிளாமர் கேரக்டர்ஸ் தான் நிறைய நடிச்சிருக்கேன். திலகர் படம் ஒரு புது அனுபவம். எங்க அம்மா ஊர் கும்பகோணம் பக்கம் தான், எனக்கும் கிராமங்கள் பற்றி நல்லா தெரியும். இயக்குனர் பெருமாள் பிள்ளையும் ஊக்கப்படுத்தி நடிக்க வைச்சாரு.
* சில படங்களில் கிளாமரா நடிச்சுருக்கீங்களே?ஏன் நடிக்க கூடாதா? சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம், அதுல ரொம்ப கட்டுப்பாடு இருக்கக் கூடாது. ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஒவ்வொரு விதமான நடிப்பு பிடிக்கும்; அதுல கிளாமரும் ஒன்னு. கதைக்கு தேவைப்பட்டா கிளாமரா நடிக்கலாம். தப்பில்லை.
* உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின்ஸ்அன்று ராதிகா, ஸ்ரீபிரியா. இன்று அனுஷ்கா, அமலா பால் பிடிக்கும்.
* உங்களுக்கு கதை, கதாபாத்திரம் எது முக்கியம்?முதலில் கதை நல்லா இருக்கான்னு தான் பார்ப்பேன். அதுக்கு அப்புறம் தான் கேரக்டர் முக்கியத்துவம் பற்றி முடிவு செய்வேன்.
* உங்கள் நடிப்பில் அடுத்து...நிறைய படங்கள் வந்துட்டே இருக்கு, ஆனா, டான்ஸ்ல பிஸியா இருக்கேன். என்னோட டான்ஸ் பாதிக்கக்கூடாது. அதனால இப்போ எந்த படத்துலயும் கமிட் ஆகல.
* மதுரை பற்றி சொல்லுங்களேன்'வல்லினம்' சூட்டிங் கொஞ்ச நாள் மதுரையில தான் நடந்துச்சு. நிறைய ஜிகர்தண்டா சாப்பிட்டேன். கறி தோசை பேமஸ்ன்னு சொன்னாங்க அதையும் டேஸ்ட் பண்ணி பார்த்தேன். ஆண்டிற்கு ஒரு முறை மீனாட்சி அம்மன் கோயில் வந்துட்டு போவேன். அருமையான ஊர்.
* சொந்த குரலில் டப்பிங் பேசுனீங்களாமேநானும் தமிழ் பொண்ணு தான், எனக்கும் தமிழ் நல்லா பேச வரும். 'மறுமுனை' படத்துல நானே டப்பிங் பேசிருக்கேன். தெலுங்கு படத்துலயும் பேசிருக்கேன். இனி நடிக்கும் படங்களிலும் வாய்ப்பு கொடுத்தால் பேசுவேன்.
* ஆக்ஷன் ஹீரோயினா நடிப்பீங்களாகண்டிப்பா, எனக்கு ஆக்ஷன் ரொம்ப பிடிக்கும். நான் நடிச்ச தெலுங்கு படத்துல இரண்டாவது மாடியில இருந்து கீழே குதிக்குற மாதிரி காட்சி வைச்சிருந்தாங்க. அதுல 'டூப்' இல்லாம நானே குதிச்சேன். அதுவும் 7 டேக் எடுத்தாங்க!
* தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லையே...எனக்கும் அந்த வருத்தம் இருக்கு. தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்த பின் தான் எனக்கு தமிழில் வாய்ப்பு கிடைச்சது. ஒரு தமிழ் பொண்ணு பிற மொழி படத்துல நடிச்சுட்டு வந்தா தான் தமிழில் வாய்ப்பு கொடுக்குறாங்க. தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement