Advertisement

இலங்கையின் அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்

Share
வாஷிங்டன்: இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளின் அமெரிக்க துாதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அதுல் கேஷப், 44, நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ரிச்சர்டு ராகுல் வர்மாவை தொடர்ந்து, இப்பதவியை ஏற்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் என்ற சிறப்பை, அதுல் கேஷப் பெறுகிறார். இவர்கள் இருவரும், பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள்.இந்தியாவில், அமெரிக்க துாதரகத்தில், 2005 - 08 வரை, துணை அரசியல் ஆலோசகராக பணியாற்றிய அதுல் கேஷப், தற்போது, அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறையின், துணை உதவி செயலராக உள்ளார்.பஞ்சாபில் பிறந்த இவரின் தந்தை கேஷப் சந்தர் சென், நைஜீரியாவில், ஐ.நா.,வின் பொருளாதார வல்லுனராக பணியாற்றியவர். தாய், ஜே கல்வர்ட், அமெரிக்க வெளியுறவுத் துறையிலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க துாதரகத்திலும் பணியாற்றி உள்ளார்.
புதிய பொறுப்பு குறித்து, அதுல் கேஷப் கூறியது:இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, ஊடகம், மதச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு துணை நிற்பதன் மூலம், அந்நாட்டு மக்களுக்கு உதவ, அமெரிக்கா விரும்புகிறது.
இலங்கையில், இனத்தாலும், மதத்தாலும் பிளவுபட்டுள்ள மக்களிடையே, நிரந்தர அமைதியை ஏற்படுத்தி, உள்நாட்டுப் போரில் அன்பிற்குஉரியவர்களை இழந்து வாடுவோருக்கு, நம்பிக்கைக்குரிய நீதியும், சமரச தீர்வும் கிடைக்க அமெரிக்கா பாடுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement