Advertisement

இவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது : இயக்குனர் கணபதி பாலமுருகன்

ஒன்ணு இந்தாருக்கு இன்ணொன்ணு எங்கே, அட்ரா சக்கை அட்ரா சக்கை, நான் ரொம்ப பிஸி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, வடக்குப்பட்டி ராமசாமி ஊ...ஊ..., ராமைய்யா ஒஸ்தாவய்யா பொண்டாட்டி தேடுதய்யா, நாங்களாவது சொல்லிட்டு வந்தோம் நீங்க சொல்லிட்டா வந்தீங்க?!- இப்படி இவர் பேசிய காமெடி பேச்சுக்கள் பலரது ரிங்டோன்களில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் காமெடியை கவுண்டமணிக்கு முன், கவுண்டமணிக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். ஒரு ரூபத்தில் பல நகைச்சுவை ரூபங்களை வெளிப்படுத்தும் இவர் மீண்டும் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்குகிறார். கவுண்டமணி காமெடிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்று கூறும் படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகன், தினமலர் வாசகர்களுக்காக மதுரையில் மனம் திறந்தநிமிடங்கள்...* இயக்குனராக உங்களை பற்றிஎன் சொந்த ஊர் திண்டிவனம். இயக்குனர் சுசீந்தரனின் பாண்டிய நாடு படத்தில் பணியாற்றிய அனுபவம் உண்டு. அந்த படத்திற்கு பின் நேரடியாக 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தை இயக்குகிறேன்.* தலைப்பில் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறதேஆம், தெளிவாகவே சொல்கிறேன் கவுண்டமணியின் நடிப்பிற்கு யாரும் நிகர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதோடு கதைப்படி கவுண்டமணி 'கேரவன்' வேன் முதலாளியாக வருகிறார், அதனால் இந்த தலைப்பு வைத்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும் விதத்தை பொறுத்து தலைப்பின் அர்த்தம் வேறுபடும்.* காமெடி ஜாம்பவான் கவுண்டமணி பற்றிநான் கவுண்டமணியை வைத்து படம் இயக்குகிறேன் என்று நினைக்கவே இல்லை. ரஜினியை வைத்து படம் இயக்குகிறேன் என்று தான் நினைக்கிறேன். கவுண்டமணி அந்த அளவிற்கு பவர்புல் நடிகர். வெகுஜன மக்களை கவர்ந்த அருமையான கலைஞர்.* உங்கள் கதை கேட்டு கவுண்டமணி என்ன சொன்னார்நகைச்சுவை காட்சிகள் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என கதை சொல்லும் போதே சொல்லிவிட்டார். கதைப்படி, நடிகர்கள் அனைவருக்கும் இவரது கேரவன் தான் செல்கிறது. இதை சுற்றி தான் கதை அமைத்திருக்கிறேன். படத்தில் கவுண்டமணி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்துபவராக வருகிறார். கதையில் இன்றைய அரசியலையும் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்.* இது எப்படிப்பட்ட படமாக இருக்கும்இது முழுக்க முழுக்க கவுண்டமணி ஸ்டைல் படம். கவுண்டமணியுடன் நடிக்க விரும்பும் இன்றைய இளம் நடிகர்களின் ஆசையை இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்துள்ளோம். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இப்படம் இவருடைய சண்டியர் தனத்தை வெளிப்படுத்தும்.* அடிக்கடி அடிவாங்கும் செந்தில் இருக்கிறாரா ?செந்திலை நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறோம், அவருடைய பங்களிப்பை எதிர்பார்க்கலாம், படம் வெளியான பின் பாருங்கள் தெரியும்.* அறிமுகப் பாடல், ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாஎன்ன இப்படி கேட்டு விட்டீர்கள் ?! தேவா குரலில் அருமையான அறிமுகப்பாடல் உண்டு. இதுமட்டுமா, கவுண்டமணியை ஆக்ஷன் காட்சியில் பின்னி பெடல் எடுக்க வைத்திருக்கிறார் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன்.* உங்கள் படக்குழு பற்றிதயாரிப்பாளர் சண்முகம் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால் இப்படம் இயக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கண்ணன், தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜாமுகமது, ஹீரோயின் சனா, ரித்விக்கா, பாடகர் வேல் முருகன், நடிகர்கள் சவுந்திராஜன், வளவன் என பெரிய பட்டாளமே எங்கள் குழுவில் உள்ளது.* ஏன் மதுரையை தேர்வு செய்தீர்கள்மதுரை என்று சொல்லும் போதே ஒரு அழுத்தம் இருக்கிறது. நான் சினிமாவில் மட்டுமே பார்த்தமதுரையை என் கண்ணோட்டத்தில் பார்க்க ஆசைப்பட்டேன். இது ஒரு டிராவல்ஸ் சப்ஜெட்டாகஇருப்பதால் மதுரை நோக்கி பயணித்திருக்கிறேன்.* எப்போது காமெடி விருந்து தரப்போகிறீர்கள்சுறுசுறுப்பாக சூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. மிக விரைவில் திரையில் கவுண்டமணியின் காமெடி விருந்தை பார்ப்பீர்கள். trytrytryagaingmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement