மென்மையான பெண்மைக்குள் மறைந்திருக்கும் 'பேராண்மை', அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கி கலக்கிய அழகிய தென்றல், தமிழ் சினிமா கதவுகளை 'திறந்திடு சீசே' என திறந்து நுழைந்த மந்திரப் புயல், நெஞ்சை கொள்ளை கொள்ளும் தஞ்சை தென்றல் தன்ஷிகா மதுரையில் தினமலர் வாசகர்களுக்காக பேசிய நிமிடங்கள்...* ஆக்ஷன் கேரக்டர்களில் நடிப்பது குறித்து'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் இயக்குனர் வசந்த பாலன் 'அரவான்' படவாய்ப்பை கொடுத்தார். இப்படத்தில் தான் தன்ஷிகா ஒரு கதாநாயகியாக தனியாக தெரிந்தார். நான் சவாலான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்பதை சினிமா உலகிற்கு தெரியப்படுத்திய படம் அது.* பாலா இயக்கத்தில் பரதேசி...முதலில் வேதிகா கேரக்டரில் நடிக்க தான் பாலா என்னை அழைத்தார். பின், வேறு ஒரு 'முக்கிய கேரக்டர் உள்ளது அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும்' என மீண்டும் என்னை அழைத்து நடிக்க வைத்தார். பாலா இயக்கத்தில் நடித்த பரதேசி எனக்கு ஒரு மைல் கல் என்று கூறலாம்.* 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய் நடிப்புஅவருடன் 'மாஞ்சா வேலு' படத்தில் நடித்துள்ளேன். எத்தனை படம் நடித்தாலும் முதல் படம் நடிப்பதை போல பரபரப்பாகவே இருப்பார். இந்தப் படத்திற்கு பின் 'டாப் ஹீரோ' ஆகிவிட்டார்.* அப்படியே அஜித் பற்றியும்...இந்த கேள்வி கேட்டதே மிகவும் சந்தோஷமாக உள்ளது. உண்மையை பேசும் இயல்பான நடிகர். தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறும் பாசமுள்ளவர். இந்த ஆண்டு இவருடன் நடிப்பேன் என்று நம்புகிறேன்.* உங்கள் படத்திற்கு நீங்களே டப்பிங் பேசுவீர்களாமே ?!நான் தஞ்சாவூர் தமிழ் பொண்ணுங்க! நான் நடிக்கும் படங்களுக்கு நானே தான் டப்பிங் பேசுகிறேன்.* சிலம்பம் சுற்றுவதில் வல்லவராமே?பேராண்மை படத்திற்காக சிலம்பம் கற்றேன். இப்போது பாண்டியன் மாஸ்டரிடம் முறைப்படி சிலம்பம் கற்கிறேன். ஜிம்னாஸ்டிக் செய்வதிலும் திறமையை வளர்த்துக் கொண்டேன். இக்கலைகளை கற்றதால் தான் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் சிதறாமல் நடிக்க முடிகிறது.* நீங்கள் பார்த்து வியந்த ஹீரோ, இயக்குனர்'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் நடிப்பை பார்த்து வியந்தேன். இயக்கத்தில் வியக்க வைத்தவர் மணிரத்னம்.* மதுரையை பற்றி...மதுரையில் மல்லிகை பிரபலம் என்பார்கள். ஆனால், எனக்கு இங்கு கிடைக்கும் சூடான அல்வா தான் ரொம்ப பிடிக்கும். ஒரு சினிமாவின் வெற்றியை தீர்மானிக்கும் இடமும் இது தான்.* அடுத்து என்ன படம் நடிக்கிறீர்கள்'திறந்திடு சீசே' நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து, மதுரை நாகராஜன் இயக்கத்தில் 'காலக் கூத்து', சமுத்திரக்கனியின் 'கிட்னா', மற்றும் 'விழித்திரு' படங்களில் நடித்து வருகிறேன்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!