Advertisement

பாடலாகி...பாடி உருகி : பிரகதியின் சுருதி

ஆதார சுருதி இவர் அன்னை என்றால் அதற்கேற்ற லயம் இவர் தந்தை. சுருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம். இவர் இசை வீட்டின் திறந்த கதவு என்றும் மூடாது; சிறந்த இசை விருந்து குறையாது. சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த இன்டர்நேஷனல் இசை தென்றல், 'டிவி' பாடல் நிகழ்ச்சிமூலம் தமிழ் சினிமாவில் பிரகாசமான பாடகியாக அறிமுகமான பிரகதி இசையோடு இசையாகி பேசிய நிமிடங்கள்...* மியூசிக் ரொம்ப பிடிக்குமா?என் அப்பா குரு, அம்மா கனகா மியூசிக்கில் அதிக ஆர்வமுள்ளவர்கள். வீட்டில் எந்த நேரமும் ஏதாவது ஒரு பாடல் ஒலித்து கொண்டே இருக்கும். இப்படி ஒரு இசைச் சூழலில் வளர்ந்த எனக்கு இசை பிடிக்காமல் போகுமா என்ன?* இப்போ என்ன படிக்கிறீங்கஅமெரிக்காவில் 'பிளஸ் ஒன்' படிக்கிறேன். கர்நாடிக், இந்துஸ்தானி மியூசிக் முறைப்படி கத்துக்கிட்டு இருக்கேன்.* உங்களுக்கு மியூசிக் கற்றுக் கொடுத்தவர்கள்சினிமாவில் பாட ஆரம்பிக்கும் முன் அமெரிக்காவில் சங்கீதா சுவாமிநாதனிடம் இசை கற்றேன். இப்போ சென்னையை சேர்ந்த டில்லி சுந்தரராஜனிடம் 'ஸ்கைப்' மூலம் ஆன்லைனில் இசை கற்று வருகிறேன்.* இவ்வளவு அழகாக தமிழ் பேசும் ரகசியம்இசையை படிக்கும் போதே தமிழும் பேச படிச்சுகிட்டேன்; அவ்வளவு தான், ரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க.* இயக்குனர் பாலாவின் பரதேசியில் பாடியது பற்றிஇயக்குனர் பாலா, டிவி பாடல் நிகழ்ச்சியில் நான் பாடியதை பார்த்து என் வாய்ஸ் பிடிச்சு போயி எனக்கு 'பரதேசி' படத்துல 'ஓர் மிருகம்' என்ற பாடலை பாட வாய்ப்பு கொடுத்தார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எனக்கு உதவினார்.* பாலாவின் தாரை தப்பட்டையில் நடிக்கிறீங்களாமே ?!இந்தப் படத்துல என்ன மாதிரியே ஒரு பெண்ணை நடிக்க வைக்கணும்ன்னு பாலா என் போட்டோவை வாங்கி பொருத்தமான பெண்ணை தேடினார். 'என் மனதில் இருக்கும் உன் தோற்றம் கொண்ட பெண் கிடைக்கவில்லை நீ நடிக்கிறியா'ன்னு கேட்டார். அவ்வளவு தான், இன்னும் ஷூட்டிங் போகல. நடிக்கணும்னு பெரிசா ஆசையில்லை ஆனா, அதையும் செஞ்சு பார்க்க சின்னதா ஒரு ஆசையிருக்கு.* பிடித்த பாடகர்கள், இசையமைப்பாளர்சங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன், ஏ.ஆர்.ரஹ்மான்* நீங்கள் சமீபத்தில் கேட்டு ரசித்த தமிழ் பாடல்'ஐ' படத்தில் வரும் 'என்னோடு நீ இருந்தால்'* எதிர்கால திட்டம், லட்சியம்அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை 50 ஆல்பம் பாடியாச்சு, இனி படிப்பை முடித்த பின் முழு நேர பாடகியாக அனைவரையும் மகிழ்விக்க வேண்டும்.singerpragathigmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement