Advertisement

பிரியமானவளே...!

இதழ்களில் இனிக்கும் சிரிப்பு... கனவுகள் மிதக்கும் கண்கள்... கை, கால் முளைத்த காற்றாய்... ரசிகர்களின் ஆரவார வெள்ளத்தில் மதுரைக்கு மிதந்து வந்தார் நடிகை ப்ரியா ஆனந்த்.
"மின்வெட்டு நாளில் மின்சாரம் போல நீ வந்தாய்... வா வா என் வெளிச்சபூவே... வா...' கவிஞர் வாலியின் வரிகளுக்கு கண்களால் உயிரூட்டி திரையில் "எதிர்நீச்சல்' மூலம் வலம் வந்தவர். அதற்கு முன்பே வாமனன் படத்தில் "ஏதோ செய்கிறாய்...' பாடல் மூலம் இளைஞர்களின் மனதை "ஏதோ' செய்தவர். பிள்ளைத் தமிழும் கொள்ளைச் சிரிப்புமாய் ரசிகர்களை ஆட்டுவிக்கும் ப்ரியாவுக்கு ஐந்து மொழிகள் அத்துப்படி. அமெரிக்கா சென்று இதழியல் பட்டம் பெற்ற சென்னையின் செல்லப் பெண்.
மதுரைக்கு வந்த ப்ரியா தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு சந்தோஷமாய் பேட்டி அளித்தார்.

* இந்தியில் "இங்லீஷ் விங்லீஷ்' மூலம் அறிமுகமான போது ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம்....
பிரமிப்பாக இருந்தது. நான் ஸ்ரீதேவியின் பரம ரசிகை. அவருடைய படங்களை பார்த்து பார்த்து வளர்ந்தேன். எனக்கு பிடித்த நடிகையுடன் நானும் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மிக யதார்த்தமாக நடந்தது. அவருடைய நடிப்புக்கு முன்னால் என் நடிப்பு எடுபடுமா என்ற பயம், படம் முடியும் வரை இருந்து கொண்டே இருந்தது. மக்கள் என்னையும் நடிகையாக ஏற்றுக் கொள்வார்களா என்று தவித்துப்போனேன். படம் வந்தபிறகு தான் நிம்மதியாக உணர்ந்தேன்.
* ஐந்து மொழிகள் தெரியும் என்றால் படங்களில் "டப்பிங்' இல்லையா.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு நானே சொந்தக்குரலில் பேசுகிறேன். என் முகபாவத்துக்கு என்னுடைய குரல் தான் நன்றாக பொருந்தும்.
* உங்களை அடையாளப்படுத்திய படம்...
என் படங்களில் பாடல்கள் தான் என்னை பிரபலப்படுத்தியது என்பேன். நான் நடித்த வாமனன் படத்தில் "ஏதோ செய்கிறாய்...' பாடல் நான் ரசித்து செய்தது. எதிர்நீச்சல் படத்தில் வெளிச்சப்பூவே வா...பாடலும் ரொம்ப பிடிக்கும்.
* மாடலிங் அனுபவம் சினிமாவுக்கு கைகொடுத்ததா.
மாடலிங் எனக்கு சினிமா உலகை இன்னும் வெளிச்சமாக்கியது. சினிமாவிலும் பட சூட்டிங்கிற்கு முன் ஸ்டில் சூட் எடுப்பார்கள். எந்த கோணத்தில் நாம் அழகாக தெரிவோம் என்பதெல்லாம் எனக்கு மாடலிங் கற்றுக் கொடுத்தது.
* இயக்குனர் ஷங்கரின் படத்தில் எப்போது.
அவரை நான் நேரில் பார்த்தது இல்லை. அவரின் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும் என்பது ஆசை.
* சினிமாவிற்கு வராவிட்டால்...
சினிமா என்பதை வெறும் பொழுதுபோக்காக நினைக்கவில்லை. வாழ்க்கையாக நினைக்கிறேன். படம் துவங்குவதற்கு முன்னும், படம் முடியும் வரையிலும் ஒவ்வொரு பிரமிலும் அனுபவித்து செய்கிறேன்.
* நட்பு வட்டாரம்...
பெங்காலியில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்காகவே பெங்காலி மொழி கற்றுக் கொண்டேன். ஆனா சினிமாவுக்கு வந்தபின் "டச்' விட்டு போச்சு.
* தமிழ் பொண்ணு தமிழ் படங்களில் பிசியென்றால் ஆச்சர்யம் தானே...
தமிழ் தெரியும்னு சந்தோஷப்படுறாங்க. அதே சமயம் நல்லா தமிழ் தெரியும்னு நாலு பக்க டயலாக் தர்றாங்க. "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்துல நடிகர் நாசரோட கோர்ட் சீன்ல இப்படித்தான் நடந்துச்சு என்றார் செல்ல சிணுங்கலாய். பேச்சிலும் செய்கையிலும் துளியும் பந்தா இன்றி "ப்ரியமாக' பேசி விடைபெற்றார் ப்ரியா ஆனந்த்.
இமெயிலில் பேச: priyawajanandgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement