Advertisement

பறக்கும் 'சின்ன சில்க்'

பெண்களை பார்த்து வசப்படும் ஆண்கள் மேகத்தில் பறப்பதாய் உணர்ந்திருப்போம். இது என்ன பறக்கும் பெண்? கட்டாயம் உங்கள் எண்ணத்தில் இந்த கேள்வி உதித்திருந்தால் உறுதி செய்து கொள்ளுங்கள் நிச்சயம் இவர் பறக்கும் பெண் தான். தெலுங்கு திரை உலகில் 'சின்ன சில்க்' ஆக வலம் வரும் சினேகா தாபா. தமிழில் அய்யனார் வீதி படம் மூலம் அறிமுகமாகி இளசுகளை கிறங்கடிக்க காத்திருக்கிறார். 'தினமலர்' வாசகர்களுக்காக அவரை தொடர்பு கொண்ட போதுதமிழ் கலந்த ஆங்கிலத்தில் நாம் கேட்ட கேள்விகளுக்கு தெலுங்கு கலந்த ஆங்கிலத்தில் அவர் அளித்த பதில்கள்...
* சினிமாவில் 'குத்துப் பாட்டு' பிரிவை ஏன் தேர்வு செய்தீர்கள்?இளமையிலிருந்தே நான் டான்சர். நடனத்தில் கடினமானது, கவரக்கூடியது 'குத்துப் பாடல்கள்' தான். எனக்கு அது உகந்தது என்பதால் தேர்வு செய்தேன்.
* ஒரு பாடலுக்கு தலைகாட்டுவதால் ரசிகர்களை பெற முடியுமா?தெலுங்கில் இதுவரை 30 படங்களில் 'குத்து டான்ஸ்' ஆடியுள்ளேன். ஒவ்வொன்றிலும் எனக்கு கிடைத்த வரவேற்பு தான் என் படங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. இரு படங்களில் என்னை ஹீரோயின் ஆக்கியதும் 'குத்து டான்ஸ்' தான்.
* குத்து பாடல்களில் பெரும்பாலும் வில்லன்களுடன் தானே டூயட் இருக்கும்?ஹ...ஹ...ஹ... அது என்னவோ உண்மை தான். ஸ்ரீ காந்த், ஆஷிஷ் வித்யார்த்தி, ஷிண்டே, ரிஷி, சத்யபிரகாஷ் என என்னோடு குத்தாட்டம் போட்டவர்கள் ஏராளம்.
* 'தெலுங்கு-தமிழ்' குத்தாட்டத்தில் வேறுபாடு இருக்கிறதா?நான் ஐதராபாத் பெண் என்பதால் தெலுங்கு நன்கு புரியும். அதிலிருக்கும் சுலபம் தமிழில் இல்லை. ஆனால் தமிழில் அனைவரும் 'ஹெவி ஸ்டெப்' போடுகிறார்கள். அவர்களுக்கு ஈடுகொடுப்பது கடினம்.
* நடனம் மீது ஏன் இந்த மோகம்?எனக்கு நடனம் மீது காதல். அது தான் என்னை இங்கு கொண்டு வந்தது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் விமானப் பணிப்பெண் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நேர்முகத் தேர்வு முடிந்து வேலைக்கும் தேர்வாகி விட்டேன். இருந்தும் நடனமாடிக் கொண்டிருக் கிறேன்.
* அப்போ... விமானத்தில் பறந்துடுவீங்களா?கண்டிப்பா... வேலையில் சேரும் போது சினிமாவில் தொடர முடியாது. விமானப் பணிப்பெண் வேலையும் நான் ரசித்தது தான், என்றார்.நடனத்தில் பறந்த பெண், விமானத்திலும் பறக்கவிருக்கிறார்... பறந்த உங்கள் மனதை இறக்கி வைக்க விரும்பினால் sneha.chweetgirlgmail.comல் தொடர்பு கொள்ளலாம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement