Advertisement

பாகிஸ்தானில் இந்திய நாகரிகம்

1947ல் இந்தியப் பிரிவினை நேரத்தில் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய அகழாய்விடங்களின் எண்ணிக்கை நாற்பதாக இருந்தது. இவற்றுள் இரண்டைத்தவிர மற்ற அனைத்தும் பாகிஸ்தானில் இருந்தன. குறிப்பாகச் சொல்வதானால் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான் பிரதேசங்களில் இருந்தன. 1960க்குள் இந்த இடங்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையான அகழ்வாய்வுப் பணிகளின் காரணமாக, குறிப்பாக இந்தியப் பகுதியில் நடத்தப்பட்டவற்றின் பலனாக இந்த ஆய்விடங்களின் எண்ணிக்கை 1979ல் 800 ஆகவும், 1984ல் 1400 ஆகவும் உயர்ந்தது.கிரிகரி பொஸ்ஸல் என்ற அமெரிக்க அகழ்வாராய்ச்சியாளர் ஹரப்பாவில் மிக விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அநேகம் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 2600 ஆய்வு பகுதிகள் பற்றிய கெஜட்டியரை 1999ல் வெளியிட்டார். சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியலின்படி இது இப்போது 3700க்கும் மேலாக இருக்கிறது. ஒரு வாரமோ மாதமோ கூட புதிதாக இடங்கள் கண்டுபிடிக்கப்படாமல் கழிவதில்லை. அந்தப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை 'நகரங்கள்' அல்லது 'முழு வளர்ச்சியடைந்த' கட்டத்தைச் சேர்ந்தவை என்று கடைசியாக வந்திருக்கும் இரண்டு பட்டியல்கள் ஒருபோலக் கூறுகின்றன.இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக 1920களுக்குப் பிறகு ஹரப்பா நாகரிகம் பரவியிருந்த இடத்தின் பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நாம் மக்ரான் கரையோரமாக மேற்கே இரான் வரை சென்றுவிட்டோம். வட ஆஃப்கனிஸ்தானில் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான, ஹரப்பா ஆய்விடம் 1975ல் கண்டுபிடிக்கப்பட்டது: அதன் பெயர் ஷார்த்துகை. இது அமு தர்யா (புராதன ஆக்ஸஸ் Oதுதண்) நதியின் இடது கரையில், இன்றைய தஜிக்கிஸ்தான் எல்லைக்கு அருகில், இந்து குஷ்மலைகளுக்கு குறுக்கே, ஹரப்பாவிலிருந்து 1000 கிலோ மீட்டருக்கு மேல் தொலைவில் இருக்கிறது! இன்னுமொரு இடம் ஜம்முவிலிருந்து முப்பது கி.மீ. தள்ளி, செனாப் நதிக்கரையிலுள்ளது. ஆனால், இதைவிட நம்மை ஆச்சரியப்படவைக்கும் ஒரு செய்தி, இந்தியாவின் பஞ்சாப் ஹரியானா, வடராஜஸ்தான், பாகிஸ்தானிலுள்ள கோலிஸ்தான் ஆகிய இடங்களில் சிறிதும், பெரிதுமான நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் காணப்படுகின்றன. இதுதான் கக்கர்ஹக்ரா நதி நீர் பாய்ந்து வருமிடம். இவற்றில் சிலவற்றைப் பற்றி அத் 7ல் பார்க்கலாம். குஜராத் மாநிலத்திலும் ஹரப்பா ஆய்விடங்கள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக இந்த நாகரிகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகள் முறையே மேற்கு உத்தரபிரதேசம் வரையிலும், நர்மதை தப்தி நதிப்பள்ளத்தாக்கு வரையும் தள்ளிக்கொண்டுசெல்லப்பட்டன. ஹரப்பாவாசிகளுக்கு விந்திய மலைக்குத் தெற்கே இருந்த பிரதேசத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லையென்றே தோன்றுகிறது. ஆனால், அகழ்வாராய்ச்சியாளர்களோ அவர்களுக்குத் தென்னிந்தியாவுடன் அவ்வப்போது தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.இந்த ஹரப்பா நாகரிகம் மொத்தம் எட்டு லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் பரவியிருந்தது. அதாவது, இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பின் கால் பாகம். அல்லது அன்றைய சமகால நாகரிகங்களுடன் ஒப்பிட்டுச் சொல்வதானால், எகிப்து, மெசபடோமியா நாகரிகம் இரண்டும் சேர்ந்து பரவியிருந்த நிலப்பரப்பின் அளவு. இந்த மாபெரும் நிலப்பரப்பு அன்றைய மக்களுக்கு விசேஷமான பல நன்மைகளைத் தந்திருக்கவேண்டும். அதேநேரம் அவர்களுக்குப் பல சவால்களையும் தந்திருக்கவேண்டும்.அங்கு, மனித வாழ்வுக்கு அவசியமான பொருட்கள் அதிக அளவில் கிடைத்திருக்கவேண்டும். மனித வளமும் அனுபவமும் வேண்டிய அளவுக்கு இருந்திருக்கவேண்டும். இவையே அந்த விசேஷ நன்மைகள். சவால்கள் என்று பார்த்தால், விரிந்த நிலப்பரப்பில் காணப்படும் பல்வேறு வகையான பிராந்திய கலாசாரங்களை ஒன்றிணைக்க, குறைந்தபட்சம் அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியிருந்திருக்கும். அவற்றை ஒன்றிணைந்து செயல்படவைக்க வலுவான தொடர்புவலை இருந்திருக்கவேண்டும். சில நூற்றாண்டுகள் அளவில் ஹரப்பா மக்கள் இந்தச் சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கவேண்டுமென்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அதற்காக என்ன செய்தனர், சவால்களை எப்படிச் சமாளித்தனர் என்பது மட்டும் இன்று வரை புரிந்து கொள்ள முடியாத மர்மமாக உள்ளது.இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த நிலப்பரப்பு அவர்களுக்கு மட்டுமே முழு சொந்தமானதாக இருந்திருக்கவில்லை. இந்த நிலப்பரப்பின் விளிம்புகளிலும் சில நேரங்களில் அதற்கு உள்ளாகவும் பல தாமிர கற்கால நாகரிகங்களின் (இடச்டூஞிணிடூடிtடடிஞி)* அடையாளங்கள் காணப்பட்டன. இவை கிராம வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டவை. இங்கிருந்த மக்கள் ஹரப்பாவாசிகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பின்பற்றவில்லை. இதைத்தவிர இன்று போலவே அன்றும் அங்கிருந்த மலைப்பிரதேசங்களில் மேற்கே பலூசிஸ்தானில் ஆரம்பித்து வடக்கிலும், கிழக்கிலும் இமயமலையின் அடிவாரம் வரை பழங்குடிக் கூட்டத்தினரும் பல்வேறு நாடோடிக் கூட்டங்களும் வசித்து வந்தனர்.
0மெசபடோமிய நாகரிகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதன் அடிப்படையில் மொஹஞ்ஜோதரோவும் பொ.யு.மு.3250 முதல் பொ.யு.மு.2750 வரையுள்ள கால அளவில்தான் வளர்ச்சியடைந்தது என்று ஜான் மார்ஷல் கருதினார். ஆனால், 1950களுக்குப் பிறகு பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ரேடியோ கார்பன் பரிசோதனையில் சிந்து சமவெளிப்பிரதேசத்தில் நகரங்கள் முதன்முதலாக பொ.யு.மு.2600ல் தோன்றின என்றும், பொ.யு.மு.1900ம் ஆண்டில் அவை பெரும்பாலும் சிதைந்துவிட்டன (சில இடங்களில் அதற்கு முன்பாகவே) என்றும் தெரியவந்தது. இந்த 700 ஆண்டு கால அளவுதான் சிந்து சமவெளி நாகரிகத்தின் முழுவளர்ச்சியடைந்த கட்டம் எனக் கூறலாம். இதன் முக்கிய அம்சங்களாக நன்கு முன்னேற்றமடைந்த நகர வாழ்வு, சீரான அளவில் தயாரிக்கப்பட்ட செங்கற்கள், தரப்படுத்தப்பட்ட எடைக்கற்கள், இன்றும் புரிந்து கொள்ள முடியாதபடி ஏதோ எழுதப்பட்டிருந்த மாக்கல் முத்திரைகள், உருவங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கலை வடிவங்கள், வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள், ஆபரணங்கள், தினசரி உபயோகப் பொருட்கள் ஆகியவை இருக்கின்றன.வெளிப்படையாகத் தெரியாத சில அம்சங்களும் இருக்கின்றன: நதிகளில் நீரோட்டம் சீராக இருந்திருக்கவில்லை. பருவ மழையும் சீராக இருந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் அனைத்து மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயமுறை இருந்திருக்கிறது. இரண்டாவதாக, மேம்பட்ட தொழில் நுட்பமுறைகள், குறிப்பாக வெண்கலப் பொருட்களைத் தயாரித்தல், நீர் மேலாண்மை, சுகாதாரம், பாசிமணி மாலைகள் தயாரித்தல் ஆகியவையும் இங்கு வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது.மூன்றாவதாக, மேற்சொன்ன தொழில்கள் நன்கு முன்னேறியிருக்க வேண்டுமென்றால் அதற்கேற்ப அங்கு உள்நாட்டு வியாபாரம் வளர்ந்திருக்கவேண்டும். சில நேரங்களில் அதற்கு இணையாக வெளிநாட்டு வியாபாரமும் வளர்ந்திருக்க வேண்டும்.நான்காவதாக, நாம் சற்று முன் பார்த்ததுபோல், அங்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்பட்ட வேறு பட்ட கலாசாரங்களும், பழக்க வழக்கங்களும், மனித இனங்களும், அவர்களுடைய மொழிகளும், பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டரிலான ஹரப்பா பிரதேசம் முழுவதிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான நகர அமைப்புகளும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் முறையும் காணப்பட்டன.மேற்கூறிய கடைசி காரணத்துக்காகவே, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிப் புதிய கோணங்களில் ஆய்வு செய்திருந்த ஜிம் ஷாஃபர் என்ற அமெரிக்க அகழ்வாராய்ச்சியாளர் இந்தக் காலகட்டத்தை 'ஒருங்கிணைப்புக்காலம்' என்று அழைக்கலாமென யோசனை கூறினார்.மொஹஞ்ஜோதரோ நகரத்தின் மக்கள் தொகை 40,000 முதல் 50,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிப் பார்த்தால் அதுவே மிகவும் பெரிய நகரமாக இருந்திருக்கவேண்டும். அதன் நிலப்பரப்பு 150 முதல் 200 ஹெக்டேர் எனக் கணக்கிடப்பட்டது. அதில் ஐந்தில் ஒரு பாகத்தில் மட்டுமே அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பிரதேசத்தின் நகர்ப்புற அம்சங்கள் பற்றி விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ள மீகேல் யான்ஸன் என்ற ஜெர்மன் அறிஞர் இதன் பரப்பு 300 ஹெக்டேராக இருந்து இருக்கலாமென்று கூறுகிறார்.17 இது சரியாக இருந்தால், புராதன உலகில் இதுதான் பரப்பளவில் மிகப் பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும். மொஹஞ்ஜோதரோவின் நிலப்பரப்பில் ஹரப்பா பாதியளவு இருந்தது. ராக்கிகரி (கீச்டுடடிஞ்ச்ணூடடி) 105 ஹெக்டேர்; பனவாலி10 ஹெக்டேர்; இரண்டுமே ஹரியானாவில் இருக்கின்றன. ராஜஸ்தானில் இருக்கும் காலிபங்கன் 12 ஹெக்டேர்; குஜராத்தில் இருக்கும் ரங்கப்பூர் சுமார் 50 ஹெக்டேர்; லோத்தல்07 ஹெக்டேர்; தோலவிரா48 ஹெக்டேர் (கோட்டைக்குட்பட்ட பகுதிகள், இதே அளவு வெளியிலும் இருக்கக்கூடும்) போன்ற பிற நகரங்களும் ஊர்களும் இருந்தன. அகழ்வாராய்ச்சியாளர்களின் மண் வெட்டிக்குச் சிக்காத பகுதிகள் இன்னும் நிறைய இருக்கின்றன: கோலிஸ்தான் பாலைவனத்தில் ஹக்ரா நதிக்கரையிலுள்ள கன்வேரிவாலாவின் பரப்பு 80 ஹெக்டேர் இருக்கும்.
=========சரஸ்வதி : ஒரு நதியின் மறைவுமிஷல் தனினோதமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 416 விலை ரூ.300இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

Advertisement