Advertisement

பறவைகளே... உங்கள் சொந்த ஊர் என்ன?

பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் வாழ்க்கை முறை, இடம் பெயர்வு, உணவு தேடுதல் போன்றவை சுவாரஸ்யமானது.
இந்தியாவிற்கு வடக்கே உள்ள நாடுகளான திபெத், மலேசியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் தெற்கு நோக்கி செல்கின்றன. குளிர்காலத்தில் சூரியன் இருக்கும் நேரம் குறைவு. வெளிச்சமும் அதிகம் இராது. எனவே பறவைகள் இரை தேடுவது சிரமம். தட்ப வெப்பம் வெகுவாக குறைந்து விடும். எனவே அதற்குள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து விடும். வடக்கே சைபீரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பறவைகள் பல இமயமலையை கடந்து விடும். சில பறவைகள் கடற்கரை ஓரம் குஜராத் கடல், அசாம் வழியே ஆகஸ்ட் முதல் வாரத்தில்
வரத்துவங்கும். ஏப்ரல், மே மாதங்களில் வெளியேறி விடும்.சூரிய ஒளி தேவை
ஒரு பறவையின் சொந்த ஊர் என்பது, அது முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடம். இந்தியாவிற்கு வடக்கில் உள்ள நாடுகளில் மே, ஜூன் மாதங்களில் சூரிய ஒளி 14 முதல் 16 மணி நேரம் கூட இருக்கும். நார்வேயில் இரவு 12 மணிக்கு கூட சூரிய ஒளி இருக்கும். சூரிய ஒளி அதிகம் இருந்தால் தான் தன்குஞ்சுகளுக்கு இரை அதிகம் கொடுக்கலாம். இந்தியாவில் 12 மாதங்களில் நடப்பது வடக்கில் 6 மாதங்களில் முடியும். அங்கு இரை தேடுவது, குஞ்சு பொரிப்பது போன்றவை இக்காலத்திலேயே எளிதாக முடிந்து விடும். வடஇந்தியாவில் இருந்தும் பறவைகள் தென்னிந்தியாவிற்கு வரும். சைபீரியாவில் இருந்து வரும் சில பறவைகள், வட இந்தியாவிலேயே தங்கிவிடும். சில தான் தெற்கே வரும்.
இடம்பெயர்வது எப்படி
தாய், தந்தை பறவைகள் சொல்லி குஞ்சுகள் இடம் பெயர்வது இல்லை. தன்னிச்சையாக நடக்கும். தண்ணீர் பறவை, நிலப்பறவை என பல பறவைகள் இடம் பெயர்கின்றன. ஒரு பறவை ஓராண்டில் ஒரு இடத்திற்கு வந்தால் அடுத்த ஆண்டுகளிலும் அங்கு வரும். சூரியன், நட்சத்திரம், நிலஅமைப்பு,
கதிர்வலைகள் போன்றவற்றின் அடிப்படையில் பறவைகள் மீண்டும் வரும்.அரிஸ்டாட்டில் காலத்தில் முதன்முதலில் பறவைகள் இடம் பெயர்தல் கண்டு பிடிக்கப்பட்டது. 'சக்தி முத்தி' என்ற புலவர் சங்ககாலத்திலே 'நாராய், நாராய் செங்கால் நாராய் வடதிசை மீறி தென்திசை சென்றாய் நாராய்' என பாடியுள்ளார். இடம் பெயர்வதை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் பறவைகளை வலை வைத்து பிடித்து அவற்றின் அளவுக்கு ஏற்ப அலுமினிய வளையங்களை இவற்றில் மாட்டி விடுகின்றனர்.
மும்பையில் உள்ள இயற்கை வரலாற்று கழகம் 1884 ல் துவக்கப்பட்டது. பறவைகள் நிபுணர் சலீம் அலி இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர். தற்போது ஜி.பி.எஸ்., முறையில் பறவைகளில் பொருத்தி அந்த பறவைகள் எங்கு செல்கிறது என்பதை 'சாட்டிலைட் டிரான்ஸ்மீட்டர்' மூலம் அறிகின்றனர்.
நீர்ப்பறவைகள்
மதுரைக்கும் நீர்ப்பறவைகள் பல வருகின்றன. வடகிழக்கு பருவமழை பொழியும் அக்டோபர், நவம்பரில் வேடந்தாங்கல், கூந்தங்குளம், வேட்டங்குடி, சித்திரங்குடி ஆகிய இடங்களுக்கு வடநாட்டுப்பறவைகள் வருகின்றன. இவை இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இந்த ஆண்டு மழை இல்லாமல் இருந்தால் பறவைகள் வராது. நம்மூரில் குஞ்சு பொரிக்கும் நாராய், கொக்கு, போன்றவை வடக்கு நோக்கி செல்லாது. 'காமன் ஸ்வாலோ'(தகைவிலான் குருவி) தண்ணீரிலும், ரோட்டிலும் பறக்கும்.
தகைவிலான் நிலப்பறவை.'கிரீனிஸ் லிப்வாப்லர்' என்ற பறவை இமயமலையிலிருந்து இங்குவரும். இதை 'சிட்டு' என்பர். இதில் நான்கைந்து வகை உண்டு. மலை பகுதிக்கும், மலை அல்லாத மதுரை போன்ற பகுதிகளுக்கும்
நிலப்பறவை வரும்.
'பிரவுன் சிர்க்', 'புளூ டெய்ல் பீ ஈட்டர்' (நில வாழ்பஞ்சுருட்டான்) போன்றவை வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு இடம் பெயரும். சில கழுகு இனங்களும் இடம் பெயரும். 'பூட்டட் ஈகிள்' ,'ஆஸ்பிரே' என்ற மீன்பிடிப்பறவை போன்றவை இவ்வகை சார்ந்தது. 'கிரேட்டர் ஸ்பாட்டர் ஈகிள்' மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா வரும். நம்மூரில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வாத்து இனம். இவை இரு வகையாக உள்ளன. 'நாதன் பின்டேல்', 'நாதன் ஸ்வாலர்' வாத்து இனங்கள் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து இங்கு வரும். 'பார் ெஹட்டட் கீஸ்' -இது குளிர்காலத்தில்
கூந்தகுளத்தில் இருந்து வாலிநோக்கத்திற்கு வரும்.சில வாலாட்டி குருவிகள் 'எயல்லோ வாக் டேல்' ''கிரே வாக் டேல்' 'ஒயிட் வாக் டேல்'ஆகியவை வடக்கு நோக்கி செல்லக்கூடியவை. கடற்கரை பகுதிகளில் வாழும் உல்லான் வகை பறவைகள் வடக்கிலிருந்து தமிழகத்திற்கு வேதாரண்யம்,
கோடியக்கரை வரும்.நன்மையும் தீமையும் கடலும், கடல் சார்ந்த பகுதிகளிலும் சதுப்பு நிலங்கள் பயனற்று உள்ளதால் அவற்றை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம் என்று இங்குள்ளோர் மாற்றுவதால் பறவைகள் வருவது குறையும். தரிசு நிலங்களில் சில உயிரினங்கள் வாழும். அவற்றை அழித்தால் பறவைகள் வருகை குறையும். கடலோரங்களில் தொழிற்சாலைகள், தெர்மல் பவர் ஸ்டேஷன்கள் போன்றவற்றை துவக்குகின்றனர். இதனால் பறவைகள் வருகை குறையும். உப்பளங்களால் பறவைகளுக்கு நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. பல பறவைகள் விவசாயிகளின் நண்பனாக உள்ளன. அவற்றை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் தனக்கே என சுயநலத்துடன் மனிதன் செயல்படக்கூடாது. இரு தரப்பினரும் பாதகமின்றி வாழ்க்கையை நடத்த வேண்டும். அதுவே
இன்றைய தேவை.-டாக்டர் பத்ரிநாராயணன்,பறவையியல் நிபுணர், மதுரை. 9842354444

வாசகர்கள் பார்வை

வாழ்வில் புரிதல் வேண்டும்என் பார்வையில் வந்த 'வாழ்க்கையின் அற்புத தரிசனங்கள்' என்ற தத்துவ கட்டுரையை படித்தேன். தத்துவ ஞானிகள் குழந்தைகள் போல செயல்படுவதை இயல்பாக கொண்டவர்கள் என்பதையும் தான் என்னும் அகந்தையை களைந்து இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள் என்னும் விஷயத்தை அறிந்து கொள்ள முடிந்தது. உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நினைத்துப் பார்த்து வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ வேண்டும் என கட்டுரையாளர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
- த.கிருபாகரன், ஆசிரியர், நிலக்கோட்டை

மழைக்கால பாதுகாப்பு

என் பார்வையில் வந்த மழைக்கால நோய்கள் பற்றிய செய்தியை 'அறிந்ததும் அறியாததும்' கட்டுரை மூலம் அறிந்தோம். நோய் பற்றிய முன்னெச்சரிக்கை இல்லையெனில் அது நெருப்பு பக்கத்தில் இருக்கும் பஞ்சைப் போன்றது. மழைக்காலங்களில் வெளியே செல்லும்போது குடைகள் மழை கோட்கள் எடுத்துச்செல்ல வேண்டும். செருப்பில்லாமல் நடக்கக்கூடாது. நோய்கள் நீரின் மூலமாகவும் காற்று மூலமாகவும் பரவுகிறது என்று நமக்கு தெரிந்தாலும் ஏனோ சுகாதாரமாக இருப்பதில் அக்கறை கொள்வதில்லை. சிறு சிறு தற்காப்பு நடவடிக்கை மூலம் குடும்பத்தில் மற்றவர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கலாம். கந்தையானலும் கசக்கிக் கட்டுவோம் கூழானாலும் குளித்து குடிப்போம். நோய்கள் வந்தபின் காப்பதை விட வரும் முன் காப்பதே நல்லது என்பதற்கேற்ப வாசகர்கள் நலனில் அக்கறை கொண்டு மழைக்காலத்திற்கு முன்பே விழிப்புணர்வை ஏற்படுத்திய தினமலர் நாளிதழுக்கு நன்றி.
- -மு.க. இப்ராஹிம், தலைமையாசிரியர் வேம்பார்

நம்பிக்கை வரிகள்
என் பார்வையில் பேராசிரியர் இரா.மோகன் எழுதிய 'வாழ்க்கையின் அற்புதமான தரிசனங்கள்' கட்டுரை படித்தேன். திருடனை பிடிக்க கல்லறையில் காத்திருக்கும் காட்சி வாழ்க்கை தத்துவத்தின் மாட்சியைக் காட்டுகிறது. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு என்ற வரிகளை நினைவுபடுத்தி மனித வாழ்க்கையின் அடித்தளத்தை அலசி அழகான கட்டுரையை கொடுத்து வாசகர்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைத்துவிட்டீர்கள்.- மு.ராமபாண்டியன்,

மதுரை சுத்தமும் சுகாதாரமும்

என் பார்வை பகுதியில் சொல்லப்பட்ட 'மழைக்கால நோய்கள் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்' என்று டாக்டர் விஜயகுமாரின் வரிகள் ஒவ்வொன்றும்
ஒரு தெரிந்த நோய் பற்றியும், நமக்கு தெரியாத எச்சரிக்கைப் பற்றியும் தெளிவாக விளக்கியது. எந்த நோய் எதனால் எப்படி வருகிறது, அவை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றும், வராமல் தடுக்கும் முறை பற்றியும் அனைவருக்கும் புரியும் படிசொன்னது பாராட்டுக்குரியது.- மு. உஷாமுத்துராமன், மதுரை

மறுக்க முடியாத உண்மை
என் பார்வையில் வெளியான அடிமை முறை குறித்த கட்டுரை அருமை. பல நூறு ஆண்டுகள் அந்நியர்களிடம் அடிமைபட்டு தியாகங்கள் பல செய்த காந்தி, நேதாஜி, சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களால் சுதந்திரம் பெற்றோம். ஆனால், இன்னும் பல வகையில் நாம் அடிமைகளாக தான் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. சர்வதேச அடிமை ஒழிப்பு தினத்தில் இக்கட்டுரையை வெளியிட்டது மிகப் பொருத்தமாக இருந்தது.- ஆர். சக்திவேல், திண்டுக்கல்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement