Advertisement

நம் நலம் நம் கையில்

மனிதர்களின் உடல்நலனைப் பொறுத்தே நோய்களும் நம்மைத் தேடி வருகின்றன. நல்ல உடற்பயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான, நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள மனிதர்களைக் கண்டால் நோய்கள் ஓரமாக விலகிச் செல்கின்றன.நலம் குன்றிய, பலவீனமான, எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களைக் கண்டால் நோய்களுக்கு கொண்டாட்டம் தான். இவர்களுக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் கூட நிமோனியா காய்ச்சலாக மாறிவிடும். வயதானவர்களும், குழந்தைகளும் தான் எதிர்ப்புச் சக்தி குறைந்து பலவீனமான நிலையில் உள்ளனர்.

ஓய்வே சிறந்தது:மழைக்காலத்தில் குழந்தைகள், பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் நிமோனியா பாதிப்பு வரும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்தில் அடிக்கடி இருமல், சளி, மூக்கடைப்பு மற்றும் சாதாரண வைரஸ் காய்ச்சல் வரலாம். வைரஸ் காய்ச்சலில் உடல்வலி இருக்கும். வைரசால் வரும் சளி, காய்ச்சல் ஒருவாரத்தில் தானாக சரியாகிவிடும். எளிய மாத்திரைகளின் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம். இதற்கு ஓய்வு தான் மிகச்சிறந்த மருந்து. மூக்கடைப்பு இருந்தால் நீராவி பிடிக்கும் போது சரியாகி விடும். போதுமான தூக்கம் அவசியம்.

எலிகளின் இலவச பரிசு:மழைக்காலத்தில் எலிகளின் சிறுநீர் குடிநீர்க் குழாய்களில் கலப்பதன் மூலம் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ளது. டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. யானைக்கால் நோய் இங்கில்லை.ராமேஸ்வரம் பகுதியில் உள்ளது. பன்றிகள் மூலம் மூளைக்காய்ச்சலும் வரும். தண்ணீர் சுகாதாரம் தான் நோய்களை காக்கும் அடிப்படை மருந்து. இதற்காக நிறைய பணம் செலவழித்து மினரல் வாட்டர் வாங்கி குடிக்க வேண்டியதில்லை. மாநகராட்சி வினியோகிக்கும் தண்ணீரை கொதிக்க வைத்து காய்ச்சி குடித்தால் போதும். உடலின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட இடைவெளியில் அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும். மழைக்காலத்தில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்தத் தண்ணீரை காய்ச்சாமல் குடித்தால் மஞ்சள் காமாலை, வாந்தி, பேதி வரும். பனிக்காலத்திலும், குளிரடிக்கும் போதும் வெளியே செல்ல நேர்ந்தால் குளிர்காற்று உடம்பில் நேரடியாக படக்கூடாது. கை, கழுத்து, காது, முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். கால்களில் சாக்ஸ் அணிவது நல்லது. குளிர்காற்று நேரடியாக படும் போது எளிதாக சளிப்பிடிக்கும்.

கொசுக்களின் கூடாரம்:பொதுமக்கள் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடைந்த பக்கெட், தரைக் கீழ் குழாய்களில் கொசுமுட்டை தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுக்களை மூன்று வகைகளில் அழிக்க வேண்டும். புகைமருந்தின் மூலம் அவற்றை அழிப்பது, கம்பூசியா மீன்கள் மூலம் புழுக்களை அழிப்பது, பிளீச்சிங் பவுடர் மூலம் முட்டைகளை அழிப்பதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

கை கழுவுவதே கலை:கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் ?? சதவீத தொற்றுநோய்களைத் தவிர்க்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. கைகள் கழுவுவதே ஒரு கலை. ?வளியே சென்று வீட்டுக்கு வந்தவுடன் முன், பின்னால், விரலுக்கு நடுவில் என முழுமையாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். மலம் கழித்தபின் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். நகங்களில் அழுக்கு சேராதவாறு வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். கைகளே நோய்களின் பிறப்பிடம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். கால்களில் செருப்பணியாமல் ?வளியே செல்லக்கூடாது. ஆரோக்கியம் நம் கையில் உப்பு சிறந்த கிருமிநாசினி, தொண்டை வலி, தொண்டைக்கட்டு இருந்தால் உப்புத்தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பது மிகச்சிறந்த முறை. வெந்நீரில் உப்பு கலந்து காலை, மாலை வாய் கொப்பளித்தால் 100 சதவீத கிருமிகள் இறந்துவிடும். முடிந்தவரை சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்ததை சுட வைத்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பழம், காய்கறி, கீரை வகைகளை சாப்பிட வேண்டும். எளிய முறை உடற்பயிற்சி உடலுக்கு நல்லது. உடற்பயிற்சி செய்யாமல், சத்தான உணவை சாப்பிடாமல், உடல் நலனை கெடுத்து டாக்டரிடம் செல்லக்கூடாது. நம்நாட்டைப் பொறுத்தவரை எல்லா வகை பரிசோதனைகளையும் கடைப்பிடிக்க முடியாது. அதேபோல எல்லாவகை தடுப்பூசிகளையும் இடமுடியாது. ஒவ்வொருவரும் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். நம் உடல்நலம் நம் கையில் தான் உள்ளது.

-டாக்டர்.எஸ்.வடிவேல் முருகன், பொது மருத்துவத் துறை தலைவர், மதுரை அரசு மருத்துவமனை, 95665 43048

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement