கடலூர் என் சொந்த ஊர். சேலம் பள்ளியில் தங்கி படித்தேன். 'பைலட்' தான் என் ஆசை. ஆனால் அப்பாவின் தாக்கம் என்னுள் சினிமா ஆசையாக மலர்ந்தது. பள்ளி முடித்ததும் 'டிஜிட்டல் பிலிம் மேக்கிங்' படித்தேன். 'ஓரம்போ' படத்தில் இயக்குனர் புஷ்கர் காயத்ரியிடம் உதவியாளராக பணியாற்றினேன். அதன் பின் முறையான சண்டை பயிற்சி கற்று 23வது வயதில் மாஸ்டர் ஆனேன்.
* உங்கள் அதிரடிக்கு சரியான உதாரணங்கள்?
ஆரண்ய காண்டம், போராளி, தீராத விளையாட்டு பிள்ளை, குட்டி புலி, சுந்தர பாண்டியன், நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே. இப்போ பணியாற்றிக் கொண்டிருக்கும் டானா, கொம்பன் படங்களும் பேசப்படும்.
* வாரிசுகளின் வாய்ப்புக்கு சிபாரிசு காரணமா?
நான் சினிமாவை தேர்வு செய்ததும் அப்பா கூறிய வார்த்தை இது தான், 'பஸ் வரும் ஏறிக்கொள்... அதில் உனக்கான இடத்தை நீ தான் தக்க வைத்து கொள்ள வேண்டும். நான் சிபாரிசு செய்ய மாட்டேன்,' என்றார்.
* இன்றைய ரசிகர்கள் விரும்பும் சண்டை எது?
ஒவ்வொரு மனிதனுக்கும் கோபம் இயற்கை. அது தாங்க முடியாத போது எதிரியை அடிக்க தோன்றும். அதை யதார்த்த சண்டையாக்க வேண்டும். அப்போது தான் ரசிகர்களின் கைதட்டல் கிடைக்கும்.
* சினிமாவில் உங்களுக்கான பகுதி சண்டை மட்டும் தானா?
நடிகர் விமல் நடிக்கும் 'அஞ் சலை' என்ற படத்தை தயாரித்து வருகிறேன். பிப்ரவரியில் படம் வெளியாகிறது. நிறைய படங்களை தயாரிக்கும் எண்ணம் உள்ளது, என்றார்.
வாழ்த்த 123actioncut@gmail.com என்ற முகவரியில் மெயில் அனுப்பலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!