Advertisement

நாய் தரும் நோய்..! சில உண்மைகள்

'எபோலா' வைரஸ் போன்ற புதுப்புது நோய்க்கிருமிகள் அவ்வப்போது பரபரப்பை எற்படுத்தினாலும், சுகாதாரத்துறையும், மருத்துவத்துறையும் தக்க நடவடிக்கைகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தி வருவதோடு, தொற்றுநோய்களுக்கு அடுத்தகட்டமான பிறவிநோய்கள், ஜெனிடிக் குறைபாடுகளின் பக்கம் பார்வையைத் திருப்பவேண்டிய முன்னேற்ற நிலைக்கு வந்து விட்டன. ஆனால் தீவிர தடுப்பு நடவடிக்கை மட்டுமே தீர்வாக இருக்கக்கூடிய உயிர்க்கொல்லி நோயான “ரேபீஸ்” வந்து விட்டால் மரணம் ஒன்றே முடிவு.ரேபீஸ் நோயும் செல்லப்பிராணிகளும் ----------------------------------------ரேபீஸ் நோயினால் உலகளவில் ஆண்டுக்கு 30,000 ஆயிரம் பேரும், இந்தியாவில் 20, 000 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 350 முதல் 375 பேர் வரை இறக்கின்றனர் என்பது வருத்தத்தை ஏற்படுத்தும் புள்ளி விபரம். ரேபீஸ்நோய்க்கு 99 சதவீதம் வெறிநாய்க்கடிதான் காரணம். நோய் தாக்குண்ட பிராணிகளின் எச்சிலில் இக்கிருமி வாழ்கிறது. வெப்ப ரத்தப்பிராணிகளான பாலுாட்டிகளைக் குறிவைத்து உள்ளே நுழையும் ரேபீஸ் வைரஸ் 'எக்லிப்ஸ்' காலம் என்ற சிறிது காலத்திற்கு, பரிசோதனைகளால் கண்டு பிடிக்கமுடியாமல் காயத்தில் ஒளிந்து கொள்கிறது.பின்னர் அங்கிருந்து, தசைகளுக்கு இடம் மாறி, பல்கிப் பெருகி நரம்புகள், தண்டுவடம் வழியாக மூளைக்கு சென்று அங்கிருந்து நரம்புமண்டலத்தைச் சீரழிக்கிறது. நோயாளிக்கு அறிகுறிகள் தோன்றும். இந்நிலை வரும்போது, எதுவுமே செய்யமுடியாமல் போய்விடுகிறது. பதட்டம், குழப்பமான மனநிலை, இவற்றில் தொடங்கி வலிப்பு, சுவாசத்தசைகள் பாதிப்பு வரை சென்று நோயாளி மரணத்தைத் தழுவுகிறார். இவர்களுக்குள் பாதிக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு 'நீரச்சம், காற்றுப்பட்டால் அச்சம் மற்றும் ஒளியைப்பார்த்தால் அச்சம்' போன்ற அறிகுறிகள் இருக்கும்.ரேபீஸ் பரவும் விதம் :இந்தியாவில் இந்நோய் நாய்க்கடி மூலம், நாய் நகத்தால் பிறாண்டுதல் மூலம், மிகவும் அரிதாக பூனை மற்றும் கால்நடைகளின் மூலம் பரவும். பொதுவாக மூளைக்கு அருகில் உள்ள பாகங்களான முகம், கழுத்து ஆகிய இடங்களில் நாய்க்கடி இருந்தால் விரைவாக நோய் தாக்கிவிடும். வைரஸ்சை உடலில் இருந்து அகற்ற வேண்டும்.1) காயம்பட்ட இடத்தை குழாய்நீர் மற்றும் சோப்பினால் நன்கு கழுவவேண்டும்.2) பின்பு ஆல்கஹால் மூலம் கழுவலாம்.3) போவிடோன் அயோடினும் பயன்படுத்தலாம்.4) காயம் பெரிதாக இருந்தாலும், தையல் போடக்கூடாது.5) 10 நாட்களுக்கு நாயைப்பாதுகாப்பாக வைத்து நோயின் அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டும்.தடுப்பூசி ---------1) ஒரு டோஸ் ஹெச்.ஆர்.ஐ.சி, அல்லது இ.ஆர்.ஐ.சி, நோயாளியின் எடைக்கேற்ப கணக்கிட்டு காயத்தில் செலுத்தியது போக, மீதத்தைத் தசையில் ஊசியாக போடவேண்டும்.2) கடித்த நாள் முதல் 3, 7, 14, 28 நாட்கள் என ஐந்து தவணைகள் ஊசி போடவேண்டும்.தடுப்பு முறைகள்------------------1) தெருவில் சுற்றித்திரியும் நாய் மற்றும் பூனைகளை அகற்றவேண்டும். (தற்சமயம் அவற்றைக் கொல்வதற்கு தடை உள்ளது. அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும்).2) வளர்ப்புப்பிராணிகள் அனைத்துக்கும் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.3) குழந்தைகளுக்கு இளம் வயதிலிருந்தே செல்லப்பிராணிகளுடன் பழகும் விதம், அவைகளால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.நாய்கள் பரப்பும் பிறநோய்கள் -----------------------------ரேபீஸ் தவிர 'எக்கினோகாக்கஸ்' என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் 'ஹைடாட்டிட்' என்ற கொடிய நோயும், நாயினால் பரவுகிறது. நாடாப்புழுவான அந்த ஒட்டுண்ணி, நாய்களில் தன்னிச்சையாக தன் வாழ்க்கைச் சுழற்சியை நடத்திக்கொண்டிருக்கும்போது, இடையில் நாயை கொஞ்சும் மனிதனுக்கும் நோயைப் பரப்புகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 2,000 பேர் இறக்கின்றனர்.'நாயை கொஞ்சினால் வாயை நக்கும்' என்பது சொலவடை. நாயின் கழிவுகளில் வெளியேறி உடலில் பரவி நிற்கும் இக்கிருமி, கொஞ்சும்போது நம்மை தொற்றி, நம் உடலின் முக்கிய பாகங்களான கல்லீரல், நுரையீரல், மண்ணீரல், மூளை ஆகிய உறுப்புகளை செயலிழக்கச்செய்கிறது.--------------1) தெருநாய், விலை அதிகமுள்ள உயர் ஜாதி நாய் என எது கடித்தாலும் ரேபீஸ்நோய் வர வாய்ப்புண்டு.2) வெறிநாய் கடித்தால் தான் வரும், சாதா நாய் கடித்தால் வராது என்பதில் உண்மையில்லை.3) தடுப்பூசி போடப்பட்ட நாய், ஊசி போடாத நாய் எது கடித்தாலும் ரேபீஸ் வர வாய்ப்புண்டு.4) நாய் நக்கினாலும், பிறாண்டினாலும், ரேபீஸ் நோய் தாக்கிய மனிதனின் எச்சில் நம்மீது பட்டால் கூட ரேபீஸ் வர வாய்ப்பு உண்டு. எனவே நாய்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.---டாக்டர் வி.செல்வராஜ். கண்காணிப்பாளர்,அரசு தலைமை மருத்துவமனை, பெரியகுளம். 94420 23700

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement