Advertisement

360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம்

தினமலர் இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ள, 360டிகிரிகோணப் பகுதியில் கோயில்களின் முழுமையான தரிசனம் அனைத்து வாசகர்களையும்பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் இதுவரை இந்துகோயில்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. மற்ற மதவாசகர்களும் தங்களுடைய புனித தலங்கள் இதில் வெளியாகவேண்டும் என்று கோரியிருந்தனர்.வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு தரும்தினமலர், அவர்களுடைய விருப்பத்தைப்பூர்த்திசெய்யும் வகையில் பள்ளிவாசல் மற்றும்தேவாலயங்களை 360டிகிரிகோணத்தில்பார்க்க ஏற்பாடுசெய்துள்ளது. இதற்குஅனைத்துவாசகர்களும் முழு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம் பார்க்க : http://www.dinamalar.com/360view_main.asp

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (76)

 • Vijayan Balamurugan - snkl,இந்தியா

  சங்கரன்கோவில் உள்ள புகழ் பெற்ற சுவாமி: சங்கரனாரயனர் சுவாமி ,கோமதி அம்மன் & சங்கரலிங்க சுவாமி பற்றி நம் நாட்டு மக்களுக்கு தெரிய உங்கள் 360 டிகுரியில் சேர்க்க வின்னப்பிக்குறேன்.

 • இண்டி Ram - Indy,யூ.எஸ்.ஏ

  திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தின் தோற்றத்தை வெளியிட்டுள்ளீர் மலைமேல் ஏறினால் ஒரு பிரம்மாண்டமான தோற்றம் இருக்குமே. பொன்மலை, காவேரி நதி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், வாழைவயல்கள் அதெல்லாம் கண்கொண்ணா காட்சி அதையும் டிஜிட்டல் கேமராவில் எடுத்து இணைக்க கேட்டுகொள்கிறேன் நன்றியுடன் இண்டி ராம்

 • கஷேஆஹக - Manickapore,இந்தியா

  மதுரையை சேர்ந்த மன்சூர் அஹ்மத் சகோதரர் அவர்களே… உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்… அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் தினமலர் இந்த (360 டிகிரி கோண படம்) முயற்சியை மேற்கொண்டு உள்ளது இதை நாம் தக்கவைத்து கொள்ள வேண்டும். இது உங்கள் கொள்கையை உடையவருக்காக மட்டும் அல்ல இது அனைத்து வித மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தர்காக்கள் அனாச்சாரங்கள் நிறைந்த இடம் என்று கூறியுள்ளீர்கள். இது பலரின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. நீங்கள் தர்காவை குறை கூறுவது உங்கள் முன்னோர்களை குறை கூறுவது ஆகும். காரணம் எந்த ஒரு தர்காவும் சமீப காலத்தில் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது. தர்காக்களை முஸ்லீம்கள் வெறுக்ககூடிய இடம் என்ற தவறான கருத்தையும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அப்படி வெறுப்பது உண்மை என்றால் பல்லாயிர வருடமாக முஸ்லீம்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். முதல் மனிதனான ஆதம் நபியின் மகனுடைய தர்கா தமிழகத்தில் உள்ளது. உங்கள் கூற்றுபடி பார்த்தால் ஆதம் முதல் இன்று வரை எந்த ஒரு முஸ்லீமும் விளங்காத ஒரு விஷயத்தை நீங்கள் விளங்கி உள்ளீர்கள். நமது நாட்டில் எதுவும் அர்த்தம் இல்லாமல் உருவாகி இருக்க முடியாது அந்த அர்த்தத்தை அறிய முயற்சி செய்யுங்கள். அதை விட்டு விட்டு மக்களின் மனம் புண்படும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு கஷேஆஹக – மாணிக்கபூர்.

 • vijay - Thanjavur.Tamilnadu,இந்தியா

  among the tamil news papers dhinamalar is really good. i love your news structure A to Z

 • jaleel - muscat,இந்தியா

  தேங்க்ஸ் தினமலர் பனைக்குளம் பள்ளிவாசலை ......உலக மக்கள் பர்ர்க்க துணை புரிந்தற்கு நன்றி

 • Nijam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கொள்கை காரணமாக நாகூர் தர்காவை பார்க்காமல் இருந்த என் கண்கள் அந்த தர்காவின் பிரமாண்டத்தை தினமலர் மூலம் பார்த்து வியந்தது என்னவோ உண்மைதான். தமிழகத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான தர்காவா? ஒரு சிறிய பள்ளிவாசல் கட்ட நாங்கள் 10 வருடங்களாக திணறி கொண்டு இருக்கிறோம். ஆனால் நாகூர் தர்காவின் மினாராவோ…. என்னால் வர்ணிக்க முடியவில்லை அதன் கம்பீரத்தை…. நாகூர் தர்காவை பார்க்கும் போது (உள் தோற்றம்) மதினாவின் தோற்றம் என் நினைவுக்கு வருகிறது. நன்றி தினமலர்.

 • மன்சூர் அஹமத் - மதுரை,இந்தியா

  பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அதில் தொழுகை மட்டுமே நடைபெறும் மற்ற எந்த அனாச்சாரங்களுக்கும் அங்கே வேலை கிடையாது . தர்ஹா என்பது முஸ்லிம்களாகிய நாங்கள் வெறுக்ககூடிய ஒரு இடம். தர்ஹா என்பது ஒரு சமாதி. அதுவும் நம்மை ஏமாற்றும் ஒரு இடம். அனாச்சாரங்கள் நிறைந்த இட்ம்.

 • ஹாஜா ஹுசைன் - நாகூர்,இந்தியா

  தின மலர், உங்களுக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை. நாகூர் தர்காவை 360 வீவில், காண்பித்து இருபது மிகவும் அழகாக இருக்கிறது. நன்றி

 • PJ ஜைனுல்ஆபிதீன் - சென்னை,இந்தியா

  தினமலர், உங்களுக்கு மிக்க நன்றி, நான் இங்கு இருந்தே நாகூர் தர்காஹ் வை பார்த்து ரசித்து மலைத்து போனேன். எல்லா புகழும் இறைவனுக்கே. எல்லா பாராட்டும் தினமலருக்கே. PJ ஜைனுல்ஆபிதீன் TNTJ

 • ஹாஜா சாஹிப் அம்மா மோட்டர்ஸ் - Nagore,இந்தியா

  நாகூர் தர்காவை படம் பிடித்த விதம் சூப்பர்… அதிலும் எங்கள் தன்மான சிங்கம் துபாய் ஷேக் இடம் பெற்று இருப்பது சூப்பரோ சூப்பர்.

 • முத்துராமலிங்கம் - ஸ்ரீவைகுண்டம்,இந்தியா

  திருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்....திருக்கோவிலை கண் எதிரே கொண்டு வந்த தினமலருக்கு எனது பாராட்டுக்கள்.மேன்மேலும் தொடருட்டும் தங்களது தெய்வீக பணி

 • safee - madurai,இந்தியா

  நன்றி தினமலர்............,

 • deeen - kualalumpur,மலேஷியா

  நாகூர் தர்கா படம் பிடித்து காட்டி இருப்பது மிக நன்றாக உள்ளது தினமலருக்கு nandri

 • Wasif Amjath Ibrahim - SingaperumalKoil,இந்தியா

  Kazimar mosque looks awesome. Thanks Dinamalar for bringing it out. It is the first mosque in madurai. Hats off Dinamalar for including all teh 3 religion.

 • அப்துல்ரகுமான் - oslo,நார்வே

  நாகூரை படம் பிடித்து காட்டிய தினமலருக்கு நன்றி.

 • SathishSurya - Texas,யூ.எஸ்.ஏ

  Superb job...Congrats to all who worked in this... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

 • ஹச Najmudeen - dubai,இந்தியா

  தின மலர் முயற்ச்சிக்கு எனது பாராட்டுகள் பனைக்குளம் பள்ளிவாசல் மிக அருமையாக இருந்தது கருக்கற்களால் ஆன பள்ளிவாசல் மிக அருமை கொடுத்த விளக்கமும் மிக அருமை.நல்ல முயர்ச்சி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.தின மலர் சேவை மலர வாழ்த்துக்கள்

 • அஷரப் அலி - sayalkudi,இந்தியா

  தினமலர் நல்லிணக்கம் தொடரட்டும். வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

 • கரிமுல்லாஹ் - மலேஷியா,மலேஷியா

  நாகூர் தர்காவின் மினாராக்களை பார்க்கும் போது அக்கால கட்டிடக்கலையை புகழாமல் இருக்க முடியவில்லை. நமது தென் இந்தியாவில் நாகூர் மினாராவை விட ஒரு பிரமாண்டமான மினாரா இல்லை என்பது நாகூர் வாசிகளுக்கு மற்றும் இன்றி தமிழகத்துக்கே பெருமை. நாகூர் தர்காவை 360 கோணத்தில் உருவாக்கிய தினமலர் டீமிற்கும், அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த நாகூர் தர்கா நிர்வாகிகளுக்கும் எங்கள் நன்றிகள். தினமலரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

 • சலீம் முகைதீன் - ஜுபைல்,சவுதி அரேபியா

  பழமையான பனைக்குளம் பள்ளிவாசலை பாருக்கு பார்க்க படமாக்கிய பத்திரிக்கைக்கு பாராட்டுக்கள்

 • ahamed - devipattanam,இந்தியா

  pallivasal and tharha 360 degeree picture super vauuuuuuuuuuuuuuu thanks to dinamalar editor

 • ஷேக் சுல்தான் சாஹிப் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜாதி மதபேதமின்றி, அனைத்து மதத்தவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக தினமலர் எடுத்து வரும் முயற்சிக்கு நன்றியை தெரிவிக்கின்றேன். நாகூர் தர்காவை நேரில் சென்று பார்ப்பது போல் உணர்வை தந்த தினமலருக்கு நன்றி. இதைபோல் நாகூரில் இருக்கும் மற்ற பள்ளிவாசல்களையும் பிரசுரிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். மதநல்லினக்கத்தை வலியுறுத்தி கொண்டு இருக்கும் நாகூர் தர்காவை பிரசுரித்து... மதநல்லினக்கத்தை நிலைநிறுத்திய தினமலரின் புனித பணி தொடர வாழ்த்துகிறேன்.

 • யூசுப் sahib - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  Dear Sir, Good Job, nice see The Great Nagore Aandawar Dargah.... Thankful to your team usf usa

 • மஸ்தான் சாஹிப் - நாகூரே,இந்தியா

  Dear Dina Malar, Really happy to see this the great nagore page. keep countinue with this kind of duties Regards KMS

 • MOHAMED MEERAN - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  Oh Dinamalar I appreciate your effort. But try to publish only mosque not durga information. Durgas are not related to Islam. so kindly avoid that. Thank you for useful information about mosques.

 • ஹாஜா சாஹிப் - டொரோண்டோ,கனடா

  Dear Dinan Malar, Really Good Job, Nice to see this, Insha allah The Great Nagore Aandawar will accept your prayers. there is no history or some info of nagore dargah, pls put some on that Thank u HAja SAhib Canada

 • காதற் - பெங்களுரு,இந்தியா

  டியர் சார், we see the nagore dargah 360* view very nice, there is small correction how reach nagore dargah & to whom to contact some contact shoult be there then only we can contact & arrange some necery things, kindly do the need ful Great job & great team Great Dinan Malar

 • Elango - shengottai,இந்தியா

  சூப்பர்

 • நஜிமுதீன்.ஹ - ஒஸ்லோ,நார்வே

  கலை நயமிக்க நாகூர் தர்காவை காண வாய்ப்பளித்த தினமலர் நிருபர் திரு.மெட்டில்ராஜ் அவர்களுக்கும், தினமலருக்கும் நோர்வேயில் வாழும் நாகூர் பிரெண்ட்ஸ் க்ரூப்ஸ் இன் வாழ்த்துக்கள்

 • முஹம்மது சலீம் முஹைதீன் - பனைக்குளம்இராமநாதபுரம்,இந்தியா

  இந்த பழமை மிக்க பள்ளிவாசலை உலகிற்கு அறிமுக படுத்திய தினமலருக்கு நன்றி

 • augustin - Chennai,இந்தியா

  தினமலர் ஒரு இந்து பத்திரிக்கை என்று சிலர் முத்திரை பதிகிறார்கள். அதற்கு இது ஒரு நல்ல சாட்டை அடி. Good Job Dinamalar

 • jain - jiddah,இந்தியா

  ஒற்றுமையே நமது வலிமை வாழ்க பாரதம்.வளர்க தினமலர்

 • caby - qatar,கத்தார்

  நல்ல முயற்சி....

 • ராஜா சலீம் - சவுதிஅரேபியா,இந்தியா

  எங்கள் ஊர பள்ளிவாசல் படங்கள் சூப்பர்.அதன் வர்ணனை,வார்த்தைகள் மிக சூப்பர். தினமலர் சேவை தொடரட்டும்

 • E.shahul hameed - panaikulam,இந்தியா

  We are really Happy to see the panaikulam 100 years mosque......Thanks Dinamalar

 • அஹ்மத் - chennai,இந்தியா

  கிராமத்தில் உள்ள சரித்திர பள்ளிவாசல் இன்று உலக பார்வை ஏற்பாடு செய்த தினமலருக்கு நன்றி

 • sabiullah - panaikulam,இந்தியா

  panaikulam பள்ளிவாசல் படம் சூப்பர். thank you Sir

 • பாலா - மதுரை,இந்தியா

  சரி விடு தினமலர், ஓவரா பிலிம் காட்டாத...உன்னைய நாங்க நம்புறோம்...நீ தான் பெஸ்ட். பாலா

 • ரபி அஹமது - SINGAPORE,சிங்கப்பூர்

  நாகூர் தர்கா பார்த்து மலைத்துப் போனேன். மிகத் துல்லியமாக அற்புதமாக இருந்தது. மிகவும் அருமை. கை பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்வது போன்ற உணர்வு. ஒரு அன்பான வேண்டுகோள்! தமிழகத்திலுள்ள மேலும் சில முக்கிய தர்காக்களை பார்க்க ஆசையுடன் காத்திருக்கிறோம். வளர்க உங்களது பொதுச் சேவை. -ரபி அஹமது, சிங்கப்பூர்.

 • Amal - Castries,செயின்ட் லூசியா

  உளங்கனிந்த நன்றிகள்!

 • yas - aduthurai,இந்தியா

  தேங்க்ஸ் உங்களுடைய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

 • செல்வா - கேன்மரே,யூ.எஸ்.ஏ

  பாகுபாடின்றி எல்லோரையும் சமமாக நினைத்து, தன் சேவையை தினமலர் சுயநலமற்ற ஒருமை பாட்டுடன் செயல்படுவதற்கு வாழ்த்துக்கள். அன்னை வேளாங்கண்ணி, மதுரை லூர்து அன்னையின் ஆலயங்கள் அற்புதம். உள்தோற்றதையும் இதேபோல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 • anwar - uae,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆல் த best

 • சதீஷ் - trv,இந்தியா

  யோவ், பஹ்ரைன் போனேன். அங்கேயும் தினமலர் இல்லாமே என்னால ஒன்னும் முடியல எனக்கு வசியம் vechitiyeyaaaa யோவ் என்னலே முடியல எப்படியா இப்படி ஒரு நல்ல விஷயம் தேடி பிடிகரிங்க

 • buhari - dubai,இந்தியா

  தேங்க் யு dhinamalar

 • faridudeen - valoothoor,இந்தியா

  THANKS FOR DINAMALAR..

 • VEERAMANI - chennai,இந்தியா

  நல்ல ஒரு முடிவு பாராட்ட கூடியது. எல்லா சமயமும் ஒன்று என்ற எண்ணம் மக்கள் மனதில் வரவேண்டும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் தினமலர் இனிய ஆயுத பூஜா வாழுத்துகள்

 • daniel - பரமர்,இந்தியா

  Great job.

 • Radhakrishnan - Johannesburg,தென் ஆப்ரிக்கா

  ஒரு கோயிலின் அனைத்து பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து பார்க்குமாறு செய்யவும் .

 • சாம் - சென்னை,இந்தியா

  இது ஒரு நல்ல முயற்சி. அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் தினமலர் உருவாக்கி வருகிறது. இதை போல அனைத்து மக்களும் அன்போடு இருந்து வந்தால் உலகில் சுவிச்சர்லாந்து மக்களை விட இந்திய மக்கள் சிறந்தவர இருப்பர்கள் - சாம்

 • ENG.K.SAHIB.DUBAI - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  WE ARE REALLY HAPPY TO SEE THE NAGHORE AND ERVADI DHARGHA.YOU HAVE DONE A GRAET JOB.THANKS.KEEP IT UP.

 • இபு பாரிஸ் - SARCELLES,பிரான்ஸ்

  இதுவெல்லாம் காலத்தின் கட்டாயம்.அயோத்தி தீர்ப்பு போல உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டிய நேரம் கோர்ட்டுக்கே வந்துள்ளது????தினமலருக்கு வாழ்த்துக்கள்.

 • REESHMA - russia,இந்தியா

  ulaga கருத்துகளை அள்ளித்தரும் உன்னத thinamalaruku உயர் NANDRI

 • reeshma - russia,இந்தியா

  தேங்க்ஸ் போர் dinamalar

 • Jacob - மதுரை,இந்தியா

  ஆன்மீக மலர் என்ற ஒரு புத்தகத்தில் நீங்கள் பெரும்பாலும் இந்துக் கடவுள்களையே முன்னிலைப்படுத்தி பெரும்பாலான பக்கங்களை செலவிடுகிறீர்கள், மற்ற மதத்து கடவுள், கோவில் பற்றிய செய்திகளுக்கு இரண்டு பக்கங்கள் மட்டும்தான், இந்த நிலையை வாசகர்களுக்கு "மதிப்பு" கொடுக்கும் உங்கள் தினமலர் எப்போது மாற்றும்?

 • வினோதன் - london,யுனைடெட் கிங்டம்

  திருத்தளங்களின் பெருமைய இணையத்தில் மேருகூடியமைக்கு தினமலருக்கு நன்றிகள். கோடி புண்ணியம் கோபுர தரிசனம்

 • santhappan - tirunelveli,இந்தியா

  நன்றி தினமலர் ....

 • மொஹிடீன் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இது நல்ல முயற்சி. vaalthukal

 • MOHAMED - துபாய்,இந்தியா

  நான் தினமலர் வாசகன்,தினசரி பயன் உள்ள தகவல்களை தினமலர் மூலம் கண்டு என்னை போல் நிறைய வாசகர்கள் பயன் அடைகிறார்கள்,நன்றி தினமலர்!!!!

 • BABU - singapore,இந்தியா

  All the religions are same Dinamalar is doing Excellent job. all the best.

 • jahir - peravurani,இந்தியா

  வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அதை சிறப்பாக செய்ததற்கு,நன்றி....

 • அமானுல்லாஹ் - ரியாத்சவுதிஅரேபியா,இந்தியா

  தினமலரின் மத நல்லிணக்கப்பணித் தொடர வாழ்த்துக்கள்..

 • ammiya - Denhelder,நெதர்லாந்து

  இந்த நல்ல முயற்சியில் வெற்றி அடைய வாழ்த்துகிறோம்.அனைவரின் ஆதரவும் கிட்டும்.

 • சுரேஷ் - ஜாம்நகர்,இந்தியா

  மிகவும் நன்றாக உள்ளது.

 • வெஸ்லி - குஜராத்,இந்தியா

  தினமலரின் இந்த முயற்சிக்கு எங்களது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

 • அப்துல் காதர் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்

  உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

 • ameer nishlam - JeddahSAUDIARABIA,இந்தியா

  Excellent Job ப்ளீஸ் கீப் இட் அப

 • காசிம் - ஆஸ்டின்,யூ.எஸ்.ஏ

  வரவேற்க்கதக்கது. நன்றி தினமலர். ஒரு சிறிய வேண்டுகோள். கோயில்களின் பெயர் இங்கிலிஷில் மற்றும் தமிழில் இருந்தால் தமிழ் தெரியாதவர்களுக்கும் புரியும்.

 • முஹம்மது நியாஸ் - KualaLumpur,மலேஷியா

  மிகசிறந்த் முயற்சி. விரைவில் வெளியிடுங்கள ஆவலுடன் எதிர்பார்கின்றேன். பள்ளி வாயில்கள் புகைப்படம் தங்களுக்கு எப்படி அனுப்புவது விபரம் கூறவும்

 • D.THANGASAMY - chennai,இந்தியா

  welcome to church

 • திப்புசுல்தான் - கடையநல்லூர்,இந்தியா

  இந்தியாவில் நல்ல விசயங்களுக்கும்,நல்ல பண்புகளுக்கும், மதிப்பளிப்பதில் முதலிடத்தில் இருப்பது தமிழினம். தினமலரும் தமிழனத்தின் ஒரு அங்கம்தான். அதனால் தினமலரின் மத நல்லிணக்கப்பணி அனைவராலும் வரவேற்கப்படும்......

 • hasanmeeran - india,இந்தியா

  இதனால் என்ன பயன்

 • கலிபா Sahib - nagore,இந்தியா

  நாகூர் தர்காவை பற்றி நீங்கள் எடுத்த விடியோ தொகுப்பு இதுவரை வரவில்லை.. விரைவாக வெளியிடும்படிகேட்டு கொள்கிறேன்... நன்றி..

 • S.M.Noohu - Thuckalay,இந்தியா

  வாசகர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பு அளிக்கும் தினமலருக்கு வாழ்த்துக்கள் பல!!!

 • Winnagar sitheek - Baghdad,ஈராக்

  Nalla muyarchi Dinamalar Mudhal pakkathil , munbellaam Arabi maadhamum varum yipoo kaanavillai adayum poattal magilchi

 • RIYAZ - trichy,இந்தியா

  வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அதை சிறப்பாக செய்ததற்கு, தினமலர் கு மனமார்ந்த நன்றி.

 • பர்தி - லக்ஷ்மாங்குடி,இந்தியா

  நல்லதொரு முயற்சி . அனைவரின் ஆதரவும் கிடைக்கும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement