கடந்த ஆடியில் கேட்டது; நடப்பு ஆடியில் நடக்குது; வெள்ளாத்தூர் அம்மன் கோவில் தூர் வாரும் பணி
ஆர்.கே.பேட்டை : புதர் மண்டி கிடக்கும் கோவில் குளத்தை துார் வார பக்தர்கள், கடந்த ஆண்டு விடுத்த கோரிக்கையின் பேரில், தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
படத்துடன் செய்தி : ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் அம்மன் கோவில் எதிரே உள்ள குளம் புதர் மண்டி கிடந்தது. இதுகுறித்து, கடந்த ஆண்டு ஆக., 8ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.இதையடுத்து, தற்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், குளம் துார் வாரப்பட்டு வருகிறது. வெள்ளாத்துார் அம்மனை, செங்குந்த மரபினரின் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஞானபிரசுன்னாம்பிகை தாயார், வெள்ளாத்துார் மரபில் தோன்றியவர். இதையடுத்து, சிவராத்திரி திருக்கல்யாணத்தின் போது, காளஹஸ்தியில், இந்த மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் சமர்ப்பிக்கப்படுகிறது.ஆந்திரா மற்றும் தமிழக பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், ஆடி மற்றும் தை மாதத்தில், வெள்ளாத்துார் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். நேற்று பொது பொங்கல் மற்றும் பெரியாண்டவர் பூஜை, 1,008 பால்குடம் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றது.
டிராக்டரில் தண்ணீர் : பக்தர்களுக்காக, கடந்த ஆண்டு, டிராக்டரில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, புதர் மண்டி கிடந்த, கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், குளம் துார் வாரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போலவே நேற்றும், ஆடி பொங்கலுக்கு டிராக்டரில்தான் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!