Advertisement

இருட்டுக்கும், வெளிச்சத்துக்கும் தனித்தனி ஹார்மோன்கள்

வயிற்றுக்கு சோறிட வேண்டும்... இரவில் துாங்கி காலை எழும் போது வயிற்றை காயவிடக்கூடாது. வயிறு என்பது உணவுப் பை தான். நான்கு
மணி நேரம் தான் வயிற்றில் உணவு இருக்கும். அதன்பின் காலியாகிவிடும். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஏதாவது
தேவைப்படுகிறது. இரவில் துாங்கும் போது உடலியக்கம் அவ்வளவாக நடைபெறுவதில்லை.
துாக்கத்தில் நிகழும் இயக்கத்திற்கான அளவு எரிபொருள் மட்டுமே தேவை. எனவே,
எட்டு மணி நேர உறக்கத்திற்கு பின், காலையில் வயிற்றுக்கு
கண்டிப்பாக உணவளிக்க வேண்டும்.ஏனென்றால் உணவின் மூலம் தான் உடலுக்குத் தேவையான எரிபொருளான கார்போஹைட்ரேட்டை உடனடியாக பெறமுடியும். சாப்பிட்ட உடனேயே சிறிது மந்தமாக இருப்பது போல தோன்றும். அதன்பின்,
உடம்பு பயங்கர சுறுசுறுப்பாக செயல்படும். உடம்பின் வேகத்திற்கேற்ப மூளையும் சிந்திக்கும், செயலாற்றும்.காலை உணவைத் தவிர்க்கும் போது என்னவாகும்? சாப்பிடாமல் வேலை செய்தால், உடல் அசதியாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. காலை உணவு மனநலத்தோடு தொடர்புடையது. மூளையின் உச்சகட்ட செயல்பாடுகள் என்று சொல்லக்கூடிய சிந்தித்தல், எதிர்காலத்திற்கான திட்டமிடல், பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் ஆகிய செயல்பாடுகள் குறைந்துவிடும்.வயிறு காலியாக இருக்கும் போது தேவையற்ற எரிச்சல், கோபம், அமைதியின்மை, படபடப்பு ஏற்படும். எதுவும் மனதில் சட்டென்று பதியாது. எதிலும் ஆர்வம் குறைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும்.

காலை உணவை முறையாக சாப்பிடுபவர்களுக்கும், சாப்பிடாதவர்களுக்கு இடையே உள்ள செயல் வேறுபாடு பெரியளவில் மாறுபடும்.பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை, காலை உணவை தவிர்க்கும் போது படிப்புத்திறன் வெகுவாக குறைவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.தழுவாத கண்கள்:இயற்கையாகவே, இயற்கைக்கேற்ப பகல், இரவு வெளிச்சத்திற்கேற்ப உடலில் ஹார்மோன் சுரக்கும். இருட்டில் 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கும். இது துாக்கத்தோடு தொடர்புடையது. இதனால் துாக்கம் இயற்கையாகவே வரும். இரவில் நீண்ட நேரம் 'டிவி' பார்ப்பது, அதிக வெளிச்சத்தை பார்ப்பதால் துாக்கம் கெடும். டீ, காபி, சிகரெட் ஆகியவை புத்துணர்ச்சி தருவதால், துாக்கம்
தள்ளிப் போகும். இரவில் ஆழ்ந்த துாக்கம் இல்லாததால், மூளை ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் துாங்கிவிடும்.உதாரணமாக பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது சட்டென துாக்கம் வரும். வாகனம் ஓட்டும் போது துாக்கம் வந்து, விபத்தை ஏற்படுத்தும். முக்கியமான வேலைகளில் ஈடுபடும் போது துாக்கம் வரும். பகல், இரவு சுழற்சியை
(சர்காடியன் ரிதம்) முறையான பின்பற்றினால் உடலுக்கு பிரச்னையே இல்லை. விடியற்காலையில் ரத்தஅழுத்தம் இருதய வேலைப்பாடு அதிகமாக இருக்கும். 'ஸ்டீராய்ட்' ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்.

சரியாக துாங்காவிட்டால் முடிவெடுக்கும் தன்மையில் மந்தநிலை ஏற்படும். செய்ய வேண்டிய செயல்களை விட்டுவிட்டு, தவறான செயல்களை செய்ய நேரிடலாம்.அளவான துாக்கம், துாங்கி எழுந்தபின் சத்தான, சரிவிகித சாப்பாடு, இரண்டுமே வாழ்க்கைக்கு அத்தியாவசியம்.
-டாக்டர் டி. குமணன், மனநலத் துறைத் தலைவர், அரசு மருத்துவமனை, மதுரை. kums2saradgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement