Advertisement

தேவை உருப்படியான உணவுப்பாதுகாப்பு சட்டம்

அனைவருக்கும் தரமான உணவு கிடைக்கும் நோக்கத்தில் முந்தைய
மத்திய காங்., அரசு சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 விதி மற்றும் நடைமுறைகள் 2011 அறிமுகப்படுத்தப்பட்டன.சட்டங்களின் கலவைஇச்சட்டம் புதியது அல்ல. ஏற்கனவே நடைமுறையில் இருந்த உணவு கலப்பட தடைச் சட்டம் 1954, பழப்பொருட்கள் உத்தரவு 1955, இறைச்சி உணவு பொருட்கள் உத்தரவு 1973, தாவர எண்ணெய் பொருள் கட்டுப்பாட்டு உத்தரவு 1947, சமையல் எண்ணெய்களை பேக்கேஜிங் உத்தரவு 1998, சால்வெண்ட் பிரிப்பு மூலம் பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய்(புண்ணாக்கு சாப்பிடும் மாடு கட்டுப்பாட்டு உத்தரவு) 1967, பால் பொருட்கள் உத்தரவு 1992, 1965 ஆண்டு அத்தியாவசிய உணவு பொருட்கள் சட்டம் கீழான வேறு உத்தரவு போன்ற சட்டங்களை ஒன்றாக இணைத்த கலவையாக அமல்படுத்தப்பட்டது.அச்சத்தில் வியாபாரிகள்இச்சட்டங்களை ஒருங்கிணைத்த போது, ஏற்கனவே உணவு பொருட்களுக்கு என்ன தரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததோ, அதில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. இச்சட்டத்திலுள்ள சில குறைகள், கடுமைகளை களையாமல் அமல்படுத்தினால், சிறுவணிகர்கள் மற்றும் உணவு பொருள் தயாரிப்பாளர் பாதிப்புக்குள்ளாக்குவதுடன், தொழிலை விட்டு செல்லும் நிலையை ஏற்படுத்தும் என வியாபாரிகள் அச்சம் தெரிவித்தனர்.மூன்று முறை கால நீட்டிப்புதமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் போன்ற
சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக 5.8.12 முதல் 4.2.13 வரை, 4.2.13 முதல் 4.2.14 வரை, 4.2.14 முதல் 4.8.14 வரை முறையே மூன்று முறை இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.மேலும் கால நீடிப்பு தேவை4.8.14 வரையிலான கால அவகாசத்தை ஓராண்டு காலம் மேலும் நீட்டித்து, குறைகளை களைய, மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள், விஞ்ஞானிகள், உணவு பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கொண்ட குழு அமைத்து, சட்டத்தை அமல்படுத்த
வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நம் நாட்டில் விளைவிக்கப்படும் விவசாய விளை பொருட்களுக்கு புதிய தரத்தை நிர்ணயம் செய்யவில்லை என்றால், தற்போது விளைவிக்கப்படும் விளைபொருட்களில் 75 சதவீதத்தை கடலில் கொட்ட வேண்டிய நிலை ஏற்படும்.தமிழக அரசு இதுகுறித்து ஒரு கூட்டத்தை கூட்டி பரிசீலனை செய்து, அதன் முடிவுகளை டில்லி உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு அனுப்பியது.
சட்டத்திலுள்ள குறைகளை அறிந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சட்ட நடைமுறைகள் சிறு உணவுப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து மற்ற மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.
பன்னாட்டு பிரதிநிதிகள்
இச்சட்டத்தை உருவாக்கியது
135 பேர் கொண்ட கமிட்டி. இக்கமிட்டியில் பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவின் பெரும் குழுமங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றதை சுட்டிகாட்டி மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னும் குழுவில் அவர்கள் இடம் பெற்றனர். அந்நிய முதலீட்டாளர்களுக்கு உதவுவதாக இச்சட்டம்
உள்ளது.சட்டத்திலுள்ள குறைகள்1954ம் ஆண்டு நெல் போன்ற விவசாய விளை பொருட்களின்
உற்பத்தி காலம் ஆறு மாதங்களாக இருந்தது. இயற்கை உரம், நல்ல
தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போதைய விவசாயத்தில் குறுகிய கால வித்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்று மாதங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. ரசாயன உரம், பூச்சி மருந்து அடிக்கப்படுகிறது. 1954 ல் உள்ள அதே தரத்தை தற்போது எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.சீரகம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தில் விளைவிக்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் சீரகம் விளைகின்றது. இரு சீரகங்களில் தரம், சுவை மற்றும் மணம் மாறும். மிளகாய் வத்தல், குண்டூர், விளாத்திகுளம், ராமநாபுரத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்று இடங்களில் விளையும் மிளகாய் வத்தலில் தரம், மணம், சுவை மாறும். இச்சட்டத்தின்படி 1954ம் ஆண்டிற்குரிய தரம் தற்போது உணவு பொருட்களில் இல்லை என்றால், பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.பத்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.பாகுபாடுஇச்சட்டத்தில் அப்பளம், குளிர்பானங்களுக்கு மட்டும் தரம் மாற்றப்பட்டுள்ளது. அப்பளத்தில் சோடா உப்பு உபயோகித்து பாரம்பரியமாக தயாரிக்கின்றனர். சோடா உப்புக்கு பதில், சார்பிக் ஆசிட் உபயோகித்து தயாரிக்க கூறுகின்றனர். அப்படி தயாரித்தால், அப்பளம் ஒரு வாரத்தில் கெடும். உலகம் முழுவதும் சோடா உப்பு போட்ட அப்பளத்தை சுவைக்கின்றனர்.
நம் நாட்டில் மட்டும் உபயோகிக்கும் அப்பளத்திற்கு ஏன் இந்த பாகுபாடு?அனைத்து உணவு பொருட்களுக்கும் 1954ல் உள்ள தரத்தை போல இருக்க வேண்டும் என கூறும் ஆணையம், பன்னாட்டு நிறுவன தயாரிப்புகளுக்கு மட்டும் மாற்றி அமைத்துள்ளது.பாரம்பரிய உணவுக்கு பாதிப்புகிராமங்களில் மகளிர், சுய உதவி குழுக்கள் சத்து மாவு, புட்டு மாவு, அப்பளம், வடகம் போன்றவைகளை இல்லங்களில் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவர்களும் ரூ.25 ஆயிரம் செலுத்தி தரம் நிர்ணயம் பெற வேண்டும் என்பது சிறிய முதலீடு களை இழக்கும் நிலையை ஏற்ப டுத்தும்.டில்லி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் 600 பக்கங்கள் கொண்ட மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலிக்க 19 மாதங்களாகும் என அறிவித்தனர். இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை பதில் இல்லை. உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 விதி மற்றும் நடைமுறைகள் 2011ல் உள்ள கடுமை, குறைகளை களைந்து உணவுபொருட்களுக்கு புதிய தரத்தை நிர்ணயித்த பின் அமல்படுத்த வேண்டும்.- எஸ்.பி.ஜெயப்பிரகாசம்,தலைவர்,தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்,மதுரை.போன்: 98430 51221.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement