Advertisement

மின் கம்பி விழுந்து 4 பசு மாடுகள் இறப்பு

Share
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், நான்கு மாடுகள் இறந்தன. திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் காலனியில், நேற்று முன்தினம் இரவு மின் சப்ளையில் பழுது ஏற்பட்டது. தகவலின்படி கந்திலி மின்வாரிய அதிகாரிகள், நேற்று பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அந்த வழியாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது. அதில், அங்கு கட்டப்பட்டிருந்த விவசாயி ராமு, 55, என்பவருக்கு சொந்தமான, நான்கு பசு மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்தன. கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement