Advertisement

15 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்த முயற்சி

Share
திருப்பத்தூர்: கர்நாடகா மாநிலத்துக்கு, கடத்த முயன்ற, 15 டன் ரேஷன் அரிசியை, லாரியுடன் மாதனூரில் வருவாய்த்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூரில் சிறப்பு சோதனைச்சாவடி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு அந்த வழியாக வாணியம்பாடி நோக்கி சென்ற லாரியை, மாவட்ட பறக்கும் படை தாசில்தார் பழனி தலைமையில் வருவாய்த்துறையினர் மடக்கினர். இதனால், லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார். லாரியில், 15 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், வேலூரில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கப்பட்ட இந்த அரிசி, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. லாரியுடன் சேர்ந்து, 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement