Advertisement

சுடுகாட்டுக்கு வழி கேட்டு மூதாட்டி சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Share
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, சுடுகாடுக்கு வழி அமைத்து தரக்கேட்டு, சாலையில் மூதாட்டியின் சடலத்தை வைத்து, உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் அடுத்த பழைய அத்திகுப்பத்தை சேர்ந்தவர் ராமன், 30, விவசாயி; இவரது தாய் லட்சுமி, 75, நேற்று முன்தினம் இறந்தார். அவரது உறவினர்கள் நேற்று மதியம், 2:00 மணிக்கு, பாம்பையாற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டுக்கு, மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர். சுடுகாட்டுக்கு செல்லும் வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சடலத்தை சாலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்படி வந்த வருவாய்த்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்து, கம்பி வேலியை அகற்றினர். இதையடுத்து, மூதாட்டியின் சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று, உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement