Advertisement

மூதாட்டி பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிக்கு காப்பு

Share
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே, 65 வயது மூதாட்டியை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, ஆரிக்கான்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 60. அவரது மகன், ராகுல், 30; இருவரும் கூலித்தொழிலாளிகள். அதே பகுதியில், கணவரை இழந்த, 65 வயது மூதாட்டி, வீட்டின் முன்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு குடிபோதையில், பணம் கேட்டு தகராறு செய்த ராகுலை, வீட்டிற்குள் வைத்து, அவரை தந்தை கோவிந்தராஜ் பூட்டினார். குடிபோதையில் இருந்த ராகுல், நள்ளிரவு, 12:00 மணிக்கு வீட்டு ஜன்னலை உடைத்து வெளியே வந்தார். பின், பெட்டிக்கடை வைத்துள்ள, மூதாட்டி வீட்டிற்கு சென்று, தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி, ஊறுகாய் கேட்டுள்ளார். இந்நேரத்தில் கடையை திறக்க முடியாது எனக்கூறிய அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே ஓடிவந்த மூதாட்டி, ராகுலை வீட்டில் வைத்து பூட்டி விட்டு, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் ராகுலை பிடித்து, மின் கம்பத்தில் கட்டி, தர்ம அடி கொடுத்து, ஜோலார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement