Advertisement

ஏரியில் வீசிய நாட்டு துப்பாக்கி பறிமுதல்

Share
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே, ஏரியில் கிடந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி போலீசார், நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் ஏரியில் கிடந்த, நாட்டு துப்பாக்கி ஒன்றை கைப்பற்றினர். விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்கள், போலீசார் ரோந்து வருவதை அறிந்து, ஏரியில் நாட்டுத்துப்பாக்கியை போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement