Advertisement

தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தி.மு.க., போராட்டங்களை நடத்துகிறது: வீரமணி

Share
திருப்பத்தூர்: ''தங்களை நிலை நிறுத்திக்கொள்ள, தி.மு.க.,வினர் போராட்டங்கள் நடத்துகின்றனர்,'' என, அமைச்சர் வீரமணி கூறினார். தமிழக அரசு சார்பில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், மரபணு பிரித்தெடுக்கும் தானியங்கி பரிசோதனை இயந்திரம் மற்றும் 2.20 கோடி ரூபாய் மதிப்பில், 20 வென்டிலேட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை வகித்தார். இயந்திரத்தை மருத்துவமனைக்கு வழங்கிய, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி, நிருபர்களிடம் கூறியதாவது: மரபணு பிரித்தெடுக்கும் தானியங்கி பரிசோதனை இயந்திரம் மூலம், ஒரு மணி நேரத்தில், 30 முதல், 50 பேர் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க., அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால், தி.மு.க.,வினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், மக்கள் மறந்து விடாமல் இருக்கவும், போராட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின், மருத்துவ அலுவலர் டாக்டர் திலிப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement