Advertisement

சிறுத்தை பலி: வனத்துறையினர் விசாரணை

Share
கூடலுார்:கூடலுார் தேவர்சோலை அருகே, தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.கூடலுார் தேவர்சோலை, உட்பிரையர் அருகே, தனியார் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில், மூன்று வயது பெண் சிறுத்தை, இறந்து கிடந்தது. டி.எப்.ஓ., சுமேஷ்சோமன், வனச்சரகர் ராமகிருஷ்ணன், வனக்காப்பாளர் பிரகாஷ் ஆய்வு செய்தனர். அரசு கால்நடை டாக்டர்கள் பாரத்ஜோதி, டேவிட்மோகன் அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில்,'ஆய்வக பரிசோதனைக்காக அதன் உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு கிடைத்த பின்பே, இறந்ததற்கான காரணம் தெரியவரும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement