Advertisement

பந்தலூரில் தொடர் மழை : இருளில் மூழ்கிய கிராமங்கள்

Share
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் தொடர் மழை காரணமாக, 'மின் சப்ளை' துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.பந்தலுார் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியதில் சேரம்பாடி அருகே சோலாடி, நெல்லியாளம், ஏலியாஸ் கடை பகுதிகளில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தன.மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், பந்தலுார் பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின. பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. தொடர்ந்து, வட்டக்கொல்லி, மணல்வயல் பகுதிகளில் கிராமங்களை வெள்ளம் சூழும் நிலை உருவாகியதால் வருவாய் துறையினர் நேரடி ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். அம்பலமூலா முகாமில், பாதுகாப்பு கருதி, 21 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement