Advertisement

மாணவி கர்ப்பம் வாலிபர் கைது

Share
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே, 17 வயது மாணவியை காதலித்து, கர்ப்பமாக்கிய வாலிபரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அருகே, திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா, 52. இவரது, 17 வயது மகள், பிளஸ் 2 முடித்துள்ளார். இவர், குடுமியான்மலை பகுதியில் உள்ள, தன் பாட்டி வீட்டிற்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால், 23, என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ராஜகோபால், மாணவியை கர்ப்பமாக்கினார். மாணவியின் தாய் இந்திரா, நேற்று முன்தினம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராஜகோபாலை நேற்று கைது செய்தனர்.

தொழிலாளி கைது : வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே, ஊணை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 38; திருமணமாகாதவர். தோல் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.இவருடைய எதிர் வீட்டில், 17 வயது மாணவி, பிளஸ் 2 முடித்து, 'நீட்' தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். கடந்த, 23ம் தேதி மாணவி வீட்டுக்கு சென்ற பாபு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அணைக்கட்டு போலீசில், மாணவி புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் பாபுவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement