Advertisement

சிறுமி குடும்பத்திற்கு வழங்கிய நிவாரண தொகை; அபகரிக்க முயற்சிப்பதாக எஸ்.பி.,யிடம் புகார்

Share
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கிய நிவாரண தொகையை, அபகரித்ததாக, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில், கடந்த மாதம், 7 வயது சிறுமி, ராஜா,25, என்பவரால், பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். ஏம்பல் போலீசார், ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாயும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, கலெக்டர் உமாமகேஸ்வரி சார்பில், 4.85 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டது. இதே போல், தி.மு.க., சார்பில், 5 லட்சம் ரூபாய், ராமநாதபுரம் எம்.பி., சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், 17 லட்ச ரூபாய், சிறுமியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில அமைப்பினர், நிவாரண தொகைகளை வாங்கி வைத்துக் கொண்டு, நாகூரானிடம் தரவில்லை, என்று கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்து, துன்புறுத்துவதாக கூறும் சிறுமியின் தந்தை நாகூரான், சிறுமியின் சகோதரர் தினேஷ் ஆகியோர், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், நிவாரண தொகையை வாங்கித் தர வேண்டும், என்றும், நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement