Advertisement

7 வயது சிறுமி கொலை வழக்கு: கைதான காமுகன் தப்பியோட்டம்

Share
புதுக்கோட்டை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர், போலீஸ் பிடியில் இருந்து தப்பியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை, ஏம்பலை சேர்ந்த, 7 வயது சிறுமி, ஜூன், 30ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில், அப்பகுதியை சேர்ந்த, பூக்கடைக்காரர் ராஜா, 26, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ராஜாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த, நேற்று காலை, 6:00 மணிக்கு, சிறையில் இருந்து, இரு போலீஸ்காரர்கள் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றதும், ராஜா, தனக்கு இயற்கை உபாதை வருவதாக கூறியுள்ளார். கைவிலங்கை கழற்ற போலீசார் மறுக்க, கைவிலங்குடன் கழிப்பறை சென்ற ராஜா, அங்கிருந்து தப்பியோடி விட்டார். புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆறு தனிப்படைகள் அமைத்து, ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். மருத்துவக் கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள வனப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மோப்பநாய் மற்றும், 'ட்ரோன்' எனும், மூன்று, பறக்கும் கேமராக்கள் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement