Advertisement

கார் மீது லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

Share
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே, டவேரா காரும், டாரஸ் லாரியும் மோதிய விபத்தில், மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளுர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மிதுன் கிஷோர், 27; அரவிந்த், 28; பரத், 28, ஆகிய மூவர், டவேரா காரில், நேற்று மாலை திருச்சி சென்று கொண்டிருந்தனர்.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வடக்காட்டுப்பட்டி அருகே, நேற்று இரவு, 7:00 மணிக்கு, எதிரில் வந்த டாரஸ் லாரியும், டவேரா காரும் நேருக்கு நேர் மோதின. இதில், காரில் சென்ற மூவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement