Advertisement

கார் மீது லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

Share
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே டவேரா காரும் டாரஸ் லாரியும் மோதிய விபத்தில் மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளுர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மிதுன் கிஷோர் 27; அரவிந்த் 28; பரத் 28 ஆகிய மூவர் டவேரா காரில் நேற்று மாலை திருச்சி சென்று கொண்டிருந்தனர்.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வடக்காட்டுப்பட்டி அருகே நேற்று இரவு 7:00 மணிக்கு எதிரில் வந்த டாரஸ் லாரியும் டவேரா காரும் நேருக்கு நேர் மோதின. இதில் காரில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement