Advertisement

தமிழகம் முழுதும் பிளாஸ்மா சிகிச்சை

Share
புதுக்கோட்டை: ''தமிழகம் முழுதும் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில், பிளாஸ்மா சிகிச்சைக்கு, விரைவில் உபகரணங்கள் வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


@@@புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், போர்க்கால அடிப்படையில், சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதால், கொரோனா நோயாளிகள் அதிக அளவு குணமடைந்து வருகின்றனர். தமிழகம் முழுதும், நடமாடும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தியாவில், ஐ.சி.எம்.ஆர்., ஒப்புதலோடு, 44 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது. தமிழகத்தில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு, 26 பேர் அனுமதிக்கப்பட்டதில், 24 பேர் பூரண குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். பிளாஸ்மா சிகிச்சைக்கு, இந்தியாவில் தலைசிறந்த மருத்துவமனையாக, ராஜிவ்காந்தி மருத்துவமனை திகழ்கிறது. தமிழகம் முழுதும் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில், பிளாஸ்மா சிகிச்சை செய்வதற்கு, விரைவில் உபகரணங்கள் வழங்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 'ஆக்ஸிஜன் பைப் லைன்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement