Advertisement

ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய பா.ஜ., கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக பேசி வரும் தி.மு.க,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கவர்னர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த தரம் கெட்ட வார்த்தைகள் தி மு கவின் ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும்.
தொடர்ந்து பா.ஜ., தலைவர்களை தரக்குறைவாக பேசியது குறித்து புகார் அளித்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கூட பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து சிவாஜி கிருஷணமூர்த்தி கூறிய கருத்துக்களை கண்டித்து நாம் புகாரளித்திருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது தி மு கவின் முழு ஒப்புதலோடு பேச வைக்கப்படுகிறார் என்பதையே உறுதி செய்கிறது.
காஷ்மீருக்கு கவர்னரை போகச்சொல்லி, தீவிரவாதிகளை இங்கிருந்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்து கவர்னரை கொலை செய்வோம் என்றும் , சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று தி மு கவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட தி.மு.க., சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தி மு க அரசின் தோல்விகளை மறைப்பதற்கு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கு, பொருளாதார ரீதியாக தமிழகத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை மறைப்பதற்கு, மத்திய அரசின் பல்வறு நலத்திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அத்திட்டங்களில் ஊழல்கள் செய்ய முடிவதில்லை என்ற ஆத்திரத்தில்,மாநில அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்த முடியாத காரணத்தினால், மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு திசை மாற்ற முயற்சிக்கிறது தி.மு.க.

கவர்னரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்கு 'நாங்கள்' தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தி மு கவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக காவல் துறை உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்.இரு நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் , கவர்னர் குறித்து தி மு கவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை விமர்சிக்கின்றனர்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு க தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
தமிழக காவல் துறை தலைவர் ,சென்னை மாநகர ஆணையர் உடனடியாக இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. உண்மையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர் எஸ் பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு, தி மு க பொது கூட்டங்களில் அமைச்சர்களின் முன்னிலையில் இந்த கருத்துக்களை கூறியிருப்பதற்கு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இருவரையும் தி மு கவை விட்டு நீக்க வேண்டும்.
இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். இவ்வறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (22)

  • jayvee - chennai,இந்தியா

    RS பாரதி ஒரு தரம் இல்லா திமுக தொண்டர் என்று மக்கள் சொல்லுகிறார்கள் ..

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    தமிழகத்தில் நடப்பதை நினைத்தால் (நாகரீகமில்லாமல் பேசும் அரசியல் கட்சிக்காரர்கள்) மிக அருவருப்பாக வெட்கமாக இருக்கிறது.

  • Honda -

    நாரயணண் வானதி சேகர் ராஜா போன்றவர்களை புகாருக்காகாவே வவைத்திருக்கு பிஜேபி

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    R G பாரதியின் ,சிவாஜி க்ரிஷ்ணமூர்த்தி பேச்சுக்கள் எல்லாம் சுடாலின் ஒப்புதலடுதான் நடந்தது .

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    கனல்கண்ணன் கிஷோர் மாரிதாஸ் போன்றோர்களை முதல்வரை மதத்தை பற்றி பேசினார்கள் என்று கைது செய்த காவல்துறை கவர்னரை தமிழ மாநிலத்தின் முதல் குடிமகனை இவ்வளவு கேவலமாக பேசிய பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை ஏவல் துறை ஆகிவிட்டதா. இதை சைலேந்திரபாபு விடம் எதிர்பார்க்கவில்லை

    • vadivelu - thenkaasi,இந்தியா

      எப்படிப்பட்டவரும், ஆட்சிக்கு தங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்பது புரிகிறது.

Advertisement