வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான பத்ருதீன் அஜ்மல் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹிந்துக்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
என் பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அஜ்மல் பேசியுள்ளதாக காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. குஜராத் தேர்தல் நடக்கும் நிலையில், திசை திருப்பும் வகையில் பா.ஜ., கூறியபடி அஜ்மல் பேசியுள்ளதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன.
அஜ்மலுக்கு எதிராக அசாமின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிணமுல் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தப்பட்டது.
ஹிந்துவை திட்டிப் பேசினால் சந்தோஷப்படுவானுக... திருடணுக...