உறுதி
இது குறித்து, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவை சங்கம் மற்றும் தெய்வீக கைங்கர்ய பேரவை நிர்வாகிகள் கூறியதாவது:திருச்சி மாவட்டம், வயலுார் முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு முத்துக்குமாரர் சன்னதியுடன், ஆதிநாதர், ஆதிநாயகி, பொய்யா கணபதி உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன. ரமேஷ், கல்யாணம், அஜய், கார்த்தி ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர்.
இவர்களில் சிலரை மட்டும், அறநிலையத் துறை பணி நிரந்தரம் செய்துள்ளது. இவர்கள் தலைமுறை தலைமுறையாக பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தான், கருவறைக்குள் சென்று, முருகனை தொட்டு பூஜை செய்ய முடியும். இந்த நடைமுறை காலம் காலமாக உள்ளது. தமிழகத்தில் ஓராண்டுக்கு முன், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
போலீஸ் குவிப்பு
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட இருவரையும், கர்ப்பக் கிரஹத்திற்குள் அனுப்பி, மூலவருக்கு அர்ச்சனை செய்ய வைக்க வேண்டும் என, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், கோவில் நிர்வாக அதிகாரிக்கு நெருக்கடி கொடுத்தனர். அதனால், இம்மாதம் 19ம் தேதி, அர்ச்சகர்கள் பிரபு மற்றும் தனபாலை, கர்ப்பக் கிரஹத்துக்குள் கோவில் நிர்வாகம் அனுப்பியது. உடன், அங்கு பணியில் இருந்த பிராமண அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'எங்களுக்கு கடும் நெருக்கடி உள்ளது. புதியவர்கள் அர்ச்சனை செய்வது போல போட்டோ மட்டும் எடுத்து செல்கிறோம்' என, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறினர். அதன்படி, போட்டோ எடுக்கப்பட்டது. இதன்பிறகும், அவர்கள்இருவரும் தொடர்ந்து கருவறை வாயிலிலேயே நின்று, அர்ச்சனை மற்றும் பூஜைகளில் ஈடுபட, பிராமண அர்ச்சகர்கள் அதை தடுத்தனர். கோவில் நிர்வாகம் புதியவர்களுக்கு ஆதர வாக இருப்பதால், பிராமண அர்ச்சகர்கள், கோவில் நிர்வாக அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், புதிய அர்ச்சகர்களை அர்ச்சனை செய்ய வைத்து கோஷமிட்டு, கைதட்டி மகிழ்ந்தனர். அப்போது, கிறிஸ்துவ பெண் ஒருவர் சம்பந்தமே இல்லாமல், 'வாழ்க தமிழ்' என்று கோஷமிட்டுள்ளார். தகவல் அறிந்த பா.ஜ.,வினர் கோவிலுக்குள் கூடி விட்டனர். பெரிதாக பிரச்னை ஏற்படாமல் இருக்க, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
கோவில் கருவறைக்குள் பூஜை, அர்ச்சனை செய்ய பிரத்யேக சம்பிரதாயங்கள் உள்ளன. அதை உடைத்து, பிராமண அர்ச்சகர்களை வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு, தமிழக அரசு செய்யும் காரியங்களால், பல இடங்களிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற இயக்கங்களும், இந்த விவகாரத்தில் களம் இறக்கி விடப்பட்டு உள்ளதால், அர்ச்சகர்கள் அச்சத்தில் உள்ளனர். உயர் நீதிமன்றம் வாயிலாக நல்ல தீர்ப்பு வந்தால் மட்டுமே, பிராமணஅர்ச்சகர்கள் கோவில்களில் நிம்மதியாக பணியாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'சிறப்பு சலுகை கிடையாது!'
வயலுார் கோவில் உயர் அதிகாரி கூறியதாவது:அறநிலையத் துறை கோவில்களில், அர்ச்சகர் யார், நிர்வாகி யார், நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை எல்லாம், அரசு தான் முடிவு செய்யும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசு ஆணைப்படி, வயலுார் கோவிலில் அர்ச்சகர் பணிக்கு இருவர் வந்துள்ளனர்.அவர்களும் முழு அர்ச்சகர்கள் தான். அவர்களுக்கும் கருவறைக்குள் சென்று, சுவாமியை தொட்டு பூஜை செய்ய தகுதி உண்டு.
'நாங்கள் பரம்பரையாக பூஜை செய்கிறோம். அதனால், நாங்கள் தான் பூஜை, அர்ச்சனை செய்வோம்' என்று கூறினால், அது தவறு. புதியவர்களை தடுப்பதும் சட்டப்படி தவறு. இதில் அரசியல் கிடையாது. மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் கோவிலுக்குள் வந்ததும், போலீசை வரவழைத்து விட்டோம். இப்போது, இரு தரப்பும் இணைந்து, அமைதியாக தான் பூஜைகள் நடக்கின்றன. மற்றபடி, பிராமணர்கள் என்பதாலும், பாரம்பரியமாக தொழில் செய்கின்றனர் என்பதாலும், யாருக்கும் ஹிந்து அறநிலையத் துறையில் சிறப்பு சலுகைகள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --
கடவுள் படைப்பில் அனைவரும் சமம்தான்,யாருக்கும் உயர்ந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை... மனிதனை, மனிதனாக மட்டும் பார்த்தால் வாழ்க்கை பேரானந்தம்....