வாசகர் கருத்து (9)
மக்கள் நீதி மையம் சார்பில் கமல் நடித்து ஒரு விழிப்புணர்வு படம் தயாரித்து வெளியிடலாமே
நீலி கண்ணீர் வடிக்க வில்லை, அந்த நிலைக்கு உள்ளாகிய அம்மாநிலங்களின் தரத்தையும், பாதிக்கப்பட்ட மக்கள் பலநூறு மைல்கல் நடந்து செல்லும் அவலநிலைக்கு கொண்டு சென்ற ஒன்றிய அரசின் உண்மைத்தன்மையை மக்களுக்கு புரிய வைத்தார்.
இங்கு ஹிந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்றால், அங்கு தமிழன் இட்டிலி, தோசை விற்கிறான், மும்பையில் போய் பாருங்கள் தெரியும். இது ஒன்றும் கேவலம் இல்லை. எந்த வேலை ஆனாலும் சரி, வேலை செய்து பிழைப்பது மானமுள்ளவர்கள் செய்யும் தொழில். ஊழல் செய்வதும், அடுத்தவன் சொத்தை ஏமாற்றி பறிப்பதும் தான் மானம்கெட்ட செயல்.
ஒரு பல்கலையின் இணைவேந்தராக இருந்துகொண்டு அந்த பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் மற்ற மாநிலங்களை மட்டம் தட்டி அரசியல் பேசும் இவர் போன்ற அரசியல்வாதிகளால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் எப்படி இருப்பார்கள் ? இந்த ஒரே காரணத்துக்காகத்தான் அரசே துணை வேந்தர்களை நியமிப்பதை எதிர்க்கிறார்கள் நேர்மையான கல்வியாளர்கள் .......உபிஸாக இருக்கும் கல்வியாளர்களை பற்றி நான் பேசவில்லை .......
பொம்மை யை முதல்வராக சிபாரிசு செய்ததது கூட எடியுரப்பாதான்🤔. கதைய மாற்றாதீர்கள்
//ஹிந்தி மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் பானிப்பூரி விற்கின்றனர்// - அவர்கள் பானிப்பூரி மட்டும் விற்கின்றனர் என்றால் ஒருவேளை பொன்முடி பேசியதில் அர்த்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். அவர்கள் இங்கே பல வேலைகளை செய்து பிழைக்கின்றனர். தவிர கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பானிபூரி விற்பது மட்டமான தொழிலாக யாரும் கருதவில்லை. பானிபூரி விற்று பல லட்சங்கள் சம்பாதிக்கும் திறமைசாலிகளும் இங்கே இருக்கத்தான் செய்கின்றனர். பொன்முடி பேசியதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு, அது அவர் கூறும் அந்த ஹிந்தி பேசும் மக்களுக்கு இங்கே ஓட்டு இல்லை என்பதை தவிர வேறேதுமில்லை. இதை தான் மட்டமான அரசியல் செய்வது என்பது.
….