வாசகர் கருத்து (44)
நீட் தேர்வால் மாணவர்களுக்கு கிடைத்துள்ள பலன்களை, ராஜன் கமிட்டி மறைக்க பார்க்கிறது என்பதே உண்மை - அவர்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட திரைக்கதை - அவ்ளோதான்
"மாநில அரசால் நடத்தப்படும் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, மத்திய அரசால் நுழைவு தேர்வு நடத்த முடியாது. பல்கலைகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. அனைத்து நிகர்நிலை பல்கலைகளையும் கட்டுப்பாட்டில் எடுக்க, மாநில அரசு கட்டாயம் சட்டம் கொண்டு வர வேண்டும்.'நீட் தேர்வு சில ஆண்டுகளுக்கு நீடித்தால், தமிழகத்தின் சுகாதாரத் துறை மிக மோசமாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற டாக்டர்களே இருக்க மாட்டார்கள். சுதந்திர காலத்துக்கு முந்தைய நிலைக்கு தமிழகம் செல்லும்"- மிக சிறப்பான கற்பனை கதாசிரியர் - சாண்டில்யனை மிஞ்சிவிட்டார்
மக்களின் உண்மை மன நிலையை புரிந்து அறிவாளிகள் செயல் பட வேண்டிய நேரம் இது உள்ள ஓன்று வைத்து புறம் ஓன்று பேச கூடாது
சாதாரண மக்களின் தேவை என்ன என்று புரியாமல், ஓட்டுக்காக வாக்குறுதிகளை வழங்கும் மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் மீண்டும் மீண்டும் இப்படித்தான் பொய் பிரச்சாரம் செய்வர். அவர்களின் பிரச்சாரத்தின் வீச்சு, திரு பாலகுருசாமியின் கருத்துக்கள் செல்வதை விட வேகமாகவும் ஆழமாகவும் செல்லும். மக்களின் தரத்திற்கேற்ப அரசின் தரம் அமையும் என்று ஒருவர் ஒரு முறை கூறியது ஞாபகம் வருகிறது. கல்வியில் மட்டும் அல்ல ஒவ்வொருத்துறையிலும், நடக்க முடியாததை ஒரு அரசியல் கட்சி கூறி வோட்டு கேட்கும்போது, என்ன மனநிலையில் இருந்தால் அவற்றை நம்புவர்? அவர்களது மனநிலைக்கு தக்க அரசு அமைந்து இருக்கிறது. கடவுள்/ இயற்கை காப்பாற்றட்டும்.
////
உண்மை அய்யா. பொய்யை விற்பதில் மன்னர்களிடம் இது செல்லுமா? தமிழ் மக்களும் மூளை செலவு செய்யப்பட்டு இலவசத்திலும், டாஸ்மாக்கிலும் மூழ்கி உள்ளனர்.
100 True
நீட் தேர்வு, தரமான நல்ல காலிபர் உள்ள மாணவர்களையே மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கிறது.நல்ல காலிபர் உள்ள மாணவர்கள் முதல் தடவையே நல்ல மதிப்பெண்களை பெறுகிறார்கள். அடுத்த லெவலில் உள்ளவர்கள் ஒரு வருடம் தங்களை தயார் செய்து அந்த காலிபரை வளர்த்துக்கொண்ட பிறகு நல்ல மதிப்பெண்களை பெறுகிறார்கள். ஆகமொத்தம் நல்ல காலிபர் உள்ள மாணவர்களே மருத்துவ படிப்பிற்கு சேருகிறார்கள். எனவே நீட் ஒரு நல்ல விஷயம். தமிழக அரசு அதன் பள்ளிகளில் மாணவர்களின் காலிபரை உயர்த்துவதற்கான முயற்சியை தொடங்கவேண்டும். கண்டிப்பாக உயர்வார்கள். மிதமிஞ்சிய காலிபர் உள்ள தமிழ்நாடு மாணவர்கள், இந்திய மற்றும் இந்தியாவின் வேறு மாநிலங்களில் உள்ள உயர்தர மருத்துவ கல்லுரிகளில் சேர்ந்து, அந்த இடத்தை அடுத்த நிலையில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு கிடைக்க உதவுகிறார்கள்.
அரசியல்வாதிகளின் மருத்துவ கல்லூரிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் , அப்படி செய்தால் தான் நீட் போராட்டம் குறையும். மேலும் மக்களிடையே நவோதய பள்ளிகளை பற்றி மத்திய அரசு ,குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் .
இதுதான் உண்மை