வாசகர் கருத்து (25)

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  முட்டாள்தனமான அரசாணை. தமிழின் பெரால் பிழைப்பு நடத்தும் திராவிடக் கூட்டம் திருந்தவே திருந்தாது

 • Saai Sundharamurthy A.V.K -

  அரசு வேலைகளில் திறமையானவர்கள் கிடைப்பது அரிதாகி விடும். ஹிந்தி தான் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். பின் ஏன் ஆங்கிலத்தை புறக்கணிக்க வேண்டும்? அண்டை மாநில தொழிலாளர்கள் கூட மூன்று மொழிகளில் சக்கை போடு போடுகிறார்கள். இங்கு வரும் காலத்தில் தமிழக அரசு ஊழியர்கள் டுபாக்கூர் ஊழியர்களாக வலம் வருவார்கள். நிச்சயம் எழுதிக் கொள்ளுங்கள்.

 • appaatakkar - kosavapatti,இந்தியா

  இது தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகளுக்கு மட்டும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வேறு மொழி பேசும் மக்களுக்கு எதிரானது இல்லை. அரசு பணிகளில் தமிழ் தெரியாமல் இருந்தால் அதை ஏற்க முடியாது.

 • rasa -

  வெளி நாட்டினாருக்கோ அல்லது வெளி மாநிலத்திரக்கோ இங்கு வேலை இல்லை என சொல்லவில்லை. ஆறு மாதமோ அல்லது ஓரு வருடமோ தமிழ் படித்து விட்டு தேர்வு எழுதட்டும். இதில் என்ன தவறு இருக்கிறது

 • sankaseshan - mumbai,இந்தியா

  தமிழை மட்டும் கற்று உள்ளூரில் வேலை பார்க்கலாம் கிடைத்தால் ? அதாவது குண்டுசட்டியில் குதிரை ஓட்டலாம்

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  இது கட்டாயம் சட்ட விரோதமானது. தமிழ் நாட்டில் வாழும் மொழி சிறுபான்மையினருக்கு இது எதிரானது. இஸ்லாமிய சமூகத்தினர் நடத்தும் பள்ளிகளில் உருதுவே பயிற்று மொழி. அதுபோல் நிறைய அரசு உதவி பெறும் பள்ளிகளில் தெலுங்கு மற்றும் கன்னட பயிற்று மொழி உண்டு. தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தாய் மொழியில் படிக்க கல்விக் கொள்கை பணிக்கிறது. அப்படியென்றால் திமுகவினர் மற்றும் வேறு கட்சி அரசியல்வாதிகள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைபிடிக்க அரசு உத்தரவு போடுமா ? அல்லது அப்பள்ளிகளில் ஹிந்திக்கு பதிலாக தமிழ் கட்டாயமாக்க உத்தரவு போடுமா ? அப்பள்ளிகளில் தமிழ்வழி கல்வி கட்டாயமாக்கப்படுமா? கல்வியை சிதைக்காமல் விடமாட்டார்கள் இந்த திராவிட விஷங்கள்.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  தமிழ் மொழியில் படித்த அனைவருக்கும் அரசு வேலை கொடுத்தால் இந்த திட்டம் வரவேற்க தக்கது. ஆனால் தேர்வு எழுதும் அனைவருக்கும் அரசு வேலை சாத்தியமா. நிச்சயம் முடியாது. அதே போல மற்ற மாநிலங்களும் முடிவு எடுத்தால் வேலை கிடைக்காத மாணவர்கள் அந்த அந்த மாநிலத்திலேயே வேலை கிடைக்காமல் மற்ற மாநில வேலையும் கிடைக்காமல் சாக வேண்டியது தான். இதில் ஆங்கிலம் தேர்தலில் இருந்தாலாவது. மற்ற மாநிலத்தில் மற்றும் தமிழ் நாட்டில் தனியார் நிறுவனத்தில் கிடைக்கலாம். இப்போது அதுவும் இல்லை. இந்த முட்டாள் தனமான திட்டத்தை பரிந்துரைத்தது யார் என்று தெரியவல்லை. இதற்கு பதிலாக தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்கள் தேர்தலில் கட்டாயமாக சேர்த்து இருந்தால் இங்கு தமிழ் நாட்டில் வேலை கிடைக்காவிட்டாலும் வேறு மாநிலத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி செய்து இருந்தால் தமிழக அரசை முழு மனதோடு பாராட்டலாம்.ஜெய்ஹிந்த்

 • vbs manian - hyderabad,இந்தியா

  இந்த அறிவிப்பு மற்ற மாநிலங்களிலும் காப்பியடிக்கப்படும். நிலம் மட்டுமல்ல நெஞ்சமும் குறுகிக்கொண்டு போகிறது. தமிழகத்தில் இப்போது வேளை வாய்ப்பு சுருங்கி கொண்டு போகிறது. வெளியில் போய் பிழைக்கலாம் என்பவர்களின் வாய்ப்பும் பறிபோகும். நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டியா கதை.

 • vbs manian - hyderabad,இந்தியா

  மற்ற மாநிலங்களிலிருந்து இங்கு யாரும் வேலைக்கு வர முடியாது.இதை போல் மாற்ற மாநிலங்களும் செய்தால் இங்கிருந்து யாருக்கும் அங்கு வேலைக்கு போக முடியாது,இந்தியா ஒருமைப்பாடு வாழ்க.

 • Rajesh - Kallakurichi,இந்தியா

  ஒன்றாம் வகுப்பு முதல் மேல் படிப்பு வரை தமிழை கட்டாயமாக்கினாள் போதுமானது. போட்டித் தேர்வுக்கும் தமிழை கட்டாயமாக்குவது எதன் அடிப்படையில் என்று புரியவில்லை. இப்போக்கு தமிழ்நாட்டை கடந்து செல்லாமல் அரசியல்வாதிகளை நம்பிப் பிழைக்கும் சூழ்நிலை உருவாகும். அனைத்து துறைகளிலும் உள்ள கணினி செயல்பாடுகள் எல்லாம் ஏற்கனவே ஆங்கிலத்தில் செயல்படத் தொடங்கிவிட்டது. பிற்காலத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் மற்ற மாநிலங்களை காட்டிலும் அறிவாலும், செயல்திறனாலும் தனித்து, சுருங்கி தமிழ் நாட்டுக்குள்ளேயே இயங்கும் சூழ்நிலை ஏற்படும். இது தொலைநோக்கு திட்டமாக தோன்றவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement