வாசகர் கருத்து (43)

 • Samaniyan - Chennai ,இந்தியா

  People are fed up with parties who loot with nonchalance. They know that this time also it is going to happen. When a party can employ some body for a hefty amount what is the guarantee that they will give clean governance. They will recover 100 times that amount if they come to power.

 • vbs manian - hyderabad,இந்தியா

  பெரும்பாலோருக்கு ஒரு வித விரக்தி வந்துவிட்டது. பிரியாணி குவார்ட்டர் பணம் இவைகள் வோட்டு பெட்டியை தூக்கி சாப்பிடுகின்றன. எல்லாமே ஒரு தமாஷ் என்று ஆகி விட்டது. நல்லது நடக்கும் என்று நம்பிக்கை கூட வரமாட்டேன் என்கிறது.

 • பாலா -

  எவ்வளவு பேருக்கு சொந்த ஊரிலும் வாக்குரிமை இருந்து அங்கு சென்று வாக்களித்தனர் என அரியவேண்டும். மேலும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டிலும் வாழும் சென்னை வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிய வேண்டும். பின்னர் தான் உறுதியான காரணத்தை அறியலாம்.

 • K Palaniappan - Coimbatore,இந்தியா

  பொதுவாக, வாக்காளர் பட்டியலிலுள்ள பெரும் குறை என்னவென்றால், அவ்வப்போது சேர்த்தல், கழித்தல்கள் செய்யப்பட்டாலும், இது உண்மையான நிலவரம் அல்ல. சிரத்தையின்றி தயாரிக்கப்படுகின்றன. அர்ப்பணிப்புடன் இது செய்யப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, எனது பகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில், பல ஆண்டுகளுக்குமுன் இறந்த, வெளியேறியவர்கள் பெயர்களும் உள்ளன. இவர்கள் செல்லும் இடங்களிலும் தங்களது பெயர்களை அந்தப்பகுதி பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர். ஆனால் முந்தைய பகுதி பட்டியலில் நீக்கம் செய்யப்படுவதில்லை. ஒருவர் பெயரே 2, 3 இடங்களில் பட்டியலில் இடம்பெறுவதால், தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்கள், விழுக்காடுகள் முதலியன உண்மையான நிலவரமாக இருப்பதில்லை. இதை செம்மைப்படுத்த ஒரே வழி, குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைத்து, போலிகளை ஒழித்த முறையில், ஆதார் எண்களை இணைத்து வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டால், 99.9 விழுக்காடு அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்கும். ஒருவர் பெயர் ஏற்கனவே பட்டியலில் இருந்தால், அடுத்த பகுதியில் பெயரை சேர்க்க முற்பட்டால். முந்தையபகுதி பதிவை நீக்கம் செய்தபின் பெயரை சேர்க்க என்ற செய்தி வரும்போது, ஒருவர் பெயர் 2 இடங்களில் பதிவு செய்யும் நிலை முறியடிக்கப்படும். அதேபோல, வாக்காளர் இறந்தபின் அவருக்கு கட்டாயமாக இறப்பு சான்று பெறுவார்கள். இதில் இறந்தவரின் ஆதார் எண்ணை பதிவுசெய்தவுடன், வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை பட்டியல் ஆகியவற்றில் இவர்களது பெயர்களை தன்னிச்சையாக நீக்கம் செய்யும் முறையை கொண்டுவந்தால், பெரும்பாலும், அனைத்து பட்டியல்களும் நம்பத்தகுந்தவையாக இருக்கும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதே முழு உண்மை... நடந்த பல குளறுபடிகளே அதற்க்கு சாட்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement