வாசகர் கருத்து (12)

 • PANDA PANDI - Aththipatti,இந்தியா

  கம்யூ கட்சி கூட்டணி, படுதோல்வி அடைந்தது. ஆனால் பி ஜே பி யும் படுதோல்வி அடைந்தது என்பதன் உண்மையையும் சொல்லி வைக்கவும்.

 • Yezdi K Damo - Chennai,இந்தியா

  11 அல்லது 12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த ராஜகுமாரன்தான் மஹிஷி என்ற அரக்கியைய் கொல்ல வந்த கடவுள் என்று சொன்னால் எப்படி நம்ப முடியும் . இந்த அழகுல அந்த ராஜகுமாரனுக்கு வாவர் என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய நண்பரும் உண்டு . இதுக்கு பெண்கள் போகலாமா ,கூடாதான்னு குடுமிப்புடி சண்டை வேற .

 • Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  .அயோத்தி தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு.மிக நல்ல செய்தி .ஹிந்து வழக்கப்படி, சபரிமலை சன்னிதானத்தில் அருள்பாலிக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி. அவரை, அனைத்து வயது பெண்களும் தரிசித்தால், கோவிலில் நிலவும், ஐதீகத்திற்கு பங்கம் ஏற்படும் என்பது, நம்பிக்கை.உண்மை முற்றிலும் உண்மை .பெண்ணுரிமைக்கும் சபரிமலை விவகாரத்துக்கும் சம்பந்தமே இல்லை .பெண்ணுரிமை பேசும் போலிமதச்சார்பின்மை வாதிகள் முத்தலாக் விஷயம் குறித்து /மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி குறித்து /சர்ச்சுகளில் பெண் பாதிரியார்கள் நியமனம் குறித்து வாய் திறக்கவே மாட்டார்கள் . பெண்ணுரிமை பேசி ஹிந்து மத கலாச்சாரங்களை கிண்டல்கள் /கேலிகள் /இளிவரல்கள் /பகடிகள் செய்பவர்களுக்கு சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்புக்கும் ,பெண்ணுரிமைக்கும் சம்பந்தம் இல்லை .அது தவறான வாதம் என்பதை சுருக்கமாக ஆம் சுருக்கமாக விளக்கிட தான் தான் இந்த பதிவு .கேரளாவிலும் ,தமிழகத்திலும் உள்ள 257 அய்யப்பன் கோவில்களில் 256 அய்யப்பன் கோவில்களில் எல்லா வித வயது பெண்களுக்கு அனுமதி உண்டு - ஒரே ஒரு பம்பை அய்யப்பன் கோவில் தவிர .அது போல இந்தியாவில் உள்ள 26,000 க்கும் மேற்பட்ட கோவில்களில் 5 கோவில்களில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி இல்லை. (மேலும் ஆண்களுக்கு அனுமதி இல்லாத 20,கோவில்களும் இந்தியாவில் உண்டு) .இதில் ஆணாதிக்கம் எங்கிருந்து வந்தது ? பெண் சம உரிமை எங்கு வந்தது ?சென்னையை சுற்றியுள்ள,மதுரையை சுற்றியுள்ள ,தஞ்சையை சுற்றியுள்ள எந்த கோவில்களிலாவது பெண்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா ? இதில் எங்கு ஆணாதிக்கம் வந்தது ?ஏனென்றால் பெண்ணியத்தை நிலைநாட்டும் இடம் சபரிமலை அல்ல.இதனை ஹிந்துக்கள் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் இதில் எங்கு தீண்டாமை வந்தது ?.முதலில் பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி இல்லை என்பது தொன்மையான மதமரபு 200 ஆண்டுகளுக்கு முன்பு ,கி பி 1816 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெஞ்சமின் ஸ்பைன் பர்டு மற்றும் பீட்டர் அயர் கார்னர் ஆகியோர் அந்த காலகட்டங்களில் திருவிதாங்கூர் - கொச்சி மாகாணங்களில் இந்திய பாரம்பரியம் /மதவழக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டனர் . அன்றைய இந்திய மக்களின் கலாச்சாரம் ,பாரம்பரியம் குறித்து அவர்கள் எழுதிய மெமரி ஆப் தி திருவாங்கூர் அண்ட் கொச்சி ஸ்டேட்ஸ் என்ற புத்தகத்தில் சபரிமலைக்கு அன்றைய காலகட்டத்திலே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் .ஆம் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு ,இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வருவதற்கு பல பல வருடங்களுக்கு முன்பே சபரிமலையில் பேணப்பட்டு வந்த தொல்மரபு இது. ஆயிரம் ஆண்டுகளாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது . . இது குறித்து,சமகால தலைசிறந்த தமிழ் அறிஞர் கூற்றில் சொன்னால் மாதவிடாயை தீட்டு என்பது வெறுமே 'அருவருப்பால் விலக்கும்' சடங்கு அல்ல. அது பிறப்பு இறப்பு தொடர்பான தொல்குடிகளின் புரிதல் சார்ந்தது. தொல்குடிகளின் வாழ்விலிருந்து எடுத்து விரிவாக்கப்பட்ட ஒரு தொன்மம்,, சடங்கு என்பதனாலேயே அதற்கு இருமுகம் உண்டு. ஒருபக்கம் தெய்வம் ஆணென்றிருக்கையில் அது விலக்கு. இன்னொருபக்கம் தெய்வம் அன்னை என்றிருக்கையில் அது புனிதமான பொலிதல். ஆகவே அதை ஒற்றைப்படையாகப் பார்ப்பது பிழை. ஐயப்பன் துறவியாக, நைஷ்டிக பிரம்மசாரியாக ,காம ஒறுப்பு நோன்பு கொண்டவராக (PERPETUAL BACHELOR) உருவகிக்கப்பட்டிருக்கிறார் என்பதனால்தான். அன்றும் இன்றும் துறவிகளுக்குரிய நோன்பு கொண்டவராக சபரிமலையில் மட்டுமே அய்யப்பன் தரிசனம் தருகிறார் .. .இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து கோவில்களில் ,ஹிந்து கடவுளர்கள் ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய் - சிவன் -பார்வதி ,விஷ்ணு - மஹாலக்ஷ்மி , தாயும் தந்தையுமாய் -குடும்பமாய் - சோமாஸ்கந்தர் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காண முடியும் .அத்தகைய கோவில்கள் தான் நடுத்தர ஹிந்து குடும்பங்களுக்கு தனது பெண்ணை மாப்பிளை வீட்டாரிடம் அறிமுகம் செய்யும் இடம் .மேலும் கடவுள் கணவன் மனைவியாக எழுந்தருளியுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ,வைகாசி ,ஆவணி ஆகிய மாதங்களில் வரும் சுப முகூர்த்த நாள்களில் ,ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பது உண்டு .ஆம் அத்தகைய கோவில்கள் 'திருவள்ளுவரின் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்னும் இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது ஆகும் .அங்கெல்லாம் பெண்களுக்கு அனுமதி எந்நாளும் உண்டு .ஆனால் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம். .இதில் தீண்டாமை எங்கிருந்து வந்தது ? ஆனால் இந்த ஒரே ஒரு விஷயத்தை கையில் எடுத்து , இந்தியாவில் உள்ள எந்த கோவில்களிலும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உலகில் உள்ள கிருஸ்துவ, முஸ்லீம் நாடுகள் எண்ணும் அளவுக்கு ஊதி பெரிதாக்கி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர். பெண்களுக்கு மதத்தின் பெயரால் கல்வி , ஓட்டுரிமை மறுக்கப்படும் முஸ்லீம் நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்கள் அடக்கு முறையில் வாழ்வதாகவும் உலகெங்கும் பரப்பி விட்டனர் என்பது தான் வேதனைக்குரிய செய்தி.மேலும் அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒற்றை கருத்தை வைத்து ,ஹிந்து கலாச்சாரங்களில் பெண்களுக்கு சம உரிமைகள் கிடையாது என முடிவுகள் கட்ட கூடாது. ஹிந்து மத சனாதன தர்மங்களில் பெண்களுக்கு சம நீதி /சம உரிமைகள் காலங்கள் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. ஹிந்துக்களின் இதிகாசமாகிய மஹாபாரதத்தில் வரும் தேவயானி ,சத்யவதி ,குந்தி ,தமயந்தி மற்றும் திரௌபதி ஆகியோர் குல மூத்தோர் ,நீத்தோர் ,வான் ஏகியோர் ,விண்ணுறை தெய்வங்கள் சாட்சியாக பேரரசியர்களாகி ஆட்சி பரிபாலனம் செய்ததே சான்று .அது மட்டும் அல்ல . ஜீவ நதிகளுக்கு காவேரி ,கங்கை ,கோதாவரி ,யமுனை என பெண்கள் பெயரை சூடியதும் ,இறைவனின் ஒரு பாதியாக இறைவி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர் தத்துவமும் அறிதலுக்கு மிக்க நன்றே. மேலும் ஹிந்து மதத்தை போன்று வேறு எந்தமதத்திலாவது ஹிந்து மதம் அளவு பெண்தெய்வங்கள் உண்டா ? - வீரத்திற்கு தெய்வமென பார்வதி செல்வத்துக்கு தெய்வமென ,மஹாலக்ஷ்மி ,கல்விக்கு சரஸ்வதி ,பத்திரகாளி ,முத்தாலம்மன் ,முத்தாரம்மன் ,மதுரை மீனாட்சி ,காஞ்சி காமாட்சி,ஸ்ரீஆண்டாள் ,மாரியம்மன் ,காளியம்மன் ,வராகி அம்மன் ,ஆதிபராசக்தி என வரிசைகள் நீளும் . ஆம் மற்ற மதத்தில் எத்தனை பெண்தெய்வங்கள் உள்ளன ?இதெயெல்லாம் கருத்தில் கொண்டு சபரிமலை விஷயத்தில் பெண்ணுரிமை பேசுவோர் தங்களின் நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளவும்.

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  கொஞ்சம் தாமதித்தால் நன்றாக இருக்கும். ஏன்னு கேக்குறீங்களா எசமான். நம்ம ஊரு கனியக்கா சபரிமலைக்கு போறாங்களாம் யாரையோ கூப்பிட்டுக்கிட்டு..அந்த வேடிக்கைய நாங்க பார்க்கணும்ங்க..அதுக்காகத்தான் கொஞ்சம் தீர்ப்ப ஒத்தி வெசீங்கன்னா நல்லா இருக்கும்கிறேன். அவுக தலைமையில கூட்டமா போறாங்களாம் என்ன நடக்குதுன்னு பாக்குறாங்களாம்..சவால் விட்றாங்க பாருங்க.. அதுக்காக கொஞ்ச நாளைக்கு தீர்ப்ப ஒத்தி வெச்சா நல்லா இருக்குமுங்க.. கருப்பு சீல கட்டிட்டு இருமுடியும் கட்டிட்டு போறாங்களாமே ..அங்கே போயி படற கூத்த நாங்க பாக்க ஆசைப்படுறோமுங்க..அதுக்காக தீர்ப்ப தள்ளிவையுங்க எசமான்னு கோரிக்கை விட்ரோமுங்க..

 • blocked user - blocked,மயோட்

  பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மாற்றி அமைக்க நீதிமன்றத்துக்கு எந்த வித உரிமையும் இல்லை. அப்படி இருக்கும் என்று நினைத்தால் பாராளுமன்றம் தனிப்பட்ட சட்டம் இயற்றி நீதிமன்றத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்தலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement