வாசகர் கருத்து (14)

 • DINESH - CHENNAI,இந்தியா

  1975ல் கதாநாயகனாக அறிமுகமாகி ஏழே வருடங்களில் சகலகலா வல்லவன் படம் மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அந்த முன்னணி இடத்தை ஏறக்குறைய 35 வருடங்கள் தக்க வைத்தார். வியத்தகு சாதனைதான்.

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  நான் உயர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, வயதான எம் ஜி ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் தொப்பையை வைத்துக் கொண்டு, பேத்தி வயதுப் பெண்களுடன் டூயட் பாடி மரங்களை சுற்றி வந்து ஆடியது எப்போதுடா இது முடியும் என்ற சலிப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான் கமல் தோன்றினார். வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், அவரது கலை திறன் பல விதங்களில் பிரதிபலித்தது. அவர் பரதநாட்டியத்தில் அரங்கேற்றம் செய்தவர். கர்நாடக சங்கீதம் ஓரளவுக்கு முறையாகப் பயின்றவர். கராத்தே பயிற்சி பெற்றவர். மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர். அவர் நடித்த பெங்காலிப் படத்தைப் பார்த்துப் பெருமிதம் அடைந்தேன். கூட இருந்த வங்காளிகள் இந்த நடிகர் யார் என்று வியந்தார்கள். தெலுங்கில் கொடி கட்டிப் பரந்த முதல் தமிழ் நடிகர் அவர்தான். இந்தியில் அவர் நல்ல படங்களில் நடித்தாலும் அவரது உயரமின்மை, வளைந்த கால்கள், தமிழ் வாடை அடித்த இந்தி போன்றவை அவருக்குப் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. அப்போது இந்திப் பட உலகில் உயரமான, பஞ்சாபி ஆண்கள் ஆதிக்கம் செய்த காலம். ஆனால் கமல் எல்லோராலும் மதிக்கப் பட்டார். நல்ல பேச்சாளர். மிகவும் புத்திசாலியான மனிதர். நிறைய படித்தவர் (தானாக). பல மொழிகள் தெரிந்தவர். ஐந்து வருடங்கள் கூட நிலைத்து நிற்க முடியாதத் திரைப்பட உலகில் அறுபது வருடங்கள் தங்கி தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறார். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற தாகம் அவருக்கு இன்றும் இருக்கிறது. அமெரிக்காவில் பிறந்திருந்தால் உலகம் முழுதும் அவர் பெயர் பெற்றிருப்பார். ஆனால் இந்தியாவில் இருந்தும் தன்னை ஒரு பிரம்மாண்டமான கலைஞராக வளர்த்திருக்கிறார். அவரைப் போல இன்னொருவர் வருவது அரிது. அவர் உண்மையிலேயே ஒரு சகல கலா வல்லவர். அவர் அரசியலுக்கு வராமல், வயதான காலத்தில் நடிப்பதை விட்டு, திரை கதை, இயக்கம் போன்ற துறைகளில் சாதிக்க விரும்பியதை சாதித்திருக்கலாம். ஆனால் அது அவரது இஷ்டம். கமல் என்ற நடிகரை யாராலும் குறை சொல்ல இயலாது. அந்த அளவுக்கு அவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவர் நூறாண்டுகள் வாழ்ந்து தமிழ் திரையுலகுக்கு மேலும் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 • Arasu - OOty,இந்தியா

  கமல் பாடிய அன்பே சிவம் பாடல் ..புகழ் பெற்ற பாடல்

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  Kamal Sir ரை கொண்டாடுவது ஒவ்வொரு தமிழனின் கடமை. போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  Kamal Sir பாரதியாரை போல் ஒரு இதிகாச நாயகன் ‼️‼️‼️ தமிழர்களின் பெருமை 🙏🙏🙏👍👍👍👏👏👏

 • Vijay Kumar - Manama,பஹ்ரைன்

  "அன்பே சிவம்" கமலின் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படடுத்திய மற்றுமொரு திரைக்காவியம் , இந்தியிலும் சாதனை படைத்த "ஏக் துஜே கே லியே" ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  எப்படி எல்லாமோ நடித்து திரை உலகுக்கு பெருமை சேர்த்தாலும் வாழ்நாள் சாதனை விருது நிச்சயமாக கிடைக்காது.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  உயர்ந்தவர்கள் (கமல் சுஜாதா) மற்றும் பேசும்படம் ஆகிய படங்களை முக்கியமாக குறிப்பிட்டு இருக்கவேண்டும்.

 • ஸாயிப்ரியா -

  கமல் அவர்கள் நடித்தார் என்பதை ஏற்கவே முடியாத ஒன்று. அவரை இந்தியன் தாத்தாவாக ,அப்புவாக ,கல்லை மட்டும் கண்டால்.... பாடலை நிஜத்தில் உணரவில்லை என்றாலும் நிழலாய் உணர்த்தியவர் நாயகனாய் நிறைந்தவர் பாராட்டுக்கள். ரசிகையாக

 • sathyam - Delhi,இந்தியா

  நடிகராக கமலை குறை சொல்ல ஒன்னும் இல்லை. தேவையில்லாத தி.க . சிந்தனைகளினால் பெயரை கெடுத்து கொண்டார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement